Friday, December 27, 2013

திரும்பி பார்க்கிறேன்.... கேள்விகளுடன் !

கடல்பயணங்கள்..... இந்த தளம் ஆரம்பித்ததில் இருந்து, நிறைய புதிய  நண்பர்கள் கிடைத்து உள்ளனர். உள்ளூர் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து கூட நண்பர்கள் கிடைத்துள்ளனர். இப்படி அவர்களுடன் எல்லாம் உரையாடும்போது நிறைய சுவையான கேள்விகள் கேட்பார்கள், அதற்க்கு நான் பதில் அளித்துள்ளேன். அதை இந்த வருட முடிவில் தொகுத்துள்ளேன், இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருக்கலாம்.... அதற்க்கான பதிலை இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.


அது எப்படி "ஊர் "ஸ்பெஷல்"பகுதியில் எல்லா இடங்களுக்கும் சென்று போட்டோ எடுத்து விஷயம் தெரிந்து கொள்கிறீர்கள் ?

நல்ல கேட்டீங்க போங்க..... ஒவ்வொரு ஊர் ஸ்பெஷல் பகுதியும் ஒரு தனி கதை. இந்த பகுதி ஆரம்பிக்கும்போது நான் நினைத்தது என்பது அந்த ஊருக்கு சென்று அதன் முன் ஒரு போட்டோ எடுத்து எனக்கு தெரிந்த செய்தியை பகிரலாம் என்றுதான். ஆனால், எனது பதிவுகளை கவனித்து பார்த்தால், நான் எப்போதுமே ஒரு ஸ்டெப் அதிகமாக மெனகெடுவென். இப்படி நான் முதலில் சென்ற மணப்பாறை முறுக்கில், நான் முறுக்கு பாக்கெட் வாங்கிவிட்டு அந்த கடையில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டேன், பின்னர் கடைகாரரிடம் இங்கே எங்கு முறுக்கு சுடுகிறார்கள் என்று கேட்டேன். அவர் ஒரு இடத்தை சொன்னவுடன், அங்கு சென்று பார்த்தவுடன் நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த ஆர்வம் தொற்றிக்கொள்ள ஒரு மேப் எடுத்து குறித்து வைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போது எல்லாம் சென்று வந்து எழுதுகிறேன்.


எப்படி அந்த பயணம் ஆரம்பிக்கும் ?

இந்த பயணங்களில் அதிகம் எந்த திட்டம் இல்லாமல் ஆரம்பிக்கும் என்பதுதான் உண்மை. எந்த இடத்திலும் எனக்கு ஆள் தெரியாது..... உதாரணமாக ஒரு நாள் நான் திண்டுக்கல்லில் இருந்தபோது, நல்ல இஞ்சி, ஏலக்காய் போட்ட டீ வேண்டும் என்று என் தம்பியிடம் கேட்டேன், அவன் செம்பட்டி அருகே ஒரு டீ கடையில் நல்ல ஏலக்காய் டீ கிடைக்கிறது என்று கூட்டி சென்றான். அன்று பார்த்து கடை லீவு, அடுத்து என்ன செய்வது என்று நினைத்தபோது வத்தலகுண்டுவில் ஒரு இடம் இருக்கிறது என்றான், அங்கு நெருங்கும்போது தேனி, போடி என்று மைல் கல் கண்ணில் பட்டது. காரில் சென்றதால் இன்னும் சிறிது தூரம்தானே, போடி வேறு ஏலக்காய்க்கு பேமஸ், அங்கே சென்று ஒரு டீ சாப்பிடலாம் என்று விளையாட்டுத்தனமாக யோசித்தோம். போடி சென்று நாங்கள் ஏலக்காய் செடி பார்க்க வேண்டும் என்று கேட்க, அவர்கள் அங்கிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த போடி மெட்டுவுக்கு செல்ல வேண்டும் என்றனர். இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது, இன்னும் சிறிது தூரம்தானே என்று அங்கும் செல்ல, அவர்களோ கேரளாவில்தான் உள்ளது, செக் போஸ்ட் தாண்டி போங்கள் என்றனர். நாங்கள் கேரளாவினில் நுழைந்து ஏலக்காய் செடி பார்த்து முடித்து திரும்பும்போது ஒருவர் இந்த ஏலக்காய் காய வைக்கும் இடம் இன்னும் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது என்றவுடன் அங்கிருந்து பூப்பாறை என்ற இடத்திற்கு சென்று முழுமையான ஏலக்காய் செய்முறையை அங்கே இங்கே கேட்டு ஒரு ஆளை பிடித்து பார்த்தோம். அப்போது எனது மனைவியிடம் இருந்து போன் வந்தது........

"ஹலோ, எங்க இருக்கீங்க, டீ சாப்பிட இவ்வளவு நேரமா ?"

"ஒரு நல்ல ஏலக்காய் டீ சாப்பிட கொஞ்சம் தூரமா வந்துட்டோம், இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவேன்"

"கொஞ்ச தூரம்னா...."

"இங்கதான்....கேரளா பக்கத்தில் பூப்பாரைன்னு ஒரு இடம், போடியில் கிடைக்கிற சிறந்த ஏலக்காய் டீக்கு இங்க இருந்துதான் ஏலக்காய் சப்ளை..."

"(பெருமூச்சு)..... சரி சரி வீட்டுக்கு வாங்க"

இப்படிதான் எல்லா பயணமும் ஆரம்பிக்கிறது, முடியும்போது சில சமயம் காயங்களுடன் முடியும் !!


இப்படி செல்லும்போது ஏற்பட்ட சுவாரசியமான அனுபவம் சொல்லுங்களேன் ?

நிறைய நிறைய நிறைய சுவாரசியமான அனுபவங்கள் கிடைக்கும் ! இந்த பயணத்தில் இருக்கும் த்ரில் என்பதே பாதை எப்படி இருக்கும் என்பது தெரியாது, அங்கு எங்கு போய் விஷயம் சேகரிக்க வேண்டும் என்பது தெரியாது, என்ன விஷயம் என்பதும் தெரியாது (ஊத்துக்குளி வெண்ணை பற்றி என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று எப்படி தெரியும் ?!), என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதும் தெரியாது, இப்படி நிறைய தெரியாதுக்கள்..... ஆனால் அங்கு சென்றவுடன் நிறைய மனிதர்கள் பழக்கம் ஆகினர், உலகில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. சுவாரசியமான அனுபவம் ஒன்று சொல்ல வேண்டும் என்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பற்றி சொல்லலாம்....... அங்கு சென்று இருந்தபோது எங்கு சென்று கேட்டும் இந்த பால்கோவா செய்முறையை மட்டும் பார்க்க முடியவில்லை, தொழில் ரகசியம் என்றனர். நாங்கள் நான்கு பேர் சென்று இருந்தோம், நன்றாக இன் செய்த ஷர்ட், பேன்ட் என்று இருந்தோம். எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஒருவரை கேட்டபோது அவர் ஒரு தெருவினை சொல்லி அது பால்கோவா கிண்டும் இடத்தின் பின் பக்கம், பொதுவாக கதவு வெப்பம் தணிக்கவென்று திறந்துதான் இருக்கும் என்றார். நாங்களும் அந்த தெருவுக்கு சென்று திறந்து இருந்த அந்த கதவினில் சட்டென்று நுழைந்து நாங்கள் பால்கோவா செய்வதை பார்க்க வேண்டும் என்றோம். அவர்கள் பதில் சொல்வதற்குள் ஆள் ஆளுக்கு பிரிந்து நோண்ட ஆரம்பித்தோம், நான் காமெராவில் படம் எடுக்க ஆரம்பித்தேன். இதை எல்லாம் கவனித அவர்கள் நாங்கள் அரசு ஊழியர்கள் என்று நினைத்து ரைடு என்று நினைத்து முதலாளிக்கு தகவல் அனுப்பிவிட்டனர். அவர்கள் வந்து எங்களை விசாரிக்க நாங்கள் அரசு ஊழியர்கள் இல்லை என்று தெரிந்ததும் சுற்றி நின்று கேள்வி மேல் கேள்வி கேட்க்க ஆரம்பித்தனர். என்னுடன் இருந்த எல்லோரும் இன்று அவ்வளவுதான் என்று இருக்க.... நான் மட்டும் அந்த முதலாளியுடன் சகஜமாக பேசி கொண்டே இருந்தேன், ஒரு கட்டத்தில் அவர் நான் பேசிய தொனியையும், விதத்தையும் கண்டு சிரிக்க ஆரம்பித்தார். பின்னர் சேர் எடுத்து போட்டு எங்களை உட்கார வைத்து, சூடாக பால்கோவா கொடுத்து நிறைய நேரம் பேசி கொண்டு இருந்தோம் !!


இந்த ஊர் ஸ்பெஷல் பகுதி எழுதுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது, எதிர்காலத்தில் புக் எதுவும் போடுவதாக ஐடியா எதுவும் இருக்குதா என்ன ?

இந்த ஊர் ஸ்பெஷல் பகுதி எழுத நான் செல்லும் ஊர்கள், சந்திக்கும் மனிதர்கள், கிடைக்கும் தகவல்களை வைத்து இந்த உலகம் பெரிது என்பதும், நிறைய தொழில்கள் இருக்கிறது எந்த தொழிலும் மட்டம் இல்லை என்பதும், சம்பாதிக்க நாம் படித்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், வேர்வை சிந்தினால்தான் சம்பாதிக்க முடியும் என்ற தவறான கருத்து இருப்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த பதிவுகளை படிப்பவர்கள் என்பது சுமார் 300 பேர் மட்டுமே இருப்பார்கள், ஆனால் எழுதுவது என்பது அறிந்து கொள்ளவே அன்றி பாராட்டுக்காக அல்ல. உதாரணமாக சொல்வதென்றால்..... நான் எனது தம்பி ஆனந்த் உடன் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு சென்று வந்தேன். திரும்பவும் ஒரு முறை ஈரோடு செல்லும் வாய்ப்பு வந்தது. இந்த முறை மஞ்சள் சந்தைக்கு அதிகாலையிலேயே சென்றேன், அங்கு ஒரு சிலருடன் நட்பு ஏற்படுத்தி கொண்டு பேசி கொண்டு இருந்தபோது, ஒரு அழுக்கு மஞ்சள் பையுடன், கொஞ்சம் கசங்கிய மங்கிய வெள்ளை உடையுடன் சென்ற ஒருவரை என்னை கவனிக்க சொன்னார்கள். அவர் ஒவ்வொரு மஞ்சள் மாதிரியையும் கவனித்து, சிலவற்றை முகர்ந்து பார்த்து என்று இருந்தார். ஒரு மஞ்சளை முகர்ந்து பார்த்து, ஏலம் எடுத்தார். அப்போது பக்கத்தில் இருந்தவர் என்னிடம்....... இந்த மஞ்சளை ஏலத்தில் எடுத்து முன் பணம் செலுத்தி விட்டார், முழு பணமும் இன்னும் பத்து நாள் கழித்து கொடுத்தால் போதும். தினமும் இவர் இனி பார்த்துக்கொண்டே இருப்பார், என்று எல்லா மஞ்சளுமே தரம் குறைந்ததாக இருக்கிறதோ, அப்போது அவர் இவரின் மஞ்சளை ஏலத்திற்கு வைப்பார். அன்று அவரின் மஞ்சள் மட்டுமே அருமையான தரத்துடன் இருப்பதால் விலை அதிகம் போகும், ஒரு மூட்டைக்கு சுமார் 100 ரூபாய் வரை லாபம் வரும். இப்படி ஒரே நாளில் அவர் லட்சக்கணக்கில் சம்பாதிப்பார், அவரின் அனுபவம் என்பது மஞ்சளை முகர்ந்து பார்த்தே தரம் பார்ப்பதில் இருக்கிறது என்ற போது என்னை நினைத்து பார்த்தேன் !! எதிர்காலத்தில் இதை புக் போன்று போட முடியுமா என்று தெரியவில்லை...... ஆனால் நான் இதை எழுதுவது கண்டிப்பாக புக் போடுவதற்கு இல்லை !


பதிவுலகில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எழுதி வருகிறீர்கள், அதில் கிடைத்த சந்தோசம் என்ன ?

சந்தோசம் என்று சொன்னால் அது நிறைய இருக்கிறது...... ஆனாலும் சில விஷயங்கள் என்னால் மறக்க முடியாதவை, அவர்களுக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும். பதிவுலகில் முதலில் நான் எழுதியபோது என்னையும் சேர்த்து முதல் மூன்று மாதத்தில் எனது பதிவை படித்தவர்கள் தினமும் பத்து பேர் மட்டுமே ! ஆனால், எனக்கு ஒரு கனவும், நம்பிக்கையும் இருந்தது....... ஒரு நாள் இதை அதிகம் பேர் படிப்பார்கள் என்று, ஆனாலும் நானும் மனிதன்தானே, ஒரு சில நாட்களில் யாருக்காக இதை எழுதுகிறேன் என்று தோன்றும், விட்டு விடலாம் என்றும் தோன்றும்..... அப்போது தொடர்ந்து எனது பதிவை படித்து பாராட்டிய நண்பர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும், முக்கியமாக திண்டுக்கல் தனபாலன் மற்றும் ரமணி அவர்களை சொல்ல வேண்டும். இவர்கள் இல்லையென்றால் நிறைய புதிய பதிவர்கள் உருவாகாமல் போய் விடுவர்.

இன்னும் சந்தோசங்களை சொல்ல வேண்டும் என்றால்...... கோவை நேரம் ஜீவா, திடம் கொண்டு போராடு ஸ்ரீனிவாசன், சதீஷ் சங்கவி, வீடு திரும்பல் மோகன், ஜோதிஜி திருப்பூர், கோவை ஆவி, ராஜி, அமுதா கிருஷ்ணா, ராஜேஷ், உலக சினிமா ரசிகன், நிகழ்காலம் எழில், மாதேவி, கரந்தை ஜெயக்குமார், ஜெயதேவ் தாஸ், ஸ்கூல் பையன், ஸ்டே ஸ்மைல் கிருஷ்ணா, எனது தம்பி ஆனந்த், கலா குமரன், துளசி கோபால், தமிழ்வாசி பிரகாஷ், ஆரூர் மூனா செந்தில் என்று நிறைய பேர் (யாருடைய பெயராவது விட்டு இருந்தால், அது என் தவறே மன்னிக்கவும் !) நண்பர்களாக கிடைத்தனர், அது மிக பெரிய சந்தோசம். அவர்களின் ஒவ்வொரு பதிவினையும் வாசித்து மகிழ்பவன் நான்...... இன்னும் இன்னும் இது போன்று நிறைய புது நண்பர்களை 2014ம் ஆண்டு பெற வேண்டும் என்றும் பிராத்திக்கிறேன்.

சந்தோசம் சரி, வருத்தம் என்று ஏதாவது இருக்கிறதா ?

ஒரு சில வருத்தங்கள் இருக்கின்றன...... சில நேரங்களில் நண்பர்கள் என்பது பதிவுகளில் கருத்துக்களை போடுவது மட்டும் என்று சுருங்கி விட்டதோ என்று தோன்றும். ஒருவரது பதிவுகளை நாம் படிப்பது என்பது அவர்கள் நமது அலைவரிசையில் இருந்தால் மட்டுமே சாத்தியம், இப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் இருந்தும் இதுவரை யாரும் எனக்கு போன் செய்தோ அல்லது எங்கேயாவது சென்றோ பொழுது கழிக்க முடியவில்லை. நான் பதிவுலகில் இருந்து விலகினாலும் இந்த நண்பர்கள் இருப்பார்களா என்ற கேள்வி எப்போதும் எனது மனதில் எழும். ஒரு நல்ல பதிவு படிக்கும்போது நான் போன் செய்து அதை பகிர்ந்து கொள்வேன், ஆனால் இதுவரை எனது பதிவுகளில் அப்படி எதுவும் இல்லை போலும்....!!


பதிவுலகில் எரிச்சல் ஏற்படுத்தும் செயல் என்பது என்ன ?

எல்லோருக்கும் இருக்கும் ஒன்றுதான்....... கஷ்டப்பட்டு நான் தேடி, அலைந்து போடும் ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு வெகு சிலரே வந்து படிப்பார்கள், ஆனால் ஒரு மொக்கை பதிவை வேண்டும் என்றே போட்டால் அன்று மட்டும் ஹிட் ஜாஸ்தியாக இருக்கும், அப்போது நான் அடையும் எரிச்சலுக்கு அளவே இல்லை !! :-)

2014ம் பதிவுலகில் கனவு அல்லது நீங்கள் எதிர்ப்பார்ப்பது என்பது என்ன ?

அது மிகவும் நீளமானது....... ஆனால் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது !
  • கோவை நேரம் ஜீவாவுடன் பகார்டியுடன் மிக்ஸ் செய்து, பிரியாணி சாப்பிட வேண்டும்,
  • திடம் கொண்டு போராடு சீனுவுடன் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும்,
  • நிகழ்காலம் எழில் மேடம் உடன் அவர்களின் ewave அமைப்பில் ஒரு நாள் பங்கு பெற வேண்டும்,
  • திண்டுக்கல் தனபாலன் சார் உடன் உட்கார்ந்து அவரை விட அதிகமாக பின்னூட்டம் இட வேண்டும்,
  • ரமணி சார் உடன் உட்கார்ந்து அவர் கவிதை செய்வதை ரசிக்க வேண்டும்,
  • வீடு திரும்பல் மோகன்ஜி உடன் சேர்ந்து அவர் சாதாரண மனிதர்களுடன் பேட்டி எடுப்பதை ரசிக்க வேண்டும்,
  • சதீஷ் சங்கவி உடன் அவரது நண்பர்களுடனும் ஒரு அரட்டை கச்சேரி மேற்கொள்ள வேண்டும்,
  • ராஜேஷ் உடன் உட்கார்ந்து ஒரு சில ஜோதிட சந்தேகத்தை தீர்க்க வேண்டும்,
  • கோவை ஆவியுடன் சேர்ந்து பைக் ஓட்ட வேண்டும்,
  • காணாமல் போன கனவுகள் ராஜி அவர்கள் செய்த ஒரு புது டிஷ் ட்ரை செய்ய வேண்டும்,
  • ஆரூர் மூனா செந்தில் அவர்களுடன் ஒரு படம் முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும்,
  • தமிழ் வாசி பிரகாஷ் உடன் ஒரு மதுரையை சுற்றி பார்க்க வேண்டும்
  • ஜோதிஜி அவர்களுடன் அவர் எழுதிய டாலர் நகரம் பற்றி விவாதிக்க வேண்டும் 
  • உலக சினிமா ரசிகன் அவர்களுடன் ஒரு உலக படம் பார்க்க வேண்டும் 

..... இப்படி நிறைய நிறைய ஆசைகள், பார்ப்போம் முடிகிறதா என்று !
இந்த ஆண்டு பதிவர் திருவிழா சென்றது, அங்கு நிறைய பதிவர்களை பார்த்தது, புதிய நண்பர்கள் கிடைத்தது என்று சந்தோசமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல், பதிவுகளும் நிறைய படித்தேன். சிலரது பதிவை படித்து நிறைய சந்தோசமும் ஆச்சர்யமும் பட்டிருக்கிறேன். இனி வரும் ஆண்டும் நல்ல ஆண்டாக அமைய வேண்டும், இன்னும் நிறைய நண்பர்களையும், புதிய வாய்ப்புகளையும் அமைய பெற வேண்டும். உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

53 comments:

  1. சுவாரசியமான அனுபவங்களின் தொகுப்பு ...பாராட்டுக்கள்..
    கனவுகள் நனவாக இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...... உங்களுக்கும், உங்களது குடும்பத்தினர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல !

      Delete
  2. உங்கள் பயணம் மற்றும் எழுத்து வழியாக பல நாட்டு மக்கள் மற்றும் அவர்களின் பழக்க வழக்கம் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. தொடரட்டும் உங்கள் பயணம் மற்றும் எழுத்து ! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 !

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜோவி........ உங்களது கருத்து என்னை உற்சாகபடுத்துகிறது. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

      Delete
  3. உங்கள் எழுத்துக்கு நான் ரசிகன். ஒவ்வொரு பதிவும் தகவல் சுரங்கம். தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... இந்த வார்த்தைகள் உங்களது மணத்தில் இருந்து வந்தது புரிந்தது.... வேறென்ன வேண்டும் எனக்கு ! உங்களுக்காகவே இந்த புத்தாண்டில் இருந்து இன்னும் நிறைய வருகிறது, காத்திருங்கள்...... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

      Delete
  4. வணக்கம் நன்றாக எழுதியுள்ளீர்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜேஷ்-ஜி, தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ! தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

      Delete
  5. /// ஆனால் இதுவரை எனது பதிவுகளில் அப்படி எதுவும் இல்லை போலும்....!! ///

    உங்களின் ஒவ்வொரு பதிவிற்குமே போன் செய்து வாழ்த்துக்கள் பல சொல்ல வேண்டும்...

    2014ம் பதிவுலக கனவு நிறைவேற வாழ்த்துக்கள்... (நான் ரெடி... நீங்க ரெடியா...?)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்..... நீங்கள் இடும் பின்னூட்டமே எனக்கு அவ்வளவு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறது.

      கண்டிப்பாக, இதற்காகவே ஒரு நாள் உங்களை சந்திக்க விரைவில் வருகிறேன்.... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  6. அன்பிற்கு நன்றி.

    பயணங்களில் நீங்கள் கற்று கொண்டது பற்றி எழுதியதை ரசித்தேன்

    துரதிர்ஷ்டவசமாக ப்ளாகில் மொய் வைத்து மொய் வாங்கும் பழக்கம் சற்று அதிகம். நீங்கள் அதிகம் மொய் வைக்காததால் உங்களுக்கு அதிகம் பேர் மொய் வைப்பதில்லை. :)

    கிடைக்கும் காமனட்கள் மற்றும் தொலை பேசி வழி பாராட்டுகளை மட்டும் வைத்து ஒரு பதிவை எடை போடாதீர்கள் ; இதே பதிவில் பந்து எழுதியுள்ளதை பாருங்கள். நமது ஒத்த அலைவரிசையில் இருந்து கொண்டு - சைலண்ட் ஆக நம்மை படிப்போர் ஏராளம் !

    சக பதிவர்கள் நமது பதிவை பார்க்கும் கோணமும், பதிவரல்லாத நண்பர்கள் நமது பதிவுகளை வாசிக்கும் கோணமும் பெரிதும் வேறுபடும். சுருக்கமாக சொல்லணும்னா ஒரு பதிவர் உங்களை " இவரும் நம்மை மாதிரி இன்னொரு பதிவர் " என்று மட்டும் தான் பார்ப்பார். ஆனால் வாசிப்பாளர் உங்களை தனது மனதில் இன்னும் சற்று உயரத்தில் வைத்திருப்பார்.

    நமது சந்தோஷத்துக்காக மட்டும் எழுதுவோம். மற்றவை நம் கையில் இல்லை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மோகன்-ஜி, நீங்கள் சொன்ன அத்தனை வார்த்தைகளும் உண்மை. உங்களது கருத்து எனக்கு நிறைய விஷயங்களை புரிய வைக்கிறது. முடிவில் நீங்கள் சொன்னது போல நமது சந்தொசதிர்க்காக மட்டுமே எழுதுவோம் என்று இருக்கிறேன்.

      பதிவுலகில் நான் புதியவன் என்பதால் எப்படி யோசிக்கிறேன் போலும், ஆனாலும் உங்களது வார்த்தைகள் தெளிய வைத்தன.

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

      Delete
  7. திரும்பிப் பார்க்கிறேன் பதிவுக்கேத்த மாதிரி முதல் படம் சூப்பரா அமைஞ்சுட்டுது!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சகோதரி...... !

      Delete
  8. காணாமல் போன கனவுகள் ராஜி அவர்கள் செய்த ஒரு புது டிஷ் ட்ரை செய்ய வேண்டும்
    >>
    பாவம் சுரேஷ் நீங்க!! உங்களுக்கென்ன தலையெழுத்தா!? நான் சமைச்சதை சாப்பிட. நீங்க வரும்போது நல்ல ஹோட்டல்ல இருந்து சாப்பாடு வரவச்சுடலாம்!

    ReplyDelete
    Replies
    1. அட நீங்களே இப்படி என்னைய பயமுறுத்தினா எப்படி..... உங்க சமையல் போட்டோ எல்லாம் பார்த்து எனக்கு நாக்கு ஊரும் !!

      Delete
  9. ஏலக்காய் டீ சாப்பிட கேரளாவுக்கே போனீங்களா!? அப்ப சுவத்து மேல உக்கார ஆசை வந்தா சீனப்பெருஞ்சுவருக்கே போவீங்களோ!?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா..... சில சமயம் பயணம் என்பது பிளான் செய்து போவதில்லை என்பதை சொல்ல வந்தேன். குட்டிசுவருக்கு எதுக்கு சீனசுவர் !! நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  10. உங்களது பதிவுகள் அருமை. அனுபவித்து எழுதி வருகிறீர்கள்!
    revmuthal.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.... உங்களது பாராட்டுக்கள் உண்மையாகவே எனக்கு உற்சாகம் அளிக்கிறது !

      Delete
  11. நான் படிப்பேன் . வேலையில் வெளியில் இருந்தால் தமிழில் பின்னூட்டம் போட சில சமயம் முடிவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அருணா..... இந்த பகுதியில் எனது ஆதங்கத்தை எழுதி வைத்தேன், ஏனென்றால் சில சமயம் இந்த பகுதிக்கு மெனகேடுவது மிகவும் அதிகம் ! ஆனாலும் உங்களது இன்றைய பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது !

      Delete
  12. நீளமான பதிவானாலும் தொய்வில்லாமல் இருந்தது...காரணம் உங்கள் உண்மையான தேடல் என்பதால் தான்... உங்களின் பழைய பதிவுகளைப் படித்ததில்லை. உங்கள் மெனக்கெடல்களைப் பார்க்கும் போது கண்டிப்பா படிக்கணும்.... நல்ல விஷயங்கள் என்றாவது கண்டிப்பாக கவனிக்கப்படும்.கவலை வேண்டாம்...
    ## இப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் இருந்தும் இதுவரை யாரும் எனக்கு போன் செய்தோ அல்லது எங்கேயாவது சென்றோ பொழுது கழிக்க முடியவில்லை. நான் பதிவுலகில் இருந்து விலகினாலும் இந்த நண்பர்கள் இருப்பார்களா என்ற கேள்வி எப்போதும் எனது மனதில் எழும்##..
    நீங்க முதலில் ஆரம்பமாய் இருக்கலாமே போன் செய்ய...
    நண்பர்கள் மனதில் இருத்தி விட்டால் விலகலுக்கு வாய்ப்பே இல்லை...

    நேரமில்லை, விலகல் இருக்குமோ என்று நீங்கள் வ்ருந்தினாலும் உங்களின் எதிர்பார்ப்புகள் உங்களை நண்பர்களுக்கு உணர்த்திவிடும்... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உணமைதான் சகோதரி..... நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்திருக்கும். நம்பிக்கை தரும் வார்த்தைகள் தந்ததற்கு நன்றி.

      இனிமேல் நண்பர்களுடன் பேசி விடுகிறேன்.... உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

      Delete
  13. உங்களின் கடல் பயணங்கள் ப்ளாக் தொடர்ந்து வருபவன்!! திரு மோகன் சொல்வது சரியே!! உங்களின் ஊர் ஸ்பெஷல் பகுதி மிகவும் பிடித்தமானது உங்களின் நேரம் மற்றும் பொருளாதாரம் செலவழித்து எழுதும் ஒவெரு பதிவுமே மிக முக்கியமானது ஊர் ஸ்பெஷல் கண்ண்டிப்பாக புத்தக வடிவில் வரூம் என்ற நம்பிக்கை உள்ளது!! புத்தாண்டு வாழ்த்துக்கள் !! நேரமின்மை காரணமாக தான் பின்னூட்டம் இடுவதில்லை இருக்கும் குறைந்த நேர அவகாசத்தில் நிறைய வாசிக்க வேண்டியுள்ளது !! நன்றி

    ReplyDelete
    Replies
    1. என்ன தவம் செய்தனை சுரேகா-ஜி.......... பதிவர் திருவிழாவில் மொழியின் ஆளுமையுடன், கம்பீரமாக நீங்கள் தொகுத்து அளித்தது கண்கொள்ளா காட்சி. நீங்கள் எனது பதிவை வாசிப்பது எனக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சி அளிக்கிறது.

      உங்களது வார்த்தைகள் நம்பிக்கையும், உற்சாகமும் அளிக்கிறது. எனக்கு வார்த்தைகள் வரவில்லை...... ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறேன்.

      தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

      Delete
  14. கேட்க நினைத்த கேள்விகள்..அருமையான பதில்கள்.2014 புத்தாண்டு வாழ்த்துக்கள் Brother...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி... தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

      Delete
  15. எங்கள் எல்லோருடைய மனங்களில்
    இருந்த கேள்விகளை உங்கள் மனக்கேள்விகளாக்கி
    பதில் சொன்னவிதம் மிக மிக அருமை

    நீங்கள் வரும் ஆண்டுக்கென கொண்டுள்ள
    ஆசைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறிவிடும்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்..... வரும் ஆண்டில் உங்களோடு சில நிமிடங்களையாவது செலவழிக்க வேண்டும். எனது பதிவுகள் பற்றி உங்களிடம் ஒரு கவிதை வாங்க வேண்டும் !!

      உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  16. Replies
    1. தமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி !

      Delete
  17. வணக்கம் நண்பா... உங்களது ஊர் ஸ்பெஷல் எனக்கும் மிகவும் பிடித்தமானது... நல்ல பதிவுகள் இன்றில்லை என்றாலும் நிச்சயம் ஒருநாள் கவனிக்கப்படும். உங்களுடைய பல பதிவுகளுக்கு நான் பின்னூட்டமும், தமிழ்மண வாக்கும் இடுவதுண்டு. இருந்தாலும் நேரமின்மையால் ஒரு சில பதிவுகள் படிக்கப்படாமலும் சில பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் இடவும் முடியாமலும் போவதும் உண்டு. எனினும் எப்போதும் என் ஆதரவு உண்டு. தேடல்கள் தொடரட்டும்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..... உங்களை ஒரு நாள் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்து வருகிறது. நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் மகிழ்ச்சியை அளித்தது, இந்த பதிவுகளில் உங்களை போன்ற நண்பர்கள் கொடுக்கும் உற்சாகம்தான் இது போன்ற பதிவுகளை எழுத வைக்கிறது. நன்றி.... உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  18. உங்களின் ஒவ்வொரு பதிவையும் படிக்கும் போதும் எனக்குள் தோன்றுவது, எப்படி இவரால் இந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் நுழைந்து தகவல் சேகரிக்க முடிகிறது, படமெடுக்க முடிகிறது என்பது தான். ஒவ்வொரு இடமும் முன் பின் தெரியாது தெரிந்த நண்பர்கள் கிடையாது ஆனாலும் மேற்சொன்னதை செய்ய முடிகிறது என்பது தான் வியப்பாக இருக்கிறது. Hats off to you sir !!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயதேவ் சார்....... உங்களின் முகம் பார்த்ததில்லை என்றாலும் எப்போதும் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன். ஆம், நீங்கள் சொல்வது போல பல சிரமங்களுக்கு இடையில்தான் அந்த பதிவுகளை எழுதுகிறேன், உங்களது இந்த வார்த்தைகள்தான் என்னை இப்படி உற்சாகபடுத்தி எழுத வைக்கிறது.

      உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

      Delete
  19. சுவாரசியமான அனுபவங்களின் தொகுப்பு ..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயகுமார்-ஜி, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !
      உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

      Delete
  20. Replies
    1. மிக்க நன்றி ராம்... தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

      Delete
  21. arpudham nanpa balakumaran ippdidhdhaan eludhuvaar eludhuvadarkaka menakkeduvaar adhu poal neengal
    kandippai ungalai pin dhodarebaen


    ReplyDelete
    Replies
    1. நன்றி சங்கர்...... உங்களது வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது. பாலகுமாரன் எனது ஆதர்ச எழுத்தாளர், அவரை நீங்கள் குறிப்பிட்டது கண்டு மகிழ்ச்சி. தொடர்வதற்கு நன்றி.... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

      Delete
  22. இந்த மாதிரி எழுத ஆள்கள் குறைவு
    நுட்பமாய் ரசித்து
    வாழும் ஆள்கள் குறைவு
    ஆனால் நான் அந்த மாதிரி ஆள் இல்லை

    என சட்டை தூக்கி கழட்டாமல் இருப்பதே
    பெரிதுதான்
    தொடருங்கள்
    உங்கள் பணி
    இறைவன் நீண்ட ஆயுளும்
    நல்ல உடல் நலமும் கொடுக்கட்டும்

    ReplyDelete
  23. அண்ணே.. I'm feeling Great .. உண்மைலே எனக்கு கண்ணு கலங்கிருச்சி .. ரொம்ப நன்றிண்ணே

    ReplyDelete
    Replies
    1. ஆனந்த்..... மிக்க நன்றி ! உனக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

      Delete
  24. அண்ணே பதிவுக்கு ஏத்தமாதிரி அந்த முதல் போட்டோ அருமை..!

    ReplyDelete
  25. அண்ணா.. வர புது வருசத்துல கண்டிப்பா உங்கள் அனைத்து ஆசைகலும் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ...

    இனிய புத்தாண்டு நல்வாழ்துகள் அண்ணா.

    Convey my spcial wishes to Gowtham

    ReplyDelete
  26. நல்லதொரு தொகுப்பு ரசனையான படங்கள் ......

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரேம்... எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! அடுத்த வருடத்தில் கண்டிப்பாக சந்திப்போம் !

      Delete
  27. அருமையான தொகுப்பை இவ்ளோ நாள் தவற விட்டுட்டேன்...

    உங்கள் எண்ணங்கள் ஈடேறும்.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அளித்தது பிரகாஷ்...... மதுரையில் சந்திக்க முடியவில்லை, ஆனால் மாதங்கள் இன்னும் இருக்கின்றதே, விரைவில் சந்திக்க ஆவல் !

      Delete
  28. Replies
    1. மிக்க நன்றி கிருஷ்ணா !

      Delete