Wednesday, March 12, 2014

ஆச்சி நாடக சபா - "How to train your Dragon ?" ஷோ

கடல்பயணங்கள் என்று ஒரு தளம் தொடங்கி எழுத ஆரம்பித்தபோது பல விஷயங்களில் எழுத ஆரம்பித்தேன், அதில் ஒன்றுதான் நான் வெளிநாடுகள் செல்லும்போது பார்த்து மகிழ்ந்த ஷோ, அதை நான் "ஆச்சி நாடக சபா" என்ற தலைப்பில் எழுதி வந்தேன். நமது நாட்டில் மேடை நாடகங்கள் என்றால் ஆட்கள் வசனம் பேசியே கொல்லுவார்கள், மேடையில் ஒட்டாத வகையில் போடப்பட்ட செட் என்று இருக்கும்... எந்த நேரத்திலும் அது நாடகம் என்ற உணர்வு இருந்துக்கொண்டே இருக்கும், ஆனால் வெளிநாடுகளில் ஸ்டேஜ் ஷோ எல்லாம் பிரமாண்டமாக இருக்கும். மேடையில் இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று தோன்றும், டிக்கெட் எல்லாம் கிடைப்பது மிகவும் கஷ்டம் !! அப்படிப்பட்ட ஒன்றுதான் "How to train your Dragon ?" என்ற பிரமாண்டமான ஷோ !!


 




இது கார்ட்டூன் படமாக வந்தபோதே மனதை மயக்கியது, இதன் கதை என்பது....... வைகிங்கள் வாழும் நாட்டில் தினமும் டிராகன் வந்து அவர்களது குடியிருப்புகளை அழித்து, கால்நடைகளை தூக்கி செல்லும், ஆகவே டிராகனை கொல்லுவதே ஒவ்வொரு வைக்கிங்கின் கனவு. அதில் மிகவும் கொடியது என்று கருதப்படும் ஒன்றை இன்றுவரை யாருமே பார்த்தது கிடையாது. அது ஒரு முறை அடிபட்டு இருக்கும்போது ஒரு சிறுவன் அதற்க்கு உதவி செய்கிறான், இதன் மூலம் டிராகன் என்பது குழந்தை போன்றது கொடியது இல்லை என்பதை அவர்களின் கூட்டத்திற்கு புரிய வைக்கிறான். இதை கார்ட்டூன் படமாக எடுக்கும்போதே அவ்வளவு நேர்த்தி, அதை உண்மையில் ஒரு ஸ்டேஜ் ஷோ ஆக கொடுப்பது என்பது கடினம், ஆனால் சாதித்து காட்டி இருக்கின்றனர் !

 

பெரிய டிராகன் வருவது, நெருப்பை கக்குவது, மேலே பறப்பது என்றெல்லாம் நினைக்க முடியாத விஷயங்களை ஒரு மேடையில் செய்து காட்டி அசரடிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் நான் இதை பார்த்தபோது படமாக பார்த்ததைவிட இப்படி ஷோவில் அசந்து போனேன்..... அந்த ஷோ பற்றிய சிறிய வீடியோவை பாருங்கள் புரியும் !!


Labels : Suresh, Kadalpayanangal, Aachi Nadaga Sabha, Arena, Spectacular show, How to train your dragon, show, amazing

2 comments:

  1. என்னவொரு மாயாஜாலம்...! எத்தனை பேரின் உழைப்பு...! அசத்தல்...!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார், இது போல் இந்தியாவில் வர வேண்டும் என்று உங்களை போலவே நானும் விரும்புகிறேன் !

      Delete