Monday, January 6, 2014

மறக்க முடியா பயணம் - நீளிமலா நீர்வீழ்ச்சி, வயநாடு

சென்ற வருடத்தில் நண்பர்களுடன் வயநாடு சென்று இருந்தேன். வயநாட்டில் இயற்க்கை பச்சை பசேல் என்று விரிந்து இருந்தது. சரியாக பிளான் செய்து செல்லவில்லை என்றால் நீங்கள் ஒவ்வொரு இடத்திற்கும் செல்வதற்கே நேரம் ஆகிவிடும், ஒவ்வொன்றும் அவ்வளவு தூரம். சென்ற முறை சூச்சிபாரா நீர்வீழ்ச்சி பற்றி எழுதி இருந்தேன், அந்த நீர்வீழ்ச்சியாவது மிகவும் பிரபலம், அதனால் பாதை எல்லாம் போட்டு வைத்து இருந்தார்கள், அதில் நீங்கள் சென்று குளிக்கலாம். ஆனால், இந்த நீளிமலா நீர்வீழ்ச்சியை நீங்கள் தூரத்தில் இருந்து பார்க்கத்தான் முடியும் !!




மெயின் ரோட்டில் ஒரு சிறிய தட்டி வைத்து நீளிமலா நீர்வீழ்ச்சி செல்லும் வழி என்று போட்டு இருக்கின்றனர். வேகமாக செல்லும்போது நீங்கள் அதை பார்க்க மறந்தால் அவ்வளவுதான் ! ஒன்றரை கிலோமீட்டர் தானே நடந்து சென்றுவிடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்..... நீங்கள் அங்கு நடந்து சென்றபிறகு திரும்பி வர தெம்பு இருக்காது !! அங்கு இருந்து சுமார் இரு கிலோமீட்டர் தூரத்திற்கு உங்களை ஏற்றி செல்ல வண்டிகள் இருக்கிறது, ஆளை பார்த்து உங்களுக்கு விலை வைப்பார்கள். சுமார் ஐம்பதில் இருந்து நூறு வரை ஒரு ஆளுக்கு ஆகிறது. பின்னர் உங்களை அந்த இடத்திற்கு அழைத்து செல்ல ஒரு கைடு வேண்டும். அதற்க்கு தனி சார்ஜ் !


 
மலை பாதையில்..... பாதையில் என்றா சொன்னேன், அட அது பாதையே இல்லை, மிகவும் குறுகலான ஒரு மண் ரோடு. அந்த பாதையில் நீங்கள் செல்லும்போது உங்களுக்கு அடுத்து அதல பாதாளம் தெரியும், அவ்வளவு குறுகலான பாதை ! டிரைவர் பாட்டு பாடி கொண்டே செல்லும்போது இங்கே முகாரி ராகம் கேட்கிறது. முடிவில் ஒரு ஒத்தை அடி பாதை வரை சென்று அங்கு இருந்து கைடு உங்களை கூட்டி செல்லும்போது இதோ வந்து விடும் என்றுதான் தோன்றுகிறது, ஆனால் பாதை நீண்டு கொண்டே செல்கிறது. செங்குத்தாக சில இடங்களில் இறங்குகிறது, மறு பக்கம் அதல பாதாளம். மழை பெய்யும்போது மட்டும் இங்கு செல்லவே வேண்டாம், வழுக்கினால் நேரே சொர்க்கம்தான் !




பாதை வளைந்து நெளிந்து செல்லும்போது மூச்சிரைக்க நானும் சென்றேன். முடிவில் ஒரு பாதையின் முடிவில் மலை முகடு தெரிந்தது. சுற்றிலும் பச்சை பசேல் என மலை, அதில் வெகு தூரத்தில் சிறிது தண்ணீர் விழுகிறது, மேகங்கள் நம்மை கடந்து செல்கிறது. கூட்டி கொண்டு சென்றவர், இப்போது தண்ணீர் கொஞ்சம் கம்மி.... இந்த மாத முடிவில் மழை பெய்தவுடன் அந்த அருவியில் இருந்து வெள்ளி போன்று தண்ணீர் கொட்டுவது தெரியும் என்றபோது அதை அப்பவே சொன்னால் என்ன என்று தோன்றியது. ஆனாலும் அந்த மலை முகட்டில் எந்த விதமான பிடிமானமும் இல்லாமல் குளிர் காற்றை வாங்கி கொண்டு, மேகம் நம்மை கடக்க அந்த இயற்கையை ரசிப்பது என்பது நிச்சயம் அருமையாக இருந்தது !





 
நாங்கள் திரும்பும்போது அங்கு சூரியன் மறைய ஆரம்பித்தது, மேகமும் சூரிய வெளிச்சமும் போட்டி போட்டு கொண்டு பல வண்ணங்களை இறைத்து அந்த இடங்களை அழகாக்கி கொண்டு இருந்தது.......!! முடிவில் நாங்கள் திரும்பும்போதுதான் தெரிந்தது நாங்கள் திரும்பவும் அதே பாதையில் அந்த வண்டியில் அந்த இருட்டில் செல்ல வேண்டும் என்பது. வெளிச்சம் இருக்கும்போதே அந்த இடத்தில வண்டி ஓட்டுவது கடினம், இதில் கும்மிருட்டில் எப்படி என்று இதயம் தொண்டை வரை வந்தது. வண்டியில் ஏறி உட்கார்ந்தவுடன், அவசர வழி ஏதேனும் இருக்கிறதா அந்த ஜீப்பில் என்றுதான் தேட தோன்றியது. நாங்கள் சென்ற பல பாதைகள் செங்குத்து என்று சொல்லும்படியாக இருந்தது. இதனால் டிரைவர் வண்டியை சற்று திருப்பினாலும் அவ்வளவுதான். முடிவில் மெயின் ரோடு வந்து சேர்ந்தபோது வேர்த்து சட்டை ஒட்டி இருந்தது. அப்போது எங்களோடு வந்த அந்த கைடு "சேட்டா.... எப்படி இருந்தது. அடுத்த முறை தண்ணி வரும்போது வாங்க" என்றபோது வந்த உணர்வுக்கு அளவே இல்லை !!



Labels : Neelimala view point, Kerala, suresh, kadalpayanangal, amazing view, waterfalls

22 comments:

  1. செம பயணம் சார்.. பார்க்கும் போதே போகணும் போல இருக்கு.. இந்த மாதிரி எங்கியாது போனா ஒரு வார்த்த சொல்லுங்க.. "நானும் வரேன்னு" ரெண்டு வார்த்த சொல்றேன் :-)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சொல்றேன் சீனு..... உங்களோட ஒரு பயணம் போகணும் அப்படின்னு இந்த வருட கனவு என்பது உங்களுக்கு தெரியுமா ? நன்றி !

      Delete
  2. என்ன அழகான இடம்...! ரசிக்க வைக்கும் படங்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்..... உங்களது பிறந்தநாளான இன்று இந்த பதிவு உங்களை ரசிக்க வைத்தது கண்டு மகிழ்ச்சி !

      Delete
  3. அழகான இடம்... உமக்கு எப்படியா இத்தனை ஊர்க்கு போறதுக்கு நேரம் இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. சதீஷ்...... உங்களை போலதான் நானும், ஆனாலும் இந்த பயணம் போக வேண்டும் என்றாலே எப்படியாவது லீவு எடுத்து விடுகிறேன் ! அது ரகசியம்.... போன் போடுங்க சொல்றேன் !

      Delete
  4. Oh..Suresh you also went to wayanad !!!, One such a heck of a place ! but the memories will be there for such a long time. I missed out this Neelimala, but went to Chembra Peak, Soochipara (can you recollect how tiresome you were?), Pookot lake, KuruvaDweep and Tiruneely Temple (what a beautiful place !). Below is the new Cricket Stadium they build on-Fantastic look take look on (https://www.facebook.com/#!/pages/Wayanad-Cricket-Stadium/227448894090256?fref=ts)

    ReplyDelete
    Replies
    1. ஹாய் பாபு, உங்களது பாராட்டுக்கும், கருத்திற்கும் நன்றிகள் ! ஆம், அந்த சூச்சிபாரா நீர்வீழ்ச்சி பற்றி நினைத்துபார்த்தாலே சந்தோசம் வருகிறது. வாவ்... கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டி இருக்கிறார்களா !! தகவலுக்கு நன்றி !

      Delete
  5. அண்ணே.. செம அட்வெஞ்சர் ட்றிப் போலருக்கு .. அடுத்து நம்ம டார்கெட் வயநாடுதான் ..!

    ReplyDelete
    Replies
    1. சரி சரி.......போயிட்டு வா, ஆனால் தனியாவா இல்லை நண்பிகலோடா !!

      Delete
  6. super sir since i am a physically challenged person I cannot even dream.Any how thank you very much for uploading nice photos

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...... முயன்றால் எதுவும் முடியாதது இல்லை, நீங்களும் சென்று வரலாம். உங்களது பதிவுகளில் நீங்கள் அதை போடும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது !

      Delete
  7. அடுத்த முறை எனது கேரளா டிரிப் வயநாடு தான்... ஜீப்பில் போவதற்கு பதிலாக நடந்து சென்றால் இன்னும் அருமையாக இருக்கும் என்று தோன்றுகிறது....

    ReplyDelete
    Replies
    1. ஜீப்பில் போகாமல் நடந்து போவதா.... நினைத்தாலே கொலை நடுங்குகிறது, சரி சரி போயிட்டு வந்து சொல்லுங்களேன். நன்றி !

      Delete
  8. செம திரில் பயணம் தான்.படங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமார்......தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  9. அழகான இடம். . நமதுநாட்டு தலவைக்கலை டிவோன் நீர்வீழ்சியை ஒத்ததுபோல இருக்கின்றது. பிரதானபாதை ஓரம்நின்றே ரசிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி.... அது என்ன தளவைகலை நீர்வீழ்ச்சி, அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் !

      Delete
  10. TODAY ONLY I SAW YOUR SITE SOON I WILL REACH U

    ReplyDelete
  11. TODAY ONLY I SAW YOUR SITE SOON I WILL REACH U

    ReplyDelete