சென்ற வாரத்தில் ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 1) பார்த்தீர்கள், எப்படி இருந்தது ?! பொதுவாக எந்த மிருக காட்சி சாலை சென்றாலும் மிருகங்கள் எல்லாம் கூண்டுக்குள் அல்லது வெளியே வர முடியாதபடி இருக்கிறது என்று நம்பிக்கை இருக்கும், அதனால் நீங்கள் அமைதியாக செல்லலாம். ஆனால், இங்கு மிருகங்கள் சுகமாக திரிவதால், எந்த நேரத்தில் என்ன செய்யும் என்று தெரியவில்லை என்பதுதான் நிஜம், அந்த த்ரில் இந்த சபாரியில் இருக்கிறது என்று கண்டிப்பாக சொல்லலாம் ! நான் சென்ற வாகனத்தின் டிரைவர், ஒரு இடத்தில் (பாதுகாப்பான இடம்தான்) நிறுத்தி இயற்க்கை உபாதையை கழிக்க சென்று விட்டு வரும்போது, முன்னே இருந்த ஒரு காருக்கு சென்று என்னவோ பேசிவிட்டு வந்தார், அவர்கள் உடனே அந்த காரின் பின்னே இருந்த டயரை கழட்டி உள்ளே போட்டனர், வந்தவரிடம் விசாரித்தபோது சில சமயங்களில் சிங்கங்கள் அதில் தொங்கி கொண்டே விளையாடும், இதனால் அதன் வெயிட் தாங்காமல் கதவு பியித்து கொண்ட நிகழ்வு எல்லாம் உண்டு, அதனால் அவர்களை எச்சரித்தேன் என்றபோது சிறிது நடுக்கமாகதான் இருந்தது !
எல்லா இடத்திலும் நுழையும்போது எந்த விதமான உணர்வும் எழவில்லை, ஆனால் இந்த வெள்ளை சிங்கம் பார்க்க போகும்போது மட்டும் மனதில் ஒரு ஆர்வம் எழுந்தது. சென்ற வாரத்தில் அந்த வெள்ளை சிங்கம் இடத்தில நிறுத்தி, அங்கு வளர்ந்து இருந்த காய்ந்த புல்லுக்கு இடையில் தெரிந்தும் தெரியாமல் இருந்த வெள்ளை சிங்கத்தை எண்ண ஆரம்பித்து இருந்ததை சொல்லி இருந்தேன் அல்லவா...... சுமார் பதினைந்து சிங்கங்கள் அங்கே ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தது. சில சிங்கங்கள் நாங்கள் வந்த வாகனத்தை சோம்பலுடன் பார்த்து படுத்துக்கொண்டது. எங்களை போல நிறைய பேர் இப்படி வண்டியின் உள்ளே இருந்து போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர் ! அதை முடித்த பின்பு பிரவுன் சிங்கம் பார்க்க கிளம்பினால் எளிதில் கிடைக்கவில்லை, கடைசியில் ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தவரை பார்த்து படம் எடுத்துக்கொண்டோம். எழுந்து நின்றபோது அதன் கம்பீரம் ஆளை அசத்துகிறது !
பின்னர் தூரத்தில் நெருப்பு கோழிகளும், மான் இனங்களும் இருந்தது கண்டு அங்கு விரைந்தோம். நாங்கள் செல்லும் வழியிலேயே ஒரு நெருப்பு கோழி வாக்கிங் சென்று கொண்டு இருந்தது. எங்களது வண்டி மிக நெருக்கத்தில் சென்றபோது ஜன்னல் கதவை திறந்து நான் எடுத்த போட்டோ பாருங்கள். எங்களை திரும்பி பார்த்தாலும், ஒன்றும் செய்யாமல் விட்டது ! அப்படியே அது போல நிறைய நெருப்பு கோழிகள் இருந்த இடத்தை அடைந்து அது செல்ல சண்டைகள் போட்டதை பார்க்க ஆனந்தமாக இருந்தது.
பின்னர் ஆப்ரிக்காவில் மிகவும் பிரபலமான காண்டா மிருகம் பார்க்க வண்டியை எடுத்தோம். காண்டா மிருகங்கள் அவ்வளவாக வேகமாக நகராமல் இருக்கும், இதனால் எல்லோரும் எல்லா மிருகத்தை பார்த்தபின் மெதுவாகத்தான் அந்த இடத்தை அடைகின்றனர். நான் சென்று இருந்த போது சாப்பாடு நேரம், அங்கு மந்தை மந்தையாக காட்டெருமை கூட்டமும், காண்டா மிருகமும் இருந்தது. பெரிய காண்டா மிருகம் மெதுவாக போட்டதை சாப்பிட்டு இருக்க, சின்ன காண்டா மிருகம் ஒரு காட்டெருமை உடன் சண்டை போட்டு கொண்டு இருந்தது மிகவும் வேடிக்கை. ஆப்ரிக்காவில் இந்த காண்டா மிருக கொம்புகள் மருத்துவ குணம் உள்ளது என்று கருதபடுவதால், இதை கொள்பவர்கள் அதிகம், இதனால் அதை எதிர்ப்பவர்கள் காண்டா மிருகம் கொம்பை போலவே பிளாஸ்டிக்கில் சிகப்பு நிறத்தில் காருக்கு முன்னே வைத்து கொண்டு செல்வதை பார்க்கலாம் ! இப்படி பார்த்துக்கொண்டே செல்லும்போது, காரின் கதவை திறந்து கீழே இறங்கி போட்டோ எடுக்க வேண்டும் என்றபோது டிரைவர் என்னை எச்சரித்தார், இதனால் கதவை மட்டும் திறந்து கொண்டு கீழே இறங்காமல் ஒரு போஸ் !
அடுத்து நாங்கள் சென்றது மிகவும் த்ரில்லிங் ஆன இடம் ........ சரி, அதை அடுத்த பகுதியில் பார்ப்போமே ! அதுவரை இந்த காட்சிகளை ரசிதிருங்களேன் !!
Labels : Suresh, Kadalpayanangal, Africa, Safari, Thrilling, Adventure, trip
சில சமயங்களில் சிங்கங்கள் அதில் தொங்கி கொண்டே விளையாடும், இதனால் அதன் வெயிட் தாங்காமல் கதவு பியித்து கொண்ட நிகழ்வு எல்லாம் உண்டு, அதனால் அவர்களை எச்சரித்தேன் என்றபோது சிறிது நடுக்கமாகதான் இருந்தது !
ReplyDeleteதிரில்லிங் ஆன பயணத்தை காட்சிப்படுத்தியதற்கு நன்றிகள்..!
நன்றி நண்பரே..... இந்த அளவு த்ரில் எல்லாம் த்ரில்ல்தான், ஆனால் திகில் அதிகம் ! நன்றி !
Deleteஇதுதான் உண்மையான திரில் பயணம்
ReplyDeleteபடங்களுடன் விவரிப்பு நேரடியாகப் பார்ப்பதைப்
போன்ற உணர்வை ஏற்படுத்திப்போகிறது
பகிர்வுக்கு மிக்க நன்றி
தொடர வாழ்த்துக்கள்
நன்றி சார் ! இந்த அளவுக்கு த்ரில் பயணம் நமது ஊரில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று தோன்றியது !
Deletetha.ma 1
ReplyDeleteதமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி சார் !
Deleteரசித்தேன்... என்னவொரு தைரியம்...! வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteமிக்க நன்றி சார்....... தைரியமா எனக்கா, உள்ளுக்குள் நடுங்கியது எனக்குதான் தெரியும் !
Deleteசூப்பர் நண்பா... ஒரு சாகசப் பயணத்தை எங்களுக்குத் தந்தமைக்கு நன்றி.... நெருப்புக்கோழியின் நடை பிரமாதம்....
ReplyDeleteநன்றி நண்பரே...... தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !
DeleteWhat job you do? I want your job and travel all the time.
ReplyDeleteஹா ஹா ஹா........ நண்பரே, நான் தகவல் தொழில்நுட்ப துறையில் பணி புரிகிறேன். இது போல் பயணம் இனிதாக இருந்தாலும், நீங்கள் உங்களது குடும்பத்தை மிஸ் செய்ய வேண்டி இருக்கும் !
Deleteamazing :-))
ReplyDeleteநன்றி கிருஷ்ணா !
Deleteகாண்டாமிருகங்கள் , சிங்கங்கள் பார்க்கவே திரில்ஆக இருக்கின்றது.
ReplyDeleteநன்றி மாதேவி ! நீங்கள் ரசித்தது கண்டு மகிழ்ச்சி !
Delete