Friday, September 6, 2013

யுவர் பாஸ்வேர்ட் ப்ளீஸ்....!?!

நானும் எனது நண்பனும் ஒரு உணவகத்தில் உண்டு கொண்டிருந்தோம், சாப்பிட்டு முடித்துவிட்டு பில் வந்தபோது அவன்தான் பில் கொடுப்பேன் என்று பிடிவாதமாக பில்லை வாங்கினான். அவனது கிரெடிட் கார்டு கொண்டு பே செய்யலாம் என்று முனைந்தபோது அது பின் நம்பர் கேட்டது, அதை அழுத்தியவுடன்தான் தெரிந்தது அந்த பாஸ்வோர்ட் தப்பு என்பது. மீண்டும் அழுத்தினான், மீண்டும் தவறு என்றது, அவன் பதற்றமாக ஆரம்பித்தான். நானும் அன்று அவ்வளவு பணம் எடுத்து செல்லவில்லை, பர்சும் வீட்டில் வைத்திருந்தேன். நான் அவனை பதட்டமாக பார்க்க, அவன் தலையை இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆட்டினான், நெற்றியை சொரிந்தான் ஆனாலும் நம்பர் தெரியவில்லை.......... இதை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்த ஹோடேலின் முதலாளி, எங்கள் அருகினில் வந்தார், நாங்கள் என்ன சொல்வது என்று முழித்துக்கொண்டிருக்க, அவர் சிரிப்புடன் "என்ன சார், பாஸ்வோர்ட் மறந்து போச்சா, விடுங்க நாளைக்கு வரும்போது கொடுங்களேன், இதுக்கு போய் ஏன் பதட்டபடறீங்க, உங்களை சொல்லி குத்தமில்லை சார், இன்னைக்கு எல்லா இடத்திலும் பாஸ்வோர்ட் கேட்கறாங்க, அதனால் நீங்க எவ்வளவுதான் யாபகம் வைச்சுப்பீங்க" என்று நகர்ந்தபோது எனது மனதில் இதுவரை எவ்வளவு இடத்தில் இது போல் பாஸ்வோர்ட் தேவை படும் அளவு இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன். நினைத்து பாருங்கள்........ இன்றைய உலகத்தில் எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்ட் தேவை என்றாகிவிட்டது, சில பாஸ்வேர்ட் சிலரை யாபகபடுத்தும், சில வெறும் நம்பர்கள்தான், சில முகத்தில் புன்னகை வரவைக்கின்றன, சில சோகத்தை, சில நம்மை பின்னோக்கி அழைத்து செல்கிறது, சில நம்மை கேள்வி கேட்கிறது, சில நம்மை முன்னோக்கி நடக்க சொல்கிறது..... இப்படி நமக்கு முன் ரகசிய பெட்டகங்களை திறக்கும் சாவியாக பாஸ்வேர்ட் இன்று இருக்கிறதே, அன்று நமது பெற்றோர்களுக்கு என்ன பாஸ்வேர்ட் இருந்திருக்கும், இன்று நமது மனதில் இருக்கும் நூற்று கணக்கான அக்கௌன்ட்க்கு இருக்கும் பாஸ்வேர்ட் சில அலைகளை மனதில் எழுப்புகிறதே, அவர்களுக்கு அப்படி ஏதேனும் இருக்கிறதா என்ன ? இன்றைய உலகில் நீங்கள் அந்த சாவியை தொலைத்துவிட்டால் என்ன நடக்கும் ? இன்று நமது மனதில் இருக்கும் அந்த பாஸ்வேர்ட் எப்படி உருவாகிறது என்றாவது யோசித்து இருக்கிறோமா ? பிடித்தவர்களின் பெயர்களும், சில மறக்க முடியாத தேதிகளும்தான் நமது பாஸ்வேர்ட் ஆக இருக்கிறது என்றால் அதை நீங்கள் டைப் செய்யும்போது என்ன உணர்வு வருகிறது ?
 


இன்று ஒரு சராசரி மனிதனுக்கு என்று நிறைய ரகசியங்கள் இருக்கின்றன அல்லவா, அது எல்லாவற்றையும் திறக்க ஒரு பாஸ்வேர்ட் போதும். மெயில், டெலிபோன் பில், சம்பளம், பேங்க் அக்கௌன்ட், ATM மெசின், கிரெடிட் கார்டு, டெலிபோன் லாக், லேப்டாப், கம்பனி வெப்சைட், முகபுத்தகம், எல்லா மெம்பர்ஷிப் கார்டு, மொபைல் லாக், பான் கார்டு, விமான டிக்கெட், ஷாப்பிங் என்று எல்லா இடங்களிலும் நமக்கு என்று ஒரு பாஸ்வேர்ட் வேண்டும் இன்று. ஏதேனும் ஒரு வெப்சைட் ஓபன் செய்து அதில் மெம்பர் ஆகுங்கள் என்று சொல்லி உங்களது பாஸ்வேர்ட் கேட்க்கும்போது உங்களுக்கு டக்கென்று யாபகம் வரும் அந்த ஒரு நம்பர் அல்லது பெயர் எந்த அளவு உங்களது மனதில் ஆழமாக இருக்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா. அந்த பெயரை நீங்கள் ஏன் அந்த அளவு ஆழமாக நேசிக்க வேண்டும் ? ரகசியமாக வைக்க வேண்டும் என்ற அந்த சொல், நீங்கள் எப்போதும் நினைத்து இருப்பதாகவே இருக்கிறதே !


இன்று நினைவுபடுத்தி பார்க்கிறேன், எனது வாழ்வில் இந்த முதல் பாஸ்வோர்ட் என்பதை எங்கு உபயோகித்தேன் என்று. அன்றைய நாளில் பேங்க் பாஸ்புக் மட்டும்தான் மிகவும் ரகசியமாக எங்களது வீட்டில் இருக்கும். முதல் முறையாக ஈமெயில் என்று ஒன்று வந்து எல்லோரும் என்னிடம் உனக்கு ஈமெயில் அக்கௌன்ட் இல்லையா என்று கேட்டபோதுதான், பேங்க் அக்கௌன்ட் தவிர இன்னொரு அக்கௌன்ட் தேவை என்று உணர்ந்த நாள்......அது 1997ம் ஆண்டு ! எனது நண்பன் என்னை ஒரு இன்டர்நெட் பார்லர் ஒன்றிற்கு அழைத்து சென்றபோது முதன் முதலில் ஒரு ஈமெயில் அக்கௌன்ட் உருவாக்கி கொடுத்தான், அப்போது "இதோ இங்க பாஸ்வோர்ட் அடி என்றவுடன் நான் வாய் விட்டு எதை பாஸ்வோர்ட் என்று சொல்ல, அவனோ நில்லு....நில்லு, இதை எல்லாம் பகிர்ந்துகொள்ள கூடாது என்று சொன்னபோது அவனை விநோதமாக பார்த்தேன். எந்த நண்பனிடத்தில் எந்த ரகசியமும் இல்லை, இருக்ககூடாது என்று நான் நினைத்தேனோ, அன்று முதல் ரகசியம் ஒன்று உருவானது. இன்று மனைவியிடமும், பெற்றோரிடமும், நண்பர்களிடமும் என்று சொல்ல முடியாத ரகசியம் என்று நிறைய இருக்கிறது...... ஒவ்வொரு பூட்டப்பட்ட இன்டர்நெட் கதவுக்குள்ளும் செல்வதற்கு ஒரு சாவி, அங்கு ஒரு அறையில் பூக்கள் இருந்தால், இன்னொரு அறையில் காமம், இன்னொன்றில் தகவல், மிருகம், முகமுடி, சிரிப்பு, சோகம், பணம் என்று ஒவ்வொன்றிலும் ஒன்று. ஒரு அறையினை நண்பனுக்கு காட்டினால், இன்னொரு அறையில் ஒன்றுமில்லை என்ற பொய் என்று செல்கிறது வாழ்க்கை ! அன்றைய வாழ்வில் கீழே பணம் கிடந்தால் அது நம்மதில்லை என்றால் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற பண்பு வளர்க்கப்பட்டது, எவருடைய அந்தரங்கத்தையும் எட்டி பார்க்க கூடாது என்று போதிக்கப்பட்டது...... ஆனால் இன்று எல்லோருடைய மனதிலும் ஒரு ஓரத்தில் ஒரு சிறிய மிருகம் உள்ளது, அது சில சமயத்தில் யாரும் பார்க்கவில்லை என்றால் சில ரகசியங்களை தோண்டி பார்க்கிறது. அந்த மிருகத்தை உள்ளே வரவிடாமல் தடுக்க நாம் ஒரு பூட்டு போட்டு விடுகிறோம், ஆனால் மிருகம்......மிருகம்தான் !!


சில நேரங்களில் நினைத்து பார்த்தால் அன்று வாழ்ந்த நமது பெற்றோர்களுக்கு ரகசியம் என்று ஏதேனும் இருந்திருக்கிறதா என்று யோசித்து பார்க்க வேண்டி இருக்கிறது. அன்று இந்த மெயில், மொபைல், முகபுத்தகம், இன்டர்நெட், லேப்டாப் என்று எதுவும் இல்லை. மிகுந்த ரகசியம் என்பது வீட்டில் அப்பா, அம்மா மட்டும் உபயோக்கிக்கும் அந்த பீரோவின் ஒரு சின்ன அறை, அதன் சாவி கூட அம்மாவின் சேலை வைக்கும் இடத்தின் அடியில் இருக்கும் அவ்வளவுதான். எவ்வளவோ ரகசியம் இருந்தாலும், அப்பா அம்மாவிடம் சொல்லிவிடுவார்..... பின்னர் அது என்ன ரகசியம் !! அவர்கள் சில பெயர்களை, நம்பர்களை எல்லாம் இன்று போல் யாபகம் வைத்து கொண்டது கிடையாது, அது யாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று என்றால் அது தொங்கி கொண்டிருக்கும் காலெண்டரில் எழுதபட்டிருக்கும் அவ்வளவுதான். பல நேரங்களில் மறைப்பதற்கு என்று எதுவும் இருக்காது என்றே சொல்லலாம், யாரேனும் ஒருவர் வந்து அந்த காலெண்டரை பார்த்தாலும், அதில் ஏதேனும் ரகசியம் எழுதி இருந்தால் சட்டென்று நகன்று விடுவார்கள். இதை எல்லாம் பார்க்கும் நான் மனிதர்களை நம்ப ஆரம்பித்தேன், ஆனால் இன்று சில வேளைகளில் ரகசியமான தகவல்களை மெயிலில் சேமிக்கிறோம், எல்லோரிடமும் இருந்து எல்லாவற்றையும் பொத்தி பாதுகாக்கிறோம், சில வேளைகளில் நமது குடும்பத்திடமிருந்து கூட என்று சொல்லலாம் ! வீட்டை பூட்டுவது, பீரோவை பூட்டுவது, சைக்கிளை பூட்டுவது என்பதுதான் அன்று அவர்கள் எல்லோரும் ஒரு பொருளை பாதுக்காக்க மேற்கொண்ட முயற்சி, ஆனால் இன்று தகவல்களை பாதுகாக்க இவ்வளவு முயற்சி !

 இன்று பாஸ்வோர்ட் என்பதை உருவாக்குவது என்பது ஒரு கலை ! நிறைய பாஸ்வோர்ட் உள்ளதால் அதையெல்லாம் காப்பதற்க்கு என்று ஒன்று வைத்திருந்து அதற்க்கு ஒரு பெரிய பூட்டு ( பாஸ்வோர்ட்) போட்டு வைத்திருக்கிறோம் இல்லையா ?! முதல் முறையாக நீங்கள் வைத்த அந்த பாஸ்வோர்ட் பற்றி நினைத்து பாருங்கள், இன்று இந்த தளத்தில் நுழைய ஒன்று வேண்டும் என்று சட்டென்று கேட்டால் என்ன வைப்பீர்கள் என்று நினைத்துபாருங்கள், கடந்து வந்த பாதை தெரியும். அம்மாவில் ஆரம்பித்து குழந்தை வரை அந்த பாஸ்வோர்ட் உருமாறி இருக்கும். அவ்வளவு ஆழமாக அந்த பெயரை நேசிக்கிறோம் இல்லையா ?! ATM பின் நம்பர் அதுவும் நான்கு நம்பரில் வைப்பது என்பது அசகாய காரியம், அதுவும் நாம் நினைவில் வைத்து கொள்ளக்கூடிய ஒன்று வேண்டும் எனும்போது அந்த நம்பர் அடிக்கும்போதும் ஒவ்வொரு முறையும் சில நினைவுகள் வரும் அல்லவா.......ஏதேனும் ஒரு தளத்திற்கு ஒரு மறக்கப்பட வேண்டும் என்று நினைக்கும் நபரின் பெயர் எப்போதும் நினைவுபடுத்தும் வண்ணம் ஒரு பாஸ்வோர்ட் கண்டிப்பாக இருந்தால், அது ரகசியமாகவே இருக்கட்டும்....... அந்த நினைவே சுகமானது !

 அன்று ATM சென்று பணம் எடுத்து வரலாம் என்று சென்றேன், நான் எடுக்கும்போது எனக்கு பின்னால் நெருக்கமாக நின்றவரிடத்தில் எனக்கு சிறிது ப்ரைவசி வேண்டும், தள்ளி நிற்க முடியுமா என்று கேட்டு பணம் எடுத்து திரும்பும்போது, அங்கு தள்ளி நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவர், "தம்பி, கொஞ்சம் இந்த கார்டு வைத்து பணம் எடுத்து கொடுக்க முடியுமா ?" என்று கேட்டார். அவருக்கு உதவும் எண்ணத்தில் அவருடன் உள்ளே சென்று ஒவ்வொன்றாக அவருக்கு விளக்கி சொல்லி பின் நம்பர் கேட்ட இடத்தில் நீங்க என்ட்டர் செய்யுங்க சார் என்று சொல்ல அவர் ஒரு பேப்பர் எடுத்து சத்தமாக ஒவ்வொரு நம்பரையும் சொல்லி அழுத்த ஆரம்பித்தார், நல்ல வேளை நாங்கள் இருவர் மட்டும் அதன் உள்ளே இருந்தோம், அவர் அழுத்திவிட்டு பணம் வந்தவுடன் எடுத்து எனக்கு நன்றி சொல்ல, நான் "சார், நம்பர் அழுத்தும்போது சத்தமாக சொல்லாதீர்கள், யாராவது எடுத்து விடுவார்கள்" என்று அட்வைஸ் செய்ய அவரோ "தம்பி என்ன ஏமாத்தவா போறீங்க.... அப்படி என்ன ரகசியம் தேவை சொல்லுங்க. கீழே பணம் கிடந்தாலும் அது யாருது அப்படின்னு எடுத்து கொடுக்கணும் என்ற நினைப்பு இருந்தால் அவங்க நல்லவங்க....... அப்படி நினைக்கிறவன் இடத்தில எந்த ரகசியமும் வேண்டாமே" என்று சொல்லிவிட்டு போகுபவரை பார்த்தேன்....... அவர் சொல்வது உண்மையா இல்லை நான் நினைதிருப்பதுதான் உண்மையா என்று தெரியாமல் நின்று இருந்தேன் !

 Labels : Ennangal, Password, secret, world password, master password, Suresh, Kadalpayanangal

26 comments:

  1. PASSWORD ஞாபகம் வச்சிக்கறது பெரிய விஷயமில்லை... வங்கிகள் அடிக்கடி மாற்றச் செய்கிறார்கள்... இது ஆரோக்கியமான விஷயமே....

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...... அது பயனுள்ள நடைமுறை என்றாலும், நான் சொல்ல வந்தது என்பது இந்த பாஸ்வோர்ட் மனிதனுக்கு ஒரு சுவரை எழுப்புகின்றன என்பதுதான் !

      Delete
  2. Replies
    1. நன்றி தனபாலன் சார் ! தங்கள் வருகையும், கருத்தும் எனக்கு உற்சாகம் அளித்தது !

      Delete
  3. மனிதன் பாதி மிருகம் பாதி படம் அருமை .
    , பகிர்ந்துகொண்ட செய்திகள் பயனுள்ளவை.....

    .பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிகண்டன்...... செய்திகள் உங்களை பாதித்தது கண்டு மகிழ்ச்சி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  4. நாலைந்து வரிகள் அல்லது ஏழெட்டு வரிகளுக்கு ஒரு முறை பத்தி பிரித்து போட்டால் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். கணினியில் வாசிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். தொடர்ச்சியான வரிகள் என்பது சோர்வைத்தரும்.

    இன்று அந்தரங்கம் என்ற பெயரில் 24 மணி நேரமும் பயந்து பயந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்னமும் பலரும் எது குறித்து கவலைப்படாமல் வெள்ளந்தியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையும் வார்த்தையும் ஆயிரம் புத்தகங்கள் படித்த அர்த்தம் பொதிந்த உண்மைகளை நமக்கு உணர்த்தும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜோதிஜி....... இனிமேல் பத்திகளை சிறிது குறைத்து கொள்கிறேன். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  5. ஆழமான அழுத்தமான சுவாரஸ்யமான பதிவு
    ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் கொண்டிருக்கிற
    தெளிவான பார்வையும் தீர்க்கமான முடிவையும்
    இந்தப் பதிவை வைத்தே அறிந்து கொள்ளமுடிகிறது
    நேரமிருப்பின் இதுபோலும் தொடர்ந்து எழுதலாமே
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார், உங்களுக்கு இந்த பதிவு பிடித்தது கண்டு மகிழ்ச்சி, உங்கள் உற்சாகம் தரும் பாராட்டும், இன்னும் எழுத தூண்டும் இது போல....நன்றி !

      Delete
  6. Replies
    1. தமிழ் மணத்தில் தாங்கள் அளித்த ஓட்டுக்கு மிக்க நன்றி !

      Delete
  7. அவர் சொல்வது உண்மையா இல்லை நான் நினைதிருப்பதுதான் உண்மையா என்று தெரியாமல் நின்று இருந்தேன் !
    >>
    அவரின் நிலை அப்படி!! உங்க நிலை இப்படி! அதான் வேற ஒண்ணுமில்ல.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி....... நிலைமை வேறாக இருந்தாலும், அந்த வெள்ளந்தி மனதை களவாடியாதே இந்த பாஸ்வோர்ட் !

      Delete
  8. அம்மாடி .... ஒரு பாஸ்வேர்ட் க்கு பின்னால இவ்ளோ மேட்டர் இருக்கா..?

    அண்ணே இப்போ நானே கிட்டத்தட்ட 20 பாஸ்வேர்ட் நாபகம் வச்சிக்க வேண்டிருக்கு , ரொம்ம்ப கஷ்டம் தான்

    ReplyDelete
    Replies
    1. உனக்காவது புரிந்ததே ஆனந்த்...... இன்னும் செல்ல செல்ல எவ்வளவு யாபகம் வைத்துக்கொள்ள வேண்டி இருக்குமோ ?!

      Delete

  9. PASSWORD does not mean "PASSING THAT WORD AROUND"

    ReplyDelete
    Replies
    1. புரிந்தது நண்பரே..... ஆனால் ரகசியம் பரம ரகசியம் என்று ஒரு சுவர் எழுந்து கொண்டே போகிறதே !

      Delete
  10. அட இந்தக் கட்டுரையை கடல் பயணங்களில் தான் படிக்கிறேனா...? பின்னிருந்த எழுந்த நினைவுகளில் இருந்து வளர்ந்த ஒரு அற்புதமான நினைவுத் தேடல் சார்... இது போன்ற கட்டுரைகள் படிப்பவரது பழைய நியபகங்களையும் கிளறி விடும் என்பதால் இதுபோலும் அடிகடி எழுதுங்கள்...

    இதுபோல் முன்பே எழுதி இருந்தால் எனது அவாவை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.. காரணம் கடல் பயணங்களில் நான் படித்த முதல் நினைவுத் தேடல் அல்லது நினைவுமீட்டல் கட்டுரை இது தான்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனு ! உங்களது உழைப்பினால் பதிவர் திருவிழா மிகவும் சிறப்பாக இருந்தது....... நான் எண்ணங்கள் என்ற தலைப்பில்தான் இதை போல எழுதுகிறேன், இடது பக்கம் இருக்கும் லேபிளில் தேடி பார்த்தால் இன்னும் நிறைய கிடைக்கும்.


      தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே !

      Delete
  11. பாஸ்வேர்டு நமக்கு இன்று நமது BOSS word ஆக மாறிவிட்டது.

    boss word எதுவோ அதை மறக்க கூடாது.
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் சார்..... அருமையான சொல்லாடல் ! தங்களை பதிவர் திருவிழாவில் கண்டு, பேசியதில் மகிழ்ச்சி. நன்றி !

      Delete
  12. Replies
    1. நன்றி கிருஷ்ணா....... எண்ணி பார்த்தால் இந்த பாஸ் வோர்ட் என்பது நம்மை ஆட்டி படைக்கிறது !

      Delete
  13. சுவாரஸ்யமாக சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete