Thursday, January 2, 2014

அறுசுவை - ஸ்வென்சன்ஸ் ஐஸ்கிரீம், பெங்களுரு

 இந்த புது வருடத்தின் முதல் பதிவை கொஞ்சம் இனிப்பாக ஆரம்பிக்கலாமே !! பொதுவாக உணவகம் செல்லும் அதே சிரத்தையை இனிப்பகம் செல்வதற்கும் செய்ய ஆரம்பித்தாகிவிட்டது, இல்லையென்றால் எனது மகன் என்னை விடமாட்டேன் என்கிறான் ! பொதுவாக உணவை முடித்துவிட்டு சிறிது இனிப்பு சாப்பிடவேண்டும் என்று விரும்புவேன். அதில் ஐஸ்கிரீம் என்பது முக்கியமான ஒன்று, இதுவரை சென்ற கடைகளில் எல்லாம் ஐஸ் கிரீம் என்றால் வெகு சில வகைகள்தான் இருக்கும். முக்கியமாக ஐஸ்கிரீம் வகைகளில் சண்டே என்று ஒரு வகை உண்டு, அதில் சில பல சாஸ் விட்டு விதவிதமாக தருவார்கள். ஆனால், ஸ்வென்சன்ஸ் ஐஸ்கிரீம் சென்றபோதுதான் ஐஸ்கிரீம் வகைகளில் இவ்வளவு வகைகள் செய்யமுடியுமா என்று ஆச்சர்யப்பட வைத்தது !


இது வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவகம், இப்போது இந்தியாவிலும் ஆரம்பித்து விட்டனர். உள்ளே நுழையும்போதே சில்லென்று காற்று வீசுகிறது, உட்கார்ந்தவுடன் எல்லா கடைகளிலும் கொடுக்கும் மெனு கார்டை விட சுமார் பத்து மடங்கு பெரிதாக மெனு ஒன்றை கொடுக்கும்போதே மனதில் அட எவ்வளவு வகைகள் இருக்கிறது என்று ஆவல் எழுகிறது ! பொதுவாக ஐஸ்கிரீம் என்றால் வெனிலா என்றாகிவிட்டது, ஆனால் உங்களுக்கு அதில் எவ்வளவு வகைகள் இருக்கிறது தெரியுமா......... அட தெரிந்தால் இனிப்புக்கு கூட இவ்வளவு வகைகளா என்று ஆச்சர்யபடுவீர்கள் !ஸ்ட்ராபெர்ரி கப்ளர், மச்டமியா, சாக்லேட் சிப், ரம் ரைசின், வெரி ஸ்ட்ராபெர்ரி, குக்கி அண்ட் கிரீம், மிட்நைட் பிரவுனி, அல்மண்ட் பட்ஜ், வெனிலா, துர்கிஷ் காபி, ஸ்ட்ராபெர்ரி - பனானா கிரீம், மாங்கோ என்று விதவிதமான ஐஸ்கிரீம் இருக்கிறது. அதன் மேலே சுவைக்கு சேர்க்க என்று கிரீம், வெபர், பைன்ஆப்பிள், அல்மொண்ட், செர்ரி, சாக்லேட், சாக்லேட் கிரீம், சாக்லேட் பால், ஸ்ட்ராபெர்ரி, காராமெல், பிரவுனி கேக், இன்னும் பல வகை பழ வகைகள் இருக்கிறது. இது தவிர ஷேக்ஸ் வேறு உண்டு !

நான் ஆர்டர் செய்தது போன்டு (Fondue) எனப்படும் பல விதமான ஐஸ்கிரீம் மற்றும் பல சூடான சாக்லேட் கொடுப்பார்கள் அதில் தொட்டு தொட்டு திங்க வேண்டும். எனது மகனுக்கு லிட்டில் பிரின்ஸ் என்ற வெனிலா சாக்லேட் பிளேவர் ! முதலில் அது வந்தவுடனேயே நாக்கில் நீர் ஊற ஆரம்பித்து விட்டது. அவர்கள் கொண்டு வைத்த சாக்லேட் சிறிய அடுப்பின் மேலே வந்தது, அதை பற்ற வைத்தவுடன் சாக்லேட் உருக ஆரம்பித்து அந்த இடத்தையே வாசனையால் நிரப்பியது. அடுத்து அங்கு கட் செய்து வைக்கப்பட்ட வாழைபழத்தை எடுத்து அந்த சாக்லேட் உள்ளே முக்கி எடுத்து வாயில் போட்டால் கரைகிறது போங்கள். நான்கு வகை ஐஸ்கிரீம் அங்கு இருந்தது, சிறிது கிரீம் வேறு அருகில்..... ஒவ்வொன்றாக எடுத்து அந்த சாக்லேட் உடன் தொட்டு தின்னும்போது, நாம் என் சாப்பாடிற்கு பின் இதை சாப்பிட வேண்டும், இதையே சாப்பாடாக சாப்பிடலாமே என்று எண்ணினால்....நீயும் என் இனமே !!
பஞ்ச் லைன் :

சுவை - நிறைய வகைகள் இருக்கிறது, ஒவ்வொன்றும் ஒரு சுவை !

அமைப்பு - மெயின் ரோடு, காரை அங்கு இருக்கும் குறுக்கு தெருக்களில் பார்க் செய்யலாம். நல்ல பெரிய கடை, சில்லென்று இருக்கிறது.

பணம் - கொஞ்சம் ஜாஸ்திதான், ஆனால் இங்கு இருக்கும் ஐஸ்கிரீம் வகைகளுக்கு கொடுக்கலாம் என்ற தோன்றும் !

சர்வீஸ் - நல்ல சர்விஸ்.

அட்ரஸ் :

http://www.swensens.in

http://www.swensens.in/locator.php#show

மெனு கார்டு :

ஸ்வேன்சன்ஸ் மெனு

Labels : Arusuvai, Swensens ice cream, ice cream, Suresh, Kadalpayanangal, Bangalore, Best ice-cream., yummy

27 comments:

 1. இனிப்புடன் நல்ல துவக்கம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார்...... உங்களது கவிதையை விடவா இனிப்பு !

   Delete
 2. வணக்கம் சார் நன்றாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் !

   Delete
 3. Replies
  1. தமிழ் மணத்தில் இந்த பதிவுக்கு நீங்கள் அளித்த ஓட்டிற்கு நன்றி சார் !

   Delete
 4. Actually, prices look pretty reasonable. படங்கள் அனைத்தும் அருமை. அடுத்த இந்தியா - பெங்களூர் வரும்போது கண்டிப்பாக போக வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. வெளிநாட்டில் இருக்கும் உங்களுக்கு சீப்.... பட் இந்த பதிவுக்கு சிலர் கொடி பிடிப்பாங்க பாருங்க !! போய்விட்டு வந்து ஒரு வார்த்தை சொல்லுங்க !

   Delete
 5. ஆஹா....அண்ணே , சும்மா ஜில்லுனு ஆரம்பிச்சிருக்கிங்க.. கலக்குங்க ..!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆனந்த்..... ஒரு நாள் போய் ஜமாய்ச்சிடலாம் வா !

   Delete
 6. இப்ப குளிர் காலம். அதனால, எனக்கு ஐஸ் வேண்டாம். ஆனா, வருச முதல்ல ஸ்வீட் தர்றிங்க. வேணாம்ன்னு சொல்லப்படாது. அதனால, ரகத்துக்கு 5 வீதம் நம்ம வீட்டுக்கு பார்சல் பண்ணிடுங்க.

  ReplyDelete
  Replies
  1. பார்சல் வந்து சேர்ந்ததா ?! என்ன இல்லையா........ அப்போ நேரிலே வாங்க ஒரு நாள் போகலாம் ! நன்றி !

   Delete
 7. ஜில்லென்று இந்த ஆண்டில் முதல் பகிர்வு... நன்றி... அசத்துங்க...!

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் !

   Delete
 8. வாழ்த்துக்கள்...
  oru request.
  நாளைக்கு மார்கழி திருப்பாவை திருவிழா விலே வந்திருக்கும்
  மக்களுக்கு வினியோகம் செய்ய

  ஒரு 100 ஐஸ் கிரீம் வெனில்லா , சாக்லேட், ஸ்ட்ரா பெர்ரி,
  உங்கள் உபயமாக

  ஹாட் பாக்கில் வைத்து விடியற்காலை 6 மணிக்குள் எங்களுக்கு கிடைக்கும்படி அனுப்பினால்,

  தாங்க்ஸ் சொல்வோம்.

  அதுக்கு முன்னாடி இப்போ
  ஹாப்பி நியூ இயர் சொல்வோம்.

  இந்த வருடத்தின் ஒவ்வொரு நாளும் சாக்லேட் ஐஸ் கிரீம் ஆக இருக்க பெருமாள் அனுக்ரஹம் செய்வாராக.

  சுப்பு தாத்தா.
  www.menakasury.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்.... உங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்து காபி அருந்தியது என்று இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அடுத்த முறை ஐஸ்கிரீம் சாப்பிட்டு விடலாம்...... நேரிலேயே வந்துடறேன் ! :-)

   Delete
 9. இக்குளிர் காலத்தில்கூட ஐஸ்கிரீமைப் பார்த்தால் ஆசையாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜெயகுமார்...... சில சமயம் நாக்கை கட்டுபடுத்த முடிவதில்லை !! குளிர் காலத்தில்தான் நிறைய சாப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது !

   Delete
 10. மிக்க நன்றி கவிஞரே..... உங்களது கவி வாழ்த்து இனிமையாக இருந்தது.

  ReplyDelete
 11. வணக்கம் நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

   Delete
 12. namma bangaloru :))) super... next time

  ReplyDelete
  Replies
  1. விரைவில் வருக, எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருக !! :-)

   Delete
 13. Price is more than USA. But as long as the taste and service is good, no complaints.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி பாரதி !

   Delete
 14. Just missed ! may be next time when we visit Bangalore

  ReplyDelete
  Replies
  1. Thanks for visiting my blog Sarav...... call me when you visit next time ! :-)

   Delete