Friday, January 3, 2014

உயரம் தொடுவோம் - சுழலும் உணவகம், கோலாலம்பூர்

பொதுவாக உயரமான இடத்திற்கு செல்லும்போது மனதில் பயம் இருந்தாலும் அந்த த்ரில், அதற்காகவே அங்கு செல்லுவது என்பது எனக்கு பிடிக்கும். சில சமயங்களில் அந்த உயரத்தில் காற்று வீசும்போது பயம் சற்று அதிகமாகும்..... அதுவே அந்த இடமே சிறிது நகர்ந்தால் என்னவாகும் ?! உலகின் மிக சில நாடுகளிலே மட்டும் நகரும் டவர் என்னும் ஒன்று இருக்கும். அதாவது ஒரு டவரின் உச்சிக்கு சென்று விட்டால், அதில் பல அடுக்குகள் இருக்கும், ஆனால் நடுவில் இருக்கும் அடுக்கு மட்டும் சக்கரம் போல மெதுவாக சுற்றும். உங்களுக்கு அது நகர்வது என்பது தெரியாது, ஆனால் ஒவ்வொரு ஐந்து நிமிடமும் உங்களது ஜன்னலுக்கு வெளியில் நீங்கள் காட்சிகள் மாறுவதை பார்க்கலாம் !



தற்போது அங்கு இயங்கும் உணவகத்தின் பெயர் !



மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெட்ரோனாஸ் கோபுரம் கட்டபடுவதர்க்கு முன்பு  இருந்த பெரிய டவர் என்பது இதுதான்..... இதை KL டவர் என்பார்கள். 1995ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இது தொலைதொடர்ப்புக்கு பயன்பட்டது. உலகின் ஏழாவது  மிக பெரிய டவர் என்பது இதன் சிறப்பு. ஆனாலும் இதன் இன்னொரு சிறப்பு என்பது அதன் சுழலும் தளம். 421 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடம், வெளியே மலேசியா தலைநகரின் எழில்மிகு தோற்றம், அவ்வப்போது வந்து போகும் ஒளி வெள்ளத்தில் மலேசியா இரட்டை கோபுரம், மெல்லிய மனதை மயக்கும் இசை, மிக சிறந்த உணவுகள், அவற்றோடு நீங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே 360 டிகிரி கோணத்தில் சுற்றி பார்க்கலாம் !!

மலேசியா ரெட்டை கோபுரமும் KL டவரும்.......

உலகின் பெரிய டவர்களும்....... KL டவரும் 

நான் சென்று இருந்த போது அந்த உணவகத்தின் பெயர்.....

அந்த டவரின் தோற்றம்....


இதில் இருக்கும் நான்கு தளத்தில், இரண்டாவதில் இருக்கிறது Atmosphere 360 டிகிரி என்னும் உணவகம். மற்ற எல்லா தளங்களும் சுழலாது, ஆனால் இந்த தளம் மட்டும் ஒரு மெல்லிய சுழற்சியில் இருக்கும். இதனால் நீங்கள் ஒரு இரண்டு நிமிடம் நின்றால் வெளியே காட்சிகள் மாறி இருக்கும் ! முதலில் நாங்கள் சென்றபோது இந்த தளத்திற்கு லிப்ட் மூலம் சென்றோம், பின்னர் அங்கு இருந்த உணவகத்தில் கண்ணாடியின் அருகில் மேஜை ஒன்று ரிசேர்வ் செய்து இருந்தோம். வெளியே மலேசியா ஒளி வெள்ளத்தில் மிதந்துகொண்டு இருந்தது. அங்கு பப்பெட் முறை உணவு என்பதால், எழுந்து சென்று உணவை எடுத்துக்கொண்டு திரும்பினால் எங்களது மேஜை இருந்த இடத்தை காணவில்லை !

அந்த உணவகம் புகழ் பெற்றது என்பதற்கு அத்தாட்சி !

நாங்கள் உட்கார்ந்து இருந்த டேபிள் மற்றும் அதன் வெளியே தெரிந்த காட்சி !

மலேசியா நகர் ஒளி வெள்ளத்தில் !
உணவு இருக்கும் இடங்கள் எல்லாம் நகராது, அதை தாண்டி வெளி இடங்கள் மட்டுமே சுற்றும் வகையில் அமைந்து இருந்தது ! நாங்கள் எங்களது இடத்தை தேடி உட்கார்ந்தவுடன் வெளியே மாறும் காட்சிகளை பார்த்துக்கொண்டே சாப்பிட்டோம். ஒரு சமயத்தில் வெளியே ஒளி வெள்ளத்தில் இரட்டை கோபுரம் தெரிந்தது கண் கொள்ளா காட்சி ! உலகின் மிக சிறந்த பல உணவகங்களில் நான் உண்டு இருந்தாலும் இது முற்றிலும் ஒரு புதுமையான ஒரு அனுபவமே ! விஞ்ஞானத்தில் நிறைய புதுமைகள் வந்து அது இப்படிப்பட்ட ஒரு உணவகத்திலும் இருந்தது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது ! ஒரு முறை நீங்களும் இது போன்று உண்டு பாருங்கள்........ சொர்க்கம் என்பது தனியே இல்லை என்று தெரியும் !

வெளியே என்ன தெரியுது !!


ரெட்டை கோபுரம் ஒளி வெள்ளத்தில் !
KL கோபுரம் கீழே இருந்து..... என்ன அழகு இல்லை ! 

Labels : Touch the sky,  Uyaram thoduvom, KL tower, Menera tower, Suresh, Kadalpayanangal

20 comments:

  1. ஆகா... ஆகா... என்ன அழகு...! சொர்க்கம் தான்... உலகின் பெரிய டவர்களும்....... KL டவரும் விளக்கத்தோடு அனைத்தும் பிரமாதம்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்.... நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்கிறேன் !

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி கார்த்திக்...... உனது வலைப்பூவில் MIT படம் எல்லாம் போட்டு அமர்களபடுதிவிட்டாய். இன்னும் நிறைய எழுதலாமே !

      Delete
  3. அந்த அழகை நானும் பருகினேன் ஒருமுறை..

    ReplyDelete
    Replies
    1. வாவ்..... நீங்களும் அங்கே போய் இருக்கீங்களா ?! நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் ஆவி !

      Delete
  4. கோலாலம்பூர் டவரினை நானும் ஒரு முறை பார்த்திருக்கின்றேன் நண்பரே
    நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை மலேசியா வந்திருக்கின்றேன்
    தங்களின் பதிவினைப் பார்த்ததும் மலரும் நினைவுகள், தோன்றுகின்றன
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயகுமார்..... உங்களின் நீனைவுகளை எனது பகுதி மீண்டும் தூண்டி விட்டது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் !

      Delete
  5. Replies
    1. தமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி நண்பரே !

      Delete
  6. You are talking about only Towers or buildings too. Dubai Burj Khalifa height is 828 m (http://en.wikipedia.org/wiki/Burj_Khalifa)

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..... நான் எல்லாவற்றையும்தான் சொன்னேன். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  7. Replies
    1. நன்றி நண்பரே..... ஒரே வார்த்தையில் மனதை குளிர வைத்துவிட்டீர்கள் !

      Delete
  8. ஆண்டு நானும் இந்த அழகை நேரில் அனுபவித்துள்ளேன் நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..... அந்த அழகு இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது இல்லையா ?

      Delete
  9. அழகோஅழகு.

    நமக்கு இன்னும் காணக்கிடைக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரமே நாம் இருவரும் ஒரு கோபுரம் கட்டுவோமே ! சிந்திப்பதை பெரிதாக சிந்திப்போமே ! நன்றி !

      Delete
  10. Replies
    1. ஹா ஹா ஹா.... உண்மைதான் கிருஷ்ணா !

      Delete