Monday, September 30, 2013

அறுசுவை - வித்யார்தி பவன் தோசை, பெங்களுரு

இந்த பதிவை நீங்கள் படிக்கவில்லை என்றால் ஒரு அருமையான உணவகத்தை மிஸ் செய்கிறீர்கள் என்று பொருள் ! இந்த தோசையை நான் வெகு வருடங்களாக சாப்பிட வேண்டும் என்று யோசித்து, தூரம் அதிகம் என்பதால் பின்னர் என்று தள்ளி போட்டு கொண்டே வந்தேன். சமீபத்தில் எனது வெள்ளைகார பாஸ் அங்கு போய் விட்டு வந்து ஆஹா என்ன சுவையான தோசை என்று சொல்லியதில் இருந்து மனது அதையே நினைத்துக்கொண்டு இருந்தது எனலாம். பெங்களுருவில் காந்தி பஜார் சென்று யாரை கேட்டாலும் வித்யார்தி பவன் எங்கே என்று சொல்வார்கள், அவ்வளவு பிரபலம். மற்ற ஹோடேல்களை போல உள்ளே நீங்கள் நுழைந்து இடம் பிடிக்க முடியாது, அவ்வளவு கூட்டம் அள்ளும் !!
 

 

முதலில் உங்களது பெயரை கொடுத்துவிட்டு வெளியே வெயிட் செய்ய வேண்டும், சீட் ரெடி ஆனவுடன் உங்களை கூப்பிடுவார்கள்..... கூட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில் சில நேரம் உங்களது முறை வர அரை மணி நேரம் கூட ஆகும் ! இடம் இருக்கிறது உள்ளே போங்கள் என்று சொன்னவுடன் நீங்கள் மகிழ்ச்சியாக ஒரு சீட்டில் உட்கார்ந்தால், பக்கத்திலேயே இன்னொருவர் வந்து உட்காருவார்....... இங்கே பிரைவஷி தேவை என்பவர்கள் போகாமல் இருப்பது உத்தமம் ! ஓகே..... உள்ளே இடம் கிடைத்து விட்டது அப்புறம் என்ன ஆர்டர் செய்யலாம் என்று பார்த்தால் மெனு என்பது மிகவும் சிறுசு, சில நேரங்களில் கும்பல் அதிகமாக இருக்கும்போது தோசை கிடைக்க லேட் ஆகும் என்பதால் கிடைப்பதை சாப்பிட வேண்டியதுதான்.


நான் சென்று இருந்தது மதியம் மூன்று மணிக்கு, அப்போதும் கூட்டம் அலை மோதியது. ஒரு மசாலா தோசை சொல்லி விட்டு சுமார் இருபது நிமிடம் காத்திருந்தேன்...... அதன் பலன் அது வந்தபோது தெரிந்தது. சுமார் மொறு மொறுவென்று வீட்டில் சுடும் தோசை சைசில் தோசை எனக்கு வந்தபோது எனது பக்கத்தில் இருந்தவர் என்னை ஏக்கத்துடன் பார்த்தார் என்றுதான் சொல்ல வேண்டும். தோசைக்கு சட்னியை தாரளமாக வந்து ஊற்றினார், சாம்பார் எல்லாம் கேட்டால் உங்களை பைத்தியம் என்பார்கள் ! ஒரு விள்ளல் தோசையை பியித்து சட்னியில் முக்கி விட்டு வாயில் போட்டால், அட அட அட அருமை போங்கள் ! ஆனால் என்ன, தோசையை பிழிந்து விட மட்டும் கூடாது....... ஒரு கால் லிட்டர் எண்ணை வரும் !! உருளைக்கிழங்கு மசாலை சிறிது விண்டு வாயில் வைத்தால் அது வேறு வழுக்கி கொண்டு போனது.

என்ன பார்க்கிறீர்கள்..... என்னடா தோசையுடன் முடித்து விட்டதா என்றா. அங்கு சென்றது அவர்கள் தோசை கொண்டு வரும் அழகை காண்பதற்கு மட்டுமே சார். தோசை நன்றாக இருந்தது.... ஆனால் அந்த கூட்டத்தில் எல்லோரும் தோசையைதான் கேட்கிறார்கள், அதற்க்கு அந்த சர்வர் எத்தனை தடவை உள்ளே சென்று வருவார். அவர் ஒரு முறை வரும்போது சுமார் இருபது தோசையை கொண்டு வரும் அழகே தனி.


 

 


பஞ்ச் லைன் :

சுவை - மிக சிறிய மெனுவாக இருந்தாலும் இவர்களது காராபாத், இட்லி மற்றும் தோசை சுவை மிகவும் அருமை.

அமைப்பு - ஓரளவு நல்ல பெரிய உணவகம், பார்கிங் வசதி இல்லை.... மிகவும் பிஸியான பஜார் ஏரியா என்பதால் பார்கிங் கிடைப்பது சிரமம்  !
 
பணம் - கீழே இருக்கும் மெனு கார்டு பாருங்களேன்.....

சர்வீஸ் - நல்ல சர்விஸ், ஆனால் நிறைய நேரம் ஆகும்.

அட்ரஸ் :


No-32, Gandhi Bazar Main Road, Basavanagudi, Bangalore, Karnataka 560004, Gandhi Bazar Rd, Gandhi Bazaar, Basavanagudi, Bangalore, KA 560004, India ‎
+91 80 2667 7588
 

 


மெனு கார்டு :


 
Labels : Vidyarthi Bhavan, Dosa, Dosai, Gandhi Bazaar, Suresh, Arusuvai, Kadalpayanangal

12 comments:

 1. அடடா... ஒரு தோசை சாப்பிடுவதற்குள் பசியே போயிடும் போலிருக்கே... உங்களின் பொறுமைக்கு பாராட்டுக்கள்...

  சர்வர் கையில் இருப்பது 16 பிளேட்டா...? 17 பிளேட்டா...? ஒரு போட்டி வையுங்க... ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்..... இப்படி போட்டி வைத்தால் நாம்தான் தோர்ப்போம், அவர்கள் சில சமயங்களில் இரண்டு கைகளிலும் இப்படி ஏந்தி வருவார்கள்.

   Delete
 2. தோசைக்கு தனி ஹோட்டலா..ஆச்சர்யம் தான்...

  ReplyDelete
  Replies
  1. அட ஜீவா, எப்போ பெங்களுரு வர போறீங்க ?! இங்க இருக்கிற சில விஷயங்களை நீங்கள் அனுபவிக்க வேண்டாமா ?!

   Delete
 3. நான் பெண்களூர் வரும் போது நேரா உங்க வீட்டுக்கு வந்துடரேன் நீங்க எல்லா ஹோட்டலுக்கும் கூட்டிண்டு போங்க ஓக்கேவா? ஒரு தோசையை பிச்சு வாய்ல போட்டதுக்கே என்னா ஒரு வர்ணனை! :)

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக தக்குடு சார்...... வாங்க போகலாம் ஒரு ஊர்வலம் ! வர்ணனை எல்லாம் இல்லை, உண்மையை சொன்னேன் :-)

   Delete
 4. கால் லிட்டர் எண்ணெயில ஒரு தோசையா!? என் சின்ன பொண்ணு தோசை வார்த்தால் அரை லிட்டர் எண்ணெய்தான் இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா..... அவங்க ஜோதிகா மாதிரி போல ! அரை லிட்டர் என்னை ஊற்றினால் அது தோசையா, பூரியா ?!

   Delete
 5. கிச்சன் வரை போய் போட்டோ எடுத்துட்டீங்க போல... சர்வர் தோசை கொண்டுவரும் அழகோ அழகு....

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே....... நமது வாசகர்களுக்காக சில விஷயங்கள் இப்படி எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது :-)

   Delete
 6. Replies
  1. நன்றி கிருஷ்ணா..... அடுத்த முறை வரும்போது செல்லலாமே !

   Delete