Thursday, September 5, 2013

மறக்க முடியா பயணம் - நிருத்யாகிரம், பெங்களுரு

ஒரு மலை கிராமம், அங்கு சுத்தமான காற்று, அங்கு ஒரு குருகுலம், காய்கறி, பழம் என்று எல்லாமே அவர்களே பயிர் செய்து கொள்கின்றனர், சுத்தமான கிராமத்து சூழல் என்றெல்லாம் இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் ?! பெங்களுருவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நிருத்யாகிரம் (Nrityagram), என்னும் குருகுல முறையில் நாட்டிய பயிற்சி அளிக்கும் பள்ளி அப்படிதான் இருந்தது ! நிறைய பேர் என்னிடம் இதை பற்றி சொல்லி இருந்தாலும், சமீபத்தில்தான் அங்கு சென்று வர முடிந்தது. ஒரு அருமையான இயற்க்கை சூழல் இருக்கும் இந்த இடத்திற்கு சென்று வந்ததில் இருந்து உலகம் எவ்வளவு அழகு என்று தோன்றிக்கொண்டே இருந்தது.....!!



நாம் சந்திக்கும் மனிதர்கள் எல்லாம் ஒன்று வேலை செய்பவர்கள் அல்லது தொழில் செய்பவர்கள் என்று இருப்பார்கள், இதனால் வாழ்க்கையில் சில நேரங்களில் நமக்கு பிடித்ததை மனம் முழுவதும் அதே சிந்தனையாக கொண்டு செய்வது என்பது கடினமாக இருக்கும்போது........ டான்ஸ், டான்ஸ், அதுவும் கிளாசிக்கல் டான்ஸ் மட்டுமே எனது வாழ்க்கை என்று வாழ்பவர்கள் இருக்கிறார்களா ?! பெரிய பெரிய குடும்பத்தில் பிறந்து, வசதியாய் வாழ்ந்து குருகுல முறையில் இப்படி டான்ஸ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர் ?! இந்த இடத்திற்கு செல்லும்போது அங்கு சுமார் ஐந்து பேர் வரை இப்படி இருக்கலாம், இதை எல்லாம் இப்படி யார் கற்று கொள்கிறார்கள் என்று நினைத்தது மனது........ ஆனால், நம்மை போல் இல்லாமல், சிலர் வாழ்க்கையை வாழும் முறை, பிடித்ததை உற்சாகமாக செய்வது என்று இந்த இடத்தில் நிறைய பேர் இருந்தனர்.......ம்ம்ம்ம்ம்ம் வாழ்க்கை வாழ்வதற்கே !




முதலில் நுழைந்தவுடன் உங்களை வரவேற்ப்பது இயற்கைதான், எங்கெங்கு காணினும் பசுமையே. அங்கு இருக்கும் ஒரு ஆபீஸ் சென்று ஒரு ஆளுக்கு ஐம்பது ரூபாய் என்று பணம் செலுத்தியவுடன் அவர்கள் அந்த இடத்தை பற்றியும், எதை செய்யலாம் - செய்ய கூடாது என்று சொல்லி முடித்தவுடன் நீங்களே சுற்றி பார்க்க கிளம்பலாம். ஒரு பெரிய சிலை, அது அந்த குருகுல முறையையும், வாழ்வு, இயற்க்கை எல்லாவற்றையும் சொல்கிறது. அதை கடந்தவுடன் தெரியும் சிறிய சிறிய குடில்களில் ஜதி ஒலிக்கிறது. ஒரு மிக அமைதியான சூழலில் ஒரு இசையை கேட்க்கும்போது அவ்வளவு அழகாக இருக்கிறது. உள்ளே நுழைந்து பார்த்தால், சிலர் டான்ஸ் பயிற்சியில் இருந்தனர்..... மனம் நிறைய ஆர்வத்துடனும், சந்தோசத்துடனும் இவர்கள் ஆடுவதை பார்த்தால்தான் புரியும் !



இங்கு தங்கி நடனம் கற்று கொள்பவர்கள் அதை மட்டும் கற்று கொள்வதில்லை...... மொழி பயிற்சி, யோகா, பாடல், இந்திய கலாசாரம், இசை, தியானம் என்று பலவற்றையும் கற்று கொள்கின்றனர். இங்கு சமைக்கப்படும் காய்கறி, பழங்கள் ஆகியவற்றை இவர்களே பயிர் செய்கின்றனர். ப்ரோதிமா கௌரி என்பவற்றின் கனவில் உருவான இது, இன்று கிளாசிக்கல் டான்ஸ் கற்று கொள்பவரின் கூடாரமாக திகழ்கிறது. இங்கு தயாராகும் மாணவர்கள் உலக அளவில் புகழ் பெற்று விளங்குகின்றனர் என்பது அங்கு வைக்கப்பட்டு இருந்த பல போஸ்டர் மூலம் தெரிந்தது.



 
இங்கு அவர்களே பயிரிட்டு வளர்க்கும் காய்கறிகளை குருவுக்கு படைத்து இவர்களும் சாபிடுகின்றனர். இவர்களது குருவின் குடில்கள் எல்லாம் இயற்கையை நேசித்து செய்தது எனலாம். மிக அமைதியாக இருந்த அந்த குடில்களின் அருகினில் சென்றால் அவ்வளவு ஆசையாக இருக்கிறது இது போன்ற வீடுகளில் வாழ. அங்கு இங்கு பயிலும் மாணவிகளுக்கு என்று ஓபன் ஏர் ஆடிடோரியம் ஒன்று இருந்தது, அங்கு அரங்கேற்றம் மற்றும் பயிற்சிகள் சில நேரங்களில் நடைபெறுகிறது.

 





 
 
இதற்க்கு மிக அருகிலேயே தாஜ் ஹோட்டல் குடீரம் என்று ஒன்று இருக்கிறது, இதுவும் இயற்க்கை சூழலில் இருக்கிறது. அங்கு ஓடையில் இருக்கும் வாத்துக்களை பார்த்தவாறே நீங்கள் மதிய உணவை இங்கே அருந்தலாம். ஒருவர்க்கு உணவு என்பது 500 ரூபாய் ஆகிறது என்றாலும், இங்கு வேறு எந்த ஹோட்டல் அருகினில் இல்லை என்பது ஒரு குறை ! நீங்கள் இங்கு தங்கியும் செல்லலாம்....அதற்க்கு ஒரு நாள் வாடகை 3500 ஆகிறது !
 


என்ன இந்த வாரம் அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறதா...... உங்களுக்காக இதோ வழி மற்றும் செல்வதற்கு உதவும் தகவல் !

 
 
Labels : Marakka mudiyaa payanam, memorable journey, suresh, Kadalpayanangal, Bangalore, Nrityagram, dance village

18 comments:

  1. குடீரம் - குடி ரம்...? ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா..... நானே இப்போதுதான் இதை யோசிக்கிறேன், நல்ல வேளை எனது மனைவிக்கு அப்போது அது தெரியவில்லை !! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் !

      Delete
  2. தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

    நன்றி...

    ReplyDelete
  3. Mana amaidiku arumaiyana
    Idam.
    Thanks suresh..

    Raja Hassan.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் ! கண்டிப்பாக இந்த இடம் மிக அருமையான ஒன்று..... சென்று வாருங்கள்.

      Delete
  4. Mana amaidiku arumaiyana
    Idam.
    Thanks suresh..

    Raja Hassan.

    ReplyDelete
  5. Replies
    1. சூப்பர் ஸ்டார் பெருமாள் வாழ்க....... பார்த்து ரொம்ப நாள் ஆச்சு !

      Delete
  6. கலைக்கோவில் என்றால் இதைத்தான்
    சொல்லமுடியும் என நினைக்கிறேன்
    படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்....... நிச்சயம் நீங்கள் சொல்வது போல இது கலை கோவில்தான் !

      Delete
  7. தமிழ் மனம் ஓட்டிற்கு மிக்க நன்றி ரமணி சார் !

    ReplyDelete
  8. இந்த பதிவை பார்த்தவுடன் எனக்கு isha, velliangiri foothills, coimbatore ஞாபகம் வருகிறது. Suresh உங்களுக்கு நேரம் இருக்கும் போது கண்டிப்பாக போய் வாருங்கள். உடல், மனம் இரண்டுக்கும் அவளவு அருமை ஆக இர்ருக்கும். Cost Compare பண்ணும் பொழுது அங்கே Reasonable/fair price என்றே சொல்லலாம்

    ReplyDelete
    Replies
    1. ஆம் பாபு, ஒரு முறை சென்று வந்திருக்கிறேன்..... ஆனால் சீக்கிரமாக திரும்பி விட்டேன், அடுத்த முறை நின்று நிதானமாக இருந்து வர எண்ணி இருக்கிறேன், தகவலுக்கு நன்றி.

      Delete
  9. வாழ்க்கை வாழ்வதற்கே !

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் மணிகண்டன்...... இந்த சிறிய வாழ்கையில் இது போன்று சென்று வந்தால்தான் அர்த்தம் உள்ளதாக தெரிகிறது ! நன்றி !

      Delete
  10. ஆம் மணிகண்டன், வாழ்க்கை வாழ்வதற்கே...... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

    ReplyDelete
  11. வாழ்க்கை வாழ்வதற்கே :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருஷ்ணா.... அபு தாபியில் வாழ்க்கை எப்படி ?!

      Delete