Thursday, December 19, 2013

அறுசுவை - ஜூனியர் குப்பண்ணா மெஸ், பெங்களுரு

வெகு சில சமயங்களில்தான் நீங்கள் பசியோடு இருக்கும்போது, சிலர் நன்றாக இருக்கிறது என்று சொல்லி நீங்கள் செல்லும் அந்த ஹோடேலில் உணவு நன்றாக இருக்கும். பல சமயங்களில், ஒன்று கடுப்பாகி இதெல்லாம் ஹோட்டல் என்று திரும்பி வருவேன், அல்லது நல்லாத்தான் இருக்கு என்று நினைத்து உறங்கி எழுந்தவுடன் வயிற்றில் ஒரு ரங்கோலி உருவாகி இருக்கும் ! பெங்களுருவில் பலரும் பல மாதங்களாக சொல்லி வந்தது இந்த ஜூனியர் குப்பண்ணா மெஸ். ஒவ்வொரு முறையும் தள்ளி போய், சென்ற வாரம் சென்று வந்தேன்..... சுவை, பணம், சுத்தம் என்று எல்லாவற்றிலும் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.


முதலில் இந்த தெருவுக்குள் ஏன் ஹோட்டல் கொண்டு வந்து வைத்தார்கள் என்று யோசிக்க வைக்கிறது, ஏனென்றால் இந்த தெருவில்தான் பார் அதிகம். அதுவும் நைட் ஆகிவிட்டால் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்கள் மிகவும் அதிகம், அது மட்டும் இல்லை இதற்க்கு அடுத்ததாகவே ஒரு புகழ் பெற்ற பார் இருக்கிறது, அதனால் இளைன்கர்கள் வெளியே வந்து ஒரே புகை மூட்டம் ஆக்கி விடுகின்றனர். இதை எல்லாம் தாண்டி முதல் தளத்தில் இருக்கும் இந்த உணவகத்திற்கு சென்றால் நிச்சயம் உங்களுக்கு அன்று நல்ல விருந்துதான் ! உள்ளே நுழையும்போதே நல்ல பகல் போன்ற வெளிச்சத்தில் உணவகம் இருப்பதை பார்த்து சந்தோசம் வருகிறது, சில உணவகங்களில் அடுத்தவர் காலை மிதித்து கொண்டு செல்லும்படியாக இருக்கும் வெளிச்சம் !


உட்கார்ந்தவுடன் மிக சிறிய மெனு ஒன்று கொடுக்கின்றனர். முதலில் நான் சொன்னது இட்லி மற்றும் ஒரு தோசை. தொட்டு கொள்ள எங்களுக்கு நாட்டு கோழி மசாலா மற்றும் மட்டன் பள்ளி பாளையம் ஆர்டர் செய்தோம். நல்ல வாழையிலை வைத்து உங்களது முன் சிறிது தண்ணீர் வைத்தவுடன் நீங்கள் கொஞ்சம் தலையை திருப்பி அடுத்த டேபிள் பார்த்தால் உங்களுக்கு வாய் ஊறுவது உறுதி ! நல்ல வேளை சிறிது நேரத்திலேயே எங்களுக்கு நாங்கள் ஆர்டர் செய்தது வந்தது..... சூடான மல்லிகை பூ போன்ற இட்லி, அதற்க்கு சிக்கன் குழம்பு, நன்கு காரமான சட்னி என்று இலையில் விழுந்தது. எனக்கு என்று கேட்டு சிறிது நெய்யை கேட்டு இட்லியின் மேலே ஊற்றிக்கொண்டேன்..... ம்ம்ம்ம் ஒரு வில்லை பியித்து வாயில் வைத்தவுடன் அந்த குழம்பின் ருசியும், சூடான இட்லியும், அருமை ! அடுத்து வந்த தோசை நல்ல மொறு மொறுவென்று இருந்தது, அதற்குள் அங்கு வந்து சேர்ந்து இருந்த நாட்டு கோழி மசாலா மற்றும் மட்டன் பள்ளிபாளையம் உடன் நிமிடத்தில் காணமல் போனது. மட்டம் பள்ளிபாளையத்தில் மட்டனை சிறிது சிறிதாக போட்டு, வெங்காயம், கருவேப்பில்லை மற்றும் காய்ந்த சிகப்பு மிளகாயை வதக்கி சரியான பதத்தில் எடுத்து தந்தது மிகவும் ருசி !


பசி போய் விட்டாலும் பக்கத்தில் இருந்த ஒரு குடும்பம் பரோட்டாவை வாங்கி வைத்திருந்தது கண்டு நானும் அங்கு வித்யாசமான நெய் பரோட்டா சொன்னேன். சிறிது நேரத்தில் எனது இலைக்கு பொன்னிறமாக பொறிக்கப்பட்ட சிறிய பரோட்டா ஒன்று வந்தது, நெய் வாசனை தூக்கலாக ! ஒரு வாய் பியித்து கொடுத்த குழம்பில் தொட்டு வாயில் வைக்க, வாவ் என்று தோன்றியது நிஜம். எந்த இடத்திற்கு போனாலும் இட்லி ஓகே, ஆனால் குழம்பில் உப்பு ஜாஸ்தி, சிக்கன் வேகவே இல்லை என்றெல்லாம் எதாவது ஒன்று இருக்கும், ஆனால் இன்று அப்படி குறையென்று சொல்ல ஒன்றும் இல்லை. இடம், சுவை என்று எல்லாமே அருமை. யாராவது நல்ல கார சாரமா சாப்பிடனும் என்றால் இங்கே சொல்லி விடுங்கள்..... நன்றியோடு இருப்பார் !


பஞ்ச் லைன் :

சுவை - மிக சில வகைகள்தான், ஆனால் எல்லாமே நல்ல சுவை. அதுவும் இட்லி மற்றும் சிக்கன் குழம்பு சாப்பிட மீண்டும் போகணும் !

அமைப்பு - சிறிய இடம், பார்கிங் வசதி இல்லை, அந்த பிஸியான இடத்தில் தேடி தேடித்தான் பார்கிங் செய்யணும் ! பார் அதிகம் என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதை !

பணம் - சுவைக்கு சரியான விலை என்றே தோன்றியது. இப்படி ஒரு சில இடத்தில்தான் நல்ல சுவை...

சர்வீஸ் - நல்ல சர்விஸ்.

அட்ரஸ் :

34, 5th Cross, 5th Block, Opposite Nandana Grand Hotel, Koramangala, Bangalore


மெனு கார்டு :




Labels : Arusuvai, Junior Kupanna, bangalore, south indian, Suresh, Kadalpayanangal

17 comments:

  1. படங்களுடன் உணவக அறிமுகம்
    வழக்கம்போல் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார்.... உங்களது வருகையை பெங்களுருவும், நானும் எதிர்பார்க்கிறோம் !

      Delete
  2. Replies
    1. தமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி சார் !

      Delete
  3. இப்பத்தான் வந்தீங்களா? நந்தனாவுக்கு கொஞ்சம் முன்ன போயி இடப்பக்கம் திரும்புனா பார்க்கிங் கிடைக்கலாம்.

    ஆனா அஞ்சப்பர ஒப்பிட்டா வெரைட்டி குறைவு, விலை அதிகம். அதனால நம்ம சாய்ஸ் அடுத்த ரோட்டில் இருக்கும் நாகார்ஜுனா ஆந்திரா ஹோட்டல்.

    அஞ்சப்பருக்கு எதிரே, St. Johns காம்ப்பவுண்டு ஒட்டியே Biriyani@Koramangala என்றொரு ஹைதை தம் பிரியாணி உணவகம் உள்ளது. 5 வருடங்களுக்கு முன் தொடங்கிய போது இருந்த சுவையை தக்க வைக்க தடுமாறினாலும் நல்ல தம் பிரியாணி கிடைக்கும். பார்க்கிங் இல்லவே இல்லை.

    ஆம்பூர் Star biriyani BTMல் இருந்து சில்க் போர்ட் வரும்போது இடப்பக்கம் ஜங்சன் சிக்னலுக்கு சற்று முன் உள்ளது. தால்ச்சாவுடன் பிரியாணி நன்றாக இருந்தது. இங்கும் பார்க்கிங் பிரச்சினைதான்.

    ReplyDelete
    Replies
    1. முகம் தெரியாத நண்பரே.... நீங்கள் கொடுத்த அனைத்து தகவல்களுக்கும் மிக்க நன்றி. இங்கு செல்பவர்களுக்கு மிக உபயோகப்படும் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  4. வாவ்... வாவ்... இதோ பெங்களூரு வந்து விடுகிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. சார்.... எப்போதும் இதையேதான் சொல்கிறீர்கள், வரமாட்டேன் என்கிறீர்களே ! பொங்கலன்று திண்டுக்கல்லில்தான் இருப்பேன், உங்களுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்கலாமா ?!

      Delete
  5. இங்கே குரோம்போட்டையில் இதே பெயரில் ஒரு ஹோட்டல் இருக்கே...branch ah???

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்...... எங்கும் ஒரே சுவையில்தான் இருக்கிறது ! நன்றி !

      Delete
  6. Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே !

      Delete
  7. Feast started.......பார் அதிகம் என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதை .....எதற்கு ;-)

    ReplyDelete
    Replies
    1. சும்மாவே சலம்புவார்கள்.... அதுவும் சரக்கு போட்டால் அவ்வளவுதான் ! பிரேம்..... இங்கே வாருங்கள் காண்பிக்கிறேன் ! நன்றி !

      Delete
  8. Nann indha murai muyarchi seigiren

    ReplyDelete