Monday, December 30, 2013

கடல் பயணங்கள் அவார்ட் 2013 !!

2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந்த ஆண்டாக இருந்தது. திரும்பி பார்க்கும்போது நான் இந்த பதிவுலகத்தில் ரசித்த விஷயங்கள், என்னை பாதித்த விஷயங்கள் என்று சிலவற்றை பகிர்ந்துகொண்டால் என்ன என்று தோன்றியது !! நான் படித்ததே வெகு சில பதிவுகள்தான் ஆகையால் அதையும் தாண்டி இன்னும் நல்ல பதிவுகள், பதிவர்கள் இருந்தால் இந்த ஆண்டிலாவது அவர்களை படிக்க வேண்டும் !

கடல் பயணங்கள் அவார்ட் 2013
இதில் சந்தோசம் இருந்தாலும், ஒரு சிக்கலும் இருக்கிறது...... சிலரது பதிவுகளுக்கு அவார்ட் என்று கொடுக்கும்போது மற்ற சிலர் கோவித்து கொள்ளலாம். இதனால் அவர்களது பதிவுகள் ரசிக்கும்படியாக இல்லை என்பது இல்லை, அதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் !


"வீடு திரும்பல்" மோகன்...... எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்தான் இவரது தளத்தில் நுழைந்தேன், பின்னர் ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தேன். இவரது பதிவு நிறைய இருந்தாலும் நான் விரும்பி படிப்பது என்பது சாமான்ய மனிதர்களின் வாழ்க்கை பேட்டிகள். படிக்கும்போதே சில சமயம் இப்படியும் ஒரு சில மனிதர்கள் இருக்கிறார்கள், வாழ்க்கை இருக்கிறது என்று தெரிவது. நான் விரும்பி படிக்கும் பதிவுகள் என்பதால் இவருக்கு.....
கோவை நேரம் ஜீவா...... இவரது பதிவுகளில் கோவை மெஸ் என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். வெகு எளிதான எழுத்து நடை, செல்லும் இடங்களில் எடுத்த போட்டோ என்று எடுத்து மிக சாதாரணமாக பதிவுகள் போடுவார். முதன் முதலில் இவரை பார்த்தபோது எந்த வித பந்தாவும் இல்லாமல் வெகு இயல்பாக உரையாடினார். இவர் சொல்லும் மிக்சிங் உடன் ஒரு நாள் இவருடன் அருந்த வேண்டும் என்பது எனது ஆசை, இவருக்கு.......


திண்டுக்கல் தனபாலன் , ரமணி ஐயா...... இவர்களது பதிவுகள் வெகு இயல்பானவை. தனபாலன் சார் பதிவுக்குள் நுழைந்தால் அவர் html கொண்டு செய்து இருக்கும் மேஜிக் ஒவ்வொரு முறையும் ஆச்சர்யப்பட வைக்கும். திருக்குறள் எடுத்துக்கொண்டு அதை பழைய பாட்டுடன் கொடுப்பது என்பது இவரது சிறப்பு. ரமணி ஐயா அவர்களின் கவிதை ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கும் ரகம். சந்தங்களை வைத்தும், சில சமயம் புது கவிதை என்று ஒவ்வொரு நாளும் ஒரு சுவையுடன் இருக்கும். இவர்கள் பதிவுகள் எழுதுவதுடன், பதிவர்களை ஊக்கபடுத்தும் விதமும் அருமை. ஒவ்வொரு பதிவுக்கும் அவர்களின் மனம் திறந்த பாராட்டுக்களை கொடுத்து, வாக்குகள் கொடுத்து என்று இந்த பதிவுலகில் நிறைய புதிய பதிவர்களை மற்றவர்களுக்கும் அறிமுகபடுத்தி என்று இவர்களின் சேவை நிறைய. ஒவ்வொரு பதிவர்களும் இவர்களுக்கு இந்த அவார்ட் அவர்களுக்கு, அவர்களது பதிவுகளுக்கு கொடுக்க விரும்பும் ஒன்று என்றே கருதுகிறேன்.....


எல்லா பதிவுகளும் சினிமா, பயணம், சாப்பாடு என்றெல்லாம் வரும்போது இவர்களது பதிவு மட்டும் அவர்களின் துறை சார்ந்தே வரும். இவர்களின் ஒவ்வொரு பதிவுகளையும் வாசிப்பேன்..... மனதில் இருப்பதை அப்படியே தருபவர்கள். ராஜேஷ் சுப்பு அவர்கள் அவரது துறையான ஜோதிடம் பற்றி மனதில் பட்டதை அப்படியே எழுதும் விதம் அருமையான ஒன்று. அது போலவே நிகழ்காலம் என்னும் தளத்தில் எழுதும் எழில் அவர்களின் பதிவுகள் சிலவற்று என்றாலும் அதில் ஆழமான விஷயங்கள் இருக்கும், முக்கியமாக இவர் மாணவர்களுக்கு மனஅழுத்தம் பற்றிய பற்றிய பதிவுகளை படிக்கும்போது எல்லாம் இவரது பொது சிந்தனையை நன்றியோடு நினைக்க தோன்றும்.

 
இதில் சில பதிவர்கள் / பதிவுகளை நான் அவார்ட்  என்று வகை படுத்த விரும்பவில்லை,ஏனென்றால் இவர்களது பதிவுகள் எல்லாம் விருதுகளுக்கு 
அப்பாற்பட்டது என்பது என் கருத்து. எப்போதும் நான் அவர்களின் பதிவுகளை வாசித்து விடுவேன்.... அவர்களை நான் இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். 

 
 
ஜோதிஜி திருப்பூர் 
சங்கவி சதீஷ் 
காணாமல் போன கனவுகள் ராஜி
ராஜராஜேஸ்வரி
கோவை ஆவி
ஆரூர் மூனா செந்தில்
துளசி கோபால்
தமிழ்வாசி பிரகாஷ்
பாவா ஷரீப்
அமுதா கிருஷ்ணா
பட்டா பட்டி
பால கணேஷ்
புலவர் ராமானுஜம்
ஜெயதேவ் தாஸ்
அஜீமும் அற்புதவிளக்கும்
பாஸ்கரன் - உலக சினிமா ரசிகன்
வடுவூர் குமார்
செம்மலை ஆகாஷ்
சீனு திடம் கொண்டு போராடு
இக்பால் செல்வன்
அண்ணாமலையான்
குட்டன்
ஸ்கூல் பையன்
கும்மாச்சி
தக்குடு
பந்து
நாடிநாராயணன் மணி
என்பாட்டை ராஜா
மாதேவி
கிருஷ்
குரங்கு பெடல்
வல்லி சிம்ஹன்
அன்புடன் அருணா
கோபாலகிருஷ்ணன்
காட்டான்
பழனி கந்தசாமி
ஸாதிகா
வருண்
முருகானந்தம்
முனைவர்.இரா .குணசீலன்
தேவா
SP ராஜ்
ராஜேஷ்
அசோக்
விச்சு
காரிகன்
இக்பால் செல்வன்
ரங்குடு
ஜீவன் சிவம்
வடுவூர் குமார்
கோமதி அரசு

***********************************************************************************

இந்த வருடத்தில் நிறைய பதிவுகள் படித்திருக்கிறேன், ஆனாலும் இன்று என்னுடைய பதிவுகளையே ஒரு வாசகரின் நிலையில் இருந்து திரும்பி பார்க்கும்போது நான் சென்ற பயணங்கள், உண்ட உணவுகள், ஊர் ஸ்பெஷல் என்று நிறைய இருந்தாலும், வெகு சில என் மனதிற்கு நெருக்கமானவையாகவும், மிகவும் விரும்பியதாகவும் இருந்தது. நீங்கள் என் பதிவுகளை முழுமையாக இந்த வருடத்தில் படித்து இருக்கவில்லை என்றாலும் இதை கண்டிப்பாக படித்துவிடுங்கள்..... ஏனென்றால் இதெல்லாம் முத்துக்கள் !!
அறுசுவை

சுவையான டீ                   : அறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு
சுவையான உணவகம் : அறுசுவை - பிராமின்ஸ் காபி பார்
வியந்த உணவகம்         : அறுசுவை - ஜேக்கப்'ஸ் கிச்சன், சென்னை

உயரம் தொட்ட பயணம் : மவுண்ட் பியூஜி, ஜப்பான்

18+ பயணம் :  உலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)

ஊர் ஸ்பெஷல்

வியந்தது                                     : போளியம்மனுர் மோர் மிளகாய்
கஷ்டப்பட்டு திரட்டியது        : சிவகாசி வெடி (பகுதி - 1)
அழிந்து கொண்டு இருப்பது : சாத்தூர் காராசேவு

எண்ணங்கள் : நகரத்து பறவையின் எச்சம்...!!

சாகச பயணம் : சாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....!! (பாகம் - 2), தண்ணீரில் இறங்கும் விமானம்


மறக்க  முடியா பயணம்

உள்ளூர் : நிருத்யாகிரம், பெங்களுரு
வெளிநாடு : யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி - 1)
வித்யாசமானது : சொகுசோ சொகுசு பஸ்

உங்களுக்கு நன்றி : கடல் பயணங்கள் - இரண்டாம் ஆண்டில் !

***********************************************************************************

என்னதான் நாம சீரியஸ் ஆக இருந்தாலும் சில நேரங்களில் பதிவுலகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது, அவ்வளவு காமெடி நடக்கும். நல்லா ரசிச்சு எழுதுற பதிவுக்கு சிலர் மொக்கை அப்படின்னும், நாம வேணுமினே மொக்கை அப்படின்னு போடற பதிவுக்கு இதுதாண்டா பதிவு அப்படின்னு சொல்லியும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியும், கஷ்டப்பட்டு எழுதி யாருமே படிக்காம போன பதிவுகள் என்றும் சில உண்டு..... அதுக்கெல்லாம் அவார்ட் கொடுதுக்குறோம் சாமியோவ் !!

என்னங்கையா நடக்குது இங்க விருது !


கஷ்டப்பட்டு ஒவ்வொரு ஊருக்கும் தேடி போய் அங்க என்ன ஸ்பெஷல் அப்படின்னு எழுதுறதும், சில நேரங்களில் சில உணவகத்திற்கு போய் வயிறு கேட்டு குடம் குடமாய் வாந்தி எடுத்தும், வெளிநாடுகளுக்கு போய் திக்கு தெரியாமல் சுற்றி போட்டோ எடுத்து போடும் பதிவுகளும், மறக்க முடியா பயணம் என்று சென்று எழுதும் பதிவுகளுக்கும் எல்லாம் ஹிட் எதுவும் கிடைக்காமல் காண்டாகி இருக்கும்போது ஒரே ஒரு தலைப்பு அது நிறைய ஹிட் கொடுக்கும், ஆனால் பதிவுக்கு அவ்வளவு சிரமம் படாமல் எனும்போது தோன்றும் பாருங்கள்...... அதுதான் "என்னங்கையா நடக்குது இங்க விருது " அந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவு என்பது............

உலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)அட கிரகமே.....விருது !

 
எனது எல்லா பதிவுகளுக்கும் நான் அங்கு எடுத்த போட்டோ போட்டு இருப்பேன், ஆனால் ஒரு பதிவுக்கு மட்டும் ஐயோ போட்டோ போட வேண்டுமே என்று கஷ்டப்பட்டது என்று ஒரு பதிவு உண்டு. இதில் சிலர் படித்துவிட்டு எங்கே உங்க போட்டோ காணோம் என்பது வேறு நடந்தது. ஜப்பானில் வெந்நீர் ஊற்று சென்றபோது துணி எதுவும் இல்லாமல் அங்கு செல்ல வேண்டும் என்று சொல்லி, நானும் அப்படியே சென்று வந்தாலும்..... இந்த பதிவு எப்படி எழுதுறது என்று மிகவும் யோசித்தேன். இந்த பதிவை படித்து விட்டு நான் எப்போதும் இந்த விருதுக்கு இது தகுதியானது என்று யோசிப்பது உண்டு........ சாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்

பாட்டி சுட்ட வடை.....விருது !நான் எழுதும் பதிவுகளில் எல்லோராலும் விரும்பி படிக்கபடுவது என்பது அறுசுவை என்னும் தலைப்பில் நான் எழுதும் உணவகம் பற்றிய பதிவுகள்தான். நான் வெளிநாடுகளுக்கு செல்லும்போது எல்லாம் அங்கு இருக்கும் பல விதமான உணவுகளை சாப்பிட்டு இருக்கிறேன் (பள்ளி, தேள், குதிரை என்று லிஸ்ட் ரொம்ப நீளம் பாஸ் !). நான் எல்லாம் பரோட்டா சூரி மாதிரி, அம்மா சாதம் போட்டு குழம்பு ஊற்றிவிட்டு தண்ணீர் எடுத்து 
வருவதற்குள் தட்டு காலியாக இருக்கும் அந்த அளவு பாஸ்ட்...... ஆனால் முதன் முறையாக ஒரு மதிய உணவை சுமார் மூன்று மணி நேரம் உண்டது, திணற திணற உண்டது என்பது இங்கேதான், அது ஒரு மறக்க முடியாத உணவகம். அதற்க்கு "பாட்டி சுட்ட வடை" விருது மிகவும் பொருத்தம் என்று நினைக்கிறேன்........ சண்டே பிரஞ்ச் (Sunday Brunch)

***********************************************************************************

என்னதான் அவார்ட் என்று கொடுத்தாலும், வாங்கி கொண்டாலும் பதிவுலகில் நண்பர்கள் என்பது வரமே. அதுவும் பதிவர் சந்திப்பில் நிறைய பதிவர்களை சந்தித்த அந்த அனுபவம், எல்லோரிடமும் பேசியது என்பது சந்தோசம் கொடுத்தது.
 
எனது பதிவை வாசித்து, எழுத உற்சாகம் ஊட்டிய அனைவருக்கும் எனது
நன்றிகள் ! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும்
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
இனி எல்லாம் சுகமே..... ஜெயமே !!
 
 
 


 

29 comments:

 1. முதலில் விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  தங்களின் விருதிற்கு மிக்க நன்றி...

  உங்களின் பதிவுகளுக்கு கொடுத்துள்ள விருதுகளும் சுவாரஸ்யம்... (ஆனால் ஆதங்கம் + வருத்தம் புரிகிறது...)

  முடிவில் எனக்கு மிகவும் பிடித்த... பல பதிவுகளில் பயன்படுத்திய அருமையான பாடல்...

  வரும் ஆண்டில் மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்.... உங்களுக்கு கொடுத்த விருதால் அந்த விருதுக்குத்தான் பெருமை.

   தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், வளமுடனும் வாழ வேண்டும் என்று பிராத்திக்கிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

   Delete
 2. பதிவுகளை அதிகம் வாசிப்பதோடு அல்லாமல்
  ஆழமாகவும் வாசிக்கிறீர்கள் என தங்கள்
  இந்தப் பதிவினைக் கொண்டு அறிய முடிகிறது

  தங்கள் பாராட்டும் விருதும் கிடைத்தது
  இந்த ஆண்டில் எனக்குக் கிடைத்த
  பெரும் பேறாகக் கருதுகிறேன்
  .மிக்க நன்றி

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார்...... உங்களுக்கு விருது கொடுத்தது எனக்குதான் மகிழ்ச்சி. இந்த விருதுக்குத்தான் அதனால் பெருமை. உங்களது கவிதைகள் போலவே நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

   தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...... நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், வளமுடனும் வாழ பிராத்திக்கிறேன்.

   Delete
 3. Replies
  1. தாங்கள் அளித்த தமிழ் மணம் ஓட்டிற்கு நன்றி சார் !

   Delete
 4. வாழ்த்துகள். விருதுகள் தகுதியானவர்களுக்கே கிடைத்து உள்ளது.
  உங்களுடைய சிறந்த எழுத்தை பலமுறை படித்து உள்ளேன்.நன்று.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுபா.........தங்கள் வருகைக்கும், கருத்திற்கும். உங்களுடைய பாராட்டு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது !

   Delete
 5. பதிவுலகம் மேன்மேலும் வளரவும்..வரும் ஆண்டு வளமையாக இருக்கவும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி அமுதா கிருஷ்ணா...... உங்கள் வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி !

   Delete
 6. Replies
  1. டாலர் நகரம் வெற்றி மேல் வெற்றியை குவித்து வருகிறதை காண மகிழ்ச்சியாய் இருக்கிறது...... தங்கள் வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 7. விருதுகள் தொகுப்பு அருமை....

  புத்தாண்டு வாழ்த்துக்கள் சுரேஷ்....

  ReplyDelete
  Replies
  1. நன்றி பிரகாஷ்...... தங்களது வரவுக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete
 8. விருதுக்கு நன்றி சுரேஷ்.. புத்தாண்டு வாழ்த்துகள்!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆவி...... புத்தாண்டில் ஆவிப்பா சிறக்கட்டும் !

   Delete
 9. வணக்கம் சார் கொஞ்சம் வேலையாக வெளியில் சென்று வந்துவிட்டு இப்பொழுது தான் பார்த்தேன். விருது கொடுத்துள்ளீர்கள். நன்றி. உங்களுக்கு தான் நான் விருது கொடுக்கவேண்டும்.உங்களின் ஒரு பதிவையும் விடாமல் ரசித்து வாசிப்பவன். புது வருடம் பிறந்த பிறகு உங்களுக்கு மிகப்பெரிய விருது ஒன்றை நான் கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்...... இந்த விருது தகுதியானவர்களுக்குதான் சென்று உள்ளது. நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு இந்த விருது பெருமை பெரும். நன்றி !

   Delete
 10. வணக்கம்,நன்றி.
  உங்களுடைய பழைய பதிவுகளில் படங்கள் தெரிவதில்யே????

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே....... பிகாசாவில் நான் பதிவேற்றும் படங்கள் இணைப்பில் இருக்கும் என்று தெரியாமல் ஒரு நாள் எல்லாவற்றையும் டெலிட் செய்து விட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும் !

   Delete
 11. வணக்கம்,நன்றி.
  உங்களுடைய பழைய பதிவுகளில் படங்கள் தெரிவதில்யே????

  ReplyDelete
 12. விருதுகள் புதுமை, எனக்கான விருதுக்கு மிக்க நன்றி... இந்த இடத்தில் நான் ஒன்று சொல்லியாக வேண்டும். ஜோதிடர் ராஜேஷ் அவர்களது பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும், தவறாமல் அவரது அனைத்துப் பதிவுகளையும் படித்துவிடுவேன். அதிகம் கருத்துரையிட்டதில்லை. வலைச்சர ஆசிரியராக இருந்தபோது அவரது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துவைத்தேன்.

  புத்தாண்டு வாழ்த்துக்கள்... பிறக்கப்போகும் புதிய ஆண்டில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்....

  ReplyDelete
  Replies
  1. நான் விரும்பி வாசிக்கும் பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று...... ஒரு நாள் உங்களை சந்தித்து பேச வேண்டும் என்ற எண்ணம். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

   Delete
 13. பிறக்கும்புத்தாண்டு சகலசெல்வங்களையும் அள்ளித்;தரட்டும்.

  உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மாதேவி...... இந்த புத்தாண்டில் நாங்கள் விரும்பும் உங்கள் பதிவுகளை இன்னும் இன்னும் நிறைய எழுத வேண்டும். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete
 14. stay happy :) fantastic greetings from...
  staySmile Krishna

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துக்கு நன்றி கிருஷ்ணா. உங்களுக்கும் இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமையட்டும் !

   Delete
 15. என் பதிவுகளை குறிப்பிட்டதற்கு நன்றி.. சாப்பாட்டு கடை.. சுற்றுலா. ஊரில் முக்கியமான பொருள்கள் என அடித்து ஆடுகிறீர்கள்.

  நீங்கள் எந்த விஷயமானாலும் முழுமையாக அறிந்து கொள்ள / அனுபவிக்க முயற்சி செய்பவர் என தோன்றுகிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது மனம் திறந்த பாராட்டிற்கு மிக்க நன்றி சார்..... உண்மைதான் பிறவி குணம் ஆயிற்றே, சில சமயங்களில் இதனால் சிரமமும் ஏற்படுகிறது, ஆனால் நீங்கள் தரும் இது போன்ற கருத்துக்கள் அந்த சிரமங்களை போக்கி விடுகிறது !

   Delete