Tuesday, December 24, 2013

ஊர் ஸ்பெஷல் - சிவகாசி பிரிண்டிங் (பகுதி - 1)

சிவகாசி வெடி பற்றிய பதிவினை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அந்த வெடி பற்றி பார்க்க போகும்போது இந்த பிரிண்டிங் பற்றியும் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன், முடியாமல் போனது. இந்த முறை வருட கடைசி நெருங்குவதால் சிவகாசியில் காலேண்டர் மற்றும் டைரி தொழில் சிறப்பாக நடைபெறும் என்பதால் சட்டென்று காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். சிவகாசிக்கு சென்று பிரிண்டிங் பற்றி பார்க்க வேண்டும் என்று விசாரித்தபோது எந்த பிரிண்டிங் என்று கேட்டார்கள், நான் முழிக்க அவர்களோ காலேண்டர், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட், டயரி, போஸ்டர், புத்தகம், விசிட்டிங் கார்டு, வாழ்த்து அட்டை, தீப்பெட்டிக்கு லேபில், மேப், தொங்கும் போஸ்டர், மாடல் என்று சொன்னவுடன்தான் இங்கு இத்தனை வகை இருந்ததே தெரிந்தது. நான் சிறிது தலை சுற்றலுடன் இங்கு காலேண்டர் பார்க்க முடியுமா என்றவுடன் அவரோ டெய்லி சீட், மாதாந்திர காலேண்டர், வருடாந்திர காலேண்டர், டேபிள் மேல் வைப்பது, 3D காலேண்டர், கலர், கருப்பு வெள்ளை என்றெல்லாம் சொல்லி எதை பார்க்க வேண்டும் என்று கேட்க, நான் கீழே மயங்கி விழவில்லை அவ்வளவுதான் !முடிவில் வருட கடைசி என்பதால் காலேண்டர் அதுவும் எல்லா வகையும் பார்க்க வேண்டும் என்றவுடன், என்னை முதலில் தினசரி காலேண்டர் செய்யும் இடத்திற்கு கூட்டி சென்றார்கள். அங்கு தினசரி காலேண்டர் அட்டையை கட் செய்து கொண்டு இருந்தனர். நமக்கு வரும் காலேண்டர் அட்டைகள் எல்லாம் திக் ஆக இருக்கிறது. ஆனால் இங்கு முதலில் இருக்கும் அட்டைகள் எல்லாம் சொல சொலவென்று இருந்தது. காலேண்டர் மேல் சாமி படம் வரும் இல்லையா, அதை ஒரு இடத்தில் பிரிண்ட் செய்து இங்கு கொண்டு வந்து, ஒரு மெசினில் விட்டு வெளியே வரும்போது ஒரு சைடு மட்டும் பசை தடவ படுகிறது, சிலர் அதன் மேலே இன்னொரு காகிதத்தை ஓட்டுகின்றனர், அதனால் அது நல்ல திக் ஆக வந்து விடுகிறது. அங்கு முழுவதும் இது போன்று காலெண்டரின் வெளி அட்டை மட்டுமே தயார் செய்கின்றனர். அந்த வெளி அட்டை மட்டும் பிரிண்ட் செய்து வந்து விடுகிறது, இங்கு அதை ஓட்டி, காலேண்டர் அட்டை தயார் செய்கின்றனர். சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும் ஒரு காலேண்டர் தயாராகி வருவது கடினம் என்றே தோன்றியது.

காலேண்டர் அட்டை இதுதான்.....

பசை தடவி தாள் வருகிறது....

அதை இந்த அட்டையில் ஓட்ட வேண்டும்......அட்டை தயார் !

அதை காலேண்டர் அட்டை சைஸ் கட் செய்ய வேண்டும் !

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் !
ஒவ்வொரு முறை டெய்லி சீட் காலெண்டரில் தேதி கிழிக்கும்போதும், அதில் வரும் சாமி படம் கண்ணில் படும், எப்படி இவ்வளவு அழகாக வரைகிறார்கள் என்று. அதை சுட்டி காட்டி கேட்டபோது, அவர்கள் சிவகாசியில் இருக்கும் பெயிண்டர்கள் பற்றி சொன்னார்கள், அவர்களில் ஒருவரை சந்திக்க முடிந்தது. சுமார் அரை மணி நேரம் வரை அவருடன் செலவழித்து அவர் ஓவியம் வரைவதை பார்த்தேன், மிகுந்த பொறுமையாக அவர் வரைந்த விதம் அருமை. போட்டோ எடுக்க முனைந்தபோது ஏனோ அவர் என்னை அனுமதிக்கவில்லை..... எவ்வளவோ கேட்டும் ! ஆனால், பேச்சின் இடையே அங்கு காலேண்டர் ஓவியங்களுக்கு புகழ் பெற்றவர் என்று திரு.கொண்டையராஜு என்பவரை சொன்னார். அதை பற்றி இணையத்தில் தேடியபோது ஒரு நண்பரின் பதிவு கிடைத்தது, அதில் அவரை பற்றியும், ஓவியத்தை பற்றியும் நிறைய பேசுகிறார்........ காலேண்டர் ஓவியம்.
சரி டெய்லி சீட் காலேண்டர் பார்த்தாகிவிட்டது, அடுத்து மாதாந்திர அல்லது வருட காலேண்டர் பார்க்கலாம் என்றபோது அவர்கள் கேட்ட கேள்விக்கு மீண்டும் எனக்கு மயக்கம் வந்தது ?!அவர்கள் கேட்டது மிக சுலபமான கேள்வி, ஆனால் பதில்தான் எனக்கு தெரியவில்லை ! "என்ன பிரிண்டிங் பார்க்கணும் நீங்க ?"........ நான் பேய் முழி முழிப்பதை பார்த்த அவர்கள் அதை விளக்கினார்கள்.... இன்க் ஜெட் பிரிண்டிங், டிஜிட்டல் பிரிண்டிங், ஸ்க்ரீன் பிரிண்டிங், ஹீட் பிரஸ், பிலேசோக்ராபிக் பிரிண்டிங், லேசர் பிரிண்டிங், பேட் பிரிண்டிங், ஆப் செட் பிரிண்டிங் என்று அவர்கள் இன்னும் சொல்லிக்கொண்டே போக, எனக்கு எதை சொல்வது என்று தெரியவில்லை. முடிவில் ஆப் செட் பிரிண்டிங் என்பது எப்போதும் நான் கேட்க்கும் ஒன்று என்பதால் அதை சொன்னேன். அவர்கள் என்னை கூட்டி கொண்டு செல்ல எனக்கு மனதில் ஒன்று மட்டும் தோன்றியது...... நான் இதுவரை சென்ற ஊர் ஸ்பெஷல் பகுதியிலேயே இதற்குதான் நான் மிகவும் மெனகெடவேண்டும் என்பது, நிறைய விஷயங்கள் இருந்தது ! நாங்கள் சிவகாசியின் சந்து பொந்துகளில் எல்லாம் சென்றபோது ஒன்று மட்டும் புரிந்தது இங்கு பிரிண்டிங் சம்பந்தமான எல்லா புதிய டெக்னாலஜியும் அங்கு உண்டு என்பது. நாங்கள் முடிவில் ஒரு பெரிய ஆப் செட் பிரிண்டிங் செய்யும் இடத்தின் முன்னே நின்று கொண்டிருந்தோம் !


காலேண்டர் சாமி படம் பிரிண்டிங் !
அந்த இடத்தில் எல்லா விதமான காலேன்டரும் அச்சடித்து இந்தியா மட்டும் இல்லாமல் உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் வினியோக்கின்றனர். உள்ளே நுழைவதற்கு முன் ஆப் செட் பிரிண்டிங் என்றால் என்னவென்று சிறிது தெரிந்து கொள்வோம், இல்லையென்றால் நிறைய விஷயம் உங்களுக்கு புரிவது கடினம். நான் அன்று கற்று கொண்டதை எனக்கு தெரிந்த விதத்தில் உங்களுக்கு சொல்கிறேன் !! ஒரு ஓவியம் வரைகிறீர்கள் என்று வைத்து கொள்வோம், முதலில் பேப்பர் எடுத்து எல்லா கலரையும் கலக்க மாட்டீர்கள் அல்லவா, ஒரு கலர் கொண்டு அந்த பேப்பரில் தீட்டுவீர்கள், பின்னர் அடுத்து, பின்னர் இன்னொன்று என்று அல்லவா. ஒரு கலர் கொண்டு அந்த பேப்பரில் தீட்டியவுடன், அந்த கலர் காய்ந்தவுடன் நீங்கள் பேப்பரை தடவி பார்த்தால் கலர் செய்த இடம் மேடாக தெரியும், இதைதான் லேயர் என்கின்றனர். பேப்பர் என்பது முதல் லேயர், முதல் கலர் என்பது அடுத்த லேயர் என்று. இதைதான் ஆப் செட் பிரிண்டிங் செய்கிறது....... இதில் நான்கு முக்கிய கலர்களே எல்லா விதமான வர்ணங்களையும் உருவாக்குகிறது அது..... சயான், மெஜந்தா, மஞ்சள், கருப்பு.
முதலில் இருக்கும் ஒரு பிளேட்டில் எந்த இடத்தில் என்ன கலர் வேண்டுமோ அதை மட்டும் ஒரு லேயர் ஆக உருவாக்குகின்றனர், அதை கலர் உருளையில் உருட்டும்போது எந்த இடம் மேடாக இருக்கிறதோ அதில் கலர் பதிகிறது, அது பேப்பரில் பதிகிறது. அந்த கலர் அழுத்தமாக பதிய இன்னொரு உருளை உதவுகிறது. இப்படி நாலு கலர் உருளைகளுக்கு இடையே அது சென்று வரும்போது உங்களுக்கு முழு கலர் காலேண்டர் கிடைக்கிறது. இந்த பிரிண்டிங் தொழிலில் வேகம் என்பது முக்கியம், ஆயிரம் காலேண்டர் அடிக்க நீங்கள் எவ்வளவு குறைவான நேரம் எடுக்கிறீர்களோ அவ்வளவு அதிகம் லாபம் சம்பாதிப்பீர்கள். ஒரு போஸ்டர் படம் உருவாக என்ன என்ன தேவைபடுகிறது, எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் கீழே இருக்கும் வீடியோ பார்த்தால் புரியும்.சரி ஆப் செட் பிரிண்டிங் எப்படி உருவாகிறது என்று இப்போது உங்களுக்கு தெரியும், இப்போது பிரஸ் உள்ளே சென்று இன்னும் நிறைய விஷயம் பாப்போம் வாருங்கள்.......அடுத்த வாரம் வரை அதற்க்கு பொறுங்களேன் !

Labels : Suresh, Kadalpayanangal, Oor special, Sivakasi, Printing, Calendar

27 comments:

 1. கலக்குறீங்க. நீங்க சொல்லி உள்ளதை விட நூறு மடங்கு நவீன தொழில் நுட்ப வசதிகள் வந்து விட்டது. அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது உண்மைதான், அதையும் பார்த்தேன் ஆனால் என்னால் அதை புரிந்து கொள்வது கடினமாக இருந்தது..... எனக்கு தெரிந்தது ஆப் செட் பிரிண்டிங் மட்டுமே, அதனால் அதை சென்று பார்த்து நானே ஒரு தடவை மெசின் ப்ரூப் எல்லாம் செக் செய்து என்று நன்றாக இருந்தது !! இந்த பயணத்தில் நான் படித்த படிப்பு எல்லாம் ஒரு மெசின் ஆபரேட்டர் முன் தூசு போன்று தோன்றியது மட்டும் உண்மை ! நன்றி, தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் !

   Delete
 2. வணக்கம்
  நல்ல முன்னேற்றம் ... மேலும் வளச்சியடைய வாழ்த்துக்கள்.. பதிவை அருமையாக எழுதியுள்ளீர்கள்.படங்களும் அழகு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரூபன்..... உங்களது கருத்துக்கள் என்னை மகிழ்ச்சி அடைய செய்தது. தங்கள் வருகைக்கு நன்றி !

   Delete
 3. வணக்கம்

  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரூபன்..... தமிழ் மணத்தில் ஓட்டு அளிதததர்க்கு மிக்க நன்றி !

   Delete
 4. புது வருசம் தொடங்குற நேரத்துல எல்லோர் வீட்டுலயும் புது காலண்டர் வாங்கும் நேரத்தில் அது தயாராகும் இடத்தை பற்றின பதிவு அருமை! பகிர்வுக்கு நன்றி! தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி...... நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்ச்சி ! இந்த புது வருட காலேண்டர் தயாரிப்பு கண்டு உங்களது கருத்தை அளித்ததற்கு நன்றி !

   Delete
 5. ஆர்வத்துடன் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே..... எனது ஆர்வத்தை விட, நீங்கள் ஆர்வமாக வாசிப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி !

   Delete
 6. நல்ல சர்க்குலேஷன் உள்ள பத்திரிக்கைகளில் வெளிவர எல்லா தகுதியும் உள்ள article! பதிவுகளுக்கான உங்கள் ஆர்வமும், உழைப்பும் ஆச்சரியப்படுத்துகின்றன. வலைப்பதிவுகள் அருகி வரும் நேரத்தில் இது போன்ற வலைத்தளங்கள் ஆசுவாசம் தருகின்றன. என்னைப்போன்ற பின்னூட்டமிடாத silent வாசகர்கள் உண்டு என்பதை இந்த comment மூலம் அறிக! தொடருங்கள் தொடர்கிறோம்.
  BTW உங்கள் வலைப்பதிவுகளை ஏன் பத்திரிக்கைகளுக்கு அனுப்பக்கூடாது?

  ReplyDelete
  Replies
  1. மணம் திறந்த பாராட்டு என்றால் இதுதான் என்று தோன்றுகிறது, எனது முயற்சிக்கு கிடைத்த மிக சிறந்த பாராட்டு ! உங்களை போன்ற silent வாசகர்கள்தான் என்னை இது போல் எழுத தூண்டுவதும். பத்திரிக்கையில் வருவதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை...... மற்றொரு காரணம் என்பது, நான் செல்லும் இது போன்ற இடங்கள் எல்லாம் நான் அறிந்து கொண்டு எனக்கு புரிந்ததை எழுதுகிறேன், இதை தொழிலாக கொண்டவர்களுக்கு அதில் இருக்கும் குறை தெரியுமே என்ற பயமும் காரணம். ஆனாலும், நான் முயற்சி செய்கிறேன்.... பிரசுரம் செய்தால் உங்களுக்கு நிச்சயம் ட்ரீட் உண்டு !

   Delete
 7. காலண்டர் பிரிண்டிங்கில் இவ்வளவு விஷயங்களா... இதைத் தேடிப்பிடித்து விவரங்கள் சேகரித்து எழுதும் உங்களுக்குப் பாராட்டுக்கள்....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே..... தங்கள் வருகையும், கருத்தும் மகிழ்ச்சியை அளிக்கிறது !

   Delete
 8. சரியான பதிவு சரியான தருணத்தில் நன்று

  ReplyDelete
  Replies
  1. நன்றி பிரேம்குமார்...... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 9. அசத்துறீங்க... விளக்கங்களுக்கு பாராட்டுக்கள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்..... காலேண்டர் பார்க்காமல் உழைப்பவர் நீங்கள், உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி !

   Delete
 10. படங்களுடன் நல்ல விளக்கம் ! பலர் புகைப்படம் எடுக்க அனுமதிக்க மாட்டார்கள் ! உண்மைதான் !

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீனிவாசன்...... நீங்கள் சொல்வது உண்மைதான், இப்படி ஒவ்வொரு ஊர் ஸ்பெஷல் பகுதிக்காகவும் நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது....... உங்களுக்காக !

   Delete
 11. Mr. Suresh kumar, Really get good energy after reading your writings. Pls continue to do. Alagu laxmi, Tuticorin

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி, இது போன்ற வார்த்தைகள்தான் இப்படி தேடவும் எழுதவும் தூண்டுகிறது !

   Delete
 12. Nice article Mr. Suresh Kumar. I have an idea to start business magazine in tamil. I will contact you soon.

  ReplyDelete