Tuesday, March 11, 2014

மறக்க முடியா பயணம் - கப்பல் கட்டுவோம் (பகுதி - 1)

கடல்பயணங்கள்....... இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டபோது ஓர் பெயர் தேவை எனும்போது என்னன்னவோ யோசித்து பார்த்தும், கடைசியில் மனதில் பட்டது என்னவோ கடலும் பயணங்களும்தான். ஒவ்வொரு முறை கடலுக்கு செல்லும்போதும் பல வகை படகுகளில் சென்று வந்து இருக்கிறேன், அப்படி சென்று வரும்போது எல்லாம் அந்த கடலை ரசித்த அளவுக்கு படகையும் ரசித்து இருக்கிறேன். எப்படியாவது ஒரு முறை இந்த படகு கட்டுவதை பார்க்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. இந்த முறை காரைக்கால் சென்று இருந்தபோது காரைக்கால் பீச் ஓரத்தில் ஒரு இடத்தில் படகு கட்டி கொண்டு இருந்தனர், ஆர்வத்துடன் ஓடி சென்று ஆசை தீர படகு கட்டுவதை பார்த்தேன் !! தூரத்தில் இருந்து பார்க்கும்போது சிறிதாக தெரிந்தாலும், பக்கத்தில் சென்று பார்த்தால்தான் படகு எவ்வளவு பிரம்மாண்டம் என்பதும், அது தண்ணீரில் அமிழ்ந்து விடுவதால் சிறிதாக தெரிகிறது என்பதும் தெரிந்தது !!


படகுகளை பொதுவாக பிரித்தால் இயந்திரத்தில் இயங்கும் படகு, இயந்திரம் இல்லாமல் இயங்கும் படகு என்று இரண்டு வகைபடுகிறது. அதை இன்னும் பிரித்தால் கடல் செல்லும் படகுகள், ஏரியில் இயங்கும் படகுகள் என்று வகைபடுத்தபடுகிறது. பொதுவாக படகுகள் கட்டும்போது வாகை மரத்தையே பயன்படுத்துகின்றனர், இது உப்பு நீரில் இருக்கும்போது செல்லரித்து போகாமல் இருக்க உதவும், அது மட்டும் இல்லாமல் இதன் எடை அதிகம் என்பதால் கப்பல் நன்கு மிதக்க உதவும் என்கின்றனர். படகு கட்டும்போது முதலில்  ஒரு நடு மரம் ஒன்றை நட்டு பூஜை செய்கின்றனர், இதில்தான் கப்பலை கட்டும் கயிறை சுற்றி வைக்கின்றனர். இதில் இருந்துதான் ஒவ்வொன்றும் எவ்வளவு தூரத்தில் வர வேண்டும் என்று டிசைன் செய்கின்றனர். பொதுவாக இதன் நுணுக்கம் தெரிந்த ஒருவரே இதை செய்கிறார், அவரிடம் இந்த கப்பல் கட்டும் வரைபடம் எங்கே என்று கேட்க அவரோ எல்லாம் கேள்வி ஞானம்தான் என்றார் !!


முதலில் கப்பலின் கூட்டை கட்டுகின்றனர். பெரிய பெரிய இரும்புகளை முதலில் கொஞ்சம் கொஞ்சமாக வெல்டிங் செய்ய ஆரம்பிக்கின்றனர். கப்பல் செய்யும் இடத்தின் மீது ஒரு கூரை போட்டு பல நாட்களாக சுமார் ஐந்து பேர் ஒரு படகின் கூட்டை உருவாக்குகின்றனர். அந்த கூடு உருவானவுடன் அதன் மேலே இரும்பு தகடு கொண்டு அந்த கூட்டை நிரப்புகின்றனர். முன்பெல்லாம் படகுகள் எல்லாம் மரத்திலேயே அல்லவா செய்வார்கள் என்று கேட்க, அவரோ ஆம் ஆனால் இப்போது எல்லாம் மரங்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை, பர்மா, இந்தோனேசியாவில் இருந்துதான் வரவேண்டும். இதனால் மரங்களை குறைத்து இரும்பினால் உருவாக்குகின்றனர் என்றார். அவரிடம் மேலும் பேசியபோது அந்த காலங்களில் கடல் ஓர மாவட்டங்களில் கப்பல் கட்டுவதற்கு என்றே மரங்களை வளர்ப்பார்கள் என்றும், ஒவ்வொரு மரம் வெட்டும்போதும் இரண்டு மரங்களை எதிர்கால சந்ததியினருக்கு நடுவார்கள் என்றும் சொன்னார், இன்று அந்த வழக்கம் எல்லாம் அழிந்ததால் மரம் கிடைப்பது அரிதாகி வருகிறது என்று வருத்தப்பட அவர்களின் ஆதங்கம் புரிந்தது.இந்த படகின் அடிபாகம் உருவானவுடன் இரண்டு வேலைகள் வெகு விரைவாக நடக்கும்.... ஒன்று மேல் தளம் கட்டுவது, இரண்டாவது படகில் யந்திரங்கள் அமைப்பது. இந்த படகின் அடிப்பாகம் இரண்டாக பிரிக்கப்பட்டு பின் பகுதியில் என்ஜின் ரூம் ஆக ஆக்கபடுகிறது. முன் பகுதி மீன் பிடித்தவுடன் அதை சேமிக்க பயன்படுகிறது. ஒரு கட்டி முடிக்கப்பட்ட படகின் கீழ் தளத்தில் இறங்கி பார்க்க எவ்வளவு பிரம்மாண்டம் தெரியுமா ?! அடுத்த வாரம் வரை பொறுங்கள்..... கப்பல் மேல்தளத்தையும், இன்னும் ஆச்சர்யமான சமாச்சாரங்களையும் பார்த்து மகிழ!!


Labels : Suresh, Kadalpayanangal, Memorable journey, How ships are build, Padagu, Thoni, ship building

23 comments:

 1. இது கப்பலா!? படகா!?

  ReplyDelete
  Replies
  1. நல்ல கேள்வி.... அதற்க்கு அடுத்த பகுதியில் விளக்கம் தருகிறேன் ! நன்றி !

   Delete
 2. ஒ இந்த கப்பல் கட்டும் இடத்தை பார்த்தவுடன் "EUREKA" என்று ஓடினீர்கள, அட டிரஸ் ஓட தாங்க !
  உங்கள் கண்ணில் இருந்து எத்தனனை கோணங்கள் ! அருமை

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாபு.... அட நான் ஓடினது எப்படி தெரிஞ்சது ?! கேமரா வைச்சி இருக்கீங்களோ ?!

   Delete
 3. ஆச்சர்யமான காட்சிப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி மணிகண்டன் !

   Delete
 4. வணக்கம்
  பதிவை படிக்கும் போது நாங்களும் சென்று பார்க்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுகிறது......
  வாழ்த்துக்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  ReplyDelete
  Replies
  1. அந்த உணர்வை எனது எழுத்து தந்தது கண்டு மகிழ்கிறேன், நன்றி !

   Delete
 5. இன்னும் பிரம்மாண்டத்தை காண ஆவலுடன் உள்ளேன்...

  /// இரண்டு மரங்களை எதிர்கால சந்ததியினருக்கு நடுவார்கள் /// ம்... என்னத்த சொல்ல...?

  ReplyDelete
  Replies
  1. அடுத்த வாரம் வரை பொறுங்கள் சார்.......நிறைய செய்தி இருக்கிறது !

   Delete
 6. சூப்பர் பதிவு சார்.. நேரில் பார்த்த மாதிரி இருக்கு..

  ReplyDelete
 7. Super Suresh kumar sir, waiting for next post to see ship top floor kind rgds, B.Alagu laxmi

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பியே… விரைவில் மேல் தளம் பற்றி உங்களுக்காகவே எழுதுகிறேன் !

   Delete
 8. Nice. கடல் கணேசன் எனபவர் கடல்துறை சார்ந்த பதிவுகளை இதற்கு முன்னால் எழுதி வந்தார்,ஆர்வம் இருந்தால் பாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வடுவூர் குமார், அந்த தளத்தை பரிந்துரை செய்ததற்கு, விரைவில் பார்க்கிறேன்.

   Delete
 9. நல்ல பகிர்வு, இந்த மாதிரி ஆராய்ச்சிக்கெல்லாம் உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?

  ReplyDelete
  Replies
  1. ஐயோ ஜி, நேரம் இன்னமும் கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கிறேன். கிடைக்கும் சிறிது நேரத்தையும் இப்படி பயணத்திலேயே கழிக்கிறேன், குடும்பமும் எனது ஆர்வத்தை பார்த்து உற்சாகம் செய்கின்றனர் !

   Delete
 10. Replies
  1. ஒரு வார்த்தையானாலும், திரு வார்த்தை !

   Delete
 11. இந்த இடத்து விலாசம் கொடுக்க முடியுமா?

  ReplyDelete