Thursday, February 6, 2014

சிறுபிள்ளையாவோம் - மாட்டு வண்டி பயணங்கள் !

நான் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை நீங்கள் எல்லோரும் சென்ற வாரம் நான் பகிர்ந்து இருந்த சேமியா ஐஸ் பற்றிய பதிவுகளை இவ்வளவு ரசித்து படித்து இருக்கிறீர்கள் என்பதை ! நான் சேமியா ஐஸ் தின்றபோது மிகவும் ஆனந்தமாக இருந்தது, பக்கத்தில் இருந்த பலரும் இதுல என்ன இருக்கு.... சின்ன பிள்ளைதனமா இருக்கு என்றெல்லாம் பகடி ஆடினாலும் அது தந்த சந்தோசம் அதிகம், அதை பகிர்ந்தால் வாசகர்கள் என்ன நினைப்பார்கள் என்று இருந்தாலும், மனது கண்டிப்பாக எல்லோரும் இப்படி சிறு பிள்ளையில் அனுபவித்த விஷயங்களை மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பார்கள் என்று சொன்னது...... அதை நிருபித்து உள்ளீர்கள் !! சரி, இந்த வாரம் வாருங்கள் மாட்டு வண்டி பயணம் செய்வோம் !!
சிறு வயதில் ஜல் ஜல் என்ற சத்தம் வருகிறது என்றாலே வீட்டிற்க்கு வெளியே ஓடி வந்து அந்த மாடுகளின் கழுத்தில் ஆடும் அந்த மணியை போலவே துள்ளி அந்த மாட்டு வண்டியை ஆச்சர்யமாக பார்ப்போம். அன்றெல்லாம் ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்திற்கு மணல், இதர பொருட்களை கொண்டு செல்வதற்கு மாட்டு வண்டிதானே ! மாடுகள் மரத்தின் நிழலில் இளைப்பாறும்போது, அந்த வண்டியில் இருக்கும் (அது என்ன பேருப்பா !!) சீசாவை போன்ற அமைப்பில் விளையாடுவோம். எவ்வளவு முறை அந்த மாடுகள் இல்லாத அந்த மாட்டு வண்டியில் ஏறி அந்த சாட்டயை சுழற்றி இருப்போம் ! இன்று மோட்டார் பொருத்தப்பட்ட வண்டிகள் வந்த பிறகு இன்று மாட்டு வண்டிகள் அரிதாக ஆரம்பித்து விட்டன !சமீபத்தில் ஒரு ரிசொர்டிற்கு சென்று இருந்த போது கிராமத்து அனுபவம் என்று மாட்டு வண்டி பயணம் அங்கு இருந்தது. அதை பார்த்ததில் இருந்து அந்த வண்டியில் பயணம் செய்ய வேண்டும் என்று ஒரே ஆவல், எனது மகனை அந்த மாடுகளுக்கு அருகினில் கொண்டு சென்றால் அவன் ஒரே அழுகை.... இந்த கால வாண்டுகள் எல்லாம் பைக், காரில் ஏறவே  விரும்புகிறார்கள் ! முதலில் அந்த மாட்டு வண்டியை ஆசைதீர சுற்றி பார்த்துவிட்டு, அந்த வண்டியோட்டியிடம் பேசினேன். பின்னர், மெதுவாக அந்த வண்டியில் ஏறி அந்த மாடுகள் நகர ஆரம்பிக்கும்போது ஜல் ஜல் என்ற சத்தமும், "ஏய்.... பா பா" என்ற மாட்டுக்காரரின் அதட்டலும், வண்டியின் குலுங்கலும், ரட்டு ரட்டு என்ற சக்கரம் மண்ணில் செல்லும் அந்த சத்தமும் என்று என்னை குழந்தை ஆக்கியது ! ஒவ்வொரு முறை சாட்டையை சுழற்றும் போதும் அவர் மாட்டை அடிக்காமல் வெறும் சத்தத்தை மட்டுமே செய்கிறார் என்று இன்று புரிந்துக்கொள்ள முடிந்தது !


என்னதான் மாட்டு வண்டியில் பயணம் செய்து இருந்தாலும், ஒரு முறை அந்த மாட்டுவண்டிகாரர் போலவே வண்டியை ஓட்ட வேண்டும் என்ற ஆசை  இருந்தது. அதை வாய் விட்டு கேட்க, சிறு வயதில் கிடைக்காத அந்த  சந்தர்ப்பம் அன்று கிடைத்தது. மாட்டை அதட்டி, உருட்டி சிறிது தூரம் வரை அன்று ஒட்டி சென்றது பெராரி, ஆடி, பென்ஸ் கார் ஓட்டியதை  போன்ற  மகிழ்ச்சி கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அன்றும் இன்றும் அந்த மாடுகள் மட்டும் இளைத்தே இருக்கின்றன.... வாயில் நுரை தள்ள ! 


Labels : Suresh, Kadalpayanangal, Sirupillaiyaavom, childhood, memories, bullock cart, cart, amazing

30 comments:

 1. பெரிய ரசிகன் சார் நீங்க. எப்பயும் இதே மாதிரி எல்லாவற்றையும் ரசிக்கற மனோநிலையிலேயே இருங்க!

  எங்க ஊர் குதிரை வண்டி ஞாபகம் வந்தது உங்கள் அனுபவம் கேட்டு. உட்கார காய்ந்த புல் போட்டு அதன் மேல் (என்றுமே தோய்க்காத) போர்வை போட்டு இருப்பார்கள்.. குதிரை சாணம் / புல் / அழுக்கு போர்வை கலந்த வாசனை இன்றும் நினைவடுக்கில்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்..... சின்ன விஷயங்கள் பெரிய சந்தோசத்தை தரும் என்பதை எல்லாம் இதன் மூலம் உணர்கிறேன். குதிரை வண்டி பயணம் இனிதான் மேற்கொள்ள வேண்டும் !!

   Delete
 2. அட... என்ன அழகான வண்டி...!

  குதிரை வண்டி கூட இப்போது இங்கு பார்க்க முடிவதில்லை...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்...... உங்களது வருகையும், கருத்தும் எப்போதுமே என்னை சந்தோசபடுதுகிறது !

   Delete
 3. மாட்டு வண்டி ஓட்டிக்கிட்டு ....
  மாயவரம் போற மச்சானே....
  வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. மாப்ளை.... அப்படியே நீங்களும் உங்க சிங்கத்தை எடுத்துகிட்டு வாங்க, ஒரு ரேஸ் விட்டு பார்ப்போம் !!

   Delete
 4. எனக்கு மூடு போடாத மாட்டு வண்டி பயணம்தான் பிடிக்கும்!

  ReplyDelete
  Replies
  1. அட இந்த மாட்டு வண்டியும் அப்படிதான், வெயில் பட்டா நான் கருப்பாகி விடுவேன் அப்படின்னு மூடு போட்டு இருக்காங்க !!

   Delete
 5. கடைசி படத்துல காஸ்ட்யூம் ஒத்து வரலை சகோ! லுங்கியும் சட்டையும், முண்டாசும் கட்டி இருந்தா செம மேட்சிங்கா இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க போங்க.... நான் என்ன மாட்டு வண்டி ஓட்டற வேலைக்கு இன்டெர்வியுவுக்கு போனேனா, சும்மா ஓட்டி பார்க்கத்தானே போனேன் !

   Delete
 6. மாட்டுவண்ணி பயணம் ...நானும் சின்ன வயசில் அதில் பயணம் செய்த அனுபவம். இந்த மாட்டு வண்டியில் ஒரிஜினல் சக்கரங்கள் மிஸ்ஸிங். மாட்டு வண்டிகள் பின்னாடியே போய் களிமண் உருண்டைகளை எடுத்து வந்து மாட்டு வண்டி செஞ்ச காலமும் இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. நல்லா யோசிங்க கலாகுமரன் சார், அது களி மண் உருண்டைதானா ?! :-)
   தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete
 7. ”சீசா” போலிருக்கும் அந்த PART-க்கு பெயர் நுகத்தடி. திருநெல்வேலி பக்கம் அதை “நோக்கால்” (நுகக்கால்) என்று அழைப்பார்கள். நோக்கால்-ல விளையாடின அனுபவம் எனக்கும் உண்டு. மெதுவாக செல்லும் மாட்டு வண்டியின் பின்புற அடியில் இருக்கும் வளையத்தில் தொங்கிக்கொண்டு செல்வதும் இளைய பிராயத்து நினைவுகள் ! !

  ReplyDelete
  Replies
  1. அபாரம் பொன்சந்தர்..... அந்த நோக்காளில் ஆடிய தருணங்கள் எல்லாம் அருமையானவை.
   உங்களிடம் பேச வேண்டும் போல இருக்கிறது, உங்களது நம்பர் கொடுங்களேன் !

   Delete
 8. வணக்கம்

  மாட்டுவண்டி பயணத்தை பார்த்த போது... ஊரில் திருவிழா காலங்களில் சவாரி செய்த நினைவுதான் வந்தது. என்ன அழகான.காளை மாடு..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரூபன்.... நிஜம்தான் அதில் திருவிழா போன அனுபவம் இன்றும் மகிழும் ஒன்று. ஆமாம்.... காளை மாடு என்று சொன்னதில் ஏதேனும் குறியீடு இருக்கிறதா ?!

   Delete
 9. நல்ல அருமையான அனுபவம். ராஜியின் கருத்து நானும் ஒத்துக் கொள்கிறேன்! :))

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம்.... என்னைய ஒரு வழி ஆக்காமல் விட மாடீங்க போல.

   Delete
 10. மாட்டு வண்டி அனுபவம் ஜோர்தான்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்.... வாங்களேன் ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம் !

   Delete
 11. எனது சிறு வயதில் எங்களது தோட்டத்தில் ஒற்றை , இரட்டை மாட்டு வண்டி , குதிரை வண்டி பயணம் செய்து அனுபவதை நினைவு கூறுகிறது உங்கள் பதிவு. அனால்என் மகளுக்கு அந்த அனுபவம் கிட்டாமல் போனது வருத்தம் அடைய வைக்கிறது ....நன்றி இனியதொரு அனுபவம் ....

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் பிரேம்...... நமது குழந்தைகள் இப்படியெல்லாம் அனுபவிக்க முடியாமல் போகிறது என்பது வருத்தமான விஷயம், இன்று மிருகங்களுடன் இல்லாமல் மெசினுடந்தானே வாழ்க்கை அதிகம் வாழ்கிறோம் !

   Delete
 12. .இனிய அனுபவம். சின்ன வயசில் பயணம் செய்த அனுபவம் உண்டு.

  ReplyDelete
 13. மாட்டுவண்டி அனுபவம் சூப்பர்.

  ReplyDelete
 14. எங்க ஊர்ல நிறையா இருக்கு... வாங்க

  ReplyDelete
 15. Hi Mr. Suresh,
  Which resort it is? Could please provide the name.

  ReplyDelete
  Replies
  1. Jain farms, Bangalore. Weekend 500 rs per person, but worth it.

   Delete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete