Thursday, April 17, 2014

ஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)

 இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது !! சினிமா பாடல்களில் எல்லாம் மானாமதுரை குண்டு மல்லி என்று சொல்லி சொல்லி அங்கு அதுதான் ஸ்பெஷல் என்று தேடி கொண்டு சென்றேன். ஊரை நெருங்க நெருங்க செங்கல் சூலைகள்தான் அதிகம் இருந்தனவே தவிர, மல்லிகை தோட்டம் என்று ஒன்றும் காணோம். சரி சாலைகளின் ஓரத்தில் இருக்காது என்று கிராமத்து ரோடுகளிலும் பயணிக்க ஆரம்பித்தோம், ஊஹும் மல்லிகை தோட்டம் என்பதே இல்லை. யாரிடம் விசாரித்தாலும் அதெல்லாம் அந்த காலம் என்றனர். இப்படி போய்கொண்டு இருந்த நேரத்தில் "இங்கு வேலி போட்டு கொடுக்கப்படும்" என்று ஒரு பலகை இருந்ததை பார்த்து, மல்லிகை தோட்டத்திற்கு கண்டிப்பாக இவர் வேலி போட்டு இருப்பார், கேட்கலாம் என்று கேட்க அவரோ அதெல்லாம் இங்கே இல்லை என்று சொல்லிவிட்டார் ! சரி, வேற என்ன வாங்க இந்த மக்கள் எல்லாம் இந்த ஊருக்கு வருவார்கள் என்றபோது அவர் மண்பானை என்று சொல்ல, சட்டென்று மூளைக்குள் பல்பு எரிந்தது !! இந்த பகுதியை நீங்கள் படித்து முடிக்கும்போது உங்களுக்கு அதிசயம் மற்றும் ஆச்சர்யம் நிறைய கிடைக்கும் !மதுரையில் இருந்து வைகை ஆற்றின் கரையின் வழியே சுமார் 52 கிலோமீட்டர் சென்றால் வரும் ஊர் மானா மதுரை. இது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தது ஆகும். எதுகை மோனைக்காக மல்லியை இந்த ஊரில் சேர்த்து இருக்கலாம், இல்லையென்றால் வைகை நதி வறண்டதால் மல்லிகை தோட்டங்கள் அழிந்து இருக்கலாம் ! இந்த காலத்தில் மண் பானைகள் எல்லாம் யார் உபயோகிக்கிறார்கள், மண்ணில் பானை, உண்டியல், தட்டு மட்டுமே செய்ய முடியும் என்றெல்லாம் உங்களை போலவே நினைத்த என்னை இங்கு கண்ட காட்சிகள் யாவுமே அதிசயிக்க வைத்தன எனலாம். வெயில் காலத்திற்கு ஏற்ப வாருங்கள் மண்பானை செய்வதை அறியலாம்.


வேளாளர் குலம்..... இந்த ஊரில் இவர்களே அதிகம், இவர்களது பரம்பரை தொழில்தான் இந்த மண்பானை செய்வது. மண்பானை எங்கே செய்கிறார்கள் என்று கேட்க, சொசைட்டி உள்ளே இருக்கு போங்க என்று சொல்லி அனுப்பினார்கள். இதுவரை ஒரு வீட்டின் முன்னே மட்டும் மண்பானை செய்வதை பார்த்துவிட்டு இப்போது ஒரு ஊரே செய்வதை பார்க்க அதிசயமாக இருந்தது. உள்ளே நுழையும்போதே களிமண் மலை மலையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.  இங்கு சிறு சிறு அறைகளாக பானை செய்யும் இடங்கள் இருக்கின்றன, அதை வாடகைக்கு எடுத்து இங்கு குயவர்கள் பானை செய்கின்றார்கள். முன்பெல்லாம் கம்பை கொண்டு சக்கரத்தை சுற்றுவார்கள், இன்று அறிவியல் வளர்ச்சியில் மோட்டார் கொண்டு சுற்றுகின்றனர்.
பானை, மண்பானை என்று சொல்கிறோமே, ஆனால் அதில் தமிழர்கள் எத்தனை வகை வைத்து இருந்தனர் என்று தெரியுமா ?! நம் தமிழகத்துள் வழங்கப்பெற்ற,வழங்கப்பெறும் பானை வகையுள் சிலவற்றை இங்கு பாருங்கள்.........

1. அஃகப் பானை - தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்
2. அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
3. அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை
4. அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
5. அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
6. அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
7. உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.
8. உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை
9. எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை
10. எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை
11. எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை
12. ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை
13. ஓதப் பானை - ஈரப் பானை
14. ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை
15. ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை
16. ஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை
17. கஞ்சிப் பானை - கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை
18. கட்டப் பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை
19. கட்டுப் பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )
20. கதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை
21. கரகப் பானை - கரவப்பானை - நீர்க்கரகம்
22. கரிப்பானை - கரி பிடித்த பானை
23. கருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை
24. கருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை
25. கலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்
26. கழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)
27. காடிப் பானை - கழுநீர்ப் பானை
28. காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை
29. குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை
30. குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)
31. கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை
32. கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை
33. கூர்ப் பானை - கூர் முனைப் பானை
34. கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை
35. கோளப் பானை - உருண்டு திரண்ட பானை
36. சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.
37. சவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி
38. சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை
39. சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை
40. சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை
41. சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை
42. சோற்றுப் பானை - சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை
43. சில்லுப் பானை - மிகச் சிறிய பானை
44. சின்ன பானை - சிறிய பானை
45. தவலைப் பானை - சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)
46. திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)
47. திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)
48. துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை
49. தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை
50. தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை
51. தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை
52. நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை
53. பச்சைப் பானை - சுடப்பெறாத பானை
54. படரப்பானை - அகற்ற - பெரிய பானை
55. பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி
56. பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)
57. பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை
58. மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை
59. மடைக்கலப் பானை - திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை
60. மிண்டப் பானை - பெரிய பானை
61. மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை
62. முகந்தெழு பானை - ஏற்றப் பானை[1]
63. முடலைப் பானை - உருண்டையுருவப் பானை
64. முரகுப் பானை - பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)
65. மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)
66. மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை
67. வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்
68. வழைப் பானை - வழவழப்பான புதுப்பானை
69. வெள்ளாவிப் பானை - துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை
(நன்றி : தமிழ் விக்கிபீடியா)
இந்த மண்பானை தொழிலை செய்வதற்கு இந்த கால இளைஞகர்கள் விரும்புவதில்லை என்பதால் மண்பாண்டம் செய்யும் மெசின் வந்து விட்டது என்பது உங்களுக்கு தெரியுமா ? மண்பானையில் எவ்வளவு விதம் விதமாக என்னவெல்லாம் செய்ய முடியும் என்று தெரியுமா ? மண் மிக்ஸ் செய்யும் மெசின் பார்த்து இருக்கிறீர்களா ? 100 அல்லது இருநூறு மண்பானையை நீங்கள் பார்த்து இருக்கலாம், ஆனால் ஒரே இடத்தில ஆயிரம் ஆயிரம் மண்பானையை பார்த்து இருக்கிறீர்களா ? மண்பானை செய்து இருக்கிறீர்களா ? அதை செய்யும் சூட்சமம் தெரிந்து கொள்ள ஆசையா ?

அடுத்த வாரம் வரை சற்றே பொறுங்களேன்..... நிறைய நிறைய அதிசய செய்திகளுக்காக !!Label : Oor special, district, Manamadurai, Suresh, Kadalpayanangal, Clay pot, Special, Manpaanai, clay, near madurai, malli, jasmine

34 comments:

 1. மனதில் என்னென்ன கேள்விகள் எழுமோ, அவை மனதில்... அவற்றின் பதிலை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார், உங்களின் மனதில் எழுந்த எல்லா கேள்விகளுக்கும் விடை இங்கே வரும் !

   Delete
 2. எத்தனை எத்தனை பானைகள்..... மேலும் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் அடுத்த பகுதிக்காய் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நாகராஜ் சார், உங்களின் ஆவல் பிரமிக்க வைக்கிறது !

   Delete
 3. Super... eagerly awaiting the details......

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கடேஷ், விரைவில் அதிசய செய்திகள் உங்களுக்காக வரும் !

   Delete
 4. மானாமதுரையில் 1977, 1978 காலகட்டத்தில் ஏற்ப்பட்ட ஆற்று வெள்ளத்தில் பெரும்பாலான கரையோர மல்லிகை தோட்டங்கள் அழிந்து விட்டதாகவும் அதன் பின்னரே மல்லிகை தோட்டம் இல்லையென்று தான் நம்மூர்க்காரர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். மானாமதுரைக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது ஸ்ரீஆனந்தவள்ளியமான் கோவில் முன்பு இருக்கும் கிணற்றில் தான் ராமர் மற்றும் ஹனுமன் ஆகியோர்கள் நீர் அருந்தியதாகவும் ஒரு வரலாறு இருக்கிறது... எனக்கு தெரிந்தே முன்பெல்லாம் ஆற்றின் அகலம் அதிகமாக இருந்தது இன்று அகண்ட ஆறு என்பது போய் குறுகலான வீதி போல இருக்கிறது தற்போது மானாமதுரை ஆறும் , ஊரும் அதன் அழகை இழந்து வருகிறது...

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி சார், தங்கள் வருகைக்கும் கூட !

   Delete
  2. Athu unmaithan enga oora pakka enakke pidikkala...sir....

   Delete
 5. மானாமதுரை என்பதே முன்பு வாணர மா மதுரை என்பதாக இருந்து இன்று மருவி மானாமதுரை ஆகி இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நல்ல தகவல், விரைவில் இன்னும் நிறைய செய்திகள் சொல்கிறேன் !

   Delete
 6. அம்மாடி. பானையில் இத்தனை வகைகளா..?

  இப்போலாம் பானைகளை அதிகம் பார்க்க முடியவில்லை

  கோடைக்கு ஏற்ற பதிவு

  இந்த கோடைக்கு நானும் ஒரு பானை வாங்க போறேன் ....

  நன்றி ...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆனந்த், அந்த பானையில் என்ன செய்ய போற :-)

   Delete
 7. ஆராய்ச்சிப் படிப்பு படிக்கிறவர்கள் கூட
  இத்தனை தகவல்களைச் சேகரிப்பார்களா என்பது
  சந்தேகமே.பயனுள்ள தகவல்களை மிகச் சுவாரஸ்யமாகச்
  சொல்லிப்போகும் தங்கள் திறன் பிரமிப்பூட்டுகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்களது கருத்து என்னை உற்சாகம் கொள்ள செய்கிறது சார், உங்களுடன் சென்று வந்த நத்தம் ட்ரிப் பற்றி விரைவில் எழுதுகிறேன் !

   Delete
 8. பயன்பாட்டுக்கு ஏற்ப எத்தனை விதப் பானைகள், தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி மாதங்கி, தங்கள் வருகையும், கருத்தும் மகிழ்ச்சி அளித்தது !

   Delete
 9. எத்தனை வகை பானைகளின் பெயர்கள்! இத்தனை பெயர்கள் இருக்கின்றன என்று பானை செய்பவர்களுக்கே தெரியுமோ என்னவோ! ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வகைப் பானைகள் மட்டும் செய்து குவிப்பார்களோ... என்னென்னவோ சிந்தனைகள்! அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம், நீங்கள் இந்த பகுதியை ரசித்தது கண்டு மகிழ்கிறேன் !

   Delete
  2. கடவுளை படைத்த எனது மக்களை நினைத்து பெருமை அடைகின்றேன். என்ன தவம்செய்தோம் குலாலனாக பிரப்பதற்க்கு.

   Delete
  3. கடவுளை படைத்த எனது மக்களை நினைத்து பெருமை அடைகின்றேன். என்ன தவம்செய்தோம் குலாலனாக பிரப்பதற்க்கு.

   Delete
 10. நம் தமிழகத்துள் வழங்கப்பெற்ற,வழங்கப்பெறும் பானை வகைகள் ஆச்சரியமளித்தன..

  இப்போது வாஸ்துவிற்காக வரவேற்பறையில் உருளிபோன்ற அழகிய வேலைப்பாடுகள் அமைந்த மண்பாண்டங்கள் , டெரகோட்டாவில் பலவித குதிரை யானை போன்ற உருவங்கள் போன்றவை பிரபலமாக இருக்கின்றன..

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே, ஆம் அதை பற்றியும் எழுதுகிறேன் ! தங்கள் கருத்திற்கு நன்றி !

   Delete
 11. அடேங்கப்பா! பானைகளில் இத்தனை வகைகளா? அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே, இன்னும் நிறைய அதிசய பானை செய்திகளுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன் !

   Delete
 12. எத்தனை வகை பானைகள்? தெரியாத புரியாத பெயர்களுடன். உங்களுடைய நேர்த்தி வியக்க வைக்கிறது. கலக்குங்க நண்பா... அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே, நீங்கள் ரசித்தது கண்டு மகிழ்ச்சி !

   Delete
 13. பிரமாதமான பதிவு சார்.. ஆமா கப்பல் கட்டுதல் பார்ட் - டூ என்னாச்சு.. இல்ல நான் தான் மிஸ் பண்ணிடனா

  ReplyDelete
  Replies
  1. சீனு, உங்களது ஆர்வம் பிரமிக்க வைக்கிறது ! விரைவில் அதை பற்றியும் எழுதுகிறேன் !

   Delete
 14. புதியது பிறந்தது...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சீனு, உங்களுக்கு ஒரு பானை வேண்டுமா !

   Delete
 15. நீங்கள் அளித்த தமிழ் மணம் ஓட்டிற்கு நன்றி சார் !

  ReplyDelete