Thursday, October 3, 2013

உலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)

இன்று நான் இதுவரை எழுதிய பதிவுகள் எல்லாம் படித்து பார்த்தபோதுதான் தெரிந்தது நான் ஆம்ஸ்டர்டேம், ஹாலாந்து சென்று வந்ததையும், இன்னும் சில நாடுகளை பற்றியும் இதுவரை நான் எழுதாதது ! நீங்கள் மேலே செல்வதற்கு முன்....... இது ஒன்றும் அடல்ட்ஸ் ஒன்லி பதிவல்ல, நான் போட்டு இருக்கும் படங்களை எல்லாம் பார்த்துவிட்டு திட்டாதீர்கள், இந்த நகரம் அந்த காலத்தில் மாலுமிகள் வந்து ஷோக்காய் இருந்துவிட்டு செல்வதற்கு என்று இருந்ததால் எங்கெங்கு நீங்கள் திரும்பினாலும் இதுதான் தெரிந்தது. ஆகையால், முகம் சுளிப்பவர்கள் இங்கேயே யு டர்ன் அடிக்கவும் !! ஹனி மூன் செல்பவர்கள் செல்ல வேண்டிய தேசம் இது ! முதலில் ஆம்ஸ்டர்டேம் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது டுலிப் மலர்கள் தோட்டம், காற்றாலை, மாடுகளும் அதை மேய்ப்பவர்களும் என்பதுதான், ஆனால் அது எல்லாம் நகருக்கு வெளியே என்று சொல்லி விட்டார்கள். நான் எந்த தெருவுக்கு சென்றாலும் அங்கு அடல்ட்ஸ் ஒன்லி இருந்தது கண்டு வெட்கப்பட்டு ஓடியதுதான் மிச்சம் !!

நமது கேரளா போல நகருக்குள் கடல் உள்ளே வந்து இருந்தது, இதனால் படகில் இந்த நகரம் முழுவதும் சுற்றி வரலாம் ! நான் ட்ரைன் நிலையத்தில் இறங்கி வெளியே வந்தவுடன் மலர் தோட்டம் எங்கே என்று தேடி (நிஜமாதான் சார், நம்புங்க !) அலையவும், ஒவ்வொரு இடத்திலும் படங்களுடன் கூடிய கிளு கிளு சாதனங்கள் நிறைய இருந்தன. நாம்தான் வழி மாறி வந்து விட்டோமோ என்று சந்தேகம் வந்து அங்கு இருக்கும் வாக்கிங் டூர் (ஒரு கைடு உங்களை நடத்தியே ஒவ்வொரு இடத்திற்கும் அழைத்து சென்று அந்த இடத்தின் சிறப்பை விளக்குவார்) சென்றோம். இந்த இடம் ஒரு புகழ் பெற்ற துறைமுகமாக 12ம் நூற்றாண்டில் இருந்து இருக்கிறது. டட்ச் (ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள்) மொழியினர் அந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்தியபோது இங்கு வைரம், மற்ற வியாபாரங்கள் எல்லாம் கொடி கட்டி பறந்தது.

Amsterdam city view

இதற்க்கு அருகில்தான் இங்கிலாந்து இருந்தது, அந்த காலத்தில் கப்பல் போக்குவரத்து அதிகம் இருந்ததால் மாலுமிகள், பிரயாணிகள் இங்கு அதிக அளவில் வியாபாரத்திற்கு வரும்போது பெண், போதை மருந்து எல்லாம் உபயோகிக்க இங்கு வருவார்கள். அதனால் இங்கு இருக்கும் சில கடைகளில் போதை மருந்து கலந்த காபி, டீ எல்லாம் கிடைக்கிறது. நிறைய டி-ஷர்ட் வாசகமாக "நான் போதைக்கு அடிமை" என்றெல்லாம் இங்கு இருப்பதை பார்க்கலாம். அடுத்தது பெண்கள்...... இங்கு ஒரு தெருவுக்கு பெயர் "ஜன்னல் தெரு (Window Street)", அதாவது ஒரு சிறிய அறை, அதில் ஒரு ஜன்னல் போன்ற அமைப்பு இருக்கும், அங்கு பெண்கள் அரை நிர்வாணத்தில் நின்று இருப்பார்கள், பேரம் படிந்தது என்றால் நீங்கள் உள்ளே செல்ல முடியும் ! எங்களை அந்த தெருவுக்கு கைடு கூட்டி செல்லும்போது போட்டோ எடுக்க கூடாது என்று கண்டிப்பாக சொல்ல, கூட்டத்தில் சிலர் ஆர்வ மிகுதியில் போட்டோ எடுக்க அந்த பெண்கள் திட்டிய திட்டு இருக்கிறதே....... எனக்கு டட்ச் புரியவில்லை, ஆனாலும் காதில் ரத்தம் வந்தது. அந்த டூர் முடிந்தபின் ஒரு படகில் ஏறி அந்த இடத்தை சுற்றி வந்தோம், ஏதோ வெனிஸ் நகரத்திற்கு உள்ளே செல்வது போல இருந்தது. தரையில் வீடு கட்டி தங்கி இருந்தால் நிறைய செலவு என்று நிறைய பேர் படகில் சிறிய வீடு கட்டி தங்கி இருந்தனர்.எனக்கு அங்கு மிகவும் பிடித்தது என்பது அங்கு இருந்த தெருக்கள்தான் (யாருப்பா அது...... ஜன்னல் தெரு அப்படின்னது :-) ). மிகவும் குறுகிய தெருக்கள், அதை ஓட்டி கடல் தண்ணீர் உள்ளே பாயும் சிறிய ஆறுகள். நடக்கும்போது அந்த குளுகுளுப்பு உங்களுக்கு எப்போதும் தெரியும். அங்கு நிறைய உணவகங்கள் வெனிஸ் நகரத்தில் இருப்பது போல தண்ணீரை ஓட்டி இருப்பதும் மிகவும் அழகு. நகரத்தில் இது போன்று மட்டும்தான் உங்களுக்கு காண கிடைக்கும், ஆனால் சிறிது வெளியே சென்றால் டுலிப் பூக்கள் சிரிக்கும் தோட்டமும், பச்சை பசேல் என்ற புல்வெளிகளும் என்று மனதை மயக்குகிறது இந்த இடம். இப்படி தண்ணீரில் செல்லும்போது, அங்கு இருக்கும் உணவகங்கள், பாலங்கள் எல்லாம் பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த நகரம் முழுவதும் இப்படி நிறைய பாலங்கள். சில இடங்களில் சிறிது பெரிய கப்பல் உள்ளே வர பாலம் திறந்து மூடுகிறது. இந்த நகரத்தில் பாலங்கள் அதிகம் ! அடுத்து இங்கு இருக்கும் உணவகங்கள், தண்ணீருக்கு மிக அருகில் அருமையாக இருக்கிறது. சிறிது வைன் குடித்து கொண்டே ஒரு மாலை பொழுதில் மனைவியுடன் இங்கே அமர்ந்து சாப்பிட்டால்..... !!
 
 

 

 
இங்கு படகில் செல்லும்போது ஒன்று கவனித்தேன், வீடுகளுக்கு இடையில் இடமே இல்லை. ஒவ்வொரு வீடும் ஒட்டி ஒட்டி இருந்தது. படகு ஓட்டியவர், ஒரு இடத்தில நிறுத்தி அங்கே தெரியும் வீடுகளில் சிகப்பு பெயிண்ட் அடித்ததுதான் இங்கே மிக சிறிய வீடு என்றார்..... எனக்கு மணத்தில் அடேய், அது எங்க கிராமத்து சந்துடா என்று தோன்றியது ! சிலர் முன்பே சொல்லியது போல படகுகளை வீடுகள் போல மாற்றி மின் இணைப்பு எல்லாம் எடுத்து வசிக்கின்றனர். இங்கு வீடுகளை பார்க்க பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.
 
 
 


 
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் இந்த பதிவு ஒரு புத்தகம் போடும் அளவு வரும்...... அடுத்த பதிவில் அவர்களது கலை, கலாசாரம் என்றெல்லாம் எழுதுகிறேன் !


Labels : World tour, Amsterdam, Netherland, Suresh, Kadalpayanangal, Windown street

22 comments:

 1. விரைவில் புத்தகத்தை எதிர்ப்பார்க்கின்றேன்...!

  பறக்க வாருங்கள் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன் சார்.... இதை பற்றி புத்தகம் போட்டு அடுத்த பதிவர் சந்திப்பில் வெளியிட வேண்டியதுதான், நீங்கள்தான் முன்னுரை சரியா ?!

   Delete
 2. படங்கள் அறுமை..இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்..நன்றி நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. நன்றி முருகேசன், விரைவில் இன்னும் விரிவாக இது பற்றி எழுத இருக்கின்றேன். தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete
 3. இந்த பாஸ்போர்ட்ட எங்க வச்சேன் ...?

  ReplyDelete
  Replies
  1. இதை இதை இதைதான் நான் எதிர்பார்த்தேன் !

   Delete
 4. உலகம் சுற்றும் வாலிபன் பாஸ் நீங்க....

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே........ இந்த உலகம் சிறிதுதான் என்றுதான் தோன்றுகிறது, இப்படி சுடுர்ம்போது !

   Delete
 5. Replies
  1. உங்களது அடுத்த பயணம் அங்குதான் என்று நினைக்கிறேன் !!

   Delete
 6. I heard cycle is most preferred in Amsterdam, is it so.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே..... ஆம், அங்கு சைக்கிள் நிறைய பார்த்தேன், ஆனால் ஊருக்கு வெளியே சென்றால் இன்னும் பார்க்கலாம் என்றார்கள், போகத்தான் டைம் இல்லை !

   Delete
 7. ஆற்றோரம் ஹோட்டல்கள் அழகாக இருக்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மாதேவி...... தங்கள் வரவும், கருத்தும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது !

   Delete
 8. நீங்கள் பதிவுகென்று சுருக்கி எழுதாமல்
  நினைத்ததை ரசித்ததை இரண்டு மூன்று
  பதிவுகளாகப் பிரித்துக் கூட எழுதலாம்
  அப்படியே புத்தகமாக வெளியிட்டால்
  அனைவருக்கும் நிச்சயம் பயன்படும்
  இப்போது தமிழில் நல்ல பயண நூல்கள் இல்லை
  படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
  (அனேகமாக நான் தீபாவளிக்கென்று
  பெங்களூர் வரலாம் என நினைக்கிறேன்
  தாங்கள் ஊரில் இருப்பீர்களாயின்
  சந்திக்க முயல்கிறேன் )

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக இன்னும் நிறைய தகவல்களை சேர்த்து எழுதுகிறேன் சார்......என்ன தீபாவளிக்கு வந்தீர்களா, அட உங்க கருத்தை இப்போதானே பார்க்கிறேன். இன்றும் இங்கே இருக்கிறீர்களா, சந்திக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

   Delete
 9. Replies
  1. தமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி சார் !

   Delete
 10. Sex shop பற்றி எழுதலாம். தப்பில்லை.

  ReplyDelete
  Replies
  1. அதை பற்றி எழுதணும் என்றால் நிறைய நான் எடுத்த படங்களுடன் எழுதலாம்தான், ஆனால் வீட்டில் தெரிந்தால் திட்டு விழுமே சார் !

   Delete
 11. படங்களும் விமர்சனமும் அருமை

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே, உங்களது வருகையும் கருதும் மகிழ்ச்சி அளிக்கிறது !

   Delete