Monday, December 2, 2013

அறுசுவை - சண்டே பிரஞ்ச் (Sunday Brunch)

கடந்த சில வாரங்களாக பதிவு  அளவுக்கு வேலை பளு, சிங்கப்பூரில் தூங்க கூட நேரம் இல்லாமல் ஓடி கொண்டிருந்தேன், நடுவே தீபாவளிக்கு என்று நான்கு நாட்கள் மட்டும்  இந்தியா வந்து சென்றேன். அவ்வப்போது சில வலைப்பூவை படித்தாலும் கமெண்ட் செய்ய இயலவில்லை, மீண்டும் நான் எழுத இன்று உட்கார்ந்தபோது ஏனோ புதிதாய் பிறந்ததாக உணர்வு..... இனி தினமும் இல்லாவிட்டாலும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது பதிவு எழுதி விட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன், பார்ப்போம் !
**********************************************************************************
ஞாயிறு வந்தாலே உடம்பினில் சோம்பல் ஒட்டிக்கொண்டு விடும், அன்று எழுந்ததில் இருந்து எல்லாமே லேட்தான் ! நான் மட்டும்தான் இப்படி இருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு இருந்தால் உலகமே இப்படிதான் இருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும்போது எல்லாம் ஞாயிறு வந்தாலே நேரடியாக மதிய உணவுதான், அதுவும் லிட்டில் இந்தியா சென்றால் கறி குழம்போடு கார சாரமாக உண்டு முடித்து மீண்டும் வந்து தூங்குவேன். ஒரு நாள் எனது அமெரிக்க நண்பர், சண்டே நாங்கள் பிரஞ்ச் செல்கிறோம் வருகிறாயா என்று கேட்டனர், நானும் ஏதோ நான் செல்லாத இடம் போலும் என்று வருகிறேன் என்றேன். ஞாயிற்று கிழமை மதியம் பன்னிரண்டு மணிக்கு தயாராக காத்திருந்தேன், காரில் வந்து என்னை நேரே ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு கூட்டி சென்றனர். பின்னர் அங்கு இருந்த ஒரு உணவகத்திற்கு சென்றோம், சரி நாம் எல்லோரும் சாப்பிட்டு விட்டு பின்னர் பிரஞ்ச் என்னும் இடத்திற்கு செல்வோம் போல என்று சும்மா இருந்தேன்........ சாப்பிட்டு முடித்து விட்டு, வெளியே காருக்கு சென்று உன்னை எங்கே ட்ராப் செய்ய வேண்டும் என்று என்னை கேட்க, நானோ "அப்போ நாம பிரஞ்ச் செல்லவில்லையா ?" என்று கேட்க்க அவர்களோ குழப்பத்துடன் இப்போதுதானே அங்கிருந்து வருகிறோம் என்று சொல்ல அப்போதுதான் புரிந்தது...... பின் தூங்கி பின் எழுபவர்களுக்கு பிரேக்பாஸ்ட் மற்றும் லஞ்ச் இரண்டையும் ஒன்றாக சாப்பிட அதன் இரண்டு வார்த்தைகளையும் சேர்த்ததுதான் பிரஞ்ச் என்பது (Breakfast + Lunch = Brunch ). அப்படி என்னதான் இருக்கும் பிரஞ்ச்ல்...... வாங்க பார்க்கலாம் !



பெங்களுருவில் இப்போது எல்லா இடத்திலும் இந்த பிரஞ்ச் தொந்தரவு தாங்க முடியலை. பொதுவாக ஞாயிறு என்றால் தோசை நாலு வகை சட்னி சாப்பிட்டு விட்டு மலை பாம்பு போல படுத்துக்கொண்டு சுகர் தூக்கலா ஒரு காபி என்று ஆர்டர் செய்யும்போது பறந்து வரும் பூரி கட்டைக்கு கூட உடம்பை அசைக்க முடியாமல் இருக்கும்போது வரும் சுகமே தனி...... ஆனால் இங்கு இப்போதெல்லாம் காலையில் சாப்பிடாமல் நேராக லஞ்ச் செல்கிறார்கள். இந்த பிரஞ்ச் என்பதில் ஏகப்பட்ட பதார்த்தங்கள் இருக்கிறது. பப்பெட் உணவு முறைக்கும், பிரஞ்ச் உணவிற்கும் வித்யாசம் என்பது வகை வகையான உணவில்தான் இருக்கிறது. அதுவும் நீங்கள் ஸ்டார் ஹோட்டல் சென்று விட்டால், ஏகப்பட்ட உணவு வகைகள் ! நான் சென்று இருந்த ஐந்து நட்சத்திர ஹோடேலில் முதலில் சாலட் வகை சாப்பிட வேண்டும் என்று சென்றால் சுமார் 25 வகை இருந்தது. ஒவ்வொன்றிலும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வந்து சாப்பிட்டு முடித்தவுடன் வயிறு புல் !


சாலட் வகைகள்..... !!


 

தக்காளி சட்னி, புதினா சட்னி எல்லாம் கேள்வி பட்டிருக்கேன்.... இங்க பாருங்க மக்களே என்ன அப்படின்னே தெரியாம இவ்வளவு சட்னி !



அடுத்து கடல் உணவு வகைகள்..... எல்லா கடல் உணவுக்கும் நாம் உப்பு, காரம் எல்லாம் தடவி பொறித்து எடுத்து அதில் கொஞ்சம் வெங்காயம், எலுமிச்சை பிழிந்து சாப்பிடுவோம். ஆனால், வெளிநாடுகளில் எல்லாம் அதை பச்சையாக தின்கிறார்கள். நமக்கு எல்லாம் கடல் உணவு வகைகள் என்பது மீன், மிஞ்சி போனால் நண்டு மற்றும் இறால் அவ்வளவுதான். இங்கெல்லாம் சிப்பி, லாப்ஸ்டர் என்று புது புது வகைகள் அதுவும் பச்சையாக..... செம டேஸ்ட்பா !


சிப்பிக்குள் இருந்து முத்து எடுப்பதை பார்த்திருக்கேன், இது என்னடா இது !


இதுவும் சாப்பிடதான்...... ஆக்டோபுஸ் !

 
 
 
 


அடுத்து உங்களுக்கு சீன, மலேசியா, தாய், ஜப்பான், கொரியா, வெஸ்ட், இந்தியா என்று பல வகை உணவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நான் சிறிது எடுத்து டேஸ்ட் செய்தேன். பொதுவாக இது போன்ற பிரஞ்ச் இருக்கும் இடங்களில் உணவு வகைகள் என்பது அதிகமாக இருக்கும். இந்தியாவிற்கும் வெளி நாடுகளில் நான் சாப்பிட்ட பிரஞ்ச்சிற்கும் உள்ள வித்யாசம் என்பது உணவு வகைகளில்தான். இந்தியாவில் பிரஞ்ச் என்று சொன்னாலும் இவ்வளவு வகை இருக்காது, ஆனால் வெளி நாடுகளில் எல்லாம் மிக அதிகமாக வகைகள் இருக்கிறது. ஒவ்வொரு உணவையும் பொறுமையாக டேஸ்ட் செய்து ஜென் நிலைக்கு செல்லலாம் நீங்கள் !

 
 
 

இதை சாப்பிட்ட பின்பு உங்களுக்கு வயிற்றில் இடம் இருக்காது, ஆனால் அடுத்தது என்ன என்று நீங்கள் செல்லும்போது லைவ் கவுன்ட்டர் என்று உங்களது மூக்கிற்கு முன் வாசனை பிடிக்க நீட்டுவார்கள் ! இந்த லைவ் கவுன்ட்டர் என்பதில் உங்களுக்கு தேவையான உணவை உடனேயே செய்து தருவார்கள், அதற்க்கு என்று ஸ்பெஷல் செப் உண்டு. நான் தாய்லாந்து வகை உணவுகளின் பிரியன், அதனால் டோம் யோம் சூப் செய்ய சொல்லி கேட்டு குடித்தேன். அதன் பின்னர் கொஞ்சம் ஸ்வீட் சாப்பிடலாம் என்று சென்றால் அது இருந்தது சுமார் நாற்பது வகை !

 
 
 
 
 
ஸ்வீட் வகைகளில் கேக் என்பது மட்டும் இல்லாமல், சில வகைகளில் கிக் ஏற்றும் விதமாக அல்கஹோல் ஊற்றியும் சில உண்டு. உதாரணமாக எனது பேவரிட் என்பது டக்கீலா உடன் தயிரை செய்வது.... செமையாக இருக்கும் ! சிறிது சிறிதாக எல்லாவற்றையும் நீங்கள் டேஸ்ட் செய்து முடித்தவுடன் அன்று அதற்க்கு அப்புறமும், அதற்க்கு அடுத்த நாளும் பசியே இருக்காது என்பது மட்டும் நிச்சயம். பெங்களுருவில் சில இடங்களில் மட்டும் பிரஞ்ச் என்பது அருமையாக இருக்கும்...... Marriot, Oberoi, Lalit Ashok ஆகிய இடங்கள் எனது பேவரிட் ! சாப்பிட்டு பாருங்கள்...... நீங்களே சொல்வீர்கள் பேஷ் பேஷ் என்று !

 
இப்படி குடும்பமாக சாப்பிட வருபவர்களிடத்தில், குழந்தைகளை மகிழ்விக்க என்றே சில கலைஞர்கள் உண்டு. பபூன், பொம்மை செய்பவர்கள், மேஜிக் என்று நிறைய உண்டு. சில நிமிடத்திலேயே பலூனில் பொம்மை செய்பவர்கள் எல்லாம் பார்த்து எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது. கீழே இருக்கும் பெண் ஒரு குழந்தைக்கு பொம்மை செய்து கொடுப்பதை பாருங்கள் !
 
 

பஞ்ச் லைன் :

சுவை - பிரஞ்ச் என்னும்போது, அதுவும் சரியான உணவகத்திற்கு சென்றால் நீங்கள் கட்டாயம் சுவை நன்றாக இருக்குமா என்றெல்லாம் கவலை கொள்ள தேவையில்லை. அருமையான சுவை என்பது நிச்சயம் !

பணம் - ஒரு ஆளுக்கு சுமார் ஆயிரத்தி ஐநூறில் இருந்து ஆரம்பிக்கிறது. சிங்கப்பூரில் நான் சாப்பிட்டது ஒரு ஆளுக்கு மட்டும் சுமார் ஆறாயிரம் !

அட்ரஸ் :

http://www.zomato.com/bangalore/restaurants?sunday-brunch=1&sort=rd
 

24 comments:

  1. ஆறாயிரத்துல ஒரு வேளை சாப்பாடா!? நாம ஒரு மாசத்துக்கு வாங்கும் மளிகைப் பொருட்களே அம்புட்டு வராதே!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா..... உண்மைதான் சகோதரி ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  2. ஆக்டோபஸையும் விடலியா!? விட்டா ஏர் பஸ், வல்வோ பஸ்ஸையும் சாப்பிடுவாங்க போல!!

    ReplyDelete
    Replies
    1. அட இங்கே எல்லாம் கடல் உணவுகள் என்றால் மீன் மட்டும்தான், ஆனால் அங்கு அதை எல்லாம் விட சுவையாக நிறைய இருக்கிறது..... உங்களுக்கு ஒரு ஆக்டோபுஸ் பார்சல் சொல்லட்டுமா !

      Delete
  3. வணக்கம் சார் நலமா? பதிவு நன்றாக உள்ளது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.... உங்களது உற்சாகம் மிகுந்த வார்த்தைகள் எனது வேலை பளுவுக்கு இடையில் இதம் தருகிறது !

      Delete
  4. ஆகா...!

    சுவை + ரசிக்க வைக்கும் பயணம் ஆரம்பம்...

    நீங்களும் :


    கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  5. ஆக்டோபஸ் எப்படி சாப்பிடுறது.. பக்கவே பயமா இருக்கே..

    ReplyDelete
    Replies
    1. உயிரோடு இருக்கும் ஆக்டோபஸ் கண்டுதான் பயப்படனும், செத்து போனதற்கு பின்னே என்ன பயம் !

      Delete
  6. 60 ரூபாய்க்கு சாப்பிடர ஆசாமி நான்!
    6000 ரூபாய்க்கு சாப்பிடர சுரேசை பாத்தே, எனக்கு வயிறு திருப்தியாயிருச்சு.

    ReplyDelete
    Replies
    1. அட சார்..... ௬௦ ரூபாய்க்கு சாப்பிட்டாலும் அது உங்க சொந்த காசு, இது கம்பெனி காசு சார் !

      Delete
  7. Welcome Back Suresh ! Photo வில் தூங்கி எந்தரித்து Powder போட்ட முகம் அப்படியே தெரியுதே

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா..... தெரிஞ்சிடுச்சா எனது அழகின் ரகசியம் :-) நன்றி பாபு..... !!

      Delete
  8. super....பார்த்தாலே வயிறு ஃபுல்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்...... அப்போ சாப்பிட்டால் என்ன ஆகும் ! :-)

      Delete
  9. // சுகர் தூக்கலா ஒரு காபி // இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கே :-)))

    // ஒவ்வொரு உணவையும் பொறுமையாக டேஸ்ட் செய்து ஜென் நிலைக்கு செல்லலாம் நீங்கள் !
    // அட அட அட என்னவொரு நிலை ஹா ஹா ஹா

    என்னது ஆறாயிரமா... ஆமா சிங்கபூர் எங்க இருக்கு இந்த மன்னார்குடி பக்கம் மயிலாடுதுறை பக்கம் இருக்கு அப்டித்தான :-))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா..... சீனு சரியா சொன்னீங்க, சிங்கப்பூர் அங்கதான் இருக்கு ! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  10. ஆக்டோபுஸ் மட்டும் பாக்கிறதுக்கு ஒரு மாதிரியா இருக்கு... மற்றபடி என் பட்ஜெட்டுக்கு ஓகே.... நான் பெங்களூருக்கு வந்தா கூட்டிட்டுப் போவீங்க தானே?

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக..... நீங்கள் பெங்களுரு வந்தால் நாம் செல்வோம். நன்றி !

      Delete
  11. Replies
    1. ஆமாம் சார், உண்மைதான் ஆனால் கம்பெனி காசு கொடுத்து சாப்பிட சொல்லும்போது...... தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்க்க முடியாது இல்லையா !

      Delete
  12. Replies
    1. அதெல்லாம் தானா வருது, தடுக்க முடியாது !

      Delete