Tuesday, February 4, 2014

ஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி உப்பு / முத்து

தூத்துக்குடி...... இந்த நகரத்தை பற்றி யோசிக்கும்போது பட்டென்று எல்லோருக்கும் நினைவுக்கு வருவது என்பது முத்து. இந்த ஊர் முத்து நகரம் என்றே புனைபெயரோடு வாழுகிறது, ஆனால் அது உண்மையா என்ன ?! முதலில் தூத்துக்குடி செல்லும்போது கடலில் சென்று முத்து குளிப்பவருடன் பேசி, அவர் எடுத்து வரும் முத்தை அப்படியே வாங்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த நகரம், கடற்கரை மீனவ குப்பங்கள், சிறிது தள்ளி இருந்த கிராமங்கள் என்று அலையோ அலையோ என்று அலைந்ததுதான் மிச்சம், ஒருவருக்கும் அங்கு முத்து எடுப்பது பற்றி தெரியவில்லை. சரி, முத்துதான் எடுக்கவில்லை ஒரு வேலை அதன் சந்தை மட்டும் இங்கு இருக்குமோ என்று அதையும் தேடி நகரத்தினுள் அலைந்தால் அதுவும் இல்லை, எல்லா இடத்திலும் தக தகவென்று தங்கம் வாங்குங்கள் என்று மட்டுமே இருந்தது. சரி, பெரியவர்களை பார்த்தால் ஏதேனும் தகவல் கிடைக்கும் என்று அவர்களுடன் பேசியதில் எல்லோரும் சொல்லி வைத்தது போல அதெல்லாம் ஒரு காலம் என்று சொன்னதில் வெறுத்துபோனேன்...... இதை படிப்பவர்கள் யாருக்கேனும் முத்து பற்றி தெரிந்தால் சொல்லுங்களேன் !! இப்படி முத்து தேடி சுற்றி திரிந்ததில் எல்லா இடத்திலும் கண்ணில் பட்டது என்பது உப்பு !



தூத்துக்குடி இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது ஒரு துறைமுக நகரமாகும். நீர் நிறைந்த நிலத்தைத் தூத்துத் துறைமுகமும் குடியிறுப்பும் தோன்றிய ஊர் என்பதால் தூத்துக்குடி என்றாயிற்று. வாகைக்குளம், கங்கைக்கொண்டான் கல்வெட்டுக்களில் இவ்வூர்ரைத் 'தூற்றிக்குடி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவக்காற்றை குற்றாலமலைத் தடுப்பதும், வடகிழக்குப் பருவக்காற்றின் வலுவிழந்தத் தன்மையும் உப்புக் காய்ச்சுவதற்கு ஏற்ற சூழ்நிலையத் தருவதனால் இத்தொழிலில் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.


இந்தியாவின் உப்பு உற்பத்தியில் முதலிடம் குஜராத். இரண்டாம் இடம் தமிழகம். காரணம், தூத்துக்குடி உப்பு உற்பத்தி. 90 சதவீதம் அளவுக்கு தூத்துக்குடி பகுதியில் இருந்து உற்பத்தி செய்யபடுகிறது. தூத்துக்குடியில் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தியாகிறது. சுமார் 12 லட்சம் டன் உப்பு தன்பாடு என்னும் ஒரு பகுதியில் மட்டும் இங்கு உற்பத்தியாகிறது என்று சொன்னால் மொத்த தூத்துக்குடி பகுதியில் எவ்வளவு என்று கணக்கு போடுங்களேன் ! உங்களுக்கு இப்படி சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை, ஆதலால் நான் சென்ற இடத்தை கூகிள் மேப் உதவியுடன் பார்த்தபோது தூத்துக்குடி எப்படி தெரிந்தது என்று நீங்களே பாருங்கள் !!




உப்பு, என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமம். உப்பு சுவை மனிதனின் அடிப்படையான சுவைகளில் ஒன்று. சாதாரண உப்பு என்பது நம் உணவில் பயன்படுத்தும் உப்பையே குறிக்கும்.இது சோடியம் குளோரைடு என அழைக்கப்படுகிறது. இற்றைக்கு நூறுவருடங்களுக்கு மக்கள் உணவைப் பதப்படுத்த, நீண்ட காலம் பாதுகாக்க, போத்தலில் அடைத்தல், செயற்கையாக குளிரூட்டுதல் போன்ற செயற்பாடுகளைக் கையாண்டாலும் உப்பு ஆயிரம் ஆயிரம் வருடங்களாக மக்களுக்கு உணவைப் பாதுகாக்க குறிப்பாக இறைச்சியைப் பாதுகாக்க உதவியிருக்கிறது.




உப்பு விளையும் களத்துக்கு அளம் என்று பெயர். உப்பு விளையும் களம் = உப்பு + அளம் என்பதைத்தான் இன்று உப்பளம் என்கின்றனர். ஒரு ஏக்கருக்கு மாதம் 10 டன் வரை உற்பத்தி செய்யப் படுகிறது. இங்கு உற்பத்தி செய்யும் உப்புகள் 70 சதவீதம் சாப்பிட் டிற்குப் பயன்படுத்தப்பட் டும் மீதமுள்ளவை கெமிக் கல் நிறுவனங்களுக்கும், ஐயோடின் கலவைக்காக தனியார் நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. வருடத்தில் மழை காலம் தவிர்த்து மற்ற எல்லா மாதத்திலும் (சுமார் ஏழு மாதங்கள்) இந்த உப்பு உற்பத்தி இருக்கும். ஊரெல்லாம் ஒரே உப்பளமாய் இருக்க நான் ஒரு உப்பளத்தில் நுழைந்து பார்த்தேன். இதுவரை ஊர் ஸ்பெஷல் பகுதியில் துருவி துருவி கேள்வி கேட்டு பழக்கம் ஆன படியால், அங்கு இருந்த ஒருவரிடம் "உப்பு எப்படிங்க உருவாகுது ?" என்று நான் கேட்க என்னை அவர் கீழ்பாக்கத்தில் இருந்து தப்பி வந்ததைப்போலவே பார்த்தார். எனக்கோ மனதில் இந்த உப்பு உருவாவதில் ஏதேனும் ரகசியம் இருக்குமோ என்று...... அவர் பெரிய மனது பண்ணி, "அதோ அங்க இருந்து மோட்டாரில் தண்ணீர் இறைத்து இந்த பாத்திகளில் நிரப்புவோம், அதை வெயில் வரும் முன் செய்து விடுவோம், பின்னர் அது வெயிலில் காய காய உப்பு படிய ஆரம்பிக்கும். பின்னர், தண்ணீரை வடித்து விட்டு உப்பை எடுப்போம்" என்றவுடன், அவ்வளவுதானா என்று கேட்க என்னை அவர் மேலும் கீழும் பார்த்தார் !! அங்கு காய்ந்து இருந்த உப்பினை அவர்கள் கருவி கொண்டு சுரண்டி எடுத்து மலை போல குவிக்கின்றனர்..... உப்பு மலை !!






முன்பு உப்பு உற்பத்திக்குத் தேவையான நீரை, கடலிலிருந்து நேரடியாக உப்பு வயல்களுக்குக் கொண்டு வரப்பட்டு, உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. கால மாற்றத்தாலும் கடல் மாற்றத்தாலும், கடலில் கலக்கும் கழிவுகள், மீன் உணவு, கெமிக்கல் தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகளால் கடல்நீர் மாசடைந்து போனது. இதனால் உப்பு உற்பத்திக்குத் தேவையான தண்ணீர் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. 50 அடி ஆழத்திலேயே உப்பு உற்பத்திக்குக் கிடைத்த நீர், இப்போது 200 அடி ஆழத்தில்தான் கிடைக்கிறது. உப்பு வாருதல், சுமை தூக்குதல், மூட்டை பிடித்தல், உப்பு அரவை, பண்டல் போடுதல் என்று இந்த தொழிலில் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன, இதை நம்பி சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறது.





உப்பில் கல் உப்பு, நைஸ் உப்பு என்று இரண்டு வகை இருக்கிறது. இதில் இந்த கல் உப்பினை குவித்த இடத்தில இருந்தே மூட்டை மூட்டையாக கட்டி லாரியில் ஏற்றி செல்கின்றனர். ஒரு மூட்டை நூறு கிலோ வருகிறது, அதில் லாபம் என்பது சுமார் அறுபது ரூபாய் வரை வரும், மழை அதிகம் இருந்தால் இந்த லாபம் கூடும் ! இன்று அரசாங்கம் உப்பில் அயோடின் கலக்க வேண்டும் என்று சொல்லி இருப்பதால், இந்த உப்பை நைஸ் உப்பாக அரைக்கும்போது அதில் அயோடின் கலக்கின்றனர். என்னதான் இந்த உப்பு உற்பத்தியில் லாபம் இருந்தாலும் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வெறும் கால், கைகளில் இந்த உப்பை கையாளுவதால் நிறைய தோல் வியாதிகள் வருகிறது என்கின்றனர். ஒரு சிறிய உப்பு கல் உணவின் சுவையை அதிகரிக்கிறது, ஆனால் அதன் பின்னே எவ்வளவு உழைப்பு !!




Labels : Suresh, Kadalpayanangal, Tuticorin, Salt, Iodine, Muthu, Pearl, Thoothukkudi, Salt making 

25 comments:

  1. உப்பு மலை வியக்க வைக்கிறது... படங்கள் மூலம் தகவல்கள் + விளக்கங்கள் அருமை... அவர்களின் உழைப்பு ஒரு புறம் இருந்தாலும், தோல் வியாதி உட்பட பல கெடுதல்கள்... ம்...

    ReplyDelete
    Replies
    1. உப்பிட்டவரை உள் அளவும் நினை...... அந்த உப்பு செய்பவர்களின் தோல் வியாதியை நினைத்து வருத்தப்படும் உங்கள் மனதுக்கு நன்றி சார் !

      Delete
  2. I'm from Thoothukudi,my granny who was 75 years old used to tell that pearls were collected even from ponds during seasons after rain.Pearl was just the flesh or intestine of the shells,and people just opened the shells and take off the flesh and immediately rounded it off,she said that it'll have a very bad smell ,which will be stinky ! The stupid thing what people did was they threw off the shells outside water instead off putting them back into water!

    There came an end to pearl collecting in the ponds .the shells can be found just a feet or two under pond (kulam)water.This was the scenario during my grannys childhood days.But now artificail culturing of pearls is done .Fisheries college in Thoothukudi would have helped you to get more info on Pearl Culturing.It is also said that people were misguided by British to threw off the shells instead of putting them back into water.

    ReplyDelete
    Replies
    1. வாவ், அருமையான தகவல்களை கொட்டி இருக்கிறீர்கள் சாந்தி சரவணன் !! நான் செயற்கை முறை முத்து செய்யும் இடங்களையும் தேடி பார்த்தேன், ஒன்று கூட இல்லை சகோதரி !
      தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  3. People must also visit to SPIC Nagar a gated quarters of Southern Petrochemicals Ltd.,such a community which people won"t find even in chennai,even before 40 years.Other than that people live a very humble lifestyle! More employment oppurtunities for both male and female and business oppurtunities should draw more people!Moreover we get the drinking water from Vallanadu near Thirunelveli,its really Mineral water from the hills nearby,unfortunately people of Thirunalveli get only the Taamarabarani water!

    ReplyDelete
    Replies
    1. தகவல் சேகரிப்புக்காக அங்கும் சென்றேன் !!

      Delete
  4. உண்மையில் இதுவரை அறியாத
    பல தகவல்களை தங்கள் பதிவின் மூலம்
    அறிந்தேன்.குறிப்பாக மோட்டார் வைத்து
    உப்பளங்களில் தண்ணீர் நிரப்புவது
    காணொளி அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார், இப்படி செல்லும் பயணங்களில் இது போல நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது, உங்களுடனும் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆவல் !

      Delete
  5. Replies
    1. தமிழ்மணத்தில் இந்த பதிவுக்கு ஓட்டு அளித்ததற்கு நன்றி சார் !

      Delete
  6. ஒரு சிறிய உப்பு கல் உணவின் சுவையை அதிகரிக்கிறது, ஆனால் அதன் பின்னே எவ்வளவு உழைப்பு !!
    அந்த உழைப்பினைப் பதிவாக்கி அளித்தமைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி..... உங்க சமையலில் இந்த உப்புதானா ? :-)

      Delete
  7. ஒரு கல் உப்பின் பின் எத்தனைப் பேரின் உழைப்பு இருக்கிறது.இனி உப்பைக் கையிலெடுக்கும்போதெல்லாம் அவர்களின் உழைப்புதான் நினைவுக்கு வரும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  8. முத்து பற்றி தெரிந்தால் சொல்லுங்களேன் !!
    >>
    முத்து ரஜினி, மீனா, சரத்பாபு நடிச்சது. ரவிக்குமார் இயக்கத்துல வெளிவந்தது. இந்தப் படத்திலிருந்துதான் தனக்குப் பிடிக்காத நடிகர் நடிச்ச படத்துக்கு ஆப்படிக்குறது தொடங்கிச்சு. ஓ சாரி! நீங்க முத்துன்ற ஆபரணத்தைக் கேட்டீங்களா!? நான் தப்பா நினைச்சுட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. என்ன வில்லத்தனம் ?! உங்களுக்கு ஒரு உப்பு காப்பி பார்சல் !

      Delete
  9. Pearl fishing. That s the right word. Pearl fishing was allowed up 1962. Thereafter the Govt banned both pearl and conch fishing. They said it is to preserve their growth. At present, the sea ha no pearl and conch shells.

    During its hay day, the Govt permitted pearl fishing only a brief period. During the period, the fishermen from Nellai, Tuticorin, KK and Ramnad distrticts, sometimes from Kerala, used to come to tuticorin and stay for a month for pearl fishing. The shells (chippis) are brought out in gunny sacks and sold to people. People buy a sack of shells and bring homes where they break the shells and trace the pearl inside. Sometimes they get, manytimes not. In a gunny sack, there are more than thousands of shells. But one gets hardly one or two. A lucky person gets a big pearl that may sell for lakhs. Ordinary luck means small pearls. Bad luck means no pearls at all.

    Our literature made much noise about this activity and glorified pearl fishing during Pandya kings. All hogwash. Nothing of that sort. Always, pearls are only a few in Mannar bay. Perhaps the bigger pearls are sold to big merchants who sold abroad, thus much literature.

    ReplyDelete
    Replies
    1. நல்ல தகவல் நண்பரே, இதை படிப்பவர்களுக்கு உபயோகப்படும். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  10. நாம் சாப்பிடும் ஒவ்வொரு துளி உப்பின் பின்னும் ஒரு உழைப்பாளியின் வலி.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மேடம்..... உப்பு சிறிது அதிகம் ஆனாலே முகம் சுளிக்கிறோம், ஆனால் இவர்கள் உப்பிலேயே வாழ்கிறார்கள் !

      Delete
  11. தூத்துக்குடி உப்பு அருமையான படங்களுடன் கண்டுகொண்டோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி....... இந்த பதிவு உங்களுக்கு பிடித்தது கண்டு மகிழ்கிறேன் !

      Delete
  12. பிரம்மிக்கவைகிறது... முத்தான பதிவு ..நன்றி சுரேஷ் ....

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரேம்.... முத்தான பதிவா இல்லை உப்பான பதிவா ?!

      Delete
  13. Fantastic topic ! Super ji.... Super ji........

    ReplyDelete