Monday, February 3, 2014

அறுசுவை(சமஸ்) - ஒரு கோப்பை டீ, மன்னார்குடி

இந்த பகுதி இவ்வளவு தூரம் ரசிக்கப்படும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை..... சமஸ் அவர்களுக்கு இவ்வளவு தூரம் ரசிகர்களா ?! சென்ற வாரம் எழுதிய "ஒரு ஜோடி நெய் தோசை" எல்லாரது மனதையும் கொள்ளை அடித்ததா !! இந்த வாரம் ஒரு டீ சாப்பிடலாம் !! மன்னார்குடியில் யாரை கேட்டாலும் நேதாஜி டீ கடைக்கு வழி சொல்கிறார்கள்..... ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் டீ போடுபவர் என்று பெயரெடுத்தவர் ஆயிற்றே ! ஒரு டீ சாப்பிட மன்னார்குடி வரை செல்ல வேண்டும் என்று சொல்லியபோதே ஆள் ஆளுக்கு என்னை திட்ட தொடங்கிவிட்டனர். சமஸ் அவர்கள் எழுதிய எழுத்தில் அந்த டீயை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டதால் வண்டியை விட்டோம் மன்னார்குடிக்கு !!

சமஸ் எழுதியதை படிக்க..... ஒரு கோப்பை டீ




வெகு சுலபத்தில் நீங்கள் அந்த கடையை தவற விடுவீர்கள்..... பத்திரிக்கையில் வந்து இருந்தாலும் நீங்கள் நினைப்பதை போல பெரியதாகவும், பெரிய பேனர் வைத்து எல்லாம் இல்லாமல் இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தால் ஒரு ஓரத்தில் வடை, போண்டா போட்டு கொண்டு இருந்தனர். என்னை அறிமுகபடுதிக்கொண்டு ஒரு டீ சொல்லிவிட்டு கண்கள் விரிய அவர் போடுவதை கவனித்தேன். முதலில் டீ தூள் போட்டு சுடு தண்ணீரை ஊற்றி ஒவ்வொரு கிளாசிலும் அதை சம அளவு இறக்கி, பின்னர் அதில் சீனி போட்டு, சுண்ட காய்ச்சிய பாலை ஊற்றிவிட்டு பின்னர் ஒவ்வொரு கிளாசையும் தலைக்கு மேலே தூக்கி ஆற்றி பதமான சூடுடன் நம்மிடம் கொடுக்கும்போது வாய் ஊற ஆரம்பிக்கிறது !




முதல் வாய் வைத்தவுடன் தெரிந்து விடுகிறது நாம் வழக்கமாக முக்கு டீ கடையில் குடிக்கும் டீ இது இல்லை என்பது. அடுத்த வாய் வைத்தவுடன் அதில் என்ன சேர்ந்து இப்படி சுவை கொடுக்கிறது என்று யோசிக்கிறது. பால் தண்ணி கலக்கவில்லை, டீ தூள் நல்ல பிராண்டு...... அவ்வளவுதான் ! நான் அந்த டீ குடித்து முடிக்கும்முன் அங்கு சுமார் இருபது பேராவது வந்து டீ சொல்லி குடித்து கொண்டு இருந்தார்கள், சிலர் அங்கு சூடாக போட்ட பக்கோடாவுடன் ! அந்த கடையில் அண்ணன் சமஸ் எழுதிய பத்திரிக்கை செய்தி, அவருக்கு கொடுக்கப்பட்ட அவார்ட் என்று இருந்தது.




என்னதான் சுவையில் மனம் லயித்து இருந்தாலும் நாமதான் இஞ்சினியர் ஆச்சே. மனது சர சரவென்று கணக்கு போட்டது...... ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் டீ, அதிகாலை 4 மணிக்குக் கடையைத் திறக்கிறார். நண்பகல் சில மணி நேரம் ஓய்வு. பிறகு, இரவு 8 மணி வரை....... அப்படியென்றால் சுமார் பதினாறு மணி நேரம் வரை வைத்துக்கொள்வோம்.

ஒரு நாளைக்கு போடும் டீ : 5000

வேலை நேரம் : சுமார் 16 மணி நேரம் 

ஒரு மணி நேரத்தில் : 5000/16 = 312 டீ 

ஒரு நிமிடத்திற்கு.... : 5000/16/60 = 5.2 டீ 

இது மனதில் தோன்றியதில், அவர் டீ போடுவதை வீடியோ எடுக்க ஆரம்பித்தேன். அதை கவனித்த அவர் டீ போடுவதை நிறுத்தி விட்டு தண்ணீர் ஊற்றினார், வீடியோ எடுப்பதை நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தேன், மீண்டும் அவர் கையை துடைப்பது என்று இருந்தார்...... கடைசி வரை அவர் டீ போடுவதை முழுமையாக எடுக்க முடியவில்லை !! சரி விடுங்கள்....... நமக்கு கணக்கா முக்கியம், டீயின் சுவைதானே. அங்கு வரும் மக்களை பார்த்தால் அவர் அதை செய்வார் என்றே தோன்றுகிறது !



மெனு கார்டு :


இடம் பற்றிய தகவல் :

மன்னார்குடி பொது மருத்துவமனையில் இருந்து பஸ் ஸ்டான்ட் செல்லும் வழியில் இருக்கிறது



Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Samas, Mannargudi, Nethaji, tea, best tea 

21 comments:

  1. சமஸ்ஸின் 'சாப்பாட்டுப் புராணம்' நானும் வாங்கி ரசிச்சு வாசித்ததோடு சரி. மன்னார்குடி கோவிலில் மாலை தரிசனத்துக்கு ரெண்டரை மணி நேரம் காத்திருந்தேனே அப்போ டீக்கடை நினைவு வரவே இல்லை:( தேவுடு காத்தேன் என்பதே சரி:-)))

    கண்முன்னே செங்கமலம் ஆடிக்கிட்டே இருந்தாளே!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா..... உங்களது தவிப்பை ரசித்தேன். அடுத்த முறை செல்லும்போது சென்று வாருங்கள். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி மேடம் !

      Delete
  2. நீங்கள் சொன்ன கணக்கை நினைதது... இப்பவே கண்ணை கட்டுதே... இருங்க எங்கே வீட்டு டீ சாப்பிட்டு வருகிறேன்... ஹா... ஹா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கணக்கா சார் முக்கியம், டீ சுவைதான் முக்கியம் ! நன்றி !

      Delete
  3. வணக்கம் சார் நீங்கள் என்னிடம் சொல்லிருந்தால் அவரை பேட்டி கொடுக்க வைத்திருக்கலாம். அவர் எனது நண்பரின் நண்பர். நான் பல வருடங்கள் அந்த டீ கடையில் டீ குடித்திருக்கிறேன். நான் பள்ளியில் படித்தது எல்லாம் மன்னார்குடியில் அதனால் தெரியும். தெரிந்த கடையை சொல்லும்பொழுது பழைய நினைவுகள் வந்து செல்லுகிறது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் ! நான் சென்றது ஒரு சட்டென்ற பயணம், அடுத்த முறை செல்லும்போது சொல்கிறேன் !

      Delete
  4. டீ சாப்பிட மன்னார்குடி வரை செல்ல வேண்டும் என்று சொல்லியபோதே ஆள் ஆளுக்கு என்னை திட்ட தொடங்கிவிட்டனர்
    >>
    உங்க குடும்பத்தார் வேணுமின்னா உங்களை திட்டலாம். ஆனா, இதில் ஆச்சர்யம் இல்லன்னு எங்களுக்குத் தெரியும். சைனா டீ குடிக்க நீங்க சைனாவுக்கே போனாலும் நாங்க ஆச்சர்யப்பட மாட்டோமில்ல!!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது சரிதான் மேடம்...... இப்போ வீட்டுல அதைதான் சொல்றாங்க !
      ஒரு முறை மூன் வாக் எப்படி பண்றதுன்னு கேட்டேன், வீட்டுல மிரண்டுடாங்க போங்க !!

      Delete
  5. Hi,
    I sent you an email about a sandwich shop, but didnt get any reply.
    I guess it went to spam folder by mistake.

    Pls read this.
    http://nchokkan.wordpress.com/2014/01/12/hrisndwc/

    Hope you will give a review on that shop as well.
    P.S : I went to Madhuram restaurant after reading about it in your blog only. [ though i am living in the same road for more than a year ]

    Regards,
    evs_mahe

    ReplyDelete
    Replies
    1. Hi Evs_Mahe,
      I been to this Sandwich shop on last year and wrote about it and here is the link for your reference.
      http://www.kadalpayanangal.com/2013/07/blog-post_17.html

      Thanks for reading my blog, and I am happy to see that you have explored restaurants after reading it ! Keep commenting and reading !!

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. மன்னார்குடி "டீ" குடிச்சாச்சு...

    ReplyDelete
    Replies
    1. டீ குடிச்சாச்சா ?! இவ்வளவு சீக்கிரமாவா ?!
      நன்றி சதீஷ் !

      Delete
  8. சுவையான டீ போடும் கைவண்ணம் ரசிக்கவைத்தது..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிகண்டன்........தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  9. சைனா டீ குடிக்க நீங்க சைனாவுக்கே போனாலும் நாங்க ஆச்சர்யப்பட மாட்டோமில்ல!!.......

    அவ்வ்வ்வ் சரியா தான் சொல்லிருக்காங்க ...!

    ReplyDelete
    Replies
    1. அப்போ நீயும் கூட வரியா ஆனந்த் ?! :-)

      Delete
  10. ஒரு டீக்காக மன்னார்குடி பயணமா.?

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய அராஜகங்களில் இதுவும் ஒன்று மேடம் !! நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  11. டீ சூப்பர் ... பதிவு டபுள் ஸ்ட்ராங் ... நன்றி சுரேஷ்

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரேம்..... உங்களது வார்த்தைகள் சர்க்கரை ஜாஸ்தி போட்டு ஒரு டீ சாப்பிட்டது போல இருக்கிறது !

      Delete