Wednesday, February 19, 2014

அறுசுவை - பர்மா இடியாப்ப கடை, மதுரை

இடியாப்பம்..... இது நமது தமிழ்நாட்டில் அவ்வளவாக பேமஸ் இல்லை என்று சொல்லலாம். எந்த ஹோட்டல் சென்றாலும் இட்லி, தோசை, சப்பாத்தி, சாப்பாடு, வெண்பொங்கல், பூரி என்றுதான் இருக்கும். பஞ்சு போன்ற, வெள்ளையாய், நூல் போல இருக்கும் இடியாப்பம் அதற்க்கு தொட்டு கொள்ள குருமா அல்லது தேங்காய் பால் எல்லாம் கொடுக்கும் ஹோட்டல் என்பது மிகவும் குறைவே ! சிறு வயதில் அம்மா இடியாப்பம் செய்து அதற்க்கு தேங்காய் பால் ஊற்றி அதன் மேலே சீனி போட்டு சிறிது தேங்காய் துருவலையும் மேலே போட்டு  தரும்போது, ஒவ்வொரு வாய் எடுத்து வைக்கும்போதும் இருந்த அந்த சுவை இன்றும் நினைவுக்கு வரத்தானே செய்கிறது ?! இப்படி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் இடியாப்பம் இன்று மதுரையில் பிரபலமாக இருப்பது கண்டு அதிசயித்தேன்..... மிக பெரிய அதிசயம் என்பது இங்கு வெறும் இடியாப்பம் மட்டும்தான் !! கடை பெயரே.... "பர்மா இடியாப்ப கடை" !!



சமீபத்தில் மதுரை சென்று இருந்த போது, மாலை நேரத்தில் சிறிது பசித்தது. பஜ்ஜி, போண்டா என்று எதாவது சாப்பிடலாமா என்று யோசித்தபோது என்னை வாங்க வித்யாசமா உங்களுக்கு ஒரு கடை காண்பிக்கிறேன் என்று கூட்டி சென்றார் எனது நண்பர்....... வண்டியை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தால் "பர்மா இடியாப்ப கடை" என்று போர்டு. கடையின் முன் ஒரு பெரிய தட்டில் வெள்ளை வெள்ளையென இடியாப்பம் மலை போல அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சுமார் மூன்று பேர் பெரிய பெரிய இட்லி தட்டுக்களில் இடியாப்ப மாவை சுற்றி கொண்டு இருந்தனர். இவ்வளவு இடியாப்பத்தை பார்த்த எனக்கு நாக்கும் ஊறி, மயக்கமும் வந்தது !


என்ன இருக்கிறது என்று வாய் வரை வந்த கேள்வியை அடக்கியது அங்கு இருந்த இடியாப்பங்கள்.... வெறும் இடியாப்பம் மட்டுமே இங்கு ! நாங்கள் யோசிக்கும் பொழுதிலேயே சுமார் இருபது பேர் வரை அங்கு வந்து சாப்பிட்டும், பார்சல் செய்து கொண்டும் செல்கிறார்கள். இரண்டு இடியாப்பங்கள் வேண்டும் என்று கேட்க ஒரு தட்டில் வைத்து எனது மூஞ்சியை பார்த்தார்..... பக்கத்தில் இருந்த நண்பர் "தேங்காய் பாலா, குருமாவா ? " என்று கேட்க முதலில் தேங்காய் பால் என்றேன். சரசரவென்று இடியாப்பத்தின் மேலே சிறிது ஊற்றி ஜீனி தூவி கொடுக்கின்றனர். முதல் வாய் எடுத்து வைத்தவுடனேயே சிறு வயதில் சாப்பிட்ட யாபகம் வருகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக சிக்கலை பிரித்து இடியாப்பம் சாப்பிட்டு முடித்தவுடன் இன்னும் கொஞ்சம் என்று மனம் விரும்ப ஆரம்பிப்பது நிஜம் !



இந்த முறை இரண்டு இடியாப்பம் வாங்கி விட்டு, குருமா ஊத்துங்க என்றேன். இடியாப்பத்திற்க்கு சிறு வயதில் அம்மா நேற்று வைத்த வத்தகுழம்பு ஊற்றுவார்கள், அவ்வளவு அருமையாக இருக்கும். இங்கு கேரட், பீன்ஸ் என்று போட்டு சற்று மசாலா தூக்கலாக புளி சிறிது விட்டு குழம்பு ஊற்றும் போது அதன் வாசனையே உங்களை அசத்தும், இடியாப்பத்தை பியித்து சிறிது கொழம்பு தொட்டு சாப்பிட இந்த முறை தேங்காய் பாலை விட நன்றாக இருப்பதாக தோன்றும் ! அட...... ஒரு இடியாப்பதில்தான் எத்தனை சுவையை வைத்திருக்கிறான் ஆண்டவன் :-)


அடுத்த முறை செல்லும்போது மதுரையில் மறக்காமல் இங்கு சென்று வாருங்கள், இடியாப்பம் மட்டும் விற்றால் போணியாகாது என்று என்னும் உணவகங்களுக்கு மத்தியில் இடியாப்பம் சுவையுடன் விற்கும் இந்த கடை நிச்சயம் ஒரு அதிசயம்தான் ! அள்ளும் கூட்டத்திற்கு இடையில் வேர்வையுடன் வாங்கி உண்டாலும் மனதில் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது !!


பஞ்ச் லைன் :

சுவை - ஒரே வகைதான்..... இடியாப்பம், தொட்டு கொள்ள குருமா அல்லது தேங்காய் பால் ! பஞ்சு போன்ற இடியாப்பம் சுவையோ சுவை !!

அமைப்பு - மெயின் ரோடு, சிறிய கடை, ஆறு மணிக்கு மேலே திறக்கிறார்கள் இரவு வரை இருக்கிறது, வண்டியை பார்க் செய்வது சிரமமாக இருக்கிறது.

பணம் - ஒரு இடியாப்பம் பத்து ரூபாய் என்று நினைவு, சுவையில் மறந்துவிட்டேன் !

சர்வீஸ் - நல்ல சர்விஸ். கூட்டம் அதிகமாக இருக்கிறபோது நீங்கள் இதையே எதிர்பார்க்க முடியாது !

இந்த கடைக்கு எதிரே ஒரிஜினல் பர்மா இடியாப்ப கடை என்று ஒரு சிறிய கடை உள்ளது, அங்கே இது போல கூட்டம் இல்லை.

அட்ரஸ் :
மதுரை மிஷன் ஆஸ்பத்திரி எதிரே இருக்கிறது, மேப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.



Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Burma Idiyaappam, Madurai, Special, Hot, Spicy, Tasty


27 comments:

  1. வணக்கம்

    வளரட்டும் நம் நாடு முன்னேறட்டும் நம் மக்கள்.... சுவையான பதிவை சுகமாக பதித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்....... இந்த இடியாப்பம் சிக்கல் மிகுந்ததாக இருந்தாலும், சுவையாக இருந்தது உங்களது கருத்தை போலவே !!

      Delete
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மணத்தில் வாக்கு அளித்ததற்கு நன்றிகள் பல !

      Delete
  3. தமிழ்வாசி செய்ய வேண்டிய அக்கா சீர் கணக்குல இந்த ஹோட்டல் பேரையும் சேர்த்துக்க வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, இது வேறயா !! வம்பு இழுத்து விட்டுடேனோ ?!

      Delete
  4. மதுரையில் இடியாப்பம் பேமஸ் தான் என்று நினைக்கிரேன்,,,
    கடை அறிமுகத்திற்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. உங்களது பேரிலேயே மதுரை இருக்கிறதே.... நன்றி, வருகைக்கும் கருத்திற்கும் !

      Delete
  5. Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி மணிகண்டன் !

      Delete
  6. சூப்பர் சார்.. நீங்கள் தேடாமலேயே பல விஷயங்கள் உங்களுக்குக் கிடைத்து விடுகிறது :-)))))

    ReplyDelete
    Replies
    1. அட இப்படியும் சொல்லலாமா....... இதற்க்கு முன் இவ்வளவு தேடியதாலும் (படுத்தி எடுத்தாலும்) எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்பதை மறந்துவிடாதீர்கள் சீனு ! நன்றி !

      Delete
  7. இடியாப்பம் ஓட்டல்களில் கிடைப்பது இல்லைதான்! வீட்டிலும் இப்போதெல்லாம் செய்ய கஷ்டப்படுகிறார்கள். அல்லது ரெடிமிக்ஸ் பண்ணிவிடுகிறார்கள். மேப்புடன் கடையை அறிமுகம் செய்தமை புதிது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ், ஆமாம் நீங்கள் சொல்வது போல வீட்டிலும் இப்போது ரெடிமேட் இடியப்பம்தான் !

      Delete
  8. இடியாப்பம் எப்போதுமே எனக்கு பிடிப்பதில்லை... உண்மையிலேயே...!

    ReplyDelete
    Replies
    1. ஒரு சுவையான உணவை மிஸ் செய்கிறீர்கள் சார்..... நன்றி, வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  9. boss pinringa... appadiye coimbatore pakkamum vaanga na.....!

    ReplyDelete
    Replies
    1. வந்துட்டா போச்சு நண்பரே....... தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  10. k.k.நகர் அப்பல்லோ மருத்துவமனை அருகில், இதே போல் இடியாப்பம் மட்டும் விற்கும் கடை உள்ளது (அதற்கு பெயரும் பர்மா இடியாப்பம்தான்). இங்கு குருமாவிற்கு பதில், தக்காளி/வெங்காய சட்னி. மிகவும் சுவையாக இருக்கும். இங்கு ஒரு இடியாப்பாம் ரூ.7/‍‍

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி நண்பரே, அடுத்த முறை அங்கு முயற்சிக்கிறேன் !

      Delete
  11. இடியாப்பம் தேங்காய் பால் காம்பினேசன் அடிச்சிக்கவே முடியாது ..... எச்சில் ஊற வைத்தமைக்கு நன்றி அண்ணா..அவ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆனந்த்........இப்போ எந்த ஊரில இருக்குற ?!

      Delete
  12. மதுரையில்ஒரு சில இடங்களில் கோதுமை மாவால் செய்த இடியாப்பமும் கிடைக்கும் சர்க்கரை நோயாளிகளுக்காக !
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஜி..... கோதுமை இடியாப்பம் தகவலுக்கு நன்றி, அடுத்த முறை முயற்சி செய்கிறேன்.

      தமிழ் மணம் வாக்குக்கு நன்றிகள் !

      Delete