Wednesday, January 22, 2014

அறுசுவை (சமஸ்) - ஒரு இனிய ஆரம்பம் !!

சென்ற வருட பதிவர் திருவிழா சென்று இருந்தபோது அங்கு இருந்த புத்தக சந்தையை பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போது ஒரு புத்தகம் கண்ணில் பட்டது.... "சாப்பாட்டுப்புராணம்". நான் வாங்கினேனே தவிர வேலை பளுவினால் படிக்க முடியவில்லை, அப்போது எனது அப்பா அந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தவர், விரைவில் முடித்துவிட்டு ஒரு நாள் மாலையில் வெகு சுவாரசியமாக அந்த புத்தகத்தை பற்றி பேச ஆரம்பித்தார், கேட்க கேட்க எனக்கு ஆர்வம் தாளாமல் அந்த புத்தகத்தை ஒரே இரவில் படித்து முடித்தேன்.... பிரமாதமாக இருந்தது ! முதலில் அந்த உணவின் பூர்விகம், அதன் பின்னர் அந்த கடையின் பூர்விகம், பின்னர் அந்த உணவின் சுவை, முடிவாக அதன் செய்முறை ரகசியம் என்று செல்லும் இந்த உணவின் பயணம் வார்த்தையில் விவரிக்க முடியாத சுவை !!புத்தகத்தின் ஆசிரியர் "சமஸ்" அவர்கள் நமது பாரம்பரிய உணவினை தேடி தேடி திரிந்து, தகவல்களை சேகரித்து கொடுத்த விதம் என்றும் நினைவில் வைக்கும் வகை. ஒரு புத்தகத்தில் இருக்கும் உணவை பற்றி படிக்கும்போதே உங்களுக்கு நாக்கில் நீர் வரவழைக்க வைக்கும் எழுத்தும், அதை சாப்பிட வேண்டும் என்ற உணர்வும் வரவைக்கும் நடை. உதாரணமாக திருவாரூர் அசோகா அல்வா கடையை பற்றி அவர் விவரிப்பதும், அந்த சுவையை போற்றி சொல்வதும், அதன் செய்முறை ரகசியம் என்று அந்த புத்தகம் உங்களை வேறு உலகத்திற்கு கொண்டு செல்லும். அதை படித்து விட்டு அவரை பற்றி கூகுளில் தேடி பார்த்தால் நான் மட்டும் அல்ல இன்னும் நிறைய பேர் அவரது அந்த புத்தகத்தை படித்து ரசிகன் ஆகி இருக்கின்றனர் என்று தெரிந்தது. அப்போது மனதில் எழுந்ததுதான் நாம் ஏன் இந்த கடைகளை தேடி சென்று உண்ண கூடாது ? 2008 ல் அவர் இந்த கடைகளை பற்றி எழுதி இருக்கிறார் தினமணியில், இன்றும் அந்த கடைகள் இருக்குமா என்ற எனது சந்தேகத்தை தகர்த்து எரிந்தது காலத்தை கடந்த இந்த சுவை !!எப்போதும் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரின் ஸ்பெஷல் என்ன என்று கேட்டு எழுதுகிறோம். அதில், இந்த சாப்பாட்டு புராணம் பற்றி தேடி போய் அப்படி என்ன சுவை என்று ஏன் எழுத கூடாது என்று தோன்றியது. நினைத்து பார்த்துவிட்டேனே ஒழிய அதை செயல்படுத்த மிகுந்த சிரமம் இருந்தது....... உதாரணமாக நான் மூன்று வேளை மட்டுமே சாப்பிட முடியும், ஒவ்வொரு உணவகத்திலும் அந்த நேரத்தில் நீங்கள் சரியாக இருக்க வேண்டும், ஒவ்வொரு ஊரும் கடையும் ஒவ்வொரு இடத்தில் என்று நிறைய சிரமம்....... ஆனால் அந்த சிரமத்தை எல்லாம் மீறி அந்த கடையை தேடி பிடித்து அந்த உணவை வாயில் வைத்தவுடன்.......சமஸ் சார், நீங்கள் ஒரு கலா ரசிகன் போங்கள் !! நிறைய பேர் இப்படி தேடி செல்ல நாம் சரியான விலாசம், அந்த கடை எப்படி இருக்கும், என்ன எல்லாம் கிடைக்கிறது, என்ன விலை என்றெல்லாம் எழுதினால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவே இந்த புதிய பகுதி. இது உணவகத்தை பற்றி வருவதால் "அறுசுவை" என்ற தலைப்பிலேயே எழுதலாம் என்று இருந்தாலும் இந்த பயணத்தை வித்யாசபடுத்தி காட்ட இனி சமஸ் சாப்பாட்டு புராணம் தேடி செய்த பயணம் மட்டும் "அறுசுவை (சமஸ்)" என்ற தலைப்பில் வரும்........ விரைவில் உங்களது நாவினை வசபடுத்த வருகிறது ! இந்த பகுதி அவரது புத்தகத்திற்கு சிறப்பு சேர்க்கவே செய்யும் முயற்சி அன்றி வேறில்லை..!! வாருங்கள் தொடங்குவோம் ஒரு சுவையான பயணத்தை.......

அவரது சாப்பாடுப்புராணம் பகுதியில் இருந்து ஒரு பகுதியை படித்தால் உங்களுக்கே புரியும்....... திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை !!

அந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க...... சாப்பாட்டுப்புராணம் !Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Samas, Sappaattupuraanam, Dinamani

12 comments:

 1. ஆஹா.... ம்ம்ம்ம். சுரேஷ்குமார் எக்ஸ்பிரஸ் ஸ்டார்ட் ஆகிடுச்சு.....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்..... இனி நிற்காமல் ஓட போகுது !!

   Delete
 2. ஆஹா! சிங்க களம் இறங்கிடுச்சு!!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... இப்படியே சொல்லி உடம்பை ரண களம் ஆக்காமல் போக மாடீங்க போல !

   Delete
 3. ஆரம்பமே இப்படி சுவையாக இருக்கிறதே... ச்ச்ச்ச்.... ஹிஹி...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்...... இன்னமும் நிறைய சுவை வருகிறது பாருங்களேன் !

   Delete
 4. வாவ்... சுரேஷ் கலக்குங்க.. சமஸ் அறுசுவைக்கு காத்திருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சதீஷ்..... நீங்களும் உங்களது சோத்துக்கடை போட்டு அசத்தறீங்க போங்க !

   Delete
 5. சுவாரஸ்யமான துவக்கம்
  அவசியமான பதிவும் கூட
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார்...... அடுத்த வாரத்தில் இருந்து சுவையோ சுவைதான் போங்கள் !

   Delete
 6. Replies
  1. தமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு நன்றி சார் !

   Delete