Wednesday, February 5, 2014

மறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா

ஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு  நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் ! சில பயணங்களில் சிலர் போட்டோ எடுப்பதற்கும், அதை செய்யாதே இதை செய்யாதே என்று ஹிட்லர் போல இருப்பதை பார்த்திருக்கிறேன், ஆனால் அப்படி செய்யும் பயணங்கள் மனதில் நிற்குமா என்பது சந்தேகம்தான் ! நாங்கள் நான்கு நண்பர்களும் இந்த பயணம் ஆரம்பிக்கும்போது குழந்தை போல குதூகலத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினோம்.... அதை சரியாக செய்தோம் என்றே நினைக்கறேன் ! கேரளாவில் இருக்கும் ஆலப்புழாவில் ஒரு நான்கு நாட்கள் குழந்தைகளாக சுற்றி திரியலாமே என்று யோசித்து எல்லோரும் கிளம்பினோம்..... அந்த பயணத்தில் படகு வீட்டில் பயணம் என்றவுடன் எல்லோருக்கும் சந்தோசம் ! சீசன் இல்லாதபோது இந்த படகு வீடுகள் சுமார் ஏழாயிரம் ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இந்த படகு வீடுகளில் பல வகைகள் இருக்கின்றன, அதற்க்கு ஏற்ப விலையும் !!



காலை பன்னிரண்டு மணிக்கு இந்த படகு வீட்டை எடுக்கிறார்கள், மெதுவாக அது வேம்பநாடு ஏரியில் மிதந்து செல்லும்போது சுகமான காற்றில் கொஞ்சம் கிறக்கமாக இருக்கிறது. இந்த படகு வீட்டை நிர்வகிக்க மூன்று பேர் இருக்கின்றனர், ஒரு ஆள் படகை ஓட்டுவதற்கு, இன்னொரு ஆள் அவருக்கு துணை மற்றும் தொழில் கற்றுக்கொள்பவர், மூன்றாவது ஆள் என்பது சமையலுக்கு. சிறிது தூரம் சென்ற பின்னே ஆரஞ்சு ஜூஸ் கொடுத்தனர், அதை சியர்ஸ் என்று சொல்லி எங்களது நட்பினை அழகுபடுத்தினோம், பின்னர் பழைய கதைகளை பேசிக்கொண்டு இருந்துவிட்டு இயற்கையை ரசிக்க வயிறு பசிக்க ஆரம்பித்தது. எப்போ சாப்பாடு ரெடி ஆகும் என்று கேட்க, அவர்களோ இன்னும் அரை மணி நேரம் என்று சொல்ல திகிலாய் இருந்தது. அப்போது அவர் உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா என்று கேட்க நாங்கள் முழித்தோம்.... பின்னர் அவரே பக்கத்தில் பொறித்த மீன்கள், இறால், நண்டு, கள் எல்லாம் கிடைக்கும் வேண்டுமா என்று கேட்கவும் நாங்களும் சரி என்றோம் ! 



படகு போக போக தூரத்தில் அந்த தண்ணீர் தேசத்தில் ஒற்றை வீடு, அதை சுற்றி சில படகுகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த வீட்டை நெருங்க நெருங்க பொறித்த மீன் வாசம் வந்து கொண்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தால் இலையில் சின்ன இறால் எல்லாம் மசாலா தடவி வைக்கப்பட்டு இருந்தது. பக்கத்தில் மண் சட்டியில் மீன், இறால் குழம்பு கொதிதுக்கொண்டு இருந்தது. இன்னொரு பக்கத்தில் பல வகை மீன்களும், இறால்களும் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. நாங்கள் எங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு படகுக்கு திரும்ப மேஜையில் சாப்பாடு தயாராக இருந்தது !






 சாப்பாடு மெனு என்பது சாம்பார், கூட்டு, போரியல், அப்பளம், பொறித்த மீன், பச்சடி அவ்வளவுதான்...... பின்னர் நாங்கள் வாங்கிய மீன் கொழம்பு, இறால் மற்றும் கிழங்கு ! பசிக்கு அது தேவாமிர்தமாக இருந்தது என்று சொல்லவா வேண்டும். சமைக்கும் ஆள் முன்னாள் துபாயில் ஸ்டார் ஹோடேலில் வேலை செய்தவர், இப்போது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று வேலையை விட்டு விட்டு இங்கே வந்து இருக்கிறார், அதனால் ருசி அருமையாக இருந்தது. நாங்கள் நால்வரும் பேசிக்கொண்டே சாப்பிட்டதில் அந்த சாப்பாட்டின் சுவை இன்னும் அதிகமாக இருந்தது.சாப்பிட்டு கை கழுவிய பின்னே படகு மீண்டும் அந்த தண்ணீரில் மிதக்க, அங்கு அடித்த அந்த குளிர்ந்த காற்றில் கண்கள் மயங்க ஆரம்பித்தது, நெக்ஸ்ட் என்ன பண்ணலாம் என்று சொல்ல உட்கார்ந்த படி இருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து சயன நிலைக்கு போயிருந்த நான் "நெக்ஸ்ட் வேற என்ன...... ரெஸ்ட் தான் !!" என்று கண்களை மூடிக்கொண்டேன் !






சுமார் ஒரு மணி நேரம் வரை நன்கு தூங்கிய பிறகு எழுந்து பார்த்தால் எல்லோரும் அதே நிலை. அப்போது படகு ஒட்டியவருடன் பேசி கொண்டு இருந்தபோது அங்கு பலருக்கு சைக்கிள் போல வீட்டுக்கு ஒரு சிறு ஓடம் இருக்கும் என்பது தெரிய வந்தது. அப்போது தூரத்தில் ஒருவர் ஒரு ஓடத்தை நிறுத்தி வைத்து விட்டு, மூழ்கி மேலே வந்து எதோ கொட்டினார், என்னவென்று கேட்க அது மணல் என்றார். இங்கு வீடு கட்ட மணலை ஆற்றில் இருந்து மட்டுமே எடுக்க வேண்டுமாம், அரசாங்க விதி இதனால் இங்கு மணல் விலை அதிகம் என்று தெரிந்தது. நிறைய பேர் இப்படி தொழில் செய்து பிளைப்பதாகவும், வேறு நல்ல தொழில் இங்கு எதுவும் இல்லை என்றார். நாங்கள் பேசி முடிக்கவும் எனது நண்பர்கள் எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. அப்போது சூடாக இஞ்சி தட்டி போட்ட டீயும், மொரு மொறுவென்று வெங்காய பஜ்ஜியும் வர எங்களுக்கு நாக்கில் நீர் ஊற ஆரம்பித்தது !



இப்படி செல்ல செல்ல மாலை மயங்க ஆரம்பிக்க, அவர்கள் யாருமே இல்லாத ஒரு தீவை போன்ற பகுதியில் படகை நங்கூரமிட்டனர். ஒரு பக்கம் தண்ணீர், மறு பக்கம் வயல் வெளி என்று அந்த இடம் அருமையாக இருந்தது. அப்போதுதான் தெரிந்தது அந்த படகு இனி அடுத்த நாள் காலையில் மட்டுமே எடுக்கப்படும் என்று ! ஆக..... இந்த படகு சுமார் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் மட்டுமே ஓடுகிறது, மீதி நேரங்களில் நிறுத்தி வைத்து விடுகின்றனர். நாங்கள் அந்த வயல் வெளிகளில் இறங்கி குழந்தைகளை போல விளையாட ஆரம்பித்தோம். சுற்றிலும் பச்சை பசேல் என்று வயல், சிலு சிலுவென்ற காத்து என்று இருந்த அந்த தேசத்தை நாம் ஏன் கடவுளின் தேசம் என்று சொல்கிறோம் என்று அன்று புரிந்தது !!



என்னதான் நாங்கள் வயல் வெளிகளில் சுற்றி திரிந்தாலும், சீக்கிரம் இருட்டிய பின்பு என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த படகு வீட்டில் பெரிய டிவி, CD பிளேயர் என்று இருக்கிறது, நீங்கள் நல்ல படம் எடுத்துக்கொண்டு சென்றால் நல்லது இல்லையென்றால் மோட்டுவளையை பார்க்க வேண்டியதுதான். குடும்பத்துடன் செல்பவர்கள் இப்படி தீவு போன்ற இடத்தில் இப்படி தங்கினால் குழந்தைகளுக்கு பொழுது போகாதே என்று கேட்க இந்த படகு வீடுகள் நான்கு மணி நேரம், அரை நாள் என்ற வகையில் எல்லாம் கிடைப்பதால் இப்படி தங்க வேண்டாம் என்று நினைப்பவர்கள் அரை நாள் வாடகைக்கு மட்டும் எடுத்தால் மீண்டும் மாலைக்குள் ஹோட்டல் சென்று விடலாம் என்பது ஒரு உபயோகமான செய்தி. நண்பர்களாகிய நாங்கள் அந்த இரவினில் அந்த தீவினில் பேசிக்கொண்டு இருந்தது என்றும் மறக்க முடியாத ஒன்று !



அங்கு சேற்றினில் புரண்டு ஆடும்போது கரையினில் மீன்கள் துள்ளி ஆடி கொண்டு இருந்தது. சில மீன்கள் துள்ளும்போது கரையினில் விழுந்து துடிக்க நண்பர்கள் சீனா சென்ற நீ இந்த பச்சை மீன்களை சாப்பிட முடியுமா என்று சவால் விடுக்க அதை நிறைவேற்றி காட்டினேன்.... என்ன உப்பு கொஞ்சம் அந்த மீனில் கம்மி !! அடுத்து மீன் பிடிக்கலாம் என்று எண்ணி அந்த படகு வீட்டில் இருந்த தூண்டிலை வாங்கி மீன் பிடிக்க ஒரு நல்ல மீன் சிக்கியது. இரவினில் சப்பாத்தி, குருமா, இறால் என்று சுவையான சாப்பாட்டோடு எங்களது அரட்டையும் சேர அங்கு மின்னிய நட்சத்திரங்கள் அந்த இரவை இன்னும் அழகாக்கின.





அடுத்த நாள் அதிகாலை எழுந்தபோது அப்படி ஒரு அமைதியையும், குளிர்ச்சியையும், காட்சியையும் நான் அதுவரை கண்டதில்லை எனலாம். வெறும் பறவை சத்தம் மட்டுமே, சில்லென்ற காற்று வீச, வயல் வெளிகளின் இடையே ஒரு சிறு வாக் சென்று திரும்பினால் அது சொர்க்கம்தான். நகரத்தின் இரைச்சல்கள் இடையே வாழ்ந்தவர்கள் இங்கு வந்தால் கண்டிப்பாக உலகம் இவ்வளவு அழகா என்று வியப்பது உறுதி. எங்களுக்கு இட்லி, சட்னி, சாம்பார், அப்பம், கடலைகரி என்று கொடுத்து சாப்பிட்டு முடித்தவுடன் அந்த படகு எங்களை இறக்கிவிட கிளம்ப....... அந்த இடத்தை விட்டு பிரிய மனமே இல்லாமல் பிரிந்தோம். படகு வீட்டு பயணம் என்பது கண்டிப்பாக உங்களது மனதை நிரப்பும்...... ஒரு முறை நீங்கள் அனுபவிக்க வேண்டிய ஒன்று !!


Labels : Suresh, Kadalpayanangal, Kerala, Alappuzha, Alleppey, Boat house, Marakka mudiyaa payanam, trip, best trip

35 comments:

  1. படகு பயணம் வெகு நாட்களாக செல்ல வேண்டிய பட்டியலில் இருக்கிறது. அடுத்த முறை இந்தியா வரும்போது உங்களை தொடர்பு கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே..... கண்டிப்பாக தொடர்ப்பு கொள்ளுங்கள், எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் !

      Delete
  2. வேறு வழியே இல்லை... அடுத்த முறை செல்லும் போது சேர்ந்து கொண்டாடவில்லை என்றால் உங்களுடன் டூ...! படங்கள் ஒவ்வொன்றும் பிரமாதம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அடுத்த பதிவர் சந்திப்பை அங்கே நிகழ்த்தலாம் சார்...... ஒரு முறை திண்டுக்கல் வரும்போது பயணம் மேற்கொள்வோம் !
      தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் !

      Delete
  3. படகு வீட்டில் போக ஆசை. கடைசிக் காலத்தை கேரளா கிராமத்துலதான் கழிக்கனும்ன்னு இருக்கேன். பார்க்கலாம் இறவனின் ஆசையை!

    ReplyDelete
    Replies
    1. உங்களது ஆசை கண்டிப்பாக நிறைவேறம் சகோதரி ! நன்றி !

      Delete
  4. அடுத்த பதிவர் சந்திப்பை இதுப்போல படகு வீட்டில வச்சுக்கலாமா!?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா நல்ல ஐடியா ! இதை ஏன் நாம எல்லோரும் யோசிக்க கூடாது !

      Delete
  5. 5 வருடங்களுக்கு முன்பு போனோம். ஓர் ஆளுக்கு 2000 ரூபாய். காலை 9 முதல் மறுநாள் காலை 9 வரை. ஆழப்புழாவில் படகு ஏறினோம். சாப்பாடு சூப்பரா செய்து தந்தாங்க..

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவு உங்களது நினைவலைகளை கிளப்பி விட்டுவிட்டது போல !! நன்றி மேடம் !

      Delete
  6. 5 வருடங்களுக்கு முன்பு போனோம். ஓர் ஆளுக்கு 2000 ரூபாய். காலை 9 முதல் மறுநாள் காலை 9 வரை. ஆழப்புழாவில் படகு ஏறினோம். சாப்பாடு சூப்பரா செய்து தந்தாங்க..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி மேடம் !

      Delete
  7. ரொம்ப நாளாக படகு இல்லம் செல்லணும்ற ஆசை மனதில் இருக்கு ..இன்னம் நேரம் அமையவில்லை... உங்கள் பதிவும் புகைப்படங்களும் அதை சீக்கிரம் நிறைவேற்றச் சொல்லி ஆவலை தூண்டும் விதமாக அமைந்துள்ளது...

    ReplyDelete
    Replies
    1. கோயம்பதூரில் இருந்து ஒரு ட்ரைன் பிடித்தால் சென்றுவிடலாமே...... சீக்கிரமே நேரம் அமைய வாழ்த்துக்கள் ! நன்றி !

      Delete
  8. நாங்களும் படகு இல்லத்துக்கு போலாம்னு இருக்கோம், எவ்ளோ ஆகும் னா..... photos r awesome....!

    ReplyDelete
    Replies
    1. படகு வீடுகளை நீங்கள் தங்கும் ஹோடேலில் புக் செய்து தருகிறார்கள், வசதிக்கு ஏற்ப பணம்..... இப்போது நீங்கள் ஆன்லைனில் இதை புக் செய்யலாம் ! சென்று வாருங்கள் விரைவில்....

      Delete
  9. வணக்கம்
    பதிவை படிக்கும் போது அந்த படகு வீட்டில் சென்றது போல ஒரு உணர்வு... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன் !

      Delete
  10. கேரளா வந்தால் நிச்சயம் செல்வேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி.... நீங்கள் சென்று வந்ததை மறக்காமல் எழுதுங்கள், காத்திருக்கிறேன் !

      Delete
  11. பச்சை மீனா..? அண்ணே உங்கள டிஸ்கவரி சேனல்ல ப்ரோக்ராம் பண்ண கூப்ட்றாங்க ...!

    ReplyDelete
    Replies
    1. இதோ வந்திட்டேன்.... ஆமாம் டெர்ம்ஸ் எல்லாம் பேசி பேமென்ட் வாங்கிட்டியா ?!

      Delete
  12. இந்த போட்ஹவுஸ் என் அடி மனசுல தூங்கிட்டு இருந்துச்சு .. இப்போ நீங்க தண்ணி தெளிச்சி எழுப்பி விட்டுடிங்க..!

    ReplyDelete
    Replies
    1. தண்ணி எல்லாம் தெளிக்களை ஆனந்த், போட் கவுந்திடுச்சு சீக்கிரம் எழுதிரு :-)

      Delete
  13. please refer some boat house and contacts pls.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும், கருத்திற்கும் நன்றி...... இதை முயற்சி செய்து பாருங்கள்.....ALLEPPEY STAY & CRUISE
      (Recommended by Eco Travel Planet)
      +91 (0) 9895407909 alleppeystay@gmail.com

      Delete
  14. மறுநாள் காலை குளியல் ஒன்றும் இல்லையா?
    பெர்சனல் கிட்ட backpack-ல் போட்டுக்கொண்டு படகுக்கு போலாம் போல!

    ReplyDelete
    Replies
    1. குளியல் எல்லாம் செய்யலாம், ஆனால் ஒரு சிறு சோம்பலுடன் அப்படியே ரூமிற்கு வந்து தூங்கி எழுவது என்பது சுகம் நண்பரே....!! நன்றி !

      Delete
  15. என் பயண லிஸ்டில் இந்த இடமும் இருக்கு, கேரளா நண்பர்கள் பலமுறை அழைத்தும் செல்ல இயலவில்லை, சூப்பரான அனுபவம்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்...... சீக்கிரமே சென்று வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் !

      Delete
  16. படகு வீடு அனுபவம் சூப்பர்.அருமையான பதிவு...

    ReplyDelete
  17. அருமையான பதிவு...எனது பயண திட்டங்களில் இதுவும் உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. திட்டம் சீக்கிரமே பலிக்க வாழ்த்துக்கள் பிரேம் ! நன்றி !

      Delete
  18. vanakkam , arumai ,appadiye , aalappuzhaikku arugil ulla thalangal patri kurippittaal 2 allathu 3 naal pogiravargalukku vasathiyaaga irukkum.

    ReplyDelete