பதிவுகள் எழுதும் நண்பர்கள் தான் ரசித்த இசையை, பாடல்களை யுடியூப் வழியாக பகிரும்போது அதை ரசிப்பவன் நான். கடல்பயணங்கள் தளத்திலும் ஆரம்பத்தில் நான் இளையராஜா, ரகுமான் பாடல்களை "சோலை டாக்கீஸ்" என்ற தலைப்பில் பகிர்ந்துக்கொள்ள ஆரம்பித்தேன். ஒரு முறை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர் சென்று இருந்தபோது விக்டோரியா மார்க்கெட்டில் சுற்றி கொண்டு இருக்கும்போது ஒரு இசை தவழ்ந்து வந்தது, மனதை என்னவோ செய்தது . சென்று பார்த்தபோது ஒரு தெரு கலைஞன் ஒரு வினோதமான வாத்தியத்தில் வாசித்து கொண்டு இருந்தான், ஆனால் அதில் இருந்து வந்த இசை அற்புதம் எனலாம், உங்களை அப்படியே கட்டி போடும் இசை ! நான் மீண்டும் சோலை டாக்கீஸ் எழுத ஆரம்பிக்கும்போது ஒன்று மட்டும் புரிந்தது...... உலகத்தில் பல வகையான இசை இருக்கிறது, இளையராஜாவும் - ரகுமானும் மட்டுமே இல்லை என்பது. கடல்பயணங்கள் தளத்தில் பகிரும் ஒவ்வொரு பதிவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை, அதில் உலகம் முழுவதும் சுற்றும் எனக்கு பல வகையான இசையை கேட்க்கும் வாய்ப்பு அமைகிறது, அதை இங்கே பகிர்ந்தால் என்ன என்பதே. கண்டிப்பாக நீங்கள் இந்த இசையை கேட்டீர்கள் என்றால் புதுமையாகவும், மனதை கொள்ளை கொள்ளுமாறும் இருக்கும் என்பதற்கு நான் கேரன்டி !! வாருங்கள் வாரவாரம் ஒரு புது இசையை கேட்போம்......
டேனியல் வாபெஸ் (Daniel Waples) ........ நம்ம ஊரில் கிடைக்கும் இட்லி வேக வைக்கும் தட்டின் மூடி போன்ற ஒன்றை கொண்டு நீங்கள் அதியற்புதமான இசையை உண்டாக்க முடியுமா ?! இவரால் முடிகிறது !! லண்டனில் பிறந்து வளர்ந்த இவர் தெருவில் ஒரு சிறிய ஸ்டூலில் உட்கார்ந்துக்கொண்டு இந்த சிறிய இசை கருவியை வைத்துக்கொண்டு நிகழ்த்தும் இசை ஜாலம் மனதை மயக்கும். மெதுவாக ஆரம்பிக்கும் இசை ஒரு நீர்வீழ்ச்சி போன்று, காட்டாறு போன்று நிகழ ஆரம்பிக்கும்போது உங்களுக்கு அது புது அனுபவமாக இருக்கும்.
இந்த இசை கருவியின் பெயர் ஹேங் (hang) என்கிறார்கள், இங்கிலாந்தில் முன்பொரு காலத்தில் உபயோகபடுதபட்டது இது, இன்று இதை வாசிப்பவர்களில் சிலரில் இவரும் ஒருவர் !! கீழே இருக்கும் படம் இதில் எப்படி இசை உருவாகிறது என்பதை சொல்லும்....... அட என்று சொல்ல வைக்கிறது இல்லையா !!
Labels : Suresh, Kadalpayanangal, Daniel Waples, Hang, amazing music, instrument, music, wow
இது வித்தியாசமா இருக்கே..கலக்குங்க..
ReplyDelete"ஆவி டாக்கீஸ்" க்கு போட்டியோ ன்னு நினைச்சேன் ;-)
"ஆவி டாக்கீஸ்" போட்டியா எதுவுமே வரமுடியாது ! ஏதோ எனக்கு தெரிஞ்சதை எழுதறேன் ! வருகைக்கு நன்றி ஆவி !
Deleteவிளக்கத்துடன் அசத்தல்...
ReplyDeleteகொடுத்த வைத்தவர் - பலவிதமான ரசனைக்கும்...
வாழ்த்துக்கள்...
தங்கள் வாழ்த்துக்கு நன்றி தனபாலன் சார், நீங்களும் இதை ரசித்தது கண்டு மகிழ்ச்சி !
Deleteவித்தியாசமான கருவிதான்! அருமையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteநன்றி நண்பரே, நீங்களும் ரசித்தது கண்டு மகிழ்ச்சி !
Deleteஅருமை. ரசித்தேன்.
ReplyDeleteநன்றி மாதேவி !
Deleteஅற்புதம்
ReplyDeleteமிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றி ரமணி சார், உங்களது கவிதையை போலவே இந்த இசையும் !
Deletetha.ma 3
ReplyDeleteதமிழ் மணத்தில் ஓட்டு அளித்ததற்கு நன்றி சார் !
DeleteVery nice one. Thanks for sharing these kind of info's..Keep rocking!
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி முருகராஜ் !
Delete