Friday, October 4, 2013

ஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)

சென்ற வாரம் "கரூர் திரைசீலை (பகுதி - 1)" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர், எல்லோருக்கும் மிக்க நன்றி ! இவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி போய் எழுதும் பதிவுகளை ரசிப்பீர்களோ என்று நினைத்தேன், உங்களது ஆதரவு என்னை மேலும் இது போல எழுத தூண்டுகிறது !! சரி வாருங்கள் இந்த வாரம் நாம் அந்த திரைசீலையை எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போம். சென்ற வாரம் ஒரு நூல் எந்த அளவு வாங்க வேண்டும், அது எப்படி வரும், அதை எப்படி ஒரு கோன் வடிவில் சுற்றுகிறார்கள் என்று பார்த்தோம். இந்த வாரம் வாருங்கள் ஒரு திரைசீலை எப்படி தயாராகிறது என்று பார்க்கலாம். இப்படி கோன் போன்று சுற்றப்பட்ட நூல் ஒரே அளவுள்ளதாக இருப்பது என்பது மிகவும் முக்கியம். ஒரு திரைசீலையின் அளவு பொறுத்து எவ்வளவு நூல் வேண்டும் என்பது முடிவாகும்.




ஒரு திரைசீலை எப்படி தயாராகிறது என்று நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். திரைசீலை என்பது குறுக்கும் நெடுக்குமாக செல்லும் நூல், அந்த குறுக்கும் நெடுக்கும் என்பதை இங்கே வார்ப் (Warp) மற்றும் வெப்ட் (Wept) என்கிறார்கள். இதில் டிசைன் என்பது எந்த இடத்தின் நூலை மேலே தூக்குகின்றோமோ, அதில் இந்த குறுக்கே செல்லும் நூல் மேலே தெரியும், மற்ற இடங்களில் அது கீழே சென்று விடும். இதனால்தான் திரைசீளைகளில் ஒரு புறம் மங்கலாக தெரியும் பூ வேலைபாடுகள், திருப்பி பார்க்கும்போது நன்றாக பளிச்சென்று தெரியும். இந்த வெப்ட் என்னும் நூலை (குறுக்கு நூல்) கொண்டு செல்வது ஷட்டில் (shuttle) எனப்படும். இவ்வளவு இப்போதைக்கு தெரிந்தால் போதும்.






ஒரு எட்டடி கொண்ட திரைசீலை தயாராகிறது என்றால் அதற்க்கு சுமார் மூவாயிரம் நூல் (அடி கணக்கு அல்ல..... ஒவ்வொரு நூலாக மூவாயிரம்) வேண்டும். அது முடிவானவுடன், அதை ஒரு யந்திரத்தின் உதவியுடன் ஒரு ரோலரில் சுற்றுவார்கள். இதைதான் வார்ப் என்கிறோம், இதில் மிக முக்கியமானது எந்த நூலும் அறுந்து விட கூடாது. மெதுவாக இதை சுற்றுவார்கள். எவ்வளவு அடி சுற்றுகிறோமோ அத்தனை அடி துணி கிடைப்பதால், மிகவும் கவனமாக சுற்றுவார்கள்.




இதற்க்கு பின்னர் இந்த நூலை மெசினில் கொண்டு சேர்க்க வேண்டும். அதை அப்படியே மெசினில் எடுத்து விட முடியாது. ஒவ்வொரு நூலும் சரியான துளை வழியாக கொண்டு செல்ல வேண்டும், அதை ஐ (eye) என்பார்கள். இந்த துளை வழியாக மூவாயிரம் நூலையும் கொண்டு செல்ல வேண்டும்...... ஒவ்வொரு நூலுக்கும், ஒவ்வொரு துளை ! இந்த வேலை ரொம்ப கஷ்டம்...... சில நேரங்களில் நாள் கணக்கில் கூட செய்வார்கள் !




இதை செய்து முடித்தவுடன், இந்த துளை இருக்கும் சட்டத்தை அப்படியே தூக்கி மெசினில் பொருத்தி விடுவார்கள். இப்போது, அந்த நூலை அடுத்த பகுதியில் இருக்கும் ஒரு உருளையில் நன்கு பிணைத்து விட வேண்டும். இப்போது நெடுக்கு நூல் ரெடி, குறுக்கு நூல் எப்படி செய்வது ?! நூலை குறுக்கே எடுத்து செல்வது ஷட்டில் எனப்படும் ஒரு சாதனம். பொதுவாக இந்த குறுக்கு நூலை எவ்வளவு சீக்கிரம் எடுத்து செல்கிறோமோ, அவ்வளவு விரைவாக துணி கிடைக்கும். உதாரணமாக, கைகளின் மூலமாக நீங்கள் இந்த நூலை இடையில் நுழைத்து எடுத்து சென்றால் இரண்டு நிமிடம் ஆகலாம், அதுவே ஒரு மெசின் மூலம் செய்தால் இரண்டு நொடி ஆகலாம்....... இந்த இரண்டு நொடி கூட மிகவும் அதிகம் இப்படிப்பட்ட தொழிற்சாலைகளில் !! ஆகவே நிறைய நிறைய டெக்னாலஜி வந்து இருக்கிறது...... Single rigid, Double rigid, Telescope, Projectile, Air jet, Water jet என்று நிறைய தொழில் நுட்பம் இருக்கிறது, ஒவ்வொன்றிலும் இந்த குறுக்கு நூல் செலுத்தும் டைம் மிகவும் கம்மி, இதன் பயன் என்பது ஒரு மீட்டர் துணி செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதுதான். நாம் இந்த ஷட்டில் முறையில் செய்யப்படும் துணிகளை பார்க்கும்போது, அதன் உள்ளே ஒரு நூல் இருக்கும், அதை வெளியே தனியே எடுத்து சுற்ற வேண்டும். ஒவ்வொரு முறையும் இப்படி நூல் மாற்ற வேண்டும், இப்போது அதற்கும் ஆட்டோமாடிக் வந்து விட்டது !






அன்றைய திரைசீலைகள் எல்லாம் பிளைன் முறையில் தயார் செய்யப்பட்டது. இன்று எல்லாவற்றிலும் டிசைன் கேட்பதால், ஜக்கார்ட் முறையில் செய்கிறார்கள்.  ஜக்கார்ட் முறை பற்றி நிறைய சொல்ல வேண்டும் என்று எனக்கு ஆசைதான், ஆனால் இந்த பதிவில் அதை பார்க்காமல், நான் அடுத்து எழுத போகும் "சென்னிமலை போர்வை" பற்ற பதிவில் அதை பற்றி பார்ப்போமே !  இப்போது நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டால் போதும், ஒரு நூல் மேலே கீழே சென்று வரும்போது, குறுக்கே செல்லும் நூல் அப்படி போகும்போது இங்கு துணி உருவாகிறது. நீங்கள் இப்போது போட்டு இருக்கும் ஷர்ட் துணி கூட அப்படி செய்யப்பட்டதுதான். ஒரு திரைசீலை உருவாக எவ்வளவு உழைப்பு தேவை படுகிறது பாருங்கள் !! சரி, வாங்க அதை விற்கும் இடத்திற்கு சென்று பார்க்கலாம் ! 




 
இந்த திரைசீலை தயாரிப்பு, லூம் பற்றி எல்லாம் மேலும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை சொடுக்கவும்........ http://www.youtube.com/watch?v=TyhDkd8Iabs
 
சரி, பெரும் தொழிலாக இதை செய்தால் எப்படி இருக்கும், என்பதை காண்பித்தேன், அதையே சிறு தொழிலாக செய்ய முடியுமா, லாபம் இருக்குமா என்று கேட்பவர்களுக்கு, கீழே இருக்கும் படத்தை பாருங்கள்........ நீங்கள் எவ்வளவு திரைசீலை தயாரிக்கிரீர்களோ, எந்த தரத்தில் தயாராகிறதோ அவ்வளவு விலை. ஆகையால், இங்கே கரூரில் வீட்டிற்க்கு வீடு திரைசீலை தயாரிப்பது என்று இருக்கிறது. செய்யும் முறை எல்லாம் ஒன்றுதான் ஆனால் இங்கு சிறிய மெசினில்..... இதனால் ஒரு மீட்டர் செய்வதற்கு சிறிது நேரம் அதிகமாகும் !
 


 
இப்படி அலைந்து திரிந்து திரைசீலை தயார் செய்ததை பார்த்துவிட்டு நான் விடைபெறும் நேரம், நான் அது எப்படி ஏற்றுமதியாகிறது என்று பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன் என்னுடன் ஒருவரை அனுப்பி ஒரு ஏற்றுமதி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார். எப்போது துணிக்கடைக்கு சென்றாலும் சுமார் நூறு அல்லது ஐநூறு திரைசீலைகளை மட்டுமே பார்த்த எனக்கு ஆயிரம் ஆயிரமாய் இப்படி கொட்டி கிடக்கும் திரைசீலைகளை பார்த்ததில் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எல்லா டிசைன், நூல் வகை, கலர் என்று அடுக்கி வைத்து இருந்தனர். அதை பற்றி அவர்களிடம் விரிவாக விவாதித்தேன்...... எப்படி அது சந்தைபடுகிறது, எங்கு செல்கிறது, எப்படி ஆர்டர் கிடைக்கிறது என்றெல்லாம். அதை எல்லாம் இங்கே எழுதினால் அது உங்களுக்கு போர் அடித்து விடும் என்பதால், இதோ இந்த படத்தை பார்த்து கரூர் ஏன் திரைசீலைக்கு பெயர் பெற்று இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் !






 
 
Labels : Oor Special, Karur, Screens, Thiraiseelai, Suresh, Kadalpayanangal, District, Part 2

30 comments:

  1. ஒவ்வொரு விளக்கமும் படத்துடன் நன்றாக சொல்லி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்..... இந்த பதிவு உங்களின் நினைவுகளை தூண்டியதா ?!

      Delete
  2. பவர்லூம் தறி இருந்த ஊரில் சின்ன பிள்ளைல இருந்தோம். அதனால, நூல் நூற்பது, ஜாக்காட், பாவு, நாடா பத்திலாம் நல்லாவே தெரியும். ஆனா, ஏற்றுமதி பற்றி அறிய ஆவலா இருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி...... ஏற்றுமதி பற்றி விரைவில் ஒரு முழு பதிவு எழுத இருக்கிறேன். இப்படி செல்லும்போது நான் நிறைய மார்க்கெட்டிங் முறை பற்றி தெரிந்து கொண்டேன், அதையும் பகிர்கிறேன்.

      Delete
  3. திரைக்கதை போல் அருமையாக
    ஒவ்வொரு பகுதியாக திரைச்ச்சீலை குறித்து
    விவரித்துப் போனது மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பயனுள்ள பகிர்வுக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்.......

      Delete
  4. ஹைய்யோ!!!!! இவ்ளோ இருக்கா!!!!! அட்டகாசமான பதிவு.

    நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவை நீங்கள் ரசித்தது கண்டு மகிழ்ச்சி, நன்றி !

      Delete
  5. அரிய பல தகவல்களை அறிந்து கொண்டேன் ... நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  6. தமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி சார் !

    ReplyDelete
  7. நல்ல ஆய்வுக்கட்டுரை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பரிதி...... உங்களது பதிவுகளின் ரசிகன் நான், அதுவும் உங்களது பதிவுகளில் நீங்கள் கலக்கும் கிராபிக்ஸ் அருமை ! தாங்கள் எனது பதிவை படித்து கண்டு மகிழ்ச்சி !

      Delete
  8. விளக்கமாக படங்களுடன் தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி, இந்த விளக்கங்களும் படங்களும் உங்களுக்கு பிடித்தது கண்டு மகிழ்ச்சி !

      Delete
  9. விளக்கமான விவரிப்புக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிகண்டன்....... இந்த பதிவு உங்களுக்கு பிடித்தது கண்டு மகிழ்ச்சி !

      Delete
  10. பாராட்டுகள்மிக நன்றாக விளக்கியுள்ளிர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைரமணி....... இந்த கொசுவலையில் உங்களது மனதை பரிகொடுததற்க்கு !

      Delete
  11. படங்களும் விளக்கமும் அருமை. அறியாத தகவல்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்.... உங்களது கவிதைகளின் ரசிகன் நான் !

      Delete
  12. அம்மாடியோவ் !இதில் இவ்வளவு சமாசாரங்களா ?

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி..... இந்த பதிவு இப்படி உங்களுக்கு ஆச்சர்யங்களை ஏற்படுத்தினால் அதுதான் எனது வெற்றி !

      Delete
  13. படங்களும் விளக்கமும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அசோகர் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.....

      Delete
  14. Replies
    1. முடியலையா..... இப்போதானே ஆரம்பிச்சு இருக்கேன்....!!

      Delete
  15. அற்புதமான பதிவு. என்னமா உழைத்து எழுதியிருக்கிறீர்கள்! கரூருக்கு ஒரு ட்ரிப் அடுத்த இந்திய வருகையில் கட்டாயம் உண்டு!

    ReplyDelete
    Replies
    1. ஒரு சின்ன கொசுவலை உங்களை சிறை பிடித்தது கண்டு மகிழ்ச்சி !

      Delete