Wednesday, February 12, 2014

ஊர் ஸ்பெஷல் - பவானி ஜமுக்காளம்

இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் இதுவரை வெறும் வார்த்தைகளாக மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்த ஒவ்வொரு ஊரின் சிறப்பையும் நேரில் சென்று பார்த்து அதன் இன்றைய நிலைமையையும், அது உருவாகும் விதத்தையும் கொடுத்து வருகிறேன், அதை நீங்கள் விரும்பி படிக்கிறீர்கள் என்பதே இன்னும் இதுபோல் தேடி செல்ல தூண்டுகிறது ! இந்த வாரம் பவானி ஜமுக்காளம் !! சிறு வயதில் அப்பா வீட்டிற்க்கு ஜமுக்காளம் வாங்க போகும்போது என்னையும் கூட்டி சென்றார், அப்போது ஜமுக்காளம் விற்பவரிடம் "என்னப்பா பவானி ஜமுக்காளம் மாதிரி நல்லா உழைக்குமா ?" என்று கேட்டது நினைவுக்கு வந்தது இந்த பதிவுக்கு செல்லும்போது. யாரிடம் கேட்டாலும் இந்த ஊர் ஜமுக்காளம் நன்கு உழைக்கும், எவ்வளவு வருடம் ஆனாலும் கிழியாது என்றெல்லாம் சொல்லுவார்கள், நான் அதை நேரில் கண்டேன் என்பதே சந்தோசம் ! வாருங்க பவானி செல்லுவோம்..... ஜமுக்காளம் வாங்க !!








பவானி இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரமாகும். இது காவிரி ஆறும் பவானி ஆறும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ் பெற்றவை. பவானி கைத்தறி தரை விரிப்பு என்பவை பவானி கைத்தறி ஜமக்காளம், பவானி கைத்தறி ஜமுக்காளம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. இத்தரை விரிப்புகள் (படுக்கை விரிப்புகள்) மிகவும் தடிமனானவை. வண்ண வண்ண நிறங்களில் கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகளுடன் திகழ்பவை. சாயம், நெசவு, வடிவமைப்பு எல்லாம் ஒரு கைவினை மரபைப் பின்பற்றி தயாரிக்கப்படுகின்றன. பவானி சுற்று வட்டாரத்தில் குருப்பநாய்க்கான்பாளையம், சேத்துநாம்பாளையம், பெரிய மூலப்பாளையம் பகுதியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஜமக்காளத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பவானி சுற்று வட்டாரத்தில் தினமும் ஆயிரக்கணக்கில் ஜமுக்காளம் தயார் செய்யப்படுகிறது.
















ஜமுக்காளம் செய்வதை பார்க்க வேண்டும் என்று பவானி சென்றபோது எந்த தெருவில் நுழைந்தாலும் தறி ஓடிக்கொண்டு இருந்தது. வீட்டின் முன் பெரிய நூல்களாய் கட்டி இருப்பதை பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருந்தது. மெதுவாக அவர்களுடன் பேசியதில் இருந்து....... ஜமக்காள உற்பத்தி செய்ய, 2க்கு 10, 2க்கு 6 மற்றும் 10ம் நெம்பர் நூல் பயன்படுத்தப்படுகிறது. ஜமுக்காளத்தில் காட்டன், அக்ரலின், ஆட்ஸ் சில்க் என மூன்று ரகங்கள் தயாரிக்கப்படுகிறது. பவானி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், பவானி கூடுதுறைக்கு செல்லும் வழியில் இயங்குகிறது. இச்சங்கத்தில் மொத்தம், 1,292 பேர் உறுப்பினராக உள்ளனர். இவர்களிடம் மொத்தம், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறிகள் மூலம் ஜமுக்காளம் உற்பத்தி செய்யப்படுகிறது. பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் மொத்தம், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன.







ஜமுக்காளம் செய்யும் தறிக்கு சென்றபோது ஆச்சர்யமாக இருந்தது..... அங்கு இருவர் உட்கார்ந்து ஜமுக்காளம் நெய்து கொண்டு இருந்தனர் ! பொதுவாக போர்வை, புடவை என்பதெல்லாம் நெய்வதற்கு ஒருவர் மட்டுமே போதும், ஆனால் இந்த ஜமுக்காளங்கள் எல்லாம் பெரிய சைசில் இருந்தால் இருவர், சில சமயத்தில் மூவர் கூட செய்வார்களாம். அது மட்டும் இல்லை, ஜமுக்காளத்தில் உபயோகபடுத்தபடும் நூல்கள் மிகவும் தடிமனாக இருப்பதால், தறியில் போட்டு அடிக்கும்போது எவ்வளவுதான் வேகமாக அடித்தாலும் அந்த நூல் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் செல்வது கடினமாக இருந்ததை பார்க்க முடிகிறது. அது மட்டும் இல்லை ஒவ்வொரு முறையும் ஜமுக்காளத்தின் ஓரத்தில் அந்த நூலை சரியாக சுற்றுகின்றனர், இல்லையென்றால் அது பிரிந்துவிடும் என்று !



பவானியில் தயாராகும் ஜமுக்காளங்கள் மிகவும் கண்ணை பறிக்கும் வண்ணங்களில் இருக்கும், அதற்க்கு இங்கு இடப்படும் சாயமும், பவானி நீரும் என்கின்றனர். ஜமுக்காளம் என்பது பல சைஸ்களில் கிடைக்கிறது, பொதுவாக  28க்கு 72 இஞ்ச், 34க்கு 72 இஞ்ச், 40க்கு 78 இஞ்ச், 38க்கு 78 இஞ்ச், 50க்கு 90 இஞ்ச், 60க்கு 90 இஞ்ச், 61க்கு 90 இஞ்ச் என்ற அளவில் ஜமுக்காளம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜமுக்காளம் என்று சொன்னாலே அதில் வரும் அந்த நேர்த்தியான கலர் கோடுகள்தான் நமக்கு நினைவுக்கு வரும், ஒவ்வொன்றும் பட்டை பட்டையாக ஒவ்வொரு கலரும் ஒரு சைசில் வரும், அது என்ன விதமான விதி என்று அறிந்துக்கொள்ள நிறைய முயன்றும் எனக்கு புரியவில்லை. அவர்கள் சொன்னதில் இருந்து அது எல்லாமே மன கணக்கு மட்டும் என்றும் அது புத்தகத்திலோ அல்லது எங்குமோ குறித்து வைத்துக்கொள்ள படவில்லை என்று புரிந்தது. இன்று நவீன மெசின் கொண்டு ஜமக்காளத்தில் பூ, படம் என்றெல்லாம் செய்கிறார்கள் !




ஜமுக்காளம் இரண்டுக்கு 10 நூல், 10ம் நம்பர் நூல், உல்லன் நூல் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படுகிறது. இரண்டுக்கு 10 நூல் ஒரு கட்டு சென்றாண்டு 300 ரூபாயாக இருந்தது; இன்று 340 ரூபாயாக அதிகரித்துள்ளது. 10ம் நம்பர் நூல் 360 ரூபாயாக இருந்தது, இன்று 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. நூல் சாயமேற்ற கட்டுக்கு 60 ரூபாய் செலவாகிறது. ஜமுக்காளங்களை கைத்தறியில் உற்பத்தி செய்வோருக்கு 100 ரூபாய், 150 ரூபாய் தருகிறார்கள்.ஆனி, ஆடி மாதத்தில் ஜமுக்காள விற்பனை மிகவும் குறைவாக இருந்தது. ஆவணி துவங்கி ஒரு வாரமாகிவிட்டது; தற்போது சீஸன் ஆரம்பித்துவிட்டது. பவானியில் இருந்து குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் கைத்தறி ஜமுக்காளங்கள் ஏற்றுமதியாகிறது.






மினிமம் சைஸ் ஜமுக்காளம் 175 ரூபாய், அதற்கு அடுத்த சைஸ் 250 ரூபாய், 360 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. உல்லன் ஜமுக்காளம் விலை மற்ற ஜமுக்காளத்தை காட்டிலும் இரு மடங்காக விற்கப்படுகிறது. உல்லன் ஜமுக்காளம் ஆர்டர் பெற்றால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.பவானியில் இருந்து தினமும் குறைந்தபட்சம் 500 ஜமுக்காளம் மற்ற இடங்களுக்கு செல்கிறது.




Labels : Suresh, Kadalpayanangal, Oor special, District, Bhavani, Jamukaalam, Jamukalam, Bedsheet, Entha ooril enna sirappu

25 comments:

  1. அட...! எங்க தொழில்... தரமான நூலைக் கொண்டு தயாரித்தால் ஜமுக்காளத்தை நாம் கிழித்தால் தான் உண்டு... Power Loom-ல் வருவதெல்லாம் இவ்வாறு இருக்காது...

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் சார்...... எப்போதுமே கைத்தறியில் செய்யும்போது அதில் அன்பும் கலந்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் !! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  2. இன்றளவிலும் கைத்தறி ஜமக்காளம் பின்னப்பட்டு வருகிறது என்ற தகவலே மகிழ்ச்சி தருகிறது.. ஆமா சார் நீங்க இந்த சென்னை பக்கம் எல்லாம் வர மாட்டீங்களா :-)))

    ReplyDelete
    Replies
    1. chennai kku famous aana yethaavathu (marina, valluvar kottam, pondy bazaar, Mr.seenu) pathi yeluthunga!!

      Delete
    2. நன்றி சீனு / ஆவி...... உங்களோடு சென்னை சுற்றி பார்க்க வேண்டும், உங்களுக்கு தெரியாத சுவையான உணவகங்களை எல்லாம் செல்ல வேண்டும் என்ற ஆவல் உண்டு, விரைவில் வருகிறேன்.


      அப்புறம் சென்னையில் என்ன பேமஸ் என்று தெரியுமா....... பொருங்க சொல்றேன் !!

      Delete
  3. ஆச்சரியமான தகவல்கள்..

    சென்ற தலைமுறை வரை நூல்வியாபாரம்தான் எங்கள் குடும்பம் ..

    இந்தத்தலைமுறை தங்களை கணிணித் துறைக்கும் ,
    இஞ்சினியரிங் துறைக்கும் தயாரித்துக்கொண்டுவிட்டது,

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிகண்டன்...... எங்களதும் புடவை வியாபாரம்தான், இன்று கணினி துறையில். இந்த பயணத்தில் இப்படி பார்க்கும்போது அடுத்த தலைமுறையில் இப்படி மனிதர்கள் இதை செய்வார்களா !!

      Delete
  4. என்னங்க சுரேஷ் எங்க ஊருக்கு வந்துட்டு என்னைய அழைக்காம விட்டுட்டீங்க...

    ReplyDelete
    Replies
    1. அட உங்க ஊரு கோயம்புத்தூர் என்றல்லவா நினைத்தேன், விடுங்க அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக அழைக்கிறேன் ! வருகைக்கும், கருத்திற்கும் நன்றி தலை !

      Delete
  5. வணக்கம் !
    மனம் மகிழத் தந்த அருமையான தகவல் ! பவானி ஜமுக்காளத்தை இவர்கள்
    எப்படியெல்லாம் தயாரிக்கின்றார்கள் இதன் தர உயர்வுக்கு அவர்கள் பாவிக்கும்
    நூல் முதலியனவை பற்றி அழகிய படங்களுடன் கண்டும் வாசித்தும் மகிழ
    வைத்த தங்களுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்களும் பாரட்டுக்களும் .உழைக்கும்
    மக்களின் உயர்வுக்கு இது போன்ற பகிர்வுகளும் உயர்வைக் கொடுக்கும் என்பதில்
    ஐயமில்லை .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி..... இது போன்ற வார்த்தைகள்தான் என்னை எழுதவும் இப்படி பயணம் செய்யவும் தூண்டுகிறது.

      Delete
  6. One more useful information. Thanks for your effort to bring it in.
    Kumar Kannan

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி கண்ணன் !

      Delete
  7. //அவர்கள் சொன்னதில் இருந்து அது எல்லாமே மன கணக்கு மட்டும் என்றும் //

    OSM

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆவி..... OSM என்பது நூலின் அடர்த்தி, ஆனால் நான் சொல்வது என்பது ஜமுக்காளத்தின் டிசைன் !

      Delete
  8. எங்களுதும் நெசவு தொழில்தான். ஆனா, பட்டு நெசவு. அதைப் பத்திய பதிவு நீங்க போடனும்ங்குறது என் ஆசை சுரேஷ். சின்னப் பொண்ணு இப்ப பத்தாவது பரிட்சை எழுதப் போகுது. அவ பரிட்சை முடிஞ்சதும் நம்ம வீட்டுக்கு வாங்க. வந்து தங்கி பட்டுச் சேலைத் தயாரிப்புப் பத்தி எழுதுங்க. அதுக்கு நான் உதவி செய்யுறேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சகோதரி...... எனக்கும் அதை பற்றி எழுத வேண்டும் என்றுதான் ஆசை. விரைவில் வருகிறேன் !

      Delete
  9. கைதறி நெசவு சிறுவயதில் எங்கள் ஊரில் பார்த்து இருக்கிறேன். ஆலைகள் வந்த பிறக்கு கைதறி தொழில் படுத்து விட்டது .பள்ளி நாட்களில் கைத்தறி நெசவு என்று பாடம் இருந்தது நினைவுக்கு வருகிறது .

    ReplyDelete
    Replies
    1. இன்றும் கைத்தறி நெசவு சில கிராமங்களில் இருக்கிறது, நான் சென்று வந்த இடங்களில் சில நேரங்களில் இதை பார்த்து இருக்கிறேன். கைத்தறி என்றும் இருக்க வேண்டும்..... நன்றி ஸ்ரீனி, வருகைக்கும் கருத்திற்கும் !

      Delete
  10. idhu enga ooruu :) it is so nice to see my town specialty in your site..

    You know one thing, enga oorla kalyanathula ponnungalukku jamukkalamum oru seer ah kuduppanga..

    ReplyDelete
    Replies
    1. நன்றி.... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் ! "இது எங்க ஊரு" என்று சொல்லும்போது எவ்வளவு பெருமை. இன்று யாரு ஜமுக்காளம் எல்லாம் கொடுக்கிறார்கள் :-(

      Delete
  11. கோடி நன்றிகள் சார்...... ஒவ்வொரு முறையும் எனது தளம் அறிமுகபடுதும்போதும் நீங்கள் இப்படி எனக்கு தகவல் தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு பதிவர்களையும் நீங்கள் இப்படி உற்சாகபடுதுவதுதான் இந்த வலைத்தளங்களை எல்லாம் உயிர்ப்புடன் வைக்கிறது.

    ReplyDelete
  12. ஜமக்காளம் உங்கள் தேவைக்கு எங்களை அணுகுங்கள் நியாயமான விலையில் தரமான ஜமக்காளங்கள் நாங்கள் தயாரித்து அனுப்புகிறோம் எங்கள் வெப் சைட் www.sriramanatex.com Address : SRI RAMANA TEXTILES, 167, Gurunathan Street, Varnapuram, Near Govt Boys High School, Bhavani - 638301 Erode (Dt) Mob 9443014614, 9788716666, Ph 04256 230858

    ReplyDelete
  13. hai good morning sir எனக்கு மணமகன் மற்றும் மணமகள் பெயர் தேதி எழுதி ஜமக்காளம் தேவை தங்களிடம் கிடைக்குமா ?பதில் தேவை .மொபைல் எண் :9443467027

    ReplyDelete