சமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு திருச்சியில் காலை உணவாக பார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை சாப்பிட்டோம், அடுத்து என்ன என்று என்னோடு வந்தவர்கள் பார்க்கையில் அடுத்து சிதம்பரம் சீர்காழி இடையில் இருக்கும் புத்தூர் ஜெயராம் கடையில் அசைவ சாப்பாடு என்று சொல்லியவுடன் என்னுடன் வந்த நான்கு பேரும் ஒரு மதிய உணவுக்கு அவ்வளவு தூரம் (170 km) செல்லவேண்டுமா என்று பயங்கர கடுப்பு, நான் இதற்க்கு முன் இந்த உணவகத்தை பற்றி வந்த பதிவுகளை படித்து இருந்ததினால் கண்டிப்பாக இங்கு செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். முடிவில் எல்லோரும் என்னுடன் வந்தாலும் வழியெல்லாம் எனக்கு திட்டுதான் ! அப்படி என்ன அசைவ சாப்பாடு கிடைக்கிறது அங்கே ? எல்லோரும் புகழ்ந்து எழுதும் அளவுக்கு அவ்வளவு சுவையா ? பதிவுகளை பார்க்கும்போது அது அவ்வளவு பெரிய உணவகமாகவும் தெரியவில்லையே ? என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் இருந்தது...... ஆனால் முடிவாக அங்கு சாப்பிட்டு முடித்துவிட்டு திரும்பும்போது என்னுடன் வந்தவர்கள் சொன்னது, "அப்படியே சிதம்பரத்தில் தங்கிட்டு நாளைக்கும் இங்கே சாப்பிட்டு ஊருக்கு போகலாமே ?" என்பதுதான். பதிவு எழுதவேண்டுமே என்று சொல்லவில்லை..... உண்மையிலேயே அவ்வளவு ருசியான அசைவ சாப்பாட்டை இதுவரை நான் வாழ்வில் உண்டதில்லை !
புத்தூர் ஜெயராம் ஹோட்டல் என்ற ஹோட்டல் தேடி வழியில் யாரை கேட்டாலும் இப்படி போகணும் என்று வழி சொல்கிறார்கள். மெயின் ரோட்டிலேயே கடை, தவற விட்டு விடுவோமோ என்ற பயமே வேண்டாம்..... சாப்பாடு நேரத்தில் சென்னை - நாகப்பட்டினம் ரோட்டில் சென்றால் எங்கு இருபுறமும் திடீரென்று வகை வகையாக கார், பஸ் என்று வரிசை கட்டி நிற்கிறதோ அப்போது நீங்கள் புத்தூர் ஜெயராம் கடைக்கு அருகில் நெருங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். இறங்கி நடந்து சென்றால் ஒரு குடிசை போட்ட கடையின் வெளியே ஏக்கமாக கும்பல் கும்பலாக மனிதர்கள் நின்று கொண்டிருந்தால் அதுதான் கடை !! நீங்கள் உள்ளே நுழைந்து இத்தனை பேருக்கு உட்கார இடம் வேண்டும் என்று சொல்லவே கால் மணி நேரம் ஆகும், அந்த அளவுக்கு கியூவில் நிற்கிறார்கள். பின்னர் ஒரு இடம் காலியாக போகிறது என்று குரல் வந்தவுடன் நேரே சென்று சாதத்திற்கு தயிர் போட்டு சாப்பிடும் ஆளுக்கு பின்னால் தேவுடு காக்கவேண்டியதுதான். இவ்வளவு ருசியா, ரசித்து ருசித்து சாப்பிடும் ஆள் சாமானியமாக எந்திரிக்க மாட்டார்கள், திரும்பவும் ரசம் என்று ஆரம்பிப்பவர்களும் இருக்கிறார்கள், அப்போது ரத்த களரி ஆகாமல் இருக்க பிராத்திக்க வேண்டியதுதான். நாங்கள் இப்படி ஒருவரது பின்னால் நின்று கொண்டு இருக்க, எங்கே நமக்காக அவர் சீக்கிரம் எழுந்து விடுவாரோ என்று பரிதாபப்பட்டு "பாஸ்.... மெல்லவே சாப்பிடுங்க, நோ பிராப்ளம்" என்று சொல்ல, அவரோ "ஹலோ, இந்த சாப்பாடு சாப்பிட சென்னையில் இருந்து வந்திருக்கேன், மெதுவாத்தான் சாப்பிடுவேன்" என்று சொல்ல நாங்கள் வேறென்ன செய்ய.... முழித்தோம் !!
முடிவில் இடம் கிடைத்தவுடன், சுற்றி பார்த்தால் ஒரு கூறை போட்ட கடை. கடையின் முன்னாலே அசைவம் கல்லில் போட்டு செய்வதால் அதில் ஏற்படும் புகை பாதி உள்ளேதான் வருகிறது, உள்ளே பேன் என்பது பெயருக்குத்தான் வெக்கையில் வேர்த்து வடிகிறது. இலையை போட்டவுடன் ஒருவர் சாதம் வைக்க, இன்னொருவர் "சிக்கன் லெக் பீஸ், இறால், மீன் இருக்கு.... என்ன வேண்டும்" என்று கேட்க எல்லாவற்றிலும் ஒன்று என்று ஆர்டர் செய்துவிட்டு நான் என்னுடன் வந்தவர்களை பார்க்க, அவர்கள் மிரட்சியுடன் "என்ன நடக்குது இங்க..... இவ்வளவு பேர் கியூவில் நிற்கிறாங்க, அப்படி என்ன ருசி" என்று கேட்டுவிட்டு சாதத்தில் இறால் குழம்பை போட்டு ஒரு வாய் வைக்க, அடுத்து அங்கே பேச்சே இல்லை ! அடுத்து எங்களுக்கு வந்த இறால், மீன் என்று கிடைத்ததை எல்லாம் வைத்து குழம்பை ஊற்றி சாப்பிட்டு கொண்டு இருந்தோம். ரசத்தில் இறால் போட்டு, கெட்டி தயிரில் இறால் போட்டு என்று செம வேகத்தில் சாப்பிட்டோம். உண்மையை சொல்வதென்றால் அவர்கள் செய்து இருந்த குழம்பில் அவ்வளவு ருசி, அதனுடன் இறால் மிதமாக காரபொடியும், பெப்பர், வெங்காயம் எல்லாம் போட்டு வறுத்து இருந்ததால் அவ்வளவு சுவை. எந்த பதிவு எழுதும்போதும் எனக்கு நாக்கு ஊறியதில்லை.... ஆனால் இந்த பதிவு எழுத உட்கார்ந்ததில் இருந்து நாக்கு ஊருகிறது என்றால் நீங்கள் புரிந்து கொள்ளல்லாம். சமஸ் சார்...... உங்க புத்தகம் படித்ததில் இது ஒன்னே ஒன்னு போதும் போங்க ! நாங்கள் தயிர் போட்டு சாப்பிடும்போது எங்களது பின்னே இடம் பிடிக்க நின்றவர் "மெதுவா சாப்பிடுங்க, ஒன்னும் அவசரமில்லை......" என்றபோது இந்த முறை நான் "மெதுவாதான் சாப்பிடுவேன், இந்த சாப்பாடிற்காக பெங்களுருவில் இருந்து வந்திருக்கேன் சார் " என்றபோது நான் எப்படி அப்போது முழித்தேன் என்று இப்போது அவர் முகத்தில் பார்த்தேன் !! :-)
முடிவில் சாப்பிட்டு விட்டு நடக்க முடியாமல் நடந்து வெளியில் வந்தபோது அங்கு இறால் மற்றும் சிக்கன் தயாராகி கொண்டு இருந்தது. முதலில் மலையை போல வெங்காயம் போட்டு, அதன் மேலே குழம்பு ஊற்றி, பின்னர் வீட்டிலேயே கையால் அரைத்த பொடிகளை கலந்து, வேக வாய்த்த இறாலை மேலே போட்டு கலக்க ஆரம்பிக்க ஆரம்பிக்க இங்கே பசியோடு வெளியே இருந்தவர்களுக்கு நாக்கில் நீர் ஊறியதை நீங்கள் பார்க்கலாம்.
சுவை - இதுவரை இப்படி ஒரு அசைவ சாப்பாடு சாப்பிட்டதில்லை என்ற சுவை ! சாப்பிட்டு பார்க்க வேண்டிய ஒன்று !
அமைப்பு - மெயின் ரோட்டில் கடை, ரோட்டின் இரண்டு பக்கமும் பார்க் செய்து கொள்ளலாம். நடந்து கடைக்கு போகவே நேரம் ஆகும்.... அவ்வளவு கார் பார்க் செய்து இருப்பார்கள் !
பணம் - இறால் விலை ரொம்பவே கம்மி, சுவைக்கு முன்னே கொடுக்கலாம் என்று தோன்றும் !
சர்வீஸ் - நல்ல சர்விஸ். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நன்கு கவனித்து அனுப்புகிறார்கள்.
ஞாயிறு கடை விடுமுறை, சனிக்கிழமை அமாவாசை விடுமுறை.
மதியம் 12:30 இருந்து மாலை நான்கு மணி வரை (சில நேரங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் மூன்று மணிக்கே காலி)
ஞாயிறு கடை விடுமுறை, சனிக்கிழமை அமாவாசை விடுமுறை.
மதியம் 12:30 இருந்து மாலை நான்கு மணி வரை (சில நேரங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் மூன்று மணிக்கே காலி)
அட்ரஸ் :
சென்னை - நாகப்பட்டினம் ஹைவேயில் புத்தூர் என்னும் கிராமம். கொள்ளிடம் ஆற்றில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் நடுவில்.
மெனு கார்டு :
Labels : Suresh, Kadalpayanangal, Samas, Sappaattu puraanam, Puthur jayaram, Asaiva saappaadu, best non veg, hotel, amazing food, mouth watering
புகைப்படங்களே சுவை சொல்லுகிறது ..ஒருவேளை விறகில் சமைப்பதால் அந்தச் சுவையோ?...
ReplyDeleteஇருக்கலாம், ஆனால் அவர்கள் கைகளால் செய்யும் மசாலாவும் முக்கிய காரணம் ! நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !
Deleteவாஆஆஆஅவ்வ்வ்.... செம்ம இதோ நானும் கிளம்பிட்டேன்.. புதுசா ஆவி'ஸ் ரெஸ்டாரென்ட் திறக்க வச்சிடுவீங்க போலிருக்கு உங்க எழுத்தால.. செம்ம பாஸு..
ReplyDeleteநன்றி ஆவி.... நீங்கள் கண்டிப்பாக போக வேண்டிய, சாப்பிட வேண்டிய ஒரு உணவகம்தான் இது !
Deleteஇவ்வளவு சுவை இருந்தால் பேச்சு எப்படி வரும்...? சீர்காழிக்கு சென்று விட வேண்டியது தான்...
ReplyDeleteசார், திண்டுக்கல்லில் ஒரு பிரான்ச் திறக்கலாமா ?! :-)
Deleteanne enakku rendu parcel
ReplyDeleteபார்சல் உன்னை நோக்கி வந்துகிட்டே இருக்கு...... ரெடி ஆகு !! நன்றி !
Deleteசுரேசு... காலையிலேயே நாக்கில் எச்சில் ஊறுகிறது....
ReplyDeleteஹா ஹா ஹா.... நான் ஒன்னும் பண்ண முடியாது, வாங்க சிதம்பரம் போகலாம் !
DeleteBayangarmana taste dha ponga :)
ReplyDeleteஉண்மைதான்.... கண்டிப்பாக சுவைக்க வேண்டும் நீங்கள் !
Deleteஆக்கக்க ....என்ன Mr.சுரேஷ் இல்லுக இல்லுக இன்பம் இறுதி வரை என்பது போல, சும்மா சுவையை கொடுத்துக்கொண்டே இர்ருகீங்க. தீபாவளிக்கு Chidambaram போனேனே, இந்த இடத்தை miss பண்ணிட்டேனே. ஒன்னும் பிரச்சனை இல்லை, மே மாதம் schedule Fixed. இரால் 2 ப்ளேட்
ReplyDeleteநன்றி பாபு.... நமக்கு தெரிந்ததை சொல்ல வேண்டியது நம்ம கடமை இல்லையா. சென்று வந்து சொல்லுங்கள் உங்களது அனுபவத்தை !
DeleteSuper. Antha menu card supero super!
ReplyDeleteKumar Kannan
நன்றி கண்ணன்.... சுமாரான மெனு கார்டு, ஆனால் சாப்பாடு சூப்பர் !
Deleteநண்பர் புத்தூர் ஜெயராம் ஹோட்டலைப்பற்றி அடிக்கடி கூறுவார். ஒருதடவையாவது அங்கு சாப்பிடப்போகனும் என்பார். சொல்லி வைத்ததுபோல மாலை 5மணிக்குமேல்தான் புத்தூரை கடந்துப்போகமுடியும். இன்னும் ஜெயராம் ஹோட்டல் அரிசியில் நம்ம பெயர் எழுதபடிவில்லை என்று நினைத்துக்கொள்வேன். நன்றி நண்பரே நல்லப்பதிவு.
ReplyDeleteஅரிசியில் உங்களது பெயர் தினமும் எழுதி வைத்துள்ளது, ஆனால் உங்களுக்கு நேரம் இல்லையே ! ஒரு முறை வேலையை தள்ளி வைத்துவிட்டு அனுபவியுங்கள் நண்பரே !
Deleteவணக்கம்
ReplyDeleteஇந்தியா வந்தால் பார்க்கலாம்..... கண்னக் கட்டுது.....
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அப்போ இப்போ நீங்க எந்த நாட்டில் இருக்குறீங்க ரூபன் ?!
Deleteஏம்பா சுரேஷ்! சிவராத்திரி அதுவுமா இப்படி ஒரு பதிவைப் போட்டு என் நாக்கில் எச்சில் ஊற வச்சுட்டியே! என் விரதத்தைக் குலைத்த பாவம் உனக்குதான்!
ReplyDeleteஎனக்கு அந்த பாவம் வேண்டாம், கண்ணை மூடிக்கொண்டு இந்த பதிவை படித்து இருக்கலாமே :-)
Deleteநவக்கிரக கோயில்களுக்கு செல்லும் போது இந்த கடையினை க்ராஸ் செய்தோம். தெய்வ குத்தம்னு காரை நிறுத்தவேயில்லை.
ReplyDeleteதெய்வமே இங்கு நின்று சாப்பிடும் அளவுக்கு சுவை.... சரி சரி அடுத்த முறை இதற்காகவே செல்லுங்கள் !
DeleteU r a lucky person enjoyed.
ReplyDeleteநன்றி நண்பரே.... லக்கி என்பதை விட அயராது உழைப்பவன் எனலாம் !
Deleteஅனைவரையும் ஏக்க பெரு மூச்சு விட வைத்து விட்டிர்கள் . ருசியான பதிவு ..... நன்றி சுரேஷ் ....
ReplyDeleteநன்றி பிரேம்.... ஏக்கத்தை சீக்கிரமே தீர்த்து விடுங்கள் !
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletesuper suresh, even seeing the photo itself makes me hungry. By the way, can you mention the book which is written by Mr.Samas?
ReplyDeleteYou can use this link to buy this book.....
Deletehttp://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
Thanks for reading my blog and your comments !
SUPERB HOTEL,
ReplyDeleteApart from the listed holidays, the hotel can be closed any days , do check with them before u proceed to go there
Thanks for the info Raja... but as far as I checked, the hotel is closed on Sundays.
Deleteஎன்ன இப்படி சொல்லாம கொள்ளாம போயிட்டு வந்துட்டிங்க , சொல்லிருந்தா நானும் வந்துருப்பேன்ல...
ReplyDeleteஇன்னொரு தடவை போக நான் ரெடி, கவலையே வேண்டாம் வாங்க போகலாம் ! நன்றி !
Deleteஹலோ, இந்த சாப்பாடு சாப்பிட சென்னையில் இருந்து வந்திருக்கேன், மெதுவாத்தான் சாப்பிடுவேன்" /////
ReplyDeleteஅவரு அப்படி சொன்னதும் நான் உண்மைலே ஷாக் ஆகிட்டேன்ணே..!
நன்றி ஆனந்த், உனக்கு அந்த ஊரில்தான் பொண்ணு எடுக்கணும், நாங்க எல்லாம் ஒரு வாரம் முன்னாடியே ஆஜார் ஆகிடுவோம் !
Deleteஅப்படியே சிதம்பரத்தில் தங்கிட்டு நாளைக்கும் இங்கே சாப்பிட்டு ஊருக்கு போகலாமே ?" //////
ReplyDeleteஅவ்வ்வ்வ்.. இது மட்டுமா சொன்னாங்க, ஆனந்துக்கு இங்கயே ஒரு மேரேஜ் பண்ணிவச்சிடலாம் .. அப்போதான் அடிகடி வர முடியும்னு ஐடியா குடுத்ததே நீங்க தானே தல ..! 😃😳
ரொம்ப நாளாக இந்த கடையில் சாப்பிடவேண்டும் என்று ஆசை. அந்த ஏரியா போகும்போது எல்லாம் கோவில் ட்ரிப் ஆகவே செல்கிறோம். புத்தூர் ஜெயராமன் தரிசனம் எப்ப கிடைக்குமோ?
ReplyDeleteசீக்கிரமே கிடைக்க வாழ்த்துக்கள், அடுத்த முறை தவற விடாதீர்கள் சார் ! நன்றி !
Deleteஇப் பதிவை படித்த உடன் புத்தூர் ஜெயராமன் மெஸ் செல்ல வேண்டும் என எண்ண தோன்றுகிறது
ReplyDeleteஅது அந்த கடையின் சுவை மட்டுமே காரணம், எனது எழுத்து அதை சரியாக சொல்கிறது என்று நினைக்கிறேன் ! பாராட்டிற்கு நன்றி !
Deleteஇங்கு நான் ஒரு முறை திகட்ட திகட்ட சாப்பிட்டு இருக்கேறேன். மறுமுறை செல்ல ஏங்கிக்கொண்டு இருக்கிறேன்.
ReplyDeleteமன்சூ, செல்லும்போது என்னையும் கூப்பிடுங்கள், நிஜமாகவே அருமையான சாப்பாடு !
Deleteஏன் நான் இங்க ஒழுங்கா இருக்கிறது புடிக்கலையா !!!
ReplyDeleteபிடிக்கலை, பிடிக்கலை, பிடிக்கலை…… ஒழுங்கா இங்க வாங்க ! என்னையும் கூட்டிகிட்டு போங்க இந்த கடைக்கு ! :-)
DeleteAwesome review about Puthur Jayaram hotel :) i used to taste their foods from childhood onwards as am from sirkali.. So happy that the nearest hotel got this much fame.. i was also planning to write review about their food in my website .. Hope soon...
ReplyDeleteIS the hotel opened on Night as well ?
ReplyDelete