Tuesday, January 21, 2014

ஊர் ஸ்பெஷல் - போடி ஏலக்காய் (பகுதி - 1)

ஏலக்காய்...... இந்த பெயரை சொல்லும்போதே அந்த மணம் நாசியை துளைக்கும் ! இந்த முறை மதுரை சென்று இருந்தபோது, ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு எங்கு செல்லலாம் என்று யோசித்து கொண்டு இருந்தேன், அப்போது எனது தம்பி ஒரு ஏலக்காய் டீ சாப்பிட்டா இந்த குளுருக்கு நல்லா இருக்கும் என்று சொன்னவுடன் யாபகம் வந்தது என்னவோ போடிநாயக்கனூர் ! சரி, அப்போ பிரெஷ் ஏலக்காய் டீ சாப்பிட்டு விட்டு வரலாம் என்று விளையாட்டாய் கிளம்பியது மிக பெரிய அளவில் எங்களை யோசிக்க வைக்கும் என்று அப்போது தெரியவில்லை. இதற்க்கு முன் ஏலக்காய் செடியை பார்த்ததில்லை, அது எப்படி விளைவிக்க படுகின்றது என்பது தெரியாது, அதன் வியாபார நுணுக்கம் அறிந்ததில்லை..... ஆனால் இது எல்லாம் இந்த பயணத்தில் தெரிந்து கொண்டோம், வாருங்கள் பார்க்கலாம் !









ஏலக்காய் தோட்டமும்.......நானும் !


போடிநாயக்கனூர் (நகராட்சி) தேனியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. போடிநாயக்கனூர் 'போடி' என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது. இதனை அடுத்து 22 கி.மீ. தூரத்தில் உள்ள போடிமெட்டு என்னும் இடத்தில் இருந்து கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதி தொடங்குகிறது. இந்த நகரம், "தெற்கு காஷ்மீரம்" என அழைக்கப்படுவதும் இதன் சிறப்பு. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில், மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட, 'ஏலக்காய் நகரம்' எனவும் அழைக்கப் படும் ஒரு சிறிய நகராகும்.இந்த நகர், ஏலக்காய், காப்பி (கொட்டை இலை வடி நீர்), தேயிலை, பருத்தி விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் ஏலக்காய் கடைகளுக்கும், காப்பி கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி கொட்டைகளைத் தரம் பிரித்தல்) வேலைக்குச் செல்கின்றனர்.



போடி நெருங்க நெருங்க அங்கு இருந்த வயல் வெளிகள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டு வந்தேன், ஒவ்வொரு முறையும் இறங்கி அது ஏலக்காய் செடியா என்று அறிந்து கொள்ள முனைந்தேன். முடிவில் போடி டவுன் சென்று ஏலக்காய் செடி பார்க்க வேண்டும் என்றபோது அவர்கள் சொன்ன இடம் என்பது போடிமெட்டு ! போடி நகரத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்றனர். சரி சென்று விடலாம் என்று நினைத்து சுமார் ஐந்து கிலோமீட்டர் சென்றவுடன் மலை ஏற ஆரம்பித்தது. ஒரு வாகனம் மட்டுமே செல்ல கூடிய வழி, ரோடு மிகவும் மோசம், பாதையை அகலபடுத்த என்று யந்திரம் கொண்டு மலை கற்களை பெயர்த்து அப்படியே போட்டு இருந்தனர். ஒரு பக்கம் பாதாளம், இன்னொரு பக்கம் மரங்கள், கற்கள் என்று இருந்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து ஒரு செக்போஸ்ட் வந்தது..... அதுதான் போடிமெட்டு ! தமிழக எல்லையை தொட்டு இருந்தோம், அதை தாண்டியவுடன் ஏன் கேரளாவை கடவுளின் தேசம் என்கிறோம் என்பது புரிந்தது..... இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று இருந்தது. நல்ல ரோடு வசதி, தண்ணி வடிந்து செல்ல பாதை என்று தமிழக எல்லை தாண்டியவுடன் அப்படியே காட்சிகள் மாறியது !

 
 
 




 
 
 


எங்களுக்கு வழியில் இருப்பதில் எது ஏலக்காய் செடி என்பதே தெரியவில்லை..... அது சரி முன்னே பின்னே பார்த்து இருந்தால்தானே தெரியும் ! முடிவில் ரோடு ஓரத்தில் சென்று கொண்டு இருந்த ஒரு சேட்டனை கூப்பிட்டு எது ஏலக்காய் செடி என்று கேட்க அவர் எங்களை பார்த்து நீங்கள் கண்ணை மூடி கொண்டு எந்த செடியை இங்கு தொட்டாலும் அது ஏலக்காய் செடிதான் என்று சொல்லி சிரித்தவுடன் தான் தெரிந்தது எங்களை சுற்றி இருந்தது எல்லாம் ஏலக்காய் செடி என்று !


 
 



ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்: எலெட்டாரியா (Elettaria), அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை. இதன் மருத்துவ குணம் பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் ஸ்பாட்தமிழ் என்னும் தளத்தை படிக்கலாம் !


 
 



நமது நாட்டில் விளையும் முக்கிய பணப் பயிர்களில் ஒன்று, ஏலக்காய். நமது முன்னோர்களின் பழங்கால வணிகங்களில்கூட ஏலக்காய் வியாபாரம் கொடிகட்டி பறந்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் கப்பல் கப்பலாக ஏலக்காய்களை ஏற்றி, தங்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த அளவுக்குப் புகழும் மணமும் கொண்டவை ஏலக்காய்கள். அதிலும் தமிழக, கேரள எல்லைப்பகுதிகளில் விளையும் ஏலக்காய்க்கு உலக அளவில் கடும் கிராக்கிதான். உலகத்தில் பல்வேறு நாடுகளில் ஏலக்காய் பயிரிடப்பட்டாலும், தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, பூம்பாறை, காந்தம்பாறை, புளியம்பாறை பகுதிகளில் விளையும் ஏலக்காய்கள் தரமானதாக கருதப்படுகிறது. உலக அளவில் தரவரிசையில் முதலிடம், போடிப் பகுதியில் விளையும் ஏலக்காய்க்குத்தான் என்கிறார்கள் விவசாயிகள்.


ஏலக்காய் செடி என்பது ரோஜா செடியை பதியன் போடுவது போல செய்வது, ஒரு கிளையை எடுத்து நட்டு வளர்க்க வேண்டும். செடி சுமார் ஆறு அடிக்கு மேல் வளர்கிறது. ஒவ்வொரு செடிக்கும் சுமார் ஐந்து அடி அளவில் இடம் விட்டு நாடுகிறார்கள், சுமார் ஒரு ஏக்கரில் நீங்கள் 450 ~ 500 செடிகள் நடலாம். இப்போது உள்ள செடிகள் எல்லாம் ஒரு வருடத்தில் வளர்ந்து காய் கொடுக்க ஆரம்பிக்கும், பின்னர் சுமார் பத்து வருடம் வரை அது காய் தரும். ஏலக்காய் என்பது வேரில் இருந்து காய்க்கிறது, இலைகள் மட்டுமே ஆறு அடிக்கு மேல் வளர்கிறது ! நல்லானி, கிருதானி, பவள கொடி, வல்க மைசூர்  என்று சுமார் நூறு வகைகளுக்கு மேல் இருக்கிறது. ஒவ்வொரு வகைகளும் கிரேடு வகைபடுதபடும்..... 6,7,7.5,8 என்று இருக்கிறது, இதில் எட்டு என்பது சூப்பர் கிரேடு என்கிறார்கள். ஏலக்காய் பறிப்பதற்கு என்று இங்கு கூலி தொழிலாளர்கள் இருக்கிறார்கள், ஆண்களுக்கு 350 ரூபாய் வரையும், பெண்களுக்கு 250 ரூபாய் வரையும் கூலி கொடுக்கபடுகிறது, ஒரு நாளுக்கு ஒரு ஆள் இருபது படி வரை ஏலக்காய் பறிக்கிறார்கள் ! சரி ஏலக்காய் பறித்தாகிவிட்டது..... அடுத்து அது எப்படி ஏலக்காய் போன்று மாறுகிறது, சந்தை எப்படி செய்யபடுகிறது என்று பார்ப்போமா ! அதற்க்கு அடுத்த வாரம் வரை பொறுங்களேன்......

 
 
 

 



Labels : Suresh, Kadalpayanangal, Elaichi, Yelakkaai, Bodi, Bodinayakanur, Yelakhai, Cardamom

31 comments:

  1. இதான் ஏலக்காய் செடியா!? யூக்லடிப்ஸ் இலைப்போல இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  2. soopar info. appadiye JAWARISI(sawwarisi) Athan paayasam kachuwame athu, epadi seirathu endu thedi kandu pudichu solungalen..

    office la irunthu read paninan athan enada profile la wanthu comnt poda mudiyala

    ReplyDelete
    Replies
    1. எழுதிட்டா போச்சு, உங்களது கருத்து மகிழ்ச்சியை அளிக்கிறது ஹாஜா !

      Delete
  3. கேரளா சொர்க்கம் தான்...!

    மணக்கும் பகிர்வு... அங்கங்கே கொடுத்த இணைப்புகளுக்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன் சார் ! சென்ற வாரம் திண்டுக்கல் வந்து இருந்தேன், ஆனால் வேலை பளுவினால் உங்களை சந்திக்க முடியவில்லை என்பது இன்னும் எனக்கு வருத்தம்தான் !

      Delete
  4. வாவ்..உங்க படங்களும் செய்திகளும் ரொம்ப அருமையா இருக்கு. ஏலக்காயை நீங்க கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஏலக்காய் தோட்டத்தை பளிச்னு காண்பிச்சு ஏலக்காயை சரியா காண்பிக்காம விட்டுடுச்சு.. இதை கொஞ்சம் கவனிச்சிருக்கலாம்.. (இல்லே அப்படித்தான் படம் எடுத்தீர்களா?)

    ReplyDelete
    Replies
    1. நான் வைச்சிருக்கிற கமெராவில் எனக்கு தெரிந்த அளவில் மட்டுமே எடுத்து இருக்கிறேன் ஆவி.... ஆனால், இன்னும் அடுத்த தடவை கவனமாக இருப்பேன். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  5. Replies
    1. தேங்க்ஸ் கார்த்திக்...... நீ இன்னமும் அப்படியே இருக்கிறே !!

      Delete
  6. பதிவு முழுக்க ஏலக்காய் வாசனை அடிக்குது பாஸ்! :)

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பகுதிக்கு இன்னும் பொறுங்க பாஸ்...... ஒரு மறக்க முடியாத சுவையாக இருக்கும் ! நன்றி !

      Delete
  7. ஏலக்காய் தோட்டம்.......
    சுரேஷ்குமார் பயணம்.......
    சில்லென்று காத்து.....
    அருமை.......

    ReplyDelete
    Replies
    1. இதுவே கவிதை மாதிரி இருக்குதே !! நன்றி பிரேம் !

      Delete
  8. கொண்டைவளைவு சாலைகளும் ஏலக்காய் செடிகளும் கொண்ட படங்கள் அருமை! ஏலக்காய் பற்றிய தகவல்களுடன் கமகமக்குது இந்தப்பதிவு....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணன்..... உங்களது தாத்தா பற்றிய பதிவு நெஞ்சை கனக்க செய்தது. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  9. இந்த பகுதிக்கு சென்று வந்து உள்ளேன் அப்பொழுது இது போல இறங்கி பார்க்க வேண்டும் ஆவல் வந்தது நேரம் மற்றும் வசதி இல்லாததால் பார்க்க இயலவில்லை இப்பொழுது திருப்தியாய் தெரிந்து கொண்டேன் தொடரட்டும் பயணம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் !! இன்னும் அடுத்த பகுதிக்கு பொறுங்கள்...... நிறைய செய்திகள் காத்திருக்கிறது !

      Delete
  10. வணக்கம் பாஸ்....மூணாறு ல இருந்து தேனி வரும் போது போடி மெட்டுல நானும் நிறைய ஏலக்காய் தோட்டங்களைப்பார்த்து அவைகளை அதிசயத்து கொஞ்சம் பறித்து முகர்ந்து பார்த்தேன்...உங்களுக்குத்தான் அந்த ஸ்பெசல் தெரிந்து இருக்கிறது.வாழ்த்துக்கள்.....அந்த ஏரியா மிக ரம்மியமாக இருக்கும்.அந்த வழியிலே மூணாறு சென்று பாருங்கள்...புது உலகம் அது....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஜீவா...... ரொம்ப த்ரில்லிங் ஆன பயணம். அடுத்த வாரம் அதன் செய்முறை பற்றி எல்லாம் எழுத இருக்கிறேன், பாருங்களேன் !

      Delete
  11. நானும் இப்போதுதான் ஏலக்காய்
    செடியைப் பார்க்கிறேன்
    தகவல்களை அடுக்கிச் செல்லும் விதம் அருமை
    சுவாரஸ்யத்துடன் தொடர்கிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார்..... எல்லா பதிவிற்கும் நீங்கள் கொடுக்கும் உற்சாகம் அளப்பரியது !

      Delete
  12. Replies
    1. நன்றி ரமணி சார்..... நீங்கள் அளித்த தமிழ்மணம் ஓட்டிற்கு நன்றி !

      Delete
  13. தங்களின் படமும் எழுத்து நடையும் அப்படியே ஏலக்காய் தோட்டத்திற்குள் சென்று வந்த அனுபவம் படிப்பவருக்கும் கிடைக்கின்றது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்..... உங்களது மனம் திறந்த பாராட்டு அந்த ஏலக்காயை போல சுவையாக இருக்கிறது !

      Delete
  14. நல்ல பயண அனுபவம் , ஏலக்காய் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடித்தது .தொடருங்கள் !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீனி...... இன்னமும் வருகிறது காத்திருங்கள் !

      Delete
  15. ஏலக்காய் செடியை இதுவரை நான் பார்த்ததே இல்லை... அதை காட்டி, விவரித்தற்கு மிக்க நன்றி !!!

    ReplyDelete
    Replies
    1. உங்களை போலதான் நானும் விமல்.... அதற்காகவே இந்த பதிவு. நன்றி !

      Delete
  16. ஒரே வார்த்தையில் நீங்கள் தெரிவித்த பாராட்டு பல பல பதிவுகளை இது போல எழுத உற்சாகம் தருகிறது, நன்றி !

    ReplyDelete