Wednesday, January 1, 2014

புதிய வருடம்.... புதிய பகுதிகள் !!

கடல்பயணங்கள்......... இந்த பயணம் உங்களுக்கு வாழ்க்கையின் மீது ஆர்வத்தையும், பிரமிப்பையும், காதலையும் வரவழைக்கும் ! ஒவ்வொரு வருடமும் இந்த தேடல் அதிகமாகி வருகிறது, மனதில் கேள்விகள் எழ எழ அதை தேடிய இந்த நீண்ட பயணமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பயணத்திலும் இந்த உலகம் மிகவும் பெரியது என்ற எண்ணமும், நான் மிக சிறியவன் என்ற எண்ணமும் வந்து வந்து போகிறது.ஒவ்வொன்றும் ஒரு மாற்றத்தை சந்தித்தாக வேண்டும், அது போலவே இந்த கடல்பயணங்கள் தளமும் ஒரு புதிய மாற்றத்தை சந்திக்க போகிறது ! சென்ற வருடத்தில் நிறைய புதிய பகுதிகளை ஆரம்பித்தேன், அதை நீங்கள் விரும்பி படித்து உங்களது ஆதரவை தந்தீர்கள்..... அதை போலவே இந்த புதிய வருடத்தில் இன்னும் புதியதாக கடல்பயணங்கள் தனது தேடலை ஆரம்பித்து உள்ளது ! இதனால் படிக்க வரும் உங்களுக்கும் சுவாரசியமும், ஆர்வமும் ஏற்படும். ஆகவே, இந்த வருடமும் சில புதியவிஷயங்கள் ஆரம்பம் ஆக போகிறது, அதன் முன்னோட்டமே இந்த பதிவு......


அறுசுவை (இந்தியா) :
நான் எழுதி வரும் அறுசுவை என்ற பதிவில் நான் சென்று வந்த உணவகம், அதன் சுவை என்று எழுதுவதும் அதை நிறைய பேர் படிப்பதும் என்று இருந்து வருகிறது. சென்ற மாதத்தில் நான் என்னுடைய நண்பருடன் ஒரு குஜராத்தி உணவகத்திற்கு சென்றபோது பல பல உணவுகள் மிகவும் வித்யாசமாக இருந்தது. பொதுவாக நாம் நார்த் இந்தியன் உணவுகள் என்று அதை வகைபடுத்தினாலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு சுவை உண்டு என்று புரிந்தது. ஆனால் இதுவரை எந்த தளத்திலும் நான் ஒவ்வொரு மாநில உணவு வகைகளை பற்றி மிகவும் விரிவாக எழுதி பார்த்ததில்லை. ஆகவே, இந்த தலைப்பில் நான் எழுத போகும் விஷயம் என்பது ஒவ்வொரு மாநிலத்தின் புகழ் பெற்ற உணவுகளும், அது கிடைக்கும் இடங்களும், அதை சுவை என்று விரிவாக பார்ப்போமே !


அறுசுவை (சமஸ்) :

சென்ற வருடம் பதிவர் திருவிழாவில் "சாப்பாட்டு புராணம்" என்ற புத்தகம் கண்ணில் பட்டது. வாங்கி படிக்க ஆரம்பித்தபோது அவ்வளவு சுவாரசியம், நமது பாரம்பரிய உணவுகளை அவ்வளவு சுவையாக சமஸ் என்னும் எழுத்தாளர் மிகவும் விரிவாக எழுதி இருந்தார். அவரை பற்றி கூகுளில் தேடியபோது என்னை போலவே இவருக்கு ரசிகர்கள் அதிகம் இருந்ததை காண முடிந்தது. அவர் எழுதிய புத்தகத்தில் இருந்த ஒரே குறை என்பது அதில் அந்த உணவு பற்றிய படங்களும், அந்த கடையை பற்றிய படங்களும், விலை விவரங்களும் இல்லை என்பது. இந்த சுவைக்காக ஒரு பயணம் மேற்கொண்டு அவர் சென்ற இடங்களுக்கு சென்று இன்னும் விரிவாக அதை பற்றி எழுதலாமே என்று ஒரு ஆசை..... விரைவில் அவரின் எழுத்துக்கு மெருகேற்றும் வண்ணம் இந்த புதிய பகுதி தொடக்கம் !


ஊர் ஸ்பெஷல் :

இந்த பகுதி நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது என்பதும், அதை நிறைய பேர் படித்து ஆச்சர்யபடுகிரீர்கள் என்பதும் எனக்கு உங்களின் பின்னூட்டம் மூலம் தெரிந்தது, அதை இன்னும் சுவாரசியபடுத்த இந்த பகுதிக்குள் இன்னும் நிறைய விஷயங்களை புகுத்த போகிறேன். இதுவரை சுலபமான விஷயங்களை மற்றும் எழுதி வந்த நான், இன்னும் நீங்கள் படித்திராத, அழிந்து கொண்டு இருக்கும், செல்ல - கேட்க - சேகரிக்க கடினமாக இருக்கும் ஒரு ஊரின் சிறப்பை தேடி பயணிக்க போகிறேன். உதாரணமாக மாயவரம் ஏர், காங்கேயம் ஒரிஜினல் காளை என்று இந்த பகுதி புதிய இடங்களை களம் காண போகிறது.


கலை :

உங்களுக்கு தமிழ் நாட்டில், நமது மாநிலங்களில் எத்தனை கலைகள் இருக்கிறது என்பது தெரியுமா ? ஓவியம், பாட்டு, ஆடல் மட்டும்தான் கலையா.... வித்யாசமான சில கலைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா ? நான் சென்ற பயணத்தில் நான் ரசித்த வித்யாசமான கலைகளை பற்றி உங்களுடன் இதில் பகிர்ந்து கொள்ள போகிறேன். ஆஸ்திரேலியாவின் ஒரு மூலையில் ஒரு இசை என்னை அழ வைத்தது, நியூயார்க் நகரத்தில் ஒரு கலைஞன் வாசித்த அந்த கருவியின் பெயர் தெரியவில்லை எனினும் அந்த இசை அற்புதம், நமது கிராமத்தில் உடுக்கு அடித்து ஆடிய அந்த கலைஞனின் இசை இன்னும் என்னின் செவிகளையும், உடம்பையும் அதிர செய்கிறது. உங்களை போலவே நானும் இளையராஜா, ரகுமான் என்று இசையை கேட்டு ரசித்தவன்.... ஆனால் அதையும் தாண்டி பல புதிய இசையும், கலையும் இருக்கிறது என்று நான் உணர்ந்ததை உங்களுக்கும் உணர்த்த ஆசை !
சிறுபிள்ளையாவோம் :

நம் சிறு வயதில் நாம் உண்ட உணவுகள், விளையாடிய விளையாட்டுக்கள் எல்லாம் இன்று நமது குழந்தைகள் விளையாடுகிறார்களா ? சேமியா ஐஸ், பால் ஐஸ், திருவிழா, கொடுக்காபுளி, இலந்தை பழம், கிட்டிபுல், மாட்டு வண்டி பயணம், ஆரஞ்சு மிட்டாய், தட்டான் பிடிப்பது என்று இன்னும் நிறைய விஷயங்களை செய்தோமே.... அதை இன்று செய்து பார்த்தால் எப்படி இருக்கும் ?! அதன் சுவையோடு நினைவுகளையும் பகிர்ந்துகொண்டால் எப்படி இருக்கும் ! இந்த பயணத்தில் இப்படி ஒவ்வொரு சின்ன சந்தோசங்களையும் உங்களது மனதை அசைபோட வைக்கும் இந்த பதிவுகள்.இன்னும் சில பகுதிகள் மெருகேரியும், அழகாகவும் வர இருக்கிறது. கண்டிப்பாக நீங்கள் அதை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த மாற்றம் இன்னும் பல புதிய நண்பர்களையும், பழைய நண்பர்களுடன் இன்னும் நெருங்கவும் உதவும் என்று எண்ணுகிறேன்.


33 comments:

 1. nalla pannuga
  vilavaariyaaka sollaamal
  innum nunukkamaai sollungal

  pudhdhaandu vaaltukkaludan

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்..... கண்டிப்பாக செய்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

   Delete
 2. /// சேமியா ஐஸ், பால் ஐஸ், திருவிழா, கொடுக்காபுளி, இலந்தை பழம், கிட்டிபுல், மாட்டு வண்டி பயணம், ஆரஞ்சு மிட்டாய், தட்டான் பிடிப்பது என்று இன்னும் நிறைய விஷயங்களை செய்தோமே... ///

  இவைகள் தான் பெரிய சந்தோசங்கள்... இப்போதே ஆவல் அதிகரித்து விட்டது...

  தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்..... இந்த சின்ன விஷயங்கள் எவ்வளவு பெரிய சந்தோசங்களை அன்று கொடுத்தன..... அதை பற்றிய பதிவுகளும் உங்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும். நன்றி !

   Delete
 3. பதிவர்கள் அனைவருக்கும் மகிழ்வூட்டும்
  அருமையான செய்திகளுடன் கூடிய ட்ரைலர்
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார்...... புத்தாண்டு அன்று உங்களுடன் பேசியது மகிழ்ச்சி அளித்தது. தங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி !

   Delete
 4. Replies
  1. தமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு நன்றி சார் !

   Delete
 5. Happy New Year Anna....

  Continue your good work....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி..... உங்களது கருத்து மகிழ்ச்சியை அளித்தது !

   Delete
 6. அருமை.....சிறந்த கோணங்கள்... ஆவலை தூண்டுகிறது...

  ReplyDelete
  Replies
  1. நன்றி பிரேம்குமார்....... இந்த பதிவுகளை படிக்கும்போது இன்னும் ஆவலோடு எதிர்பார்ப்பீர்கள் !

   Delete
 7. இன்னிக்கும் இலந்தப் பழம், தேன் மிட்டாய், கலர் அப்பளம், நாவப்பழம்லாம் வாய்ப்பு கிடைச்சா கூச்சப்ப்படாம வாங்கி சாப்பிடுவேன். ஒரு ரெண்டு மாசம் முந்தி கூட மாட்டுவண்டி பயணம் செஞ்சேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி.... இந்த புது வருடத்தில் நம்பர் 1 பதிவர் ஆக வாழ்த்துக்கள் !

   Delete
 8. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 9. All the Best for your Draft Plan, Suresh. Hope you will reach out many dimension of our Tamil Culture, Living and Taste. Will be a "Happy Reading 2014"

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாபு...... எதையும் பிளான் செய்து செய்யணும் !! :-) இது போன்ற கோல் செட் செய்யும்போது வாழ்க்கை இன்னும் அழகாக தோன்றுகிறது ! உங்களது கருத்துக்களை அவ்வப்போது இடுங்கள் !

   Delete
 10. பதிவுக்கு ட்ரெயிலரா...எல்லாம் நல்லா இருக்கு, அனுபவம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. அனுபவங்களை தேடும் உங்கள் பயணம் வித்யாசமானது. நன்றி அட்வெஞ்சர் சுரேஷ்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கலாகுமரன்..... நீங்க இன்னும் மெயின் படம் பார்க்கலியே, சும்மா அதிரும் இல்லை......நீங்கள் சொன்னது சரிதான், நான் அனுபவங்களை தேடி ஓடுபவன், அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி !

   Delete
 11. மாநில உணவுகள்.. அதுவும் உங்க ஸ்டைல்லயா...? ரொம்ப ஆர்வமா இருக்கன் அண்ணே ... !

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆனந்த்.... நாம ரெண்டு பேருமே மாநில உணவுகளை உண்டு பார்க்கலாமே !

   Delete
 12. அண்ணே.. இந்த முதல் போட்டோ சூப்பர்.. கலக்குரிங்க ..

  ReplyDelete
 13. எப்படியோ இந்த வருடம் இன்னம் அதிகமாக பிரயத்தனப்படப் போகிறீர்கள் எனப் புரிந்து விட்டது. உழைப்பு என்றுமே வீண்போவதில்லை... இந்த ஆவணங்கள் பெரிதும் பயன்படப் போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை. வாழ்த்துக்கள் சுரேஷ்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி...... இந்த பதிவுலகம் பல நண்பர்களையும், அனுபவங்களையும் கொடுத்து உள்ளது. இந்த வருடத்தில் இப்படி நிறைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியை தருகிரகுடு. இது ஆவணமா என்று தெரியவில்லை..... ஆனால் கண்டிப்பாக பலரின் யாபக அடுக்குகளை தூண்டும் !

   Delete
 14. ம்ம்ம்.... கலக்கப் போறீங்க.... உங்க commitment ரொம்ப பிடிச்சிருக்கு...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா..... நன்றி நண்பரே ! இது கமிட்மென்ட் இல்லை...... எனது தேடல் !!

   Delete
 15. வாழ்த்துக்கள்!!! நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே....... மீண்டும் வருக !

   Delete
 16. கடல்பயணங்கள்......... இந்த பயணம் உங்களுக்கு வாழ்க்கையின் மீது ஆர்வத்தையும், பிரமிப்பையும், காதலையும் வரவழைக்கும் !
  no need to tell us... we know about u & கடல்பயணங்கள்- chinnatha konjam kobam !

  ReplyDelete
  Replies
  1. கோபம் எதற்கு கிருஷ்ணா ?

   Delete
 17. Sir, is there any way to receive new blogs by email ? After google reader sunset really difficult follow blogs. Wonderful effort and please accept my appreciation and thanks for your new up coming articles.

  ReplyDelete
  Replies
  1. Hi RAghavendran, Sorry for the delay in replying to your message. Please send your email and I will add it. Thanks for your comments and it is really encouraging.

   Delete