Monday, November 4, 2013

செவ்வக வடிவ வாழ்க்கை...!!

கடந்த ஒரு மாதமாக கடுமையான வேலை, இதன் இடையில் பதிவுகள் எழுதுவது என்பது முடியாததாக இருந்தது. அதை புரிந்து கொண்டு நீங்கள் அளித்த ஆதரவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. இன்று இந்த பதிவுகளை எழுதும்போது உங்களை சந்திக்க போகிறேன் என்ற மகிழ்வுடனே எழுதுகிறேன். தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி !!
*********************************************************************************

சமீபத்தில் எனது மகன் படிக்கும் பள்ளியில் எல்லா மாணவர்களும் ஷேப்ஸ் (வடிவங்களை) பற்றி படமோ, இல்லை வடிவமோ செய்து எடுத்து வர வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். எதை செய்வது, எப்படி செய்வது என்று வீட்டில் தினமும் விவாதம்தான்...... முடிவாக ஒரு மாடி பஸ் செய்து அதன் கண்ணாடி இருக்கும் இடத்தில எல்லாம் ஒவ்வொரு வடிவம் வருமாறு அமைத்து விடுவோம் என்று முடிவானது. அன்றில் இருந்து நான் எங்கு சென்றாலும் வடிவங்களை பார்க்க ஆரம்பித்தேன் (வடிவான பெண்களை அல்ல !!). முதல் நாள் இப்படி பார்த்தபோது ஒன்றும் வித்யாசம் தெரியவில்லை, ஆனால் நாள் செல்ல செல்ல ஒன்று மட்டும் புரிந்தது...... எங்கும் எதிலும் செவ்வகம் என்று இருந்தது, மற்ற வடிவங்கள் எல்லாம் வேறு வழி இல்லாமல் அங்கு இருந்ததே ஒழிய, வாய்ப்பு இருந்தால் அதுவும் செவ்வக வடிவம் எடுத்து இருக்கும் என்பது. இன்று செவ்வகம் என்பது எல்லா இடத்திலும் இருப்பதால், அதை மீறி ஒரு வடிவம் சிந்திக்க முடியவில்லை என்பது நமக்கு புரிவதில்லையோ ?! நினைத்து பாருங்கள்...... நீங்கள் படிக்கும் பேப்பர், போன், உங்களது ஐ.டி. கார்டு, பில், வாட்ச், டிவி என்று கொஞ்சம் உங்களை சுற்றி பார்த்தால் எங்கும் செவ்வகமாக இல்லை ?! இதை நாம் வெகு நாட்களாக கவனிக்கவில்லை இல்லையா...... வாழ்க்கை செவ்வகமாக ஆனதா என்ன ?

வடிவங்கள் என்று சிறு வயதில் புஸ்தகத்தில் சொல்லி கொடுக்கும்போது அதை வேறு இடத்தில பார்த்தால் மட்டுமே மனதில் பதியும்........முக்கோணம், உருண்டை, ஸ்குயர், ஸ்டார், பென்டகன், ஹெக்ஸ்கன், எல்லிப்ஸ், டைமன்ட், ஓவல் என்று நிறைய வடிவங்களை நாம் படித்து இருக்கிறோம். அதுவும் எட்டாவது தாண்டியவுடன் ஜியோமேன்ட்ரி பாக்ஸ் வைத்து அந்த எல்லிப்ஸ் வரைவது எவ்வளவு நேரம் எடுத்தது தெரியுமா ? ஒவ்வொரு வடிவங்களையும் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு கற்று கொண்டோம், ஆனால் இன்றைய வாழ்க்கையில் இந்த வடிவங்களை எல்லாம் நாம் பார்க்கிறோமா அல்லது உபயோகிக்கிறோமா என்ன ? ஏன் பள்ளிகூடத்தில் படிக்கும்போதே கொண்டு செல்லும் பை, புத்தகம், நோட்டு, ஜியோமேன்ட்ரி பாக்ஸ், கரும்பலகை, ஸ்கேல், டஸ்டர், படிக்கும் மேஜை, நாற்காலி, ஜன்னல் என்று எல்லாமே செவ்வகம்தானே, ஆனால் படித்தது மட்டும் எல்லா வடிவங்களையும் இல்லையா....... என்ன ஒரு ஆச்சர்யம் இல்லை ?!
யோசித்து பார்த்தால் எவ்வளவு செவ்வக வடிவம் நமது வாழ்வில் இருக்கிறது தெரியுமா..... நமது வீட்டின் கதவு, ஜன்னல், ரூம், கட்டில், டிவி, டெக், ரிமோட், சோபா, பேப்பர், மேஜை, போன், பெல்ட், வாட்ச், வாட்டர் பாட்டில், லஞ்ச் பேக், பிள்ளைகளின் ஸ்கூல் பேக், கார், சட்டை அல்லது சுடிதார் அடுக்கி வைக்கும் விதம், சிகரெட் பெட்டி, கட்டை பை, பால் கவர், ஹோட்டல் பில், காய்கறி பைகள், புக், தலையணை, காய போடப்படும் ஆடைகள், தையல் மெசின், ஸ்டேப்ளர், பரிசு பொருட்கள் பெட்டி, கேக், அலமாரி, டிரா, கண்ணாடி, கரண்டி, சீப்பு, அவ்வளவு ஏன் இதை நீங்கள் வாசிக்கும் கம்ப்யூட்டர் பெட்டி என்று நீங்கள் எங்கும் செவ்வக வடிவத்தை பார்க்கவில்லை. சில பொருட்களை பார்க்கும்போது அப்பாடா அது செவ்வக வடிவத்தில் இல்லை என்று யோசித்தாலும் அது வந்து சேர்ந்த பெட்டியை பார்த்தால் செவ்வகமாக இருக்கும், இல்லையென்றால் அது வேறு வழி இல்லாமல் அந்த வடிவத்தில் இருக்கும் என்று உங்களால் புரிந்து கொள்ள முடியும்.... உதாரணமாக குக்கர் !!வீட்டின் உள்ளே மட்டுமா வெளியே சென்று பாருங்கள் எந்த போர்டு ஆக இருந்தாலும் அது செவ்வக வடிவம், தள்ளு வண்டி, கார், காரின் உள்ளே இருக்கும் பொருட்கள், ரோடு, வாங்கி வரும் பொருட்கள் என்று இன்று உலகம் அந்த வடிவத்தை மிக ஆழமாக உருவாக்கி வைத்துள்ளது, அது நமக்கு தெரியாமல் உள்ளே இறங்கி இன்று கையில் கோலி குண்டு கிடைத்தால் ஒரு இனம் புரியாத சந்தோசம் கிடைக்கும், அது வடிவதாலா என்பது கேள்வியே ?! இந்த உலகம் வர்த்தகத்திற்கு என்று அந்த வடிவத்தை தேர்ந்து எடுத்தது, இன்று எங்கும் இருக்கிறது. நிலா ஏன்மா வட்டமா இருக்கு என்று குழந்தைகள் கேட்கும்போது நமக்கு பதில் தெரிவதில்லை, ஆழமாக பார்த்தால் அது செவ்வக வடிவ பொருட்களை பார்த்து பார்த்து அது மட்டும்தான் வடிவம் என்று எண்ணி விட்டதோ என்று தோன்றுகிறது.


ஒவ்வொரு பொருளுக்கும் நாம் ஒரு வடிவம் கற்பனை செய்து வைத்து இருக்கிறோம் என்பது தெரியுமா. உதாரணமாக டிவி என்பது செவ்வகம், பீஸா என்றால் வட்டம், பேனா என்றால் உருளை, பர்த்டே கேக் என்றால் வட்டம், பர்ஸ் என்றால் சதுரம் இப்படி நிறைய சொல்லலாம். இந்த வடிவங்கள் ஒவ்வொன்றும் மாற ஆரம்பிக்கும்போது முதலில் ஒரு கேள்வி எழுந்தாலும் அது பழக்கமாகி விடும். அந்த வடிவங்கள் சிறிது சிறிதாய் மாறும்போது மனது ஏற்று கொள்ள பழகிவிடும், இது பல காலமாய் நாம் பார்த்த வடிவங்கள் எல்லாம் செவ்வகமாக மாற ஆரம்பித்து இன்று அது ஏற்றுக்கொள்ள பட்டு விட்டது என்பது உங்களுக்கு புரிந்தால் சரி. இன்னும் சொல்லவேண்டும் என்றால்....... வடிவ மாற்றம் என்பது ஒரு கட்டத்தில் செவ்வகத்தை நோக்கியே நகருமாறு உங்களை உந்த ஆரம்பிக்கும்....... அதாவது இந்த நொடியில் நீங்கள் வாங்க நினைக்கும் பொருள் செவ்வகமாக இருக்க வேண்டும் என்றே உங்களது மனதில் தோன்றும் அளவுக்கு, முயற்சித்து பாருங்களேன் !எந்த பொருளும் வட்டமாக இருந்தால் என்ன, செவ்வகமாக இருந்தால் என்ன ? அது நம்மை என்ன செய்யும் என்று கேட்பவரா நீங்கள்........ ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு உணர்சிகள் தரும், இதயம் என்பதற்கு ஒரு வடிவம் உண்டு, அதை நீங்கள் செவ்வகமாக வரைந்து கொண்டு உங்களது காதலை தெரிவிக்க முடியுமா ? ஒரு புதிய வடிவத்தை நீங்கள் பார்க்கும்போது யோசிக்க ஆரம்பிப்பீர்கள், அதை ஆராய்வீர்கள், ஏன் இப்படி என்ற கேள்வி பிறக்கும், பின் ரசிக்க ஆரம்பிப்பீர்கள். உதாரணமாக, உங்களுக்கு இதயத்தை உருளை வடிவில் வரைந்து கொடுத்தால் முதலில் மனதில் என்ன இது என்ற கேள்வி பிறக்கும், இதுவரை நீங்கள் இதயத்தை ஒரு வடிவமாக மணத்தில் வைத்து இருந்துள்ளீர்கள் இன்று அது வேறு வடிவத்தில் இருக்கிறது, அது ஏன் என்று கேள்வி பிறக்கும், சிறிது புரிந்தவுடன் ரசிக்க ஆரம்பிப்பெர்கள். இதுவே எல்லாமும் செவ்வக வடிவத்தில் இருந்தால் கேள்வியே பிறக்காது....... பின் யோசனையே இருக்காது. இன்றைய உலகம் ஒரு பாதையை நோக்கி பயணிக்கிறது....... இதை சொன்னவுடன் சட்டென்று ஒரு பாதையை நினைத்து பாருங்கள், சோகமாக அந்த பாதையும் செவ்வகமே !!Labels : Ennangal, Shapes, Thoughts, Think a shape, everything rectangle

24 comments:

 1. ஆழமான வித்தியாசமான
  அருமையான சிந்தனை
  விரிவான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி சார் !

   Delete
 2. Replies
  1. தமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி சார் !

   Delete
 3. வடிவங்களை வைத்து வித்தியாசமான சிந்தனை. பகிர்வுக்கு நன்றி சுரேஷ்!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 4. great way of thinking .like your blog.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே..... தங்கள் பெயரும், முகமும் தெரியவில்லை, ஆனாலும் உங்களது வார்த்தைகள் உற்சாகம் கொள்ள செய்கிறது !

   Delete
 5. சிந்தனை அருமை...

  மீண்டும் வலைத்தளம் விரைவில் வந்தமைக்கு வாழ்த்துகள்... தொடர்க... உலகம் சுற்ற நாங்கள் ரெடி...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார் ! நீங்கள் ரெடி என்று சொன்னதே எனக்கு எழுதுவதற்கு உற்சாகம் தருகிறது... !!

   Delete
 6. வடிவங்கள் குறித்த சிந்தனை புதிது! நீங்கள் சொல்வது உண்மைதான்! சிறப்பான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்..... நீங்கள் இந்த பதிவின் கருத்தை உணர்ந்தது கண்டு மகிழ்ச்சி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete
 7. வடிவங்களை வைத்து
  வடிவான ஆராய்ச்சி ...!

  ReplyDelete
  Replies
  1. இந்த வடிவான ஆராய்ச்சி உங்களது மனதை கொள்ளை கொண்டது கண்டு மகிழ்ச்சி !

   Delete
 8. வடிவ சிந்தனை வித்தியாசமான பகிர்வு.

  ReplyDelete
 9. Replies
  1. நன்றி ஆனந்த்...... வாழ்க்கை சுகமா !

   Delete
 10. வணக்கம்

  ஒரு வித்தியாசமான சிந்தனையில் உங்கள் பதிவு அமைந்துள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரூபன், நீங்கள் இதை ரசித்து பாராட்டியது கண்டு மகிழ்ச்சி !

   Delete
 11. செவ்வகமின்றி அமையாது வடிவம்....

  ReplyDelete
  Replies
  1. நீரின்றி அமையாது இவ்வுலகு என்பதை எவ்வளவு அழகாக மாற்றி விட்டர்கள் நண்பரே.....நன்றி !

   Delete
 12. neenga engayo poyeettinga sir :-)))

  ReplyDelete
  Replies
  1. நன்றி கிருஷ்ணா...... நான் எங்கேயும் போகலையே !! :-)

   Delete