Tuesday, October 8, 2013

அறுசுவை - வானம் தொட்டு ஒரு பீர் !!

இந்த பதிவுலகத்தில் நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கின்றனர், இப்போதெல்லாம் நிறைய பேர் போன் செய்து பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது, அப்படி எனது பதிவுகளை படித்து நல்ல நண்பரான வினோத் அவர்களுடன் சிங்கப்பூரில் ஒரு நாள் பார்த்து பேசலாம் (இன்னொரு இனிய நண்பரும் இருக்கிறார், ஆனால் பதிவில் பெயர் சொல்ல வேண்டாம் என்று இனிய கட்டளை !) என்று விருப்பப்பட்டேன். இவர் மாரத்தான் ஓடுவதில் வல்லவர் ! ஒரு இனிய மாலை பொழுதில் அவரை சந்திக்க சென்றேன். ஒரு பீர் அடித்தாலே நான் எல்லாம் பத்து மாடி பறக்கும் எபக்ட் கிடைக்கிறது என்பவன். அவருடன் இரவு உணவு அருந்தி கொண்டு இருக்கும்போது பாஸ், வாங்க உங்களை ஒரு இடத்திற்கு கூட்டி செல்கிறேன், நீங்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்றார்..... உண்மைதான் அது !



சிங்கப்பூர் நண்பர் வினோத்......!
 


ஒரு பீர் அடிக்க வேண்டும் என்றால் நமது ஊரில் எல்லாம் டாஸ்மாக் சென்று அந்த இருட்டில் எல்லாவற்றையும் மிதித்து கொண்டு செல்ல வேண்டும், பெங்களுருவில் சில பப் சென்றால் காதை கிழிக்கும் இசையுடன் அந்த பீரை குடித்து முடிக்கும் முன் உங்களுக்கு காதில் வலி வரும்..... ஆனால் முதல் முறையாக வினோத் அவர்கள் என்னை வாங்க பாஸ் என்று அல்பிரஸ்கோ (Alfresco) பார் ஒன்றிற்கு கூட்டி சென்றார். அதாவது, வானம் உங்களை தடவ, சில்லென்று வீசும் காற்று உங்களது முகத்தை அறைய, தங்கமாய் ஜொலிக்கும் நகரத்தை அந்த இனிய மாலை வேளையில் ஒரு பீர் கையில் இருக்க ஒரு மிக பெரிய கட்டிடத்தின் மொட்டை மாடியில் பேசி கொண்டே சாப்பிடுவது அல்பிரஸ்கோ (Alfresco) பார் என்கிறார்கள். பெங்களுருவில் UB சிட்டி என்னும் இடத்தில skyye என்னும் பார் இது போல் உள்ளது ! உலகிலேயே இதுதான் மிக உயரமான இடத்தில இருக்கும் பார் என்பது இதன் சிறப்பு !




முதலில் கீழ் தளத்தில் உள்ளே நுழையும்போது என்ன வேண்டும் என்று கேட்டு பத்து மடங்கு பீர் விலையை வாங்கி கொண்டனர். பின்னர் லிப்ட் உள்ளே நுழைந்து 62வது மாடியில் இறங்கும் போது காது ரெண்டும் கொய் என்று இருந்தது. அதுதான் மொட்டை மாடி பார் என்று நினைத்து கொண்டு இருக்கும்போது இன்னொரு சிறிய லிப்டில் உங்களை ஏற்றி விடுகிறார்கள், அது மொட்டை மாடி சென்று திறக்கும்போதே உங்களுக்கு அந்த இசையும், குளிர்ந்த காற்றும் இதம் தருமாறு வீசுகிறது. அங்கு இருந்து பார்க்கும்போது வானம் மிக தெளிவாக இருப்பதாக பட்டது (இருங்க.... நான் இன்னும் பீர் சாப்பிடவே இல்லை !!). அங்கு இருந்து பார்த்தபோது சிங்கப்பூர் அந்த இரவின் வெளிச்சத்தில் மிக அமைதியாக இருந்தது. வினோத் வந்து ஒரு பீரை கையில் கொடுத்து விட்டு சியர்ஸ் சொல்ல, முதல் மடக்கு உள்ளே இறங்கும்போதே அந்த சூழலும், பிரமிப்பும் அகல மறுக்கிறது. உலகிலேயே உயரமான ஒரு பாரில் இப்படி பீர் சாப்பிடுகிறோம் என்ற நினைப்பே கிக் தருகிறது.

 

 


சிங்கப்பூரின் அழகிய தோற்றம்....இரவினில்.......

 
 




மெல்லிய காற்று உங்களை தழுவ, சிங்கப்பூரின் ஒரு உயரமான கட்டிடத்தில் இப்படி நண்பருடன் பீர் சாப்பிட்டு இருக்கும் பொழுதுகள் எல்லாம் எவ்வளவு அருமை என்று சொல்ல வேண்டுமா ?! இது போன்ற நட்புகளை அறிமுகபடுத்தும் பதிவுலகத்திற்கு எத்தனை நன்றி சொல்வது ! பீர் சாப்பிட்டாலும் இங்க இப்படி சாப்பிடனும் பாஸ்........ மறக்காம போயிட்டு வாங்க.

 

 
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Alfresco bar, Singapore, Beer

17 comments:

  1. அடேங்கப்பா... உச்சத்திலே இருக்குறீங்க...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்...... உச்சத்தில் இருந்து கொண்டு உச்சம் தொட்டேன் போங்கள் !

      Delete
  2. பீர் சாப்பிட்டாலும் இங்க இப்படி சாப்பிடனும் பாஸ்........ மறக்காம போயிட்டு வாங்க.
    >>
    டிக்கட் எடுத்து கொடுங்க போய்ட்டு வரோம்.

    ReplyDelete
    Replies
    1. ஓ........ நீங்களும் பீர் சாபிடுவீங்களா :-) அப்போ டிக்கெட் போட்டுடறேன் !

      Delete
  3. கட்டிடத்தின் உச்சத்துக்கு போய் போதையின் உச்சத்துக்க் போனீங்களா?!

    ReplyDelete
    Replies
    1. கட்டிடத்தின் உச்சிக்கு மட்டுமே சென்றேன்.... போதையின் உச்சத்திற்கு சென்று இருந்தால் நான் சுவரேறி வெளியே குதித்து இருப்பேனே ! நன்றி !

      Delete
  4. marina sands bay ship பில்டிங் விட உயரம் போல....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஜீவா, அடுத்த முறை சிங்கப்பூர் போகும் போது சொல்லுங்க நாம அங்க போகலாம் ! நன்றி !

      Delete
  5. அற்புதம்
    பதிவுடன் படங்களும் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி சார், உங்களது உற்சாகமான கருத்து இது போல் நிறைய எழுத தூண்டுகிறது ! நன்றி !

      Delete
  6. Replies
    1. தாங்கள் அளித்த தமிழ் மணம் ஓட்டிற்கு மிக்க நன்றி !

      Delete
  7. ஒரு பீர் 2000 ஓவாய் யா ...? பில்ல பாத்தா அடிச்சது இரங்கிடும்மே அன்னே..!

    ReplyDelete
    Replies
    1. ஓசில சாப்பிட்ட பீர்.... ஏன் பல்லை பிடிச்சு பார்க்கணும் தம்பி. நண்பர் வினோத் அவர்களுக்குதான் நன்றி சொல்லணும் !

      Delete
  8. Replies
    1. நன்றி கிருஷ்ணா....... இதை போல் உங்க ஊரில் இருக்குதா !

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete