Friday, January 24, 2014

உலக பயணம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

கிரிக்கெட்..... இது இந்தியாவில் ஒரு மதம் என்றால் அது மிகையாகாது. எனக்கும் கிரிக்கெட்டுக்கும் அவ்வளவு பொருத்தம் கிடையாது !! இந்தியா விளையாடும் குறிப்பிட்ட மேட்ச் மட்டும் கண் முழித்து பார்ப்பதும், வெகு சில மேட்ச் மட்டும் ஸ்கோர் அப்டேட் செய்வதும் என்பது நடக்கும். எனது சில நண்பர்களை போல நான் வெறித்தனமான ரசிகன் எல்லாம் இல்லை !! ஆனாலும் எப்போதும் ஒரு ஆசை உண்டு, அது கிரிக்கெட் மேட்ச் நடக்கும் ஸ்டேடியம் சென்று பார்க்க வேண்டும், அதுவும் புகழ்பெற்றதாக இருக்க வேண்டும் என்பது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகர் சென்று இருந்தபோது எனது ஹோட்டல் மாடியில் இருந்து பார்த்தபோது ஒரு பெரிய ஸ்டேடியம் சிறிது தூரத்தில் தெரிந்தது. கேட்டால் அதுதான் புகழ்பெற்ற மெல்பெர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் !!


கிரிக்கெட் கிரௌண்ட் பற்றி நிறைய கேள்வி எல்லாம் கேட்காதீர்கள், எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது. பச்சை பசேல் என்ற புல்வெளியுடன் பகல்-இரவு மேட்ச் நடக்கும் அந்த கிரௌண்ட் என்னுடைய கண்ணுக்கு விருந்து படைக்கும், ஆனால் அதை பற்றிய எந்த விவரமும் எனது அறிவுக்கு எட்டவில்லை. இந்த பதிவில் நானும் ரவுடிதான் என்று காட்டி கொள்வேன் !!ஆனால், இதை சுற்றி பார்த்தபோது நிறைய தெரிந்துகொண்டேன்...... இதுதான் உலகின் பத்தாவது பெரிய கிரிக்கெட் கிரௌண்ட், ஆஸ்திரேலியாவின் மிக பெரியது ! 1956இன் சம்மர் ஒலிம்பிக் போட்டியும், 2006இன் காமன் வெல்த் போட்டியும் இங்குதான் நடந்தது என்பது எனக்கு கூடுதல் தகவல் !

ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் இங்கு அமரலாம். 1854இல் சுமார் 6000 பேர் அமரும்படியாக மரத்தில் செய்து இருந்த இடம் இன்று இவ்வளவு பேர் உட்காரும் விதத்தில் இருக்கிறது ! நாங்கள் முதலில் உள்ளே நுழையும்போதே ஆஸ்திரேலியாவின் நிறைய புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்களின் சிலைகள் அங்கு இருந்ததை காண முடிந்தது. டிக்கெட் பெரும் இடம், மிக பெரிய விளக்குகள், உள்ளே நுழையும் நுழைவாயில் என்று ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வரும்போதே அந்த பச்சை புல்வெளி கண்ணில் தெரிந்தது.
கிரிக்கெட் ஆடும் அந்த பச்சை புல் தரையில் சிறிது நடக்க வேண்டும் என்று ஆசை இருந்தது, ஆனால் அங்கு இருந்த காவலர்கள் அதற்க்கு அனுமதிக்கவில்லை. தூரத்தில் இருந்து ஆசை தீர பார்த்துக்கொண்டோம். சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் அங்கு இருந்தால் அந்த இடம் எப்படி ஆர்ப்பாட்டமாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்...... அதை இந்த காணொளியில் பாருங்களேன் !


இந்தியாவில் எந்த கிரிக்கெட் மேட்ச் நடந்தாலும், சோம்பல் பட்டு நான் சுகமாக காலை நீட்டிக்கொண்டு டிவியில் பார்ப்பவன். ஆனாலும், ஒரு நாளாவது ஒரு உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானம் சென்று பார்க்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறியது ! ஏய்..... கேட்டுக்க, கேட்டுக்க, நானும் ரௌடிதான், நானும் ரவுடிதான்...... :-)


Labels : Suresh, Kadalpayanangal, Melbourne, Australia, MCG, Cricket, Stadium, World travel

15 comments:

 1. உங்கள் ஆசை மூலம் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது... நன்றி...

  /// நானும் ரவுடிதான் என்று காட்டி கொள்வேன் /// அது அந்த நாட்டின் கிரிக்கெட் 'வீரர்'களின் ராசி...! ஹிஹி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. உலகை சுற்றிய அரசி துளசிகோபால். அரசன் நீங்க தானா?

  ReplyDelete
  Replies
  1. ஐயோ..... அப்படியெல்லாம் இல்லீங்க..... ஏதோ நான் சென்றதை சொன்னேன், துளசி கோபால் போல எல்லாம் சுற்ற முடியாது !! நன்றி சார் !

   Delete
 3. ஒத்துக்கிறேன்.....ஒத்துக்கிறேன்...நீங்க ரெளடிங்கிறதை.......ஹி..ஹி...ஹி.....

  ReplyDelete
  Replies
  1. பொன் சந்தர் இப்போ எங்க இருக்கீங்க..... சீனா, மலேசியா அப்படின்னு சுற்றும் நீங்கள்தான் உண்மையான உலகம் சுற்றும் வாலிபன் !

   Delete
 4. எனக்கு கிரிக்கெட் பிடிக்காது. மைதானத்தின் பிரம்மாண்டம் ஆச்சர்யப்பட வைக்குது சகோ!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 5. பேட்டை ரவுடிக்கு எனது வணக்கங்கள்..! அவ்வ்வ்வ்..!

  ReplyDelete
  Replies
  1. அண்ணாத்தே..... அப்டிக்கா குந்திகினு போ ! அகாங்.....

   Delete
 6. Replies
  1. நன்றி நண்பரே.... நீங்களும்தானே !

   Delete
 7. அருமையான அனுபவம்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே !

   Delete
 8. ஒவ்வொரு முறையும் உங்களிடம் இருந்து இப்படி அறிமுகபடுதியதர்க்கு இப்படி வரும்போது மகிழ்ச்சி அடைகிறேன், உங்களது பதிவுகளை போலவே எனது பதிவையும் நினைத்து ஆனந்தம் அடையும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை !

  ReplyDelete
 9. நான் எடுத்த புகைப்படங்கள்:

  https://photos.app.goo.gl/pAbA17zPD9LFF2vP9

  ReplyDelete