நான் ஆபீசில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு மனநலம் தவறியவரை எப்போதும் பார்ப்பேன். அவர் குளித்து பல வருடங்கள் ஆகி இருக்கும் என்று நினைக்கிறேன். சமீபத்தில் எனது நண்பன் ஒருவன் பெங்களுருக்கு மாற்றல் ஆகி வந்து இருந்தான், அவனை கடந்த பல மாதங்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்து சென்ற வாரம்தான் சந்திக்க முடிந்தது. அவனை ஏற்றிக்கொண்டு ஒரு உணவகம் நோக்கி சென்று கொண்டு இருந்தபோது அந்த மன நலம் தவறியவரை தாண்டி செல்ல நேர்ந்தது. நான் பைக்கில் சென்று கொண்டு இருந்தபோது சடக்கென்று என்ன நினைத்தாரோ ஓட்டமாக ரோடை கிராஸ் செய்தார், நான் பிரேக் போட்டு விட்டாலும், எனக்கு பக்கத்தில் வந்த வண்டி அவரை மோதியது. மோதிய அந்த வண்டிக்காரன் அந்த ஆளை திரும்பி பார்த்துவிட்டு சென்று விட்டான், நானும் திட்டி விட்டு வண்டியை எடுக்க போகும்போது எனது நண்பன் என்னை நிறுத்த சொல்லிவிட்டு அந்த ஆளை கைத்தாங்கலாக ரோட்டின் ஓரத்தில் உட்கார்த்தி வைத்துவிட்டு யாருக்கோ போன் செய்தான். போன் பேசி முடித்தவுடன் என்னிடம் அந்த ஆள் எத்தனை நாட்களாக இங்கே இருக்கிறான், என்ன செய்வான் என்று கேட்க நான் சுமார் இரண்டு வருடங்களாக அவனை பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னபோது அவன் என்னிடம் "ஏன்டா.... ஒரு ஆள் இப்படி மன நலம் தவறி இருக்கிறான், ஆனா செத்து ஒன்னும் போயிடலை, அவனை பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு இல்லத்தில் சேர்க்க கூடாதா ?" என்று கேட்க, நானோ "என்னை ஏன்டா திட்டறே, இங்க ஒரு ஹோம் இருக்குது அப்படின்னு எனக்கு எப்படிடா தெரியும்..... அதை எல்லாம் நான் எப்படிடா தேடி வைக்கிறது" என்று பேசிக்கொண்டு இருந்தபோதே ஒரு ஓம்னி வேனில் வந்த இருவர் எனது நண்பனிடம் வந்து பேசினார், அந்த வேனில் ஒரு தொண்டு நிறுவனத்தின் முகவரி எழுதி இருந்தது. அந்த மன நலம் தவறிய ஆளை ஏற்றி விட்டு என்னிடம் திரும்பி "ஏழு வருஷமா இந்த பக்கம் போய் வர, ஆனால் அவசியமான ஒரு நம்பர் கூட சேகரித்து வைக்கலையா ? போனில் எப்போவோ பேச போற ஒருத்தனோட நம்பர் எல்லாம் இருக்கும், ஆனா அத்தியாவசிய தேவையான ஒரு நம்பர் கூட குறிச்சி வைக்க மாட்டியா ?" என்று சொன்னபோது பொட்டில் அடித்தது போல இருந்தது. பஸ்சில் செல்லும்போது கண்டக்டர் மேல் கம்ப்ளைன்ட் கொடுக்க ஒரு எண் உண்டு என்று முகபுத்தகத்தில் வலம் வருகிறது, ஆனால் நான் குறித்துக் கொள்ளவில்லை..... ஏன் என்றால் நான் இப்போது பஸ்சில் செல்ல வில்லை, ஆனால் எப்போதுமே நான் பஸ்சில் செல்வதில்லையா என்ன ? 100 என்று டயல் செய்தால் போலீஸ் உதவிக்கு வரும், 108 என்று டயல் செய்தால் ஆம்புலன்ஸ் வரும், 1098 என்று டயல் செய்தால் சைல்ட் லைன் உதவிக்கு வரும்........ ஆனால், நமது மொபைலில்இருந்து டயல் செய்தால் அது வருமா என்று உங்களுக்கு தெரியுமா ? எத்தனைமுறை இதுவரை டயல் செய்து இருக்கிறீர்கள் ? உங்களது இத்தனை வருட வாழ்க்கையில், எத்தனை முறை 100 டயல் செய்து இருந்தீர்கள்...... ஒரு முறை கூட இல்லையென்றால், ஒன்று உங்களது வாழ்க்கை மிகவும் இன்பமயமாக இருக்கிறது, இல்லையென்றால் நீங்கள் கண்ணிருந்தும் குருடராய் இருக்கிறீர்கள் ?!
தினமும் நாம் செல்லும் வழிதான், தினமும் நாம் விழித்தெழும் ஊர்தான், தினமும் நாம் பார்க்கும் மனிதர்கள்தான்..... ஆனால் உதவிக்கு என்று அதை நாம் குறித்து வைத்துக்கொள்வதில்லை என்பதுதான் நிஜம். சன் மியூசிக் பாடல் கேட்பதற்கு என்று மொபைல் போனில் குறித்து வைத்துக்கொள்ளும் நாம்........அத்தியாவசிய தேவையான ஹெல்ப் லைன் நம்பர் எதையும் ஏன் குறித்து கொள்வதில்லை. நீங்கள் இருக்கும் ஏரியாவில் இருக்கும் மெடிக்கல், பஞ்சர் கடை நம்பரை குறித்து வைத்து கொள்ளுதல் என்பது நமது சுயநலம், ஆனால் ஒரு அநாதை விடுதி, முதியோர் இல்லம் நம்பர், ரத்தம் தேவை நம்பர் எல்லாம் குறித்து கொள்ளுதல் என்பது அது நமக்கு உபயோகபடாது என்பதாலா ?! நமக்கு ரத்தம் தேவை என்றால் யாராவது ஒரு நம்பர் குறித்து வைத்து இருப்பார்களா என்று தேடும் நாம், அதையே நாம் செய்வது என்பது கிடையாதே. எனது நண்பன் ஒருவன் மொபைலில் சன் மியூசிக், ஆதித்யா டிவி, சினிமா தியேட்டர், ரேடியோ மிர்ச்சி, இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரே ஒரு முறை பேசிய நண்பன், இறந்து போன தாத்தா நம்பர் கூட அழிக்காமல் வைத்திருந்தான், ஆனால் இது போன்ற அத்தியாவசிய நம்பர் எதுவும் இல்லை....... அவனை ஏன் சொல்லுவானேன், எனது மொபைலில் கூட அப்படி எதுவும் இல்லை. ஜூனியர் விகடனில் ஒவ்வொரு வாரமும் எங்கேயாவது அநியாயம் நடந்தால் இந்த நம்பருக்கு போன் செய்து சொல்லுங்கள் என்று இருக்கும், ஆனால் அந்த பக்கத்தை அப்படியே திருப்பி விடுவேன்...... ஏன் என்றால் எங்குமே அநியாயம் நடக்காத தேசம் இது இல்லையா ?!
இன்று எல்லாவற்றுக்கும் மொபைல் இருக்கிறது....... ரயிலில் போகும்போது எதாவது பிரச்சினையா இந்த நம்பர் டயல் செய்யுங்கள், இந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன் நம்பர், அனாதை விடுதி, தொண்டு நிறுவனங்கள், சாப்பாடு மிச்சமானால் கொடுக்க ஒரு விடுதி, படிப்புக்கு உதவும் அகரம் நம்பர், பக்கத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ் நம்பர், அவசரத்திற்கு எந்நேரம் கூப்ட்டாலும் உதவும் டாக்டர் நம்பர், மர கன்றுககளை இலவசமாக தருபவர்கள், முதியோர் இல்லம், உங்களது ஏரியாவில் இருக்கும் சமூக சேவகர் நம்பர், அவசரத்திற்கு ரத்தம் தேவை என்றால் யாரை கூப்பிடுவது, இன்று ஆட்டோவிற்கு மீட்டர் போடா வில்லை என்றால் கம்ப்ளைன்ட் செய்ய நம்பர், பஸ் கண்டக்டர் தவறு செய்தால் புகார் செய்யும் எண், அவசரத்திற்கு நாம் செல்லும் வழியில் பஞ்சர் ஆனால் தொடர்ப்பு கொள்ள எண் என்று நமது மொபைலில் எந்த எண் இன்று இருக்கிறது. இப்படியே போனால் எவ்வளவு நம்பர்தான் குறித்து கொள்வது என்று சலித்து கொள்பவர்களுக்கு...... முக்கியமான மூன்று நம்பர்களையாவது நீங்கள் ஏன் சேமித்து வைத்து கொள்ளகூடாது ? ஒன்றுமே இல்லாததற்கு இது மேல் இல்லையா ?
இன்றைய நகரத்தில் நாம் தினமும் சிக்னலில் குழந்தைகள் பிச்சை எடுப்பதை பார்க்கிறோம், எங்கேயாவது சிலர் மிரட்டி பணம் பிடுங்குவதை பார்க்கிறோம், விபத்து என்பது தினமும் கண்ணில் படுகிறது, ரேஸ் வண்டி போல சிலர் ஓட்டுவதை பார்க்கிறோம், முதியவர்கள் சிலர் பசியினால் பிச்சை எடுப்பதை பார்க்கிறோம், மருத்துவ உதவி தேவை என்று தினசரியில் பெட்டி செய்தி பார்க்கிறோம், ரத்தம் தேவை என்று யாராவது முகநூலில் கேட்டால் லைக் என்று போட்டு ஷேர் செய்கிறோம், ஒரு குழந்தையின் படிப்பு செலவுக்கு உதவுங்கள் என்று உதவி கேட்டு வரும் மெயிலை டெலிட் செய்கிறோம், எங்கேயாவது தீ பிடித்து எரிவது தெரிந்தால் டஸ்ட் என்று வேறு வழியில் வண்டியை திருப்புகிறோம், ஆம்புலன்ஸ் வந்தால் நின்றுதான் போக வேண்டும் என்று முறைக்கிறோம்...... இப்படி நிறைய நிறைய சந்தர்ப்பங்களை நாம் எதிர் கொள்கிறோம், அப்போது அவர்களுக்கு உதவ நமக்கு பணம் இல்லையென்றாலும், அதை சரியானபடி சரியானவர்களுக்கு தெரிவிக்கிறோமா ? நமக்கு உதவுவதற்கு பணம் இல்லை, நேரம் இல்லை என்று இருக்கலாம்...... ஆனால் மனம் என்பது நிச்சயமாக இருக்கும், அப்படி இல்லையென்றால் நாம் எல்லாம் மனிதர்களே இல்லையே. இதையேதான் எனது நண்பனும் கேட்டான், பக்கத்தில் எங்கு பானி பூரி கிடைக்குது என்று இன்டர்நெட்டில் தேடி பார்க்கும் நாம், ஜஸ்ட் டயல் போன் செய்து சில நம்பர்களை கேட்க்கும் நாம், இப்படி கஷ்டபடுபவர்களுக்கு ஏன் உதவுவதற்கு நம்பர் குறித்து கொள்ள கூடாது ?
· Corruption charges on Police – SMS – 9840983832
· Senior Citizen Help line – 1253
· Emergency Help line in National Highways – 1033
· Coastal Emergency Help line – 1093
· Eye Bank Emergency Help line – 1919
இன்றிலிருந்து நீங்கள் உங்களது ஊரில் எங்கேயாவது பொது நலன் கருதி ஏதேனும் உதவும் வகையில் நம்பர் இருந்தால் குறிந்து கொள்ளுங்களேன். அது உங்களுக்கு உபயோகபடாது போகலாம், ஆனால் யாருக்கேனும் உதவலாம் அல்லவா. அந்த நம்பர் உங்களது மொபைலில் இருந்தால் அதன் கணம் ஒன்றும் கூட போவதில்லையே........ ஆனால் உதவாமல் போவதால் உங்களது மனதில் கணம் கூடலாம் இல்லையா ?!
Labels : Ennangal, Emergency numbers, numbers, Suresh, Kadalpayanangal, Help
அக்கறையுடன் உதவும் பகிர்வுகள்..பயனுள்ளவை..பாராட்டுக்கள்.!
ReplyDeleteநன்றி மேடம்........ தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !
Deleteநீங்கள் நினைக்கும் மனம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்... பயனுள்ள எண்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன் சார், எனக்கே எனது நண்பன் கேட்டதற்கு பிறகுதான் புரிந்தது...... அது நிறைய பேரை சென்று அடைந்தால் எனக்கு சந்தோசமே.
Deleteசிந்திக்க வைத்த பதிவு .
ReplyDeleteநன்றி நண்பியே.......தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.
Deleteகொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பதிவுகள் மெருகேறிக்கொண்டே போகிறது! அசத்துகிறீர்கள்! பதிவு பற்றி.. பொட்டில் அடித்தாற்போல் இருந்தது. நானும் எமெர்ஜென்சி எங்களை செல்லில் சேர்க்கப்போகிறேன்.
ReplyDeleteநன்றி நண்பரே, இது போல் சிலர் நினைத்தால் அதுதான் இந்த பதிவிற்கு வெற்றி.
DeleteEye Opening article- You were not stopping there and went ahead to provide those essential no. அங்கதான் நிக்கிறார், Mr. Suresh Kumar
ReplyDeleteநன்றி பாபு...... நான் உணர்ந்ததை இங்கு பகிர்கிறேன், அது உங்களை போன்ற நண்பர்களுக்கு சென்று சேர்ந்தால் மகிழ்ச்சியே.
Delete//அது உங்களுக்கு உபயோகபடாது போகலாம், ஆனால் யாருக்கேனும் உதவலாம் அல்லவா. அந்த நம்பர் உங்களது மொபைலில் இருந்தால் அதன் கணம் ஒன்றும் கூட போவதில்லையே........//
ReplyDeleteசிந்திக்க வைக்கிறீர்கள்.... எண்களைக் குறித்துக்கொள்கிறேன்...
நன்றி நண்பரே, நீங்கள் சிந்தித்ததை பலருக்கும் சொல்லுங்கள்....!
Deleteசமூக எண்ணம் இருக்கிறது.ஆனால் இப்படி ஒரு எண்ணம் தோன்றியதேயில்லை...ஒரு அனாதை இல்ல எண் மட்டுமே என் பையில்....அருமையான பதிவு சுரேஷ் என் முக நூலில் பகிர்கிறேன் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி மேடம்...... ஒரு சிறிய எழுத்து இது போன்று சிலரது மனங்களில் சிந்தனையை வரவழைக்கும் என்பதே இந்த பதிவின் வெற்றி. முகநூலில் இதை பகிர்ந்ததுக்கு மிகவும் நன்றி.
Deleteநிச்சயம் தேடிப் பிடித்து குறித்து வைத்துக் கொள்கிறேன்..
ReplyDeleteநன்றி ஆனந்த்...... தெரியாத நம்பர் இருந்தால் பகிரவும்.
Deleteஅதீத அக்கறையுடன் கூடிய
ReplyDeleteபயனுள்ள விரிவான பகிர்வுக்கு
மனமார்ந்த நன்றி
நன்றி ரமணி சார்...... பதிவு உங்களுக்கு பிடித்தது கண்டு மகிழ்ச்சி !
Deletetha.ma 3
ReplyDeleteதமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி !
Deletefactu factu :-)))
ReplyDeleteநன்றி கிருஷ்ணா !
Delete