Thursday, January 23, 2014

அறுசுவை -ஐயப்பா தோசை கடை, மதுரை

தோசை..... என்னதான் விதவிதமாக சாப்பிட்டாலும், மொறு மொறுவென்று ஒரு தோசை சாப்பிட்டால்தான் மனது சந்தோசமாகிறது, அதே தோசை விதவிதமாக கிடைத்தால் !! இந்த முறை மதுரை சென்று இருந்தபோது கண்டிப்பாக இங்கேதான் சாபிடுவது என்று முடிவானது. ஆறு மணிக்கே சென்று முதல் ஆளாக தோசை சாப்பிட வேண்டும் என்று சென்றால் கடை பூட்டி இருந்தது, ஏமாற்றத்துடன் திரும்பி நடக்கும்போது எங்களை பார்த்த ஒருவர் கடை ஏழு மணிக்குதான் திறக்கும் என்று சொல்ல அவருக்கு நன்றி சொல்லி விட்டு நாங்கள் அங்கிருந்த தெருக்களில் சுற்ற ஆரம்பித்தோம். ஏழு மணிக்கு திரும்பி வந்தபோது கடையின் முன்னே சுமார் ஐந்து தோசை கல் இருந்தது !! எங்களை திரும்பி பார்த்த மாஸ்டர், வாங்க சார் என்று அழைக்க ஆரம்பம் ஆனது எங்களது வேட்டை !!

பெரியார் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் பாண்டிய வெள்ளாளர் தெருவில், ஆர்த்தி ஹோடேலின் ரோட்டில் இடது புறத்தில் இருக்கிறது இந்த கடை. பொதுவாகவே இங்கே வெளிச்சம் கம்மி, அதில் இந்த கடைக்கு என்று விளக்கு வெளிச்சம் அதிகம் இல்லாததால் நீங்கள் இதை மிஸ் செய்ய வாய்ப்பு அதிகம் ! கடையின் முன்னே இருக்கும் ஒரே ஒரு பல்பு வெளிச்சம் கொடுக்க இங்கே நாவில் நீர் ஊற வைக்கும் தோசை தயாராகிறது !மதுரையில் எல்லோரும் பாராட்டும் கடை என்றவுடன் AC வசதியுடன் பெரிய கடையாக எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றம்தான். உள்ளே நுழையும் இடத்தில ஆறு பேர் அமரலாம், இன்னும் கொஞ்சம் உள்ளே ஒரு அறை இருக்கிறது அதன் உள்ளே சட்னி, இலைகளுடன் சுமார் ஆறு பேர் அமரலாம், மற்றவர்கள் எல்லாம் கையேந்தி பவன் ஸ்டைல்தான் ! இடம் சிறிதாக இருந்தாலும் மெனு லிஸ்ட் நீளம்.......நீங்களே பாருங்களேன்.......


 

திரும்ப திரும்ப மெனுவை மேல் இருந்து கீழாக படித்தாலும் குழப்பமே மிஞ்சியது. எல்லா தோசையும் நன்றாக, வித்யாசமாக இருந்தது. முடிவில், எனக்கு ஹாப் பாயில் தோசை ஒன்று சொல்லி விட்டு காத்திருந்தபோது ஆர்வத்தில் எப்படி சுடுகிறார்கள் என்று பார்த்தேன். பர பரவென்று தோசை கற்களில் மாவை ஊற்றி, ஒரு முட்டையை எடுத்து போட்டு, பெப்பர் தூவி, மேலே சிறிது கார சட்னி ஊற்றி மிகவும் மெலிதாக சஊற்றி கொண்டு இருந்தார். சப்பாத்தி, இட்லியும் இங்கு ஒரு ஓரத்தில் வெந்து கொண்டு இருக்கிறது.எனது இலைக்கு வந்தபோது எனக்கு பின்னாலேயே வந்து தோசையை இலையில் வைத்துவிட்டு, சிறிது தேங்காய் சட்னியும், கார சட்னியும் வைத்து, சாம்பார் ஊற்றிவிட்டு சென்றவுடன் ஒரு வாய் பியித்து வைக்க...... ஆஹா, அருமையாக இருந்தது.   இதன் சிறப்பு என்பது நமது வீட்டு தோசை போல சிறிதாக இருப்பதால், ஐந்து முறையில் தீர்ந்து  விடுகிறது, பின்னர் இன்னும் இன்னமும் என்று விதவிதமான தோசைகளை உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கிறோம் ! ஒவ்வொரு தோசையும் ஒரு பேப்பரை போல மிக மெலிதாக மொரு மொறுவென்று இருப்பதுதான் உங்களை கவர்கிறது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை ! சட்னியுடன் உள்ளே செல்ல செல்ல ஒரு தேவானுபவம்தான் !! கை கழுவும்போதுதான் தெரிந்தது நான் நெய் பொடி தோசை, பூண்டு மசாலா தோசை, வீட்டு தோசை என்று சாப்பிட்டது !பஞ்ச் லைன் :

சுவை - நிறைய வகைகள் இருக்கிறது, ஒவ்வொன்றும் ஒரு சுவை ! தோசையில் இவ்வளவு வகைகளா என்று நீங்கள் நினைப்பது உறுதி, வீட்டு தோசை போன்று சுவை !!

அமைப்பு - மெயின் தெரு, மிக சிறிய கடை, ஏழு மணிக்கு மேல் அங்கு சிறிது வெளிச்சம் கம்மி, வண்டியை பார்க் செய்வது சிரமமாக இருக்கிறது.

பணம் - மெனு கார்டை பார்த்தால் உங்களுக்கே புரியும், அவ்வளவு ஒன்றும் காஸ்ட்லி இல்லை !

சர்வீஸ் - நல்ல சர்விஸ். கூட்டம் அதிகமாக இருக்கிறபோது நீங்கள் இதையே எதிர்பார்க்க முடியாது !

ஞாயிறு விடுமுறை தினம் !!

அட்ரஸ் :

ஸ்ரீ ஐயப்பன் டிபன் சென்டர்,
பாண்டிய வெள்ளாளர் தெருவில்,
ஆர்த்தி ஹோடேலின் ரோட்டில் இடது புறத்தில் இருக்கிறது இந்த கடை

Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, madurai, dosai, dosa, best dosa, Iyappaa dosa center

21 comments:

 1. உண்மையில் மதுரையில் 60 வருஷம் இருக்கிறேன்
  இன்று வரை இந்தக் கடைப் போனதில்லை
  நிச்சயம் இந்த வாரம் போய்சாப்பிட்டுவிடுவேன்
  பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. உண்மையிலேயே அருமையான கடை சார்..... நாக்கில் நீர் ஊரும் தோசைகள். அடுத்த முறை நான் உங்களோடு போக ஆவல் !

   Delete
 2. Replies
  1. தமிழ் மணம் ஓட்டிற்கு நன்றி ரமணி சார் !

   Delete
 3. அடடா...! என்னவொரு சுவையான அனுபவம்... மதுரை செல்லும் போது கண்டிப்பாக செல்ல வேண்டும்... நன்றி..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன் சார், உங்களோடு அந்த பயணத்தில் நானும் இருக்க வேண்டும் என்று ஆவல் !

   Delete
 4. மதுரைக்கு செல்லும் போது பிரகாஷ் செலவுல சாப்பிட்டுட வேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா இது நல்ல ஐடியாவா இருக்கே, அப்போ நானும் வரேன் !

   Delete
 5. இந்த post ஐ பார்த்தவுடன் தோன்றிய வார்த்தை " அடே சாமி" "எட்சி-ஐ துடை டா"

  ReplyDelete
  Replies
  1. தொடைச்சதை பார்த்துட்டேன் நண்பரே..... விரைவில் இந்தியா வாருங்கள் !

   Delete
 6. இந்த விலையில் கொடுக்கறாங்களே.. கட்டுபடியாகுமா??

  ReplyDelete
  Replies
  1. அது அவங்க கவலை ஆவி, நாம ரெண்டு தோசை சாப்பிடலாம் வாங்க !

   Delete
 7. ஆப்பாயில் தோசை.. ! பாக்கவே வித்தியாசமா இருக்கே.. நோட் பண்றா.. நோட் பண்றா ஆனந்து

  ReplyDelete
  Replies
  1. நோட் பண்ணினா மட்டும் பத்தாது... அண்ணனுக்கு ரெண்டு பார்ஸல் சொல்லு தம்பி !

   Delete
 8. படிக்கவே அருமையா இருக்கு...விலையும் தகுந்த மாதிரி தான் இருக்கு...பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 9. அந்த உணவகத்தில் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிட சாப்பிடமுடியுமா ?

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக சாப்பிடலாம் சார்..... ஒரு நல்ல பாதுகாப்பான, சுவையான உணவகம்தான் !

   Delete
 10. SWAMY IYAPPAN NAME FOR HOTEL HOW THEY COOK EGG. SWAMIYA SARNAM. PLEASE CHANGE THE NAME IF POSSIBLE FOR GOD IYEPPAN.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே !

   Delete