பயணம் என்பதே மறக்க முடியாத ஒன்று, அதில் முக்கிய இடம் வகிப்பது என்பது நாம் தங்கும் இடம். எனது ப்ளாக்கை விரும்பி படிக்கும் நண்பர்
ராஜேஷ் அவர்கள் எப்போதும் நான் செல்லும் இடங்கள் பற்றி எழுதும்போது, தங்கிய ஹோட்டல் பற்றியும் எழுதலாமே என்பார், அவருக்காகவே இந்த பதிவு ! ஒவ்வொரு பயணத்தின் போதும் பல நாட்களை செலவழித்து தங்கும் இடத்தினை தேர்ந்தெடுப்பேன், இதனால் மனதுக்கு மகிழ்ச்சியும், நிம்மதியும் அந்த பயணத்தில் கிடைக்கும். சிலர், கிடைக்கும் இடத்தில் தங்கி செல்வர்.... அது ஒரு வகையான பயண அனுபவம். இப்படி நான் சமீபத்தில் செய்த பயணத்தில் நான் தங்கிய ஹோட்டல் என்பது ஒரு தேவாலயம் !! மிகுந்த ஆச்சர்யம் கொடுத்த இடம் அது !
 |
ஜீசஸ்..... இதுதான் ஹோட்டல் ! |
இந்த முறை மூன்று நாள் மீட்டிங் என்று பெல்ஜியம் சென்று இருந்தேன். ஏர்போர்டில் இருந்து நான் டாக்ஸி எடுத்தபோதே அவர் அங்கேயா தங்குகிறீர்கள் என்று வியப்புடன் பார்த்தார். நான் அங்கே செல்லும் வரை அதை பற்றி தெரியாது ஆகையால் டாக்ஸி ஒரு தேவாலயம் முன்பு நின்றபோது நான் டிரைவரை பார்த்து இங்கு ஹோட்டல் எங்கே இருக்கிறது என்று கேட்க அவர் என்னை ஒரு புன்னகையுடன் பார்த்து இதுதான் ஹோட்டல் என்று தேவாலயத்தை காண்பித்தார் ! எனது பைகளை இறக்கி விட்டு நிமிர்ந்தபோது ஒரு தேவதூதன் சிலையாய் ஆசிர்வதித்து கொண்டு இருந்தார் !
 |
வரவேற்க தயாராக தேவதூதர் ரெடி..... ஹோட்டல் வாசலில் |
 |
அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல் என்று முத்திரை.... நான்கு ஸ்டார் ! |
முதலில் நுழைந்தவுடன் உங்கள் கண்களுக்கு படுவது தேவாலயத்தின் பெரிய தூண்கள், சிலைகள் மற்றும் கண்ணாடிகள். உள்ளே நுழைந்து கண்களை துலவவிட என்னை வரவேற்ப்பரையில் இருந்த பெண் வரவேற்று ரூம் புக்கிங் செய்ய தொடங்கினார், அவரிடம் நான் பேச்சு கொடுத்தபோதுதான் தெரிந்தது அது ஒரு தேவாலயமாக முன்பு இருந்ததும், இன்று ஹோட்டல் ஆக மாற்றி இருப்பதும். பொதுவாக தேவாலயம் சென்றால் அதன் கூரை என்பது மிகுந்த உயரத்தில் இருக்கும், இங்கும் அது போலவே...... அந்த கூரை வரை ஐந்து செயற்கை தளங்களை அமைத்து ரூம் இருக்கிறது. எனக்கு கிடைத்தது தேவாலயத்தின் கூரை தொடும் ஐந்தாவது மாடி !
 |
அப்போ பிரேயர் ஹால்...... இப்போ சாப்பாடு கூடம் ! |
 |
இந்த ஹோடேலில் காலையில் எந்திரிக்க சர்ச் பெல் அடிப்பாங்களோ ?! |
ரூம் உள்ளே நுழைந்தவுடன் தேவாலயத்தின் கூரை தென்படுகிறது, படுக்கையின் அருகே ஒரு கண்ணாடி ஜன்னலும், அதன் வெளியே ஒரு தேவதை கை கூப்பி தொழும் கண்ணாடி ஓவியமும் என்று அருமையாக இருந்தது அறை. சிறிய அறைதான் என்றாலும் நன்றாக இருந்தது. அறையின் இன்னொரு ஜன்னல் வழியாக பார்த்தபோது அந்த தேவாலயம் முழுமையாக தெரிந்தது. அன்று இரவு உறங்கி முடித்து, அடுத்த நாள் காலை உணவிற்கு கீழே சென்றால்..... தேவாலயத்தின் பிரேயர் பகுதிதான் உணவு உண்ணும் இடம். மிக மெதுவாக ஒலிக்கும் ஒரு இசையுடன், தட்டில் உணவுகள் கொண்டு வந்து அங்கு சிலுவையின் ஓவியம் முன்பு உட்க்கார்ந்து உண்பது என்பது மனதுக்கு ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
 |
நான் தங்கிய ரூம்..... |
 |
படுக்கைக்கு வெளியே ஒரு தேவதை.....கண்ணாடியில் ! |
 |
என் ஜன்னலின் வெளியே..... |
 |
சர்ச்சின் கூரை தொட்டு ரூம்கள்.... |
அங்கு மிகவும் பெரிய அறை ஒன்று உள்ளது, அங்கு உங்களது படுக்கையை சுற்றி எட்டு கண்ணாடி ஓவியம் தீற்றப்பட்ட ஜன்னல் உள்ளது. காலையில் நீங்கள் எழுந்திருக்கும்போது சூரியம் அந்த ஓவியத்தை பளிச்சென வைத்திருப்பது ஒரு அருமையான காலையை உணர்த்துக்கிறது. பல ஸ்டார் ஹோடேல்களில் தங்கி இருந்தாலும் முதன் முறையாக இப்படி ஒரு தேவாலய ஸ்டைல் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தது ஒரு புது அனுபவமாக இருந்தது. உலகில் ஆச்சர்யங்கள் நிறைய இருக்கிறது என்பதையும் உணர முடிந்தது !!
 |
சாப்பிடும் முன் பிரேயர் பண்ணனுமா.... பாதர் எங்கே ?! |
 |
இதுதான் சாப்பாடு மெனு....! |
Labels : Maathi Yosi, Think different, Church, Hotel, Belgium, Suresh, Kadalpayanangal
ஆகா... என்னவொரு அழகான இடம்...!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி தனபாலன் சார்.... என்னதான் இருந்தாலும் நமது ஊருக்கு ஈடாகாது !
Deleteஎனது ஆசை நிறைவேற்றியதற்க்கு நன்றி. இன்று தான் முதன் முதலில் இப்படி ஒரு ஹோட்டலை பார்க்கிறேன். தொடர்ந்து பயணம் செய்யுங்கள்.
ReplyDeleteஉங்களுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும் நண்பரே.... நீங்கள் சொல்லவில்லை என்றால் நான் இதை எழுதி இருக்க மாட்டேன் ! நன்றி !
Deleteஒரு தேவாலய ஸ்டைல் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்த பயணம் அருமை...!
ReplyDeleteநன்றி நண்பரே..... நம்ம ஊரில் இப்படி ஒன்று இல்லையே !
Deleteவயிற்றெரிச்சல் படுற மாதிரி பதிவு போடாதீங்கன்னு சொன்னா கேட்டாதானே! எனக்கு வயத்து அல்சர் வந்துட்டு. நான் போய் மாத்திரை எடுத்துட்டு வரேன்
ReplyDeleteவயித்துல அல்சர் வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கு சகோதரி.....என் பதிவுகள் உங்களை சந்தோசபடுததான் :-)
Deleteவயிற்றெரிச்சல் படுற மாதிரி பதிவு போடாதீங்கன்னு சொன்னா கேட்டாதானே! எனக்கு வயத்து அல்சர் வந்துட்டு. நான் போய் மாத்திரை எடுத்துட்டு வரேன்
ReplyDeleteஅட நீங்க வேற. இந்த மாதிரி உணவகத்திற்கு ஒரு முறை போயிட்டு வரலாம். அடுத்தமுறை நம்மைப் போன்றவர்களுக்கு அங்குள்ள நடைமுறைகள் எரிச்சலை தந்து விடும். நமக்கு எப்போதும் போல தட்டு வண்டி அதிகபட்சம் சரவணபவன் இது தான் சரியாக இருக்கும். கூட ரெண்டு கரண்டி சாம்பார் கேட்டாலும் வாளியைக் கொண்டு வைத்து விட்டு போவார்கள்.
சத்தியமான வார்த்தைகள் ஜோதிஜி சார் ! நானும் உங்களை போலதான், எல்லா நேரத்திலும் இந்த உணவகங்களில் சாப்பிட முடியாது ! நன்றி, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் !
Deleteநன்றாக இருந்தது....படுக்கைக்கு வெளியே ஒரு தேவதை.....கண்ணாடியில் என்ன ஒரு குறும்பு ....:-)
ReplyDeleteகுறும்பெல்லாம் இல்லை பிரேம்..... உண்மையை சொன்னேன் ! நன்றி !
Delete