Tuesday, February 25, 2014

அறுசுவை - மண்பானை உணவகம், வத்தலகுண்டு

என்னதான் ஸ்டார் ஹோட்டல் போய் சாப்பிட்டு வந்தாலும் அல்லது பீசா, பர்கர் என்று சாப்பிட்டாலும் நம்ம ஊரு மண் மணக்கும் மண்பானை சமையலுக்கு இருக்கும் சுவையே தனி !! வெகு நாட்களாக மண் மணம் கமழும் ஒரு உணவகம் செல்ல வேண்டும் என்று இருந்தோம், சென்ற வாரத்தில் தேனிக்கு செல்ல வேண்டி இருந்தது, மதிய நேரம் ஆனதால் வத்தலகுண்டு சென்று சாப்பிடலாம் என்று இருந்தோம். ஆனால், வழியில் சாலைபுதூர் என்னும் ஊரை தாண்டும்போது இருபக்கங்களிலும் மண்பானை சமையல் என்று உணவகங்கள் இருந்தபோது மனது சட்டென்று சாப்பிடவேண்டும் என்று அடம் பிடித்தது. வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கு எந்த கடையில் சுவை நன்றாக இருக்கும் என்று விசாரித்துவிட்டு நாங்கள் ஒரு கடையை தேர்ந்தெடுத்தோம் !






உள்ளே நுழையும்போதே ஒரு மண் பானையில் சோறு வெந்து கொண்டு இருக்க, இன்னொரு பானையில் இருந்து சோற்றை இறக்கி கொண்டு இருந்தனர். உள்ளே நுழைந்து இலையை சுத்தம் செய்தவுடன் மண்பானையில் இருந்து சூடாக சாப்பாட்டை இலையில் வைத்தனர். சாதரணமாக வீட்டில் சமைக்கும் சாதம் வெள்ளை வெளேரென்று இருக்கும், ஆனால் இங்கு மண்பானையில் சமைபதனால் சாதம் சற்று பழுப்பாக இருக்கிறது, ஆனால் சுவை அருமை என்றுதான் சொல்லவேண்டும். அடுத்து ஒரு சட்டியில் இருந்து கோழி கொழம்பு ஊற்றி அந்த மண் பானையில் செய்த நாட்டு கோழி குழம்பை எடுத்து வைக்க வயிறு கபகப என்று பசிக்க ஆரம்பித்தது. இங்கு மட்டன் குழம்பும், சில நேரங்களில் மீன் குழம்பும் கிடைக்கிறது !!

   

அம்மியில் அரைத்து எடுத்த மசாலாவில் நாட்டு கோழி போட்டு குழம்பு வைத்து, அதை மண் பானையில் செய்த பொன்னி அரிசி சோற்றில் போட்டு சாப்பிட...... அட அட என்ன சுவை ! உண்மையிலேயே வீட்டில் சமைக்கும் குழம்பிற்கும், இப்படி மண் பானையில் செய்யும் குழம்பிற்கும் வித்யாசம் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். முதல் வாய் வைக்கும்போதே அந்த சுவையில் ஒரு விதமான மயக்கும் விஷயம் இருக்கிறது என்று எண்ண தோன்றுகிறது என்பது நிஜம்.



இதை சாப்பிடும்போதே பக்கத்து இலைக்கு ஒரு பெரிய பணியாரம் போன்று ஒன்று போவதை கண்டு என்ன என்று கேட்க, அது கரண்டி ஆம்பலேட் என்று சொல்ல நமக்கும் ஒன்னு என்றோம். சிறு வயதில் எல்லாம் குழியான கரண்டியில் அம்மா முட்டையை உடைத்து ஊற்றி பெப்பர் போட்டு கொடுக்க, வெளியே மொறு மொருவென்றும் நடுவில் கொஞ்சம் வெந்தும் வேகாமலும் வரும் அந்த நினைவு வந்தது, இன்று அப்படி எல்லாம் செய்யாமல் முட்டையை உடைத்து ஊற்றி விடுகிறார்கள் !! முடிவில் எனது இலைக்கு கரண்டி ஆம்பலேட் வந்தது, அதை நிறுத்தி நிதானமாக பார்த்து ரசித்துவிட்டு குழம்பு ஊற்றி சாதத்திற்கு தொட்டு சாப்பிட...... தேவாமிர்தம் போங்கள் !!



முடிவில் சாப்பிட்டு முடித்து வெளியே வரும்போது ஒரு பெரிய ஏப்பமும், நிம்மதியும் வருகிறது. வத்தலகுண்டு போகும் வழியில் நிறைய தென்னம் தோப்புக்கள் வருகிறது, ஒரு சிறிய துண்டு எடுத்து சென்றால் போட்டு ஒரு ஒரு மணி நேரம் அசரலாம்......... சொர்க்கமே தெரியும் !!

Labels : Arusuvai, Suresh, Kadalpayanangal, Manpaanai, Clay pot, Pot, Different food

21 comments:

  1. மண்ணால் ஆனா கடாய் எங்க வீட்டில் இருக்கு. அசைவக் குழம்பு வைக்கவௌம், புளிக்குழம்பு காய்ச்சவும் நாங்க யூஸ் பண்ணுவோம். ருசி அபாரமா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள்தான் சமையலில் கில்லாடி ஆச்சே...... மண்பானைதான் சுவையை கூட்டுகிறதா, கண்டிப்பாக இருக்காது, உங்களது சமையலே சுவைதான் !

      Delete
  2. appo ninga enga thookkam pottinga ?

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் கேட்க கூடாது.... ஆனா அடுத்த நாள் பேப்பரில் ஒரு தென்னந்தோப்பில் பெரிய குறட்டை சத்தம் என்று வந்தது, சத்தியமா அது நான் இல்லை :-)

      Delete
  3. அடப் போங்க... பசிக்குது... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார் ஒரு நாள் நாம போய் சாப்பிடலாம்..... நன்றி !

      Delete
  4. அற்புதம் அரைத்து வைத்த குழம்பு மண் பானை சமையல் என்ஜாய்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் !

      Delete
  5. வணக்கம்

    பயண அனுவம் பற்றிய பதிவு சிறப்பு சாப்பாட்டை பார்த்தவுடன் பசிக்கிறது...அண்ணா..
    வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -நன்றி-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்.... ஒவ்வொரு சுவையான மறக்காமல் சுவைபட கருத்து சொல்லும் உங்களுக்கு நன்றிகள் !

      Delete
  6. உங்க பதிவுகள் எல்லாம் சுவராஸ்யமாக இருக்கின்றன, எல்லாவற்றையும் படித்து விடுவேன், ஆனால் கமண்டு போடுவதில்லை. தங்களிடம் சொல்லவேண்டும் என இருந்தேன், ஆனால் யாரோ சொல்லிவிட்டார்கள் போல!! இந்தப் பதிவில் உள்ளது போல பளிச் என்ற நிறத்தில் உடைகள் உங்கள் நிறத்துக்கும், ஃபோட்டோவுக்கும் பொருத்தமாக இருக்கும். நீங்கள் பல நாடுகளில் அழகான இடங்களைப் படங்கள் எடுத்திருந்தாலும், நீங்கள் தோன்றும் படங்கள் எல்லாவற்றிலும் கருப்பு நிறத்திலோ அல்லது Dark Blue நிறத்திலோ உடை அணிந்திருப்பீர்கள், [சிவப்பு மஞ்சள் நிறங்கள் ஒன்றிரண்டில் இருந்திருக்கலாம்]. அந்த மாதிரி நிறங்கள் உங்களுக்கு எடுப்பாக இல்லாததால் ஏதோ தூங்கி எழுந்து வந்தது போலவே எல்லா படங்களும் இருந்தன. அந்த வகையில் இந்தப் பதிவு சற்றே மாறுதல்/ஆறுதல்!! இதே மாதிரி தேர்ந்தெடுத்து அணியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள உணவு வகைகள் எனக்கும் பிடித்தமானவையே, நன்றி.

    [நான் சொன்னதை கணினியில் எழுத்தில் ஏற்றியது என் கணவர்!!]

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி...... என்னின் மீது பாசம் கொண்டு, உரிமையுடன் சொன்னது மகிழ்ச்சி அளித்தது. உடை விஷயத்தில் நான் அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்பது உண்மைதான், எனது மனைவி அடிக்கடி இதை சொல்லுவார். உங்களது கருத்தை எனது மனைவியிடம் காண்பிக்க அவர் சரிதான் என்றார்..... இனிமேல் நீங்கள் சொன்னது போலவே உடை அணிய முயற்சிக்கிறேன்.

      தங்கள் வருகைக்கும், உரிமையுடன் சொன்ன கருத்திற்கும் மகிழ்ச்சியுடன் நன்றி !

      Delete
  7. ///சாதரணமாக வீட்டில் சமைக்கும் சாதம் வெள்ளை வெளேரென்று இருக்கும், ஆனால் இங்கு மண்பானையில் சமைபதனால் சாதம் சற்று பழுப்பாக இருக்கிறது.///

    ஒன்றில் அரிசியில் அல்லது பானையில் அல்லது அவர்கள் பாவித்த தண்ணீரில் ஏதாவது கோளாறு தான் சோற்றின் பழுப்பு நிறத்துக்குக் காரணம். மண்பானையில் சமைக்கும் போது, அந்தப் பானை, அதில் சமைக்கும் உணவுக்கு ஏதும் நிறத்தைக் கொடுக்கக் கூடாது, அப்படிக் கொடுப்பதில்லை என்று தான் நான் நினைக்கிறேன். அந்தப் பானையிலுள்ள மண்ணும், சூட்டில் தண்ணீருடன் கரைந்து சோற்றில் சேர்ந்திருக்கிறது. அதன் கருத்து, அந்த மண்பானை முறையான சூட்டில் சூளையிலிடப்படவில்லை என்பது தான். :-)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்ன கருத்து எனக்கும் உதித்தது, இதனால் அவர்கள் உபயோகிக்கும் தண்ணீர் பார்த்தேன், அது மினெரல் தண்ணீர். அதனால்தான் அப்படி எழுதினேன். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  8. Regarding the color of the rice, it is the water they use, the water from Vathalagundu and its nearby villages have salt tasted water. The color of the rice is due to the ground water(it is not polluted over there).

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே ! மேலே சொன்ன பதில் உங்களது கருத்திற்கும், கவனத்திற்கும்.

      Delete
  9. உங்கள் அனுபவம் இனிக்கிறது.வத்தளக்குண்டில்லுள்ள ஒரு * ஹோட்டலில்
    நான் பட்ட பாடு அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.-------- கழுவ
    தண்ணீர் இல்லை.clive பரம்பரை,

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா....... அடுத்த முறை தென்னந்தோப்பை மறந்து விடாதீர்கள் !

      Delete
  10. I am also from dindigul but not yet gone there. Go to jilebi shesayyar/krishnayyar jilebi. I brought up by from these sweet. My grandfather's family friend. Good luck. Now I am in Gujarat.planning to take a long break to eat around based on u r blog.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே, எனது பதிவுகளை கொண்டு நமது ஊருக்கு வந்து சுற்றி பார்க்க வேண்டும் என்று எண்ணியதற்கு.

      வந்து உங்களது கருத்துக்களை எழுதுங்கள் !

      Delete
  11. எங்க பாட்டி இன்னும் மண் பானை சமையல் தான் :-))

    ReplyDelete