Wednesday, September 4, 2013

உயரம் தொடுவோம் - யுரேகா டவர், ஆஸ்திரேலியா

ரொம்ப நாள் ஆச்சு இந்த உயரம் தொடுவோம் பதிவு போட்டு........இந்த வாரம் வாங்க ஆஸ்திரேலியாவின் உயரமான கட்டிடத்தை பார்ப்போம் ! இதுவரை பன்னிரண்டு நாடுகளின் உயரத்தை தொட்ட பதிவுகளை எழுதி இருக்கிறேன், இது பதிமூன்றாவது......! ஆஸ்திரேலியா என்று சொன்னவுடன் நம்ம சினிமாவில் காண்பிப்பது போல பெரிய பெரிய கட்டிடங்கள்தான் நினைவுக்கு வந்தது. நான் முதன் முதலில் ஆஸ்திரேலியா சென்றவுடன், நான் தங்கிய ஹோடேலில் இங்க யுரேகா (Eureka tower) டவர் அப்படின்னு ஒன்னு இருக்காமே, அதுக்கு எப்படி போகணும் அப்படின்னு கேட்டேன், அவங்க என்னை ஒரு மாதிரி பார்த்தாங்க, அது எதுக்கு அப்படின்னு எனக்கு வெளிய வந்து பார்த்தப்பதான் தெரிஞ்சது ! எங்க ஹோட்டலுக்கு நேர் எதிர்தாப்புல இருந்தது அந்த டவர்..... அட கிரகமே, இதுக்குதான் அந்த பார்வையா ?! 


யுரேகா டவர் என்ற இது 297 மீட்டர் (975 அடி) கொண்ட ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் நடுவில் இருக்கும் ஒரு கட்டிடம். ஆகஸ்ட் 2002ல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இது அக்டோபர் 2006ல் கட்டி முடிக்கப்பட்டது. மெல்போர்ன் நகரம் விக்டோரியா மாகணத்தில் இருக்கிறது, 1854இல் ஏற்ப்பட்ட தங்கம் தேடும் வேட்டையில் நிறைய சண்டைகள் வந்து உயிர் நீத்தவர்களின் நினைவாக, கட்டிடத்தின் உச்சியில் தங்கம் மற்றும் ரெட் நிறத்தில் கோடுகள் இருக்கும். இதன் 88வது மாடியில் (ஒரு மாடி கம்மி உயரம் !) ஆஸ்திரேலியா நகரின் அழகை அள்ளி பருக ஒரு இடம் இருக்குது, அதை பற்றி விரிவா பார்ப்போம் வாருங்கள் !

 

 


இந்த கட்டிடத்தின் உச்சியை ஸ்கைடெக் என்கிறார்கள், இது 88வது மாடியில் இருக்கிறது. நீங்கள் செல்ல சுமார் 18.5 ஆஸ்திரேலியா டாலர் ஆகிறது. கூட்டம் எல்லாம் அதிகம் இல்லை, இதனால் நாங்கள் சென்று இருந்தபோது லிப்ட்க்கு உடனே சென்று விட்டோம். லிப்ட் கதவு மூடியவுடன் காத்து சொய் என்றது, ஒரு நொடிக்கு ஒன்பது மீட்டர் உயரம் கடந்தால் பின்னே எப்படி இருக்கும் ! முடிவில் 88வது தளத்தில் இறங்கியவுடன் உங்களது கண்களின் எதிரே ஆஸ்திரேலியா அழகு பிரமிப்பு ஊடும் ! எல்லா பெரிய கட்டிடத்தின் மாடிகளுக்கு செல்லும்போதும் உங்களை அடைத்து வைத்தது போல இருக்கும், அதாவது அந்த பகுதி முழுக்க அடைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இங்கு ஒரு சிறிய இடம் திறந்து விடப்பட்டு இருந்தது, அங்கு வேலி போட்டு நீங்கள் அத்தனை உயரத்தில் காற்றை அனுபவிக்கலாம் ! இவ்வளவு உயரத்தில் காற்று மிக மிக வேகமாக வீசும், அதுவும் நான் சென்று இருந்த சமயத்தில் குளிர் வேறு, ஆனாலும் வெளியே சென்று ஊளையிடும் அந்த காற்றை அனுபவித்தபோது மிக அருமையாக இருந்தது.

 

 

 
 
இங்கு ஒரு ஸ்பெஷல் இடம் என்பது "தி எட்ஜ் (The Edge)" என்னும் இடம். ஒரு கண்ணாடி கூண்டு, நீங்கள் அதில் நீங்கள் உள்ளே சென்றவுடன் அந்த கூண்டை வெளியே சிறிது சிறிதாக தள்ளுவார்கள். முடிவில் உங்களது கால்களுக்கு கீழே கீழே டாக்ஸி ஓடுவது, பூமி எல்லாம் தெரியும் ! இதற்க்கு 12 டாலர் ஆகிறது, நீங்கள் போட்டோ எடுக்க அனுமதி இல்லை, ஆனால் அவர்கள் போட்டோ எடுத்து உங்களுக்கு விற்ப்பார்கள், அதற்க்கு காசு செம ஜாஸ்தி ! ஆனால் கண்டிப்பாக நீங்கள் செல்ல வேண்டிய ஒன்று !
 

 
 


 

Labels : Tall building, Australia, Melbourne, Eureka tower, tallest, Suresh, Kadalpayanangal

20 comments:

 1. கண்டறியாதனக் கண்டேன்
  விரிவான அருமையான பகிர்வுக்கும்
  நேரடியாகப் பார்ப்பதைப்போன்ற
  புகைப்படங்களின் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றி
  உங்களை நேரடியாகச் பதிவர்கள் சந்திப்பில்
  சந்தித்தது அதிக மகிழ்வளித்தது
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் பெங்களுரு வரும் நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்...... உங்களை சந்தித்ததில் எனக்குதான் அதிக மகிழ்ச்சி எனலாம். அந்த பதிவர் சந்திப்பில் உங்களை கண்டத்தில் எனது பயணம் அர்த்தம் மிகுந்ததாக இருந்தது எனலாம் !

   Delete
 2. Replies
  1. தாங்கள் அளித்த தமிழ் மனம் ஓட்டிற்கு மிக்க நன்றி !

   Delete
 3. அடேயப்பா, என்ன ஹைட்டு... கலக்குறீங்க நண்பா...

  ReplyDelete
  Replies
  1. நன்றி-ஜி, பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி !

   Delete
 4. Replies
  1. மிக்க நன்றி தனபாலன் சார் ! எல்லாம் நீங்க குடுத்த ட்ரைனிங் :-)

   Delete
 5. அருமையான பகிர்வுகள்... பாராட்டுக்கள்..

  நாங்களும் சென்றிருந்தோம் ..!

  http://jaghamani.blogspot.com/2011/03/blog-post_8319.html
  யுரேக்கா டவர்ஸ் ..

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அருமையான பதிவு, எனது பதிவை விட மிக நன்றாக இருந்தது.......நன்றி !

   Delete
 6. இனி ஒரு தரம் இப்படிப்பட்ட பதிவுகளை போடுவதா இருந்தா அங்க போக எனக்கொரு டிக்கட் எடுத்து கொடுத்துட்டு பதிவு போடுங்க. வயிற்றெரிச்சல் தாங்க முடியலை :-(

  ReplyDelete
  Replies
  1. டிக்கெட் ரெடி.........ஆனா ஒரு கண்டிஷன், நீங்க அந்த பில்டிங் வெளியே ரெண்டு அடி நடந்து போகணும், ஓகே ?!

   Delete
 7. கடைசி போட்டோல தகிட தகிட பாட்டுக்கு கமல் போல டான்ஸ் ஆட ட்ரை பண்ற மாதிரி இருக்கு!!

  ReplyDelete
  Replies
  1. அட டான்ஸ் ஆடலை, அவ்வளவு உயரத்தில் இருந்து பார்த்ததில் உடம்பே தானா ஆடுது !

   Delete
 8. அது எதுக்கு அப்படின்னு எனக்கு வெளிய வந்து பார்த்தப்பதான் தெரிஞ்சது ! எங்க ஹோட்டலுக்கு நேர் எதிர்தாப்புல இருந்தது அந்த டவர்..... அட கிரகமே, இதுக்குதான் அந்த பார்வையா ?!

  Ha..ha..ha எனக்கு தெரியும் .. உங்களுக்கு தெரியுமான்னு செக் பண்ணுனேன் ன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிருக்கலாம்ல அண்ணே ..!

  Sent from http://bit.ly/otv8Ik

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஊரா இருந்தா அப்படி சொல்லலாம், அது வெளியூராச்சே நம்மைதான் கேனையன் அப்படின்னு நினைப்பாங்க......சரி, எப்ப கொல்லி ஹில்ஸ் படம் எல்லாம் போடா போற....

   Delete
 9. Replies
  1. நன்றி நண்பரே......தங்கள் வார்த்தைகள் மகிழ்ச்சி அளிக்கிறது !

   Delete
 10. Replies
  1. நன்றி கிருஷ்ணா.... அபு தாபியில் இப்படி பெரிய டவர் எதுவும் இருக்கிறதா சொல்லுங்களேன் !

   Delete