சிறு வயதில் காவேரி கரையில் இறங்கினால் சிறு மீன்கள் கால்களை வந்து கடிக்கும், அதன் பின்னர் கிராமத்து குளம் எல்லாம் வற்றி போய் மீன் பிடிப்பது என்பது முடியாமல் போனது. ஆனாலும் சிறு வயதில் இருந்து இந்த தூண்டில் போட்டு மீன் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருந்தது. அது சமீபத்தில் நான் ஜப்பான் சென்று இருந்தபோது நிறைவேறியதில் அளவில்லா ஆனந்தம் ! எனது நண்பர் யகவா -சான் உடன் ஒரு நாள் நான் இந்த ஆசையை பற்றி பேசியபோது நாங்கள் எல்லோரும் ஒரு சிறு படகில் கடலுக்கு சென்று மீன் பிடிக்கலாம் என்று பேசி வைத்திருந்தோம், ஆனால் வேலை பளுவினால் கடைசி நேரத்தில் படகு கிடைக்கவில்லை, எனது ஏமாற்றத்தை பார்த்த அவர், அருகில் இருந்த ஒரு பார்க்கினுள் உள்ள சிறிய குட்டையில் மீன் இருக்கும், அங்கு சென்று பிடிக்கலாம் என்றதில் இருந்து எனது மனம் அதையே எண்ணிக்கொண்டு இருந்தது !

முதலில் அங்கு சென்று ஒரு கடையினில் தூண்டில் வாங்கி கொண்டோம், அதில் மீன் பிடிக்க ஆரஞ்சு கலரில் மீன் உணவை அந்த தூண்டிலின் முனையில் குத்தி கொள்ள கொடுத்தனர். முதலில் அந்த தூண்டிலை போட்டு மீன் பிடிக்க முயன்றபோது மீனே சிக்கவில்லை. மற்ற எல்லோரது தூண்டிலிலும் சிக்கியபோதும் எனது தூண்டிலின் அருகினில் வரவே தயங்கியது. ஆனால் சிறிது நேரத்தில், மீன்கள் என்னுடைய தூண்டிலிலும் வந்து அந்த உணவை உண்ண முற்பட்டது. ஒரு கட்டத்தில் சட்டென்று ஒரு மீன் அதை கடிக்க முற்ப்பட எனது தூண்டில் இழுப்பட்டது, அதில் நான் அடைந்த ஆனந்ததிற்கு அளவில்லை எனலாம் !
அப்படி இழுக்கப்பட்ட மீன் மேலே வந்து துள்ள துள்ள அதை அவர்கள் கொடுத்த வாளியில் போட்டு விட்டோம். அடுத்த முறை தூண்டில் போடும்போதும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான கணத்தில் மீன் மாட்டியது. நமது கிராமத்தில் எல்லாம் மணி கணக்கில் காத்திருந்து மீன் பிடிப்பார்களே அட, இங்கு என்ன மீன்கள் இப்படி மாட்டுகிறது என்றபோது அருகில் இருந்த ஜப்பானிய நண்பர், இந்த மீன்கள் எல்லாம் இங்கு கொண்டு வந்து விடுவதற்கு முன்பு பட்டினி போட்டு விடுகின்றனர், அதனால்தான் இங்கு வந்தவுடன் அது இரையை கண்டு இப்படி துள்ளுகிறது என்றவுடன் புரிந்தது........... அது சரி அந்த சிறிய குட்டையில் இப்படி நிறைய பேர் மீன் பிடிக்கும்போது எவ்வளவு நேரம்தான் காத்திருப்பார்கள்.
அடுத்து அப்படி பிடித்த மீன்களை பக்கத்தில் இருக்கும் கடைகளில் கொடுத்து சுட்டு திங்கலாம். சிறு வயதில் நெருப்பு மூட்டி இப்படி பொறித்து தின்ற மீன்கள் யாபகம் வந்தது. அங்கு கொடுத்தவுடன் எண்ணை, உப்பு தடவி தணலில் வாட்டி கொடுக்கின்றனர். அதை பிடித்து இருக்கும் எனது நண்பரின் ஸ்டைல் பாருங்கள் ! மீனின் தொண்டையில் ஒரு குச்சியை கொடுத்து அதை பொறித்து எடுத்து லாலி பாப் போன்று சாப்பிடுவதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது, ஆனாலும் நமது ஊர் ஓடையில் மீன் பிடித்து அதை குழம்பு வைத்தும், பொறித்தும் தின்கின்ற சுகம் நிச்சயம் கிடைக்காது..... கிடைக்காது..... கிடைக்காது !!

Labels : Fishing, Adventure trip, Saagasa Payanam, Travel, Japan
வணக்கம்
ReplyDeleteபதிவை படித்து மகிழ்ச்சி அடைந்தேன். இடைவெளி விட்டு தொடர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.
நன்றி
நன்றி நண்பரே..... உங்களது பதிவுகளும் என்னை தினமும் படிக்க தூண்டுகிறது. ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆவல் ஏற்படுகிறது !
Deleteஜப்பான்ல போய் மீன் பிடிச்சிருக்கீங்க... பாவம், அதுகளை பட்டினி போட்டு பிடிக்க வைக்கிறது தான் கஷ்டமா இருக்கு...
ReplyDeleteஎன்ன செய்யிறது சொல்லுங்க.... நான் எல்லாம் கடலுல போய் மீன் பிடிக்க முடியுமா சொல்லுங்க.... சுனாமி வந்துடாது !
Deleteபயணங்கள் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சலீம்...... தங்களது வருகையும், கருத்தும் மகிழ்ச்சியை தந்தது !
Deleteசஷ்டி விரதம். அதனால, நான் இந்த பதிவை படிக்கலை! படிக்கல! படிக்க....,
ReplyDeleteவிரதம் இன்னுமா முடியலை..... முடிஞ்சா ஒரு மீன் பார்சல் பண்ணலாம் அப்படின்னு பார்த்தேன் !
Deleteமீன் பிடி அனுபவம்
ReplyDeleteபடங்களுடன் பகிர்ந்தவிதம் மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்.... பெங்களுரு எப்போது வருகிறீர்கள், பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் !
Deletetha.ma 2
ReplyDeleteதமிழ் மணத்தில் இந்த பதிவுக்கு ஓட்டு அளித்தமைக்கு நன்றி !
Deleteதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,
ReplyDeleteதமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.
வித்தியாசமான அனுபவம்தான்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ், இது போல் உங்களது ஊரிலும் இருக்கிறதா !
DeleteFresh fish
ReplyDeleteநன்றி சுபா...... ஆமாம் மீன்கள் பார்பதற்கு நன்றாகவும், சுவையாகவும் இருந்தது !
Deletewe did at Maldives :-) so enjoyable :)
ReplyDeleteஹலோ கிருஷ்ணா..... மாலைதீவில் நானும் கடலில் மீன் பிடித்தேன், விரைவில் அந்த பதிவு உங்களுக்காக !
Deleteam waiting...
DeleteUr posts r awesome. But I couldn't comment u bcoz I.m reading ur blog through my mobile
ReplyDeleteThank you my friend..... your words encouraging me a lot ! Wishing you a very happy new year 2014 !
DeleteUr posts r awesome. But I couldn't comment u bcoz I.m reading ur blog through my mobile
ReplyDelete