ஒரு முறை வெளிநாட்டில் ஒரு காப்பியின் விலை சுமார் நான்காயிரம் என்று பார்த்தேன், அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்தபோது அதை தங்க கோப்பையில் தருகிறார்கள் அத்தோடு உலகின் மிக சிறந்த காப்பி கொட்டையில் இருந்து சுட சுட தருவதால் இவ்வளவு ஆகிறது என்று அந்த ஸ்டார் ஹோடேலில் சொன்னபோது....... ம்ம்ம்ம்ம் வாழ்வு என்று நினைத்தேன், ஆனால் சாப்பிடவில்லை !! இந்த முறை மதுரை சென்று இருந்தபோது பெரியார் நிலையத்தில் இருந்து சுமார் 15 நிமிட தூரத்தில் இருந்த பெத்தானியாபுரம் பக்கத்தில், பப்பீஸ் என்னும் ஒரு ஆடம்பர பேக்கரி இருந்ததை பார்த்தேன். உள்ளே நுழைந்து வீட்டிற்க்கு சிலவற்றை வாங்கப்போன போது ஒரு போஸ்டர் கண்ணில் பட்டது...... 24k தங்கம் சேர்த்து ஒரு காபி என்று !! கண்ணில் மின்னியது அந்த தங்கம், சரி ஒரு கப் சொல்லலாம் என்று மனம் குதிக்க ஆரம்பித்தது !
அதை பற்றி கடையில் வேலை பார்ப்பவர்களை கேட்டபோது அந்த போஸ்டர் ஒட்டியது பற்றி அவர்களுக்கே தெரியவில்லை, சற்று முன்புதான் அதை செய்திருக்கிறார்கள். நம்மை ஆண்டவன் இதை சாப்பிடவே அனுப்பி இருக்கிறான் போல என்று முடிவு செய்து அதை சாபிடாமல் போகமாட்டேன் என்று அடம் பண்ணவும், அவர்கள் சென்று மேனேஜரை கூட்டி வந்தனர். அவரோ அது இப்போதுதான் வந்து இறங்கி இருக்கிறது இன்னும் யாருக்குமே அது தெரியாது என்று சொல்லி, அதை நாளையில் இருந்து ஆரம்பிக்கிறோம் என்று சொன்னவுடன் நான் தரையில் காலை உதைத்து அழும் குழந்தையை போல அந்த காபி குடிக்காமல் அங்கிருந்து கிளம்பமாட்டென் என்று சொல்ல அந்த மேனேஜர் தாடையை சொறிந்து கொண்டு உள்ளே சென்று யாருடனோ பேசி விட்டு வந்தார்...... பின்னே, அந்த காபி குடிச்சு நாம தக தகன்னு MGR போன்று மின்னுவதை தடுக்க வெளிநாட்டில் இருந்து செய்யும் சதி இல்லையா இது !!
முடிவில் அவர் வந்து ஒரு பதினைந்து நிமிடம் ஆகும், என்று சொல்ல நான் அங்கேயே வெயிட் செய்கிறேன் என்றேன். சுமார் இருபது நிமிடம் கழித்து ஒரு கோப்பை நிறைய காபி வர மனது குதிக்க ஆரம்பித்தது இங்கு...... அதை சாப்பிட்டவுடன் ரஜினி வெள்ளை ஆனது போல நானும் ஆகிவிடுவேன் என்று மனது முழுக்க நம்பிக்கை ! வெள்ளை கோப்பையில் நுரை ததும்ப என் முன்னால் வைத்தார்கள். அதன் மேலே பள பளவென்று தங்கத்தில் தூள்கள் மின்னியது !! வெறும் தூள்கள் போல் இல்லாமல் நட்சத்திரம், ரவுண்டு என்று ஷேப் இருந்தது. அங்கு இருந்த எல்லோரும் என்னையே பார்க்க நான் அடுத்து செய்தது கண்டு முகம் சுழித்தனர் !!
அந்த கோப்பையில் இருந்த காப்பியை ஆனந்தமாக பார்த்து, ஒவ்வொரு தங்க துகள்களையும் மெதுவாக ரசித்து பின்னர் அதை கொடுத்த பிளேட்டில் சாய்த்து சர்ரென்று உறிஞ்ச...... பின்னே தங்கமாச்சே !! எல்லோரும் ஒரு தங்க காபியை இதுவரை இப்படி சாப்பிட்டு பார்த்ததில்லை போலும், ஆனாலும் நான் வெட்கபடாமல் நின்று நிதானித்து சுகமாக ஒவ்வொரு உறிஞ்சளையும் தொடர எனது மேனியில் பளபளப்பு அதிகரித்தது போன்று ஒரு பிரமை :-). என்னதான் நாம டெல்லிக்கு ராஜாவாக ஆனாலும் அப்படி காபி குடிச்சாதான் மகிழ்ச்சி, என்ன நான் சொல்றது ?! ஒரு கோப்பை காபி சுமார் 105 ரூபாய் ஆனது, முடிவில் நான் அங்கு இருந்து கிளம்பி தக தகவென வீட்டுக்கு வந்து நுழைந்தபோது எனது மனைவி "வெளிய சுத்தாதீங்க அப்படின்னா
கேட்கறீங்களா.... பாருங்க எப்படி கறுத்து போய் வந்து இருக்கீங்க" என்று சொல்ல நான் காபி குடித்ததை அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று இன்றுவரை யோசித்துக்கொண்டு இருக்கிறேன் ! நீங்க அந்த போட்டோவை பார்க்கும்போது நான் கொஞ்சம் கலரா இருக்கிற மாதிரி தெரியலை ?!
சுவை - கேக், பேக்கரி வகைகள், சான்ட்விச் என்று நிறைய வகைகள் இருக்கிறது, காபியிலும் இருந்தாலும் தங்கம் தூவிய காபி டாப் !
அமைப்பு - பெரிய கடை, வியர்க்காமல் உட்கார்ந்து சாப்பிடலாம், பார்கிங் இருக்கிறது.
பணம் - இந்த காபி மட்டும் 105 ரூபாய், மற்ற உணவு எல்லாமே சிறிது விலை அதிகம்தான்.
சர்வீஸ் - நல்ல சர்விஸ். கூட்டம் அதிகமாக இருக்கிறபோது நீங்கள் இதையே எதிர்பார்க்க முடியாது !
![]() |
சரியா பார்த்து சொல்லுங்க வெள்ளையா ஆயிடேனான்னு...... இதுக்கு மேல கிராபிக்ஸ் பண்ணனுமின்னா மின்னல் வரிகள் கணேஷ் சாரைதான் கூப்பிடனும் !! :-) |
அட்ரஸ் :
Sivakasi : | Madurai : | |||
80, New Road Street, Sivakasi - 626 123 Ph : 04562 278855 e: sales@puppysbakery.com | 224, Theni Main Road (Near Bell Jumbo), Madurai - 625 016 Ph : 0452 - 2381177 / 88 | No.58, 80 Feet Road, Annanagar, Madurai - 625 020. Ph: 0452 2522270/80 |
Labels : Suresh, Kadalpayanangal, Puppys bakery, Gold coffee, Gold, concept coffee, kaapi, 24K
ஆனாலும் இந்தளவு கலராக மாறக் கூடாது...! ஹா... ஹா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி சார்....... கண்ணை கூச வைத்துவிட்டேனோ.....ஹி ஹி !!
Deletesuperb!தங்க மகன்.
ReplyDeleteநன்றி சுபா...... தங்கமகன் என்று சொன்னது கண்டு மகிழ்ச்சி !! வருகைக்கு நன்றி !
DeleteAttagasam suppar anna THAGA THAGANNU minnuringa
ReplyDeleteநன்றி தம்பி....... இப்படி எல்லாம் கிராபிக்ஸ் பண்ண வேண்டியதாய் இருக்கு பார் !! :-)
Deleteஒரு கூடை சன் லைட்
ReplyDeleteஒரு கூடை மூன் லைட்
ஒன்றாக சேர்ந்த
கலர் தானே என் ஒயிட்
அப்பத்தா வெச்ச கறுப்பே
இப்பத்தான் செக்கச் சிவப்பே
எப்போதும் பச்சைத் தமிழன்
கலக்குங்க சாரே ! ! !
ஓஹோ பாட்டாவே பாடிடீங்கலா சார்....... நடுவுல மானே, தேனே எல்லாம் போடலாமா ?! :-) வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !
Deleteதக தகன்னு இருக்கீங்க சுரேஷ்...
ReplyDeleteநன்றி மேடம்..... நிஜமாதான் சொல்றீங்களா, இருங்க கிள்ளி பார்த்துக்கறேன் !
Deleteஇப்படி அநியாயமா பல்பு வாங்கி இருக்கீங்களே சுரேஷ் ஜி ?அந்த கடையைப்பற்றி விளம்பரம் வேறு !
ReplyDeleteபல்பா.... என்ன சொல்றீங்க ஜி ?! என்னுடைய அனுபவத்தைதானே சொல்கிறேன், இதுல எங்கே விளம்பரம் வந்தது ?!
Deleteதம்பி! நீங்க எம்ஜிஆர் போல தக தகன்னு மிண்ணுறீங்க. சரி உங்க வூட்டம்மா நம்பர் அதே பத்து எண்கள்தானே!? மாத்திடலியே!
ReplyDeleteஇப்போ எதுக்கு வீட்டம்மா நம்பர், எதுக்கு குடும்பத்துல குழப்பம் உண்டு பண்றீங்க ?! :-) நன்றி..... வருகைக்கும், கருத்திற்கும் !
Deleteபளிச்சுன்னு கலரா ஆகிட்டாங்க போங்க .உங்கள் வீட்டில் கிடைத்த வரவேற்புக்கு பின்பும் கேட்பதற்கு துணிச்சல் வேண்டும் :)
ReplyDeleteஅது என்ன வரவேற்ப்பு என்று சொல்லும் இடத்தில் அழுத்தம் கொடுக்குறீங்க.......உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா ?? நன்றி !
Deleteஆமா எல்லாம் சரி தங்கமா மின்ன அதில் என்னத்தை போட்டாங்கன்னு கேட்கவேயில்லையா... தங்கம் விக்கற விலையில....அப்படியே பில்டர் செய்து எடுத்துட்டு போயிருந்தா வீட்டம்மா சந்தோசப்பட்டிருப்பாங்க இல்ல...
ReplyDeleteஇப்படி மாத்தி யோசிக்கிறீங்க பாருங்க......அதுதான் நீங்க. என்ன இருந்தாலும் நான் வெள்ளையானது உங்களுக்கு பிடிக்கலையோ ?! :-) நன்றி மேடம் !
Deleteஅட தங்க பஸ்பம் சாப்பிட்ட மாதிரி என்ன ஒரு build up?! கடை காரர் நினைத்திருப்பார் இவர் ஒரு பேன்ட் போட்ட குழந்தை
ReplyDeleteசரியா சொன்னீங்க போங்க.... நான் அடம் பிடித்ததை பார்த்து அப்படிதான் நினைத்து இருப்பாங்க ! நன்றி, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் !
Deleteநன்றி ஜெயக்குமார் சார்..... நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்ச்சி !
ReplyDeleteStay Coffee :-)
ReplyDelete