கையில் சுமார் நூறு ரூபாய் இருந்தால் நாம் என்ன சாப்பிடுவோம், அது சாப்பிடும் இடத்தை பொருத்தது என்றாலும் ஒரு சுமார் ஹோட்டலை கற்பனை செய்து கொள்ளுங்களேன்...... ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு தோசை, ஒரு காபி, அதற்க்கு மேலும் உங்களிடம் பணம் மிச்சம் இருக்கலாம், இல்லையா ! பெங்களுருவில் குடும்பத்தோடு வெளியில் சென்றால், சாப்பிட்டு முடித்த பின்பு எப்போதுமே ஒரு ஸ்வீட் அல்லது ஐஸ் கிரீம் வேண்டும் என்பது எழுதபடாத விதி. எப்போதுமே அந்த ஹோட்டலில் என்ன இருக்கிறதோ அதை ஆர்டர் செய்துவிட்டு சாப்பிட்டு வருவோம். சென்ற முறை எனது நண்பருடன் சென்றபோது, அவர் ஸ்வீட் மட்டும் வெளியில் சென்று சாப்பிடலாம் என்று வற்புறுத்தி அழைத்து சென்றார். எனக்கு அது என்ன ஸ்வீட்டுக்கு மட்டும் கடை என்று ஆச்சர்யமாக இருந்தது, வாருங்கள் அதை விரிவாக பார்ப்போம்.
பெங்களுருவில் இந்திரா நகரில் இருக்கும் இந்த கடை ஒரு ஓரமாக இருக்கிறது, அங்கு சென்று அந்த கடையை பார்த்தபோது உள்ளே என்ன சாப்பிட இருக்கும் என்று முதன் முதலில் செல்பவர்களுக்கு நிச்சயம் சந்தேகம் ஏற்படும். சிறிய இடம்தான், மெனு கார்டு பார்த்தபோது எல்லாமே ஸ்டார் ஹோடேலில் மட்டுமே காணப்படும் உலக வகை ஸ்வீட்கள் ! ஒவ்வொன்றும் சுமார் நூறு ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. முதலில் உட்கார்ந்து மெனு கார்டு எடுத்து படிக்க ஆரம்பித்தவுடன் இவ்வளவு வகை ஸ்வீட் இருக்கிறதா என்று ஆச்சர்யம்தான் ஏற்பட்டது. எல்லாம் ஹோட்டல் சென்று சாப்பிடும்போது கேசரி, கேரட் அல்வா அல்லது ப்ரௌனி கேக் என்று மட்டுமே சாப்பிட்டு, இன்று இப்படி எல்லாம் இருக்கிறதா என்று பார்க்கும்போது ஆச்சர்யம் ஏற்பட்டது !

முடிவில் குழப்பம் எல்லாம் தெளிந்தபின் சாக்லேட் வோண்டன், ஹேசல் நட் கிரீம் பாட் மற்றும் மேங்கோ - பேசன் ப்ரூட் புட்டிங் ஒன்றும் ஆர்டர் செய்தோம். நூறு ரூபாய்க்கு மேல் ஒவ்வொன்றும் இருப்பதால் நிறைய இருக்கும், வயிற்றில் இடம் இருக்காது என்று எனது மனைவி கத்தி கொண்டு இருந்தார். நான் அங்கிருந்து நகர்ந்து அதை எப்படி செய்கிறார்கள் என்று பார்க்க ஆரம்பித்தேன். சிறிய கிச்சன், இரண்டே பேர், பில்லிங் போடா ஒரு ஆள். சர சர வென்று அவர்கள் அங்கு இருக்கும் கலவைகளில் ஒவ்வொன்றாய் எடுத்து போட்டு நாங்கள் கேட்டதை உருவாக்கி கொண்டு இருந்தனர். முடிவில் அது எங்களது டேபுளுக்கு வந்தபோது தட்டின் ஓரத்தில் கொஞ்சமே கொஞ்சமாக இருந்தது. நான் எனது மனைவியை பார்க்க, அவரோ அப்போ மீதி பின்னாடி வருதோ என்று கேட்டார், நானோ அவ்வளவேதான் என்றேன் !

முதலில் ஒரு வாய் எடுத்து வைத்தவுடன் அதன் விலை, இடம், அமைப்பு என்று எல்லாமே மறந்து போனது எனலாம். மேங்கோ - பேசன் ப்ரூட் புட்டிங் எடுத்து சாப்பிடும்போது நன்கு அடிக்கப்பட்ட அந்த கிரீம் அப்படியே பழ சுவையுடன் இருக்கிறது. அதன் கீழே இருந்த புட்டிங் மிக கவனமாக செய்யப்பட்டு, அந்த கிரீம் உடன் சாப்பிடும்போது அட, அட, அட...... அருமைதான் ! அடுத்து வந்த சாக்லேட் வோன்டன் நன்கு சூடாக இருந்தது. எடுத்து ஒரு கடி கடிக்கும்போது உள்ளே பழங்களுடன் சாக்லேட் கலந்த அந்த குளிர்ச்சி பற்களை தீண்டியது. பழங்களை உள்ளே வைத்து சாக்லேட் ஊற்றி அதை மைதா மாவு போன்ற ஒன்றில் சுருட்டி எண்ணையில் போட்டு பொறித்து தந்தனர். கிரிஸ்பி, கிரீமி, ஜெல்லி என்று அமோகமான சுவை. அடுத்து வந்த ஹேசல் நட் கிரீம் பாட்டும் அதே கதைதான் !!

நீங்கள் எப்போதும் ஹோட்டல் சென்றால் ஒரே வகையான இனிப்பு வகைகளை சாபிடுபவராக இருந்து, பலவற்றை சுவைக்க வேண்டும் என்ற வேட்க்கை இருந்தால் இது ஒரு நல்ல இடம். அதுவும் ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு நீங்கள் இங்கு சென்றால்..... அந்த நாள் இனிய நாளே !
பஞ்ச் லைன் :
அட்ரஸ் :
மெனு கார்டு :
Label : Arusuvai, Delicious desserts, Berry D Alive, Bangalore, Bengaluru

சுவை - ஏகப்பட்ட வகைகள் இருக்கிறது, எல்லாமே நல்ல சுவை. உயர் ரக இனிப்பு வகைகள் சாப்பிட வேண்டும் என்று எண்ணம் இருந்தால் நீங்கள் இங்கு செல்லலாம்.
அமைப்பு - சிறிய இடம், பார்கிங் வசதி இருக்கிறது !
பணம் - ஒரு ஆளுக்கு சுமார் நூறு ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. தட்டில் வருவது கொஞ்சமே கொஞ்சம் என்றாலும் சுவை அருமை !
சர்வீஸ் - நல்ல சர்விஸ், பார்த்து பார்த்து செய்கிறார்கள்.
அட்ரஸ் :
1079, 12th Main Road, HAL II Stage, Indiranagar, BangaloreIndia
மெனு கார்டு :
நோட் பண்ணிட்டேன் .. நோட் பண்ணிட்டேன் ..
ReplyDeleteநீங்க நோட் பண்ணவே தேவை இல்லை, பெங்களுரு வாங்க நாம சேர்ந்து போகலாம் !
Deletenallathai sapita eapa amount athikam than agum. anal suvai ??? negal sona kadayil nalla suvai eandru thonuthu. angu vara nerthal kandipaka taste panukirom.Thanks
ReplyDeleteநன்றி சுபா..... உண்மைதான் பணம் அதிகம் என்றாலும், சுவை அருமை. கண்டிப்பாக டேஸ்ட் செய்ய மறக்காதீர்கள் !
Deletei like your blog
ReplyDeleteஅன்பு நண்பரே, உங்களது கருத்துக்கு மிக்க நன்றி ! உங்களது பெயரையாவது எழுதுங்களேன் !
Deletelooks yummy!!! should try once when i come to bangalore next time..
ReplyDeleteஆவி..... பெங்களுரு வரும்போது சொல்லுங்க, சேர்ந்து போவோம் !
Deletesuper sir :-))
ReplyDeleteநன்றி கிருஷ்ணா..... சீக்கிரம் வாங்க சாப்பிடலாம் !
Deleteமிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது. என்னுடைய ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் செயலுருவம் கொடுத்தார் போல் இருக்கிறது. ரொம்ப நாளைக்கு பிறகு மிகவும் ர(ரு)சித்து
ReplyDeleteபடித்தேன்... எந்த பதிவிற்கு கருத்து போடுவது என குழம்பி உங்களது அண்மை பதிவில் பதிகிறேன். அருமை... ஆச்சரியம்..இலகு நடை.. ஈகை.. கருத்துகள் பூக்கும் உங்களது புதிய பதிவில்...
மிக்க நன்றி பிரேம்குமார், உங்களது மனம் திறந்த இந்த கருத்து எனக்கு மகிழ்ச்சியையும், இன்னும் இது போல எழுத வேண்டும் என்ற எண்ணத்தையும் அளிக்கிறது ! நீங்கள் அன்று போனில் பேசியது கண்டு மகிழ்ச்சி, விரைவில் சந்திக்க ஆசைபடுகிறேன் !
Deleteமிக்க நன்றி தனபாலன் சார்...... வேலை பளுவினால் இங்கு வரமுடியவில்லை, ஆனால் நீங்கள் தந்த தகவல் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நன்றி !
ReplyDelete