Monday, December 23, 2013

அறுசுவை - கபே இட்லி, பெங்களுரு

எப்போது கபே (cafe) என்று பெங்களுருவில் சென்றால் அயல்நாட்டு இசை அதிர அதிர இருக்கும், அரை இருட்டில் தேடி உட்கார்ந்தால் மெனு கார்டு நீட்டும் ஆள் ஆங்கிலத்தில் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதையே இஸ்ரேல் பாசையில் கேட்பார், மெனு கார்டை படிக்கும்போது பீட்சா, பாஸ்தா, பர்கர் என்று வாயில் நுழையாமல் நிறைய இருக்கும், குடிப்பதற்கு என்ன வேண்டும் என்று தேடினால் கோல்ட் காபி, லெமன் டீ, கப்புச்சினோ என்று அது நீளும்..... முடிவில் ஆர்டர் செய்து அது வந்து சாப்பிட்டு முடிக்கும்போது பில் கண்ணை கட்டும், சாப்பிட்டது ரொம்ப ஹெவி என்று தோன்றும். எல்லோருக்கும் இது போன்று ஒரு அயல்நாட்டு இசை கேட்டு கொண்டு கபே போய் வர வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனால் அங்கு இருக்கும் உணவுகள் நிறைய யோசிக்க வைக்கும். இப்படி ஒரு உணவகம் இருந்து அங்கு இட்லி, தேங்காய் சட்னி, காபி என்று கிடைத்தால் எப்படி இருக்கும், அதுவும் மிகவும் சுவையாக இருந்தால் ?!
சுமார் மூன்று மாதத்திற்கு முன்பு இந்த உணவகத்தை பற்றி கேள்விபட்டேன், ஆனால் அங்கு கிடைப்பது வெகு சில வகைகள் இட்லி மட்டுமே. இதற்காக அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்று விட்டுவிட்டேன், சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் அங்கு சென்று வந்து நான் அங்கு சென்று கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்றபோது இந்த வாரம் அங்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்......ம்ம்ம்ம்ம் கண்டிப்பாக மூன்று மாதங்களை வேஸ்ட் செய்து விட்டேன் என்று சென்றபின் தோன்றியது ! வெகு சிறிய கடை, பெங்களுருவில் பிரேசர் டவுன் என்ற ஏரியாவில் உள்ளது, கண்டுபிடிப்பது சுலபம்தான். வண்டியை நிறுத்திவிட்டு கடையின் முன்னே நின்றபோது நம்மூர் பெட்டிக்கடையை விட சிறிது பெரிது என்று தோன்றும்படியான இடம். மெனு கார்டு என்று கேட்டபோது ஒரு பக்க மெனு கொடுத்தார்கள். அங்கு மிதமாக அயல்நாட்டு இசை கேட்டு கொண்டு இருந்தது.


  

மெனுவை பார்த்தபோது இட்லி, காஞ்சிபுரம் இட்லி, பர்கர் இட்லி, கடுபு என்னும் வாழையிலை இட்லி, கட்லெட் மற்றும் காபி, பாதாம் பால் அவ்வளவுதான் மெனு ! எனக்கு காஞ்சிபுரம் இட்லி, மற்றும் வாழையிலை இட்லி ஆர்டர் செய்துவிட்டு சுற்றி கண்களை ஓட்டினேன். அங்கு ஒரு கண்ணாடி பெட்டியில் கிடார், பீட்டில்ஸ் என்று கபே என்ற சொல்லுக்கு இருந்தது. அங்கங்கு பல பத்திரிக்கைகளில் வந்த அந்த கடை பற்றிய செய்தி, அங்கு கிடைக்கும் மெனு என்று ஒட்டி இருந்தனர். இவ்வளவு சிறிய கடையா என்று யோசித்து கொண்டிருக்கும்போதே சுட சுட ஆவி பறக்க, மிக சிறிய தட்டில் காஞ்சிபுரம் இட்லியும் அதற்க்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்னி, கார சட்னி வந்தது. பொதுவாக இந்த காஞ்சிபுரம் இட்லியை நான் எங்கு சாப்பிட்டபோதும் ஒரு கடினத்தன்மை இருந்தது, ஆனால் இங்கு ரொம்பவே சாப்ட். ஒரு விள்ளல் பியித்து வாயில் சட்னி தொட்டு வைத்தவுடன் கண்டிப்பாக மிக கண்டிப்பாக அருமையான இட்லி. நொடியில் அந்த தட்டு காலியானது.

 அடுத்து ஒரு வாழையிலை தொண்ணையில் மாவு ஊற்றி வேக வைத்து எடுத்த இட்லி சட்னி உடன் வந்தது. வித்யாசமாக இருக்கிறதே என்று பார்த்துக்கொண்டே அதற்க்கு இட்லி பொடி எக்ஸ்ட்ரா வாங்கி கொண்டு அதை தொட்டு சாப்பிட, மீண்டும் அதே பஞ்சு போன்ற இட்லி சுவை மனதை மயக்கியது நிஜம். இட்லி  இடத்திலும் இப்படி சுவையுடனும், பஞ்சு போன்றும் கிடைப்பது கடினம், ஆனால் இங்கு அந்த இரண்டுமே இருந்தது. மிக சிறிய மெனு, சின்ன கடை ஆனால் பார்த்து பார்த்து செய்து இருக்கின்றனர். எப்போதும் இது போன்ற இட்லியை உடுப்பி ஹோடேலில் சாஸ்த்ரிய சங்கீதம் பின்னே வழிய சாப்பிடும் அனுபவம் இருந்தது, முதல் முறையாக மேற்கிந்திய சங்கீதத்துடன் நம்ம ஊரு இட்லி சாப்பிடும் அனுபவம், அதுவும் நல்ல இட்லி சாப்பிட்ட அனுபவம் என்பது அருமை !
பஞ்ச் லைன் :

சுவை - மிக சில வகைகள்தான், ஆனால் இட்லி பஞ்சு போன்ற மென்மை. கண்டிப்பாக  பிடிக்கும் !

அமைப்பு - சிறிய இடம், பார்கிங் வசதி இல்லை, அந்த பிஸியான ஒன் வே இடத்தில் கார் எல்லாம் பார்க் பண்ண கொஞ்சம் தூரம் போகணும் !

பணம் - சுவைக்கு சரியான விலை என்றே தோன்றியது. இப்படி ஒரு சில இடத்தில்தான் நல்ல சுவை...

சர்வீஸ் - நல்ல சர்விஸ்.

அட்ரஸ் :


மெனு கார்டு :


 
Labels : Cafe, Idly, Bangalore, Suresh, Kadalpayanangal, Super soft idly, Concept restaurant


19 comments:

  1. ஹோட்டலுக்கு போனால் நான், சில்லி பரோட்டா இப்படிதான் சாப்பிடனும்ன்னு பசங்க ஆசைப்படுவாங்க. ஹோட்டலுக்கு போயும் அதே இட்லியான்னு சலிச்சுக்குவாங்க. நம்மை மாதிரி பெருசுங்கதான்!!?? ஹோட்டல்ல இட்லி சாப்பிடனும்

    ReplyDelete
    Replies
    1. அதே இட்லிதானா அப்படின்னு மட்டும் யோசிக்காதீங்க..... அதை நினைத்துதான் நானும் நிறைய நாள் போகலை, ஆனால் போன பிறகு மீண்டும் அங்கு செல்ல வேண்டும் என்றே தோன்றுகிறது ! நன்றி !

      Delete
  2. யம்மாடி...! இப்பவே கண்ணைக் கட்டுதே...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. சார்.... இட்லி சாப்பிடுங்க கண்ணை கட்டாது ! எப்போ இட்லி சாப்பிட பெங்களுரு வாறீங்கள் !

      Delete
  3. ஜனவரியில் பெங்களூரு வருகிறேன்.. அப்போது உங்களை சந்திக்கிறேன்.. ஏதாவது "நல்ல" ஹோட்டலுக்கு கூட்டிப் போங்க!! :)

    ReplyDelete
    Replies
    1. ஆவி..... சென்னை சென்றால் எல்லோரையும் சந்திக்கிறீர்கள், ஆனால் பெங்களுரு வந்தால் மட்டும் என்னை சந்திக்க மாட்டேன் என்கிறீகள். இந்த முறை கண்டிப்பாக சொல்லவும் !

      Delete
  4. do you know what oxford dictionery defines IDLY :A HARMLESS FOOD OF SOUTH iNDIA NORMALLY TAKEN FOR BREAKFAST

    ReplyDelete
    Replies
    1. இதற்க்கு எதற்கு சார் ஆக்ஸ்போர்ட் எல்லாம் பார்க்க வேண்டும், நமக்கு எல்லோருக்கும் தெரியுமே ! ஆனாலும் இந்த கடை இட்லி ரொம்ப ஸ்பெஷல் சார் !

      Delete
  5. Your next visit go to M T R HOTEL opposite to lal park main gate, India's best sound Equipment theater URVASI THEATER next to MTR hotel. sridhar

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அருமையான தகவல்கள்.... நன்றி நண்பரே, விரைவில் செல்கிறேன். நன்றி !

      Delete
  6. visit LAKE VIEW ICE CREAM PARLOR in mg road 70 year's old & finest one. WOODY'S in commercial st., Enquire your friends GOLD WRAPPER DOSA avilable .

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே, விரைவில் சென்று வந்து எழுதுகிறேன் !

      Delete
  7. KALI DOSA in small hotels are famous. Now available in few hotels.

    ReplyDelete
  8. Replies
    1. அப்போ எனக்கு ரெண்டு இட்லி, கொஞ்சம் கெட்டி சட்னி வேணும் !

      Delete
  9. வணக்கம்
    இன்று18.02.2014 வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன், நீங்கள் தந்த தகவலால் எனது தளம் அறிமுகமானது கண்டேன். வருகைக்கு நன்றி !

      Delete
  10. வலைச்சரம் மூலம் வந்தேன்..
    கோபாலன் மால் போய் இட்லி சாப்டுட வேண்டியதுதான்...திப்பசந்திராவில் மதுரை மல்லிகே இட்லி ஷாப் (திப்பசந்திரா மார்க்கெட் எதிர் சந்தில்) போயிருக்கீங்களா? அங்கு தோசை நல்லா இருந்துச்சு.. :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல தகவல், இந்த வாரம் சென்று விடுகிறேன். வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete