சென்ற வாரத்தில் எழுதிய
மானாமதுரை மண்பானை (பகுதி - 1),
மானாமதுரை மண்பானை (பகுதி - 2) பகுதிகள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதை என்னால் உணர முடிந்தது. சென்ற வாரம் வரை மண் எங்கு எடுக்கிறார்கள், அதன் தன்மை என்ன, அதை எப்படி தயார் செய்கிறார்கள், அதன் பின்னர் எப்படி பானை செய்கிறார்கள் என்றெல்லாம் பார்த்தோம். இந்த வாரம் வாருங்கள் இன்னும் சுவாரசியமான பகுதிகளை பார்ப்போம் ! களிமண் என்பது கருப்பு நிறத்தில் இருக்கு, ஆனா பானை சிவப்பா இருக்குதே எப்படி என்று உங்களுக்கு கேள்வி எழுந்தால் உங்களின் முதுகில் ஷொட்டு வைத்துக்கொள்ளுங்கள் ! செம்மண்ணில் ஒரு வகை இருக்கிறது, கைகளில் எடுக்கும்போதே கடல் மணல் போல கைகளில் வழியும். மிகவும் நைஸ் மண் ஆன அதை தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்கின்றனர், பானை நன்கு காய்ந்தவுடன் உள்ளேயும், வெளியேயும் ஒரு துணியை கொண்டு இந்த மண்ணை பூசுகின்றனர், முடிவில் பானை சிவப்பாகிவிட்டது !!
 |
மண் பானை சுடுவதற்கு தயார் ! |
அந்த சிவப்பு பானை காய்ந்தவுடன் அதை சுட்டு எடுக்க வேண்டும். அதை சுட்டு எடுக்க அரசாங்கமே கொட்டகை போட்டு கொடுத்துள்ளது, யார் வேண்டுமோ முன் பதிவு செய்துக்கொண்டு தங்களது பானைகளை சுட்டு எடுக்கலாம். இதை சுடுவதற்கு சுள்ளிகளையும், முள் செடிகளையும் நடுவில் போட்டு அதன் மேலே பானையை நன்கு அடுக்கி வைக்கின்றனர். நான் பார்த்த வரையில், ஒவ்வொரு பானையையும் மெதுவாக அடுக்குகின்றனர். ஒரு முறையில் சுமார் ஆயிரம் பானை வரை அடுக்குகின்றனர். பின்னர் அதன் மேலேயும் சுள்ளிகளை போட்டு தீயை பற்ற வைக்க, பானை அந்த சூட்டில் இறுக ஆரம்பிக்கிறது. சுமார் பத்து மணி நேரம் வரை கொஞ்சம் கொஞ்சமாக சூடை கொடுக்கின்றனர். எல்லா சுள்ளிகளும் எரிந்து சாம்பல் ஒரு போர்வை போல போர்த்தி இருக்க அந்த சூடு தணிந்தவுடன் பானையை ஒவ்வொன்றாக எடுக்க ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொரு பானையையும் எடுத்து தட்டி பார்த்து அப்போதே தரம் பிரிக்கின்றனர். சரியாக சுடாத பானையை மீண்டும் சுடுவதற்கு எடுத்து வைக்கின்றனர். முடிவில் அதை சொசைட்டிக்கு கொடுத்து விட்டு (அவர்கள் வைத்திருக்கும் விலையில்) மீண்டும் அடுத்த பானை செய்ய தயார் ஆகின்றனர் !
 |
சுட்டு முடித்து எடுத்த பின்...... |
 |
நல்ல தரமான பானைகள் இந்த பக்கம் இருக்கு வாங்க ! |
சென்ற வாரத்தில் மண் பானையில் வைக்கும் தண்ணீர் எப்படி சில்லென்று இருக்கிறது என்றும், பானை செய்யும்போது அடியில் சிறிது சதுரம் போல் தட்டி விட்டால் நாம் தரையில் வைப்பதற்கு சௌகரியம் அல்லவா, ஏன் உருண்டையாகவே இருக்கிறது என்று கேட்டு இருந்தேனே.... விடை ஏதேனும் யோசித்தீர்களா ?! முதல் விஷயம் பானையை ஒரு மூலையில் மணல் குவித்து அதன் மேல்தான் வைப்பார்கள். இந்த மணற் குவியலில் ஒரு தாத்பர்யம் இருக்கிறது. அது வெறும் ஸ்டாண்ட் அல்ல. அது ஒரு பர்ஃபார்மன்ஸ் இண்டிகேட்டர். என்ன பர்ஃபார்மன்ஸ் என்று சொல்ல வேண்டுமானால் பானை வேலை செய்யும் விதத்தை முதலில் சொல்லியாக வேண்டும். பானைக்குள் இருக்கும் தண்ணீர் அதிலிருக்கும் நுண் துளைகள் வழியாக வெளியேறிக் கொண்டிருக்கும். (வெளியேறும் என்றால் கொட கொடவென்று டீக்கடையில் டிக்காஷன் ஊற்றுவது போல் அல்ல) அது ஒரு விதமான ஊஸிங் ஔட். பானையை ஒரு மெகா மைக்ரோ ஃபில்ட்டருக்கு ஒப்பிடலாம். ஃபில்ட்டர் என்றாலே அழுத்த மாறுபாடு இருக்கும். டிராப் எக்ராஸ் ஃபில்ட்டர் என்கிற பிரயோகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். தண்ணீர் மட்டுமல்ல, எல்லா திரவங்களுமே குறிப்பிட்ட உஷ்ணநிலையில் குறிப்பிட்ட வேப்பர் பிரஷரில் இருந்தே தீரும். குறைந்தால் ஆவியாகி அதை சரிக்கட்டிக் கொள்ளும். இது திரவங்களின் இயற்கைத் தன்மை. வெளியேறிய தண்ணீர் உள்ளிருக்கும் தண்ணீரை விட அழுத்தம் குறைவாக இருப்பதால் அதன் வேப்பர் பிரஷரும் குறைவாகியிருக்கும். ஒவ்வொரு வேப்பர் பிரஷருக்கும் ஒரு உஷ்ணநிலை உண்டு என்பதால் வேப்பர் பிரஷர் குறையும் போது உஷ்ணநிலையும் குறையும். அதாவது, பானைக்குள் இருக்கும் நீரை விட வெளியேறிய நீர் குறைந்த உஷ்ணநிலைக்கு வந்திருக்கும். மேலும் இது ஒரு எக்ஸ்பான்ஷன் பிராஸஸ் என்பதால் விரிவடைந்து ஆவி நிலையில் இருக்கும்.மேற்கத்தியர்கள் சார்ட் என்பதால் ஆம்பியண்ட் பிரஷரில் 20 டிகிரி இருக்கிறது.இந்தக் குளிர்ந்த ஆவி வெளிக்காற்றில் இருக்கும் நீராவியைக் குளிப்பித்து சின்னச் சின்ன குளிர்ந்த நீர்த் திவலைகளை பானையின் வெளிப்புறம் உண்டாக்கும். இதனால் உண்டாகும் லேயர் ஒரு இன்ஸுலேட்டராக செயல்படுவதுடன், பானைக்குள்ளிருக்கும் நீரைக் குளிர்ப்பிக்கவும் செய்யும். அழுத்த மாறுபாட்டின் கரணமாக அடுத்தடுத்து உள்ளிருந்து ஊஸிங் ஔட் ஆகிக் கொண்டே இருக்கும். ஏற்கனவே இருக்கும் திவலைகள் வழிந்தோடி கீழே கொட்டி வைத்திருக்கும் மண்ணை ஈரமாக்கும்.நீரின் கடினத் தன்மையைப் பொறுத்து கொஞ்ச காலத்தில் நுண் துளைகள் மெல்ல அடைபட்டுக் கொண்டே வரும். அப்படி ஆகிற போது கொட்டி வைத்திருக்கும் மண் ஈரமில்லாமல் தொடர்ந்து உலர்ந்தே இருக்கும். அப்போது பானையை மாற்றியே ஆக வேண்டும். என்ன விஞ்ஞானம் இல்லை !! ( இதை ஒரு வலை தள நண்பரின் தளத்தில் இருந்து எடுத்தேன், வலைதள முகவரி காப்பி எடுக்கும் முன் சிஸ்டம் டவுன் ஆனதால், மீண்டும் அந்த தளம் கிடைக்கவில்லை....... ஆனால் மேலே சொன்ன விஷயம் அந்த முகம் தெரியாத நண்பருடையது !!)

மண்ணில் பானை மட்டுமே உண்டாக்க முடியும் என்று நான் நினைத்து இருந்ததை பொடி பொடியாக்கியது அங்கே நான் கண்ட மண் பொருட்கள். இட்லி குண்டா, பிரிட்ஜ், ஆப்ப சட்டி, தோசை சட்டி, வித விதமான விளக்குகள், குடுவைகள், உண்டியல் சாப்பிடும் தட்டு என்று அவர்களின் உழைப்பும், கலையும் பிரம்மிக்க வைக்கிறது ! எல்லோரும் இன்று மண் பொருட்களை மறந்து பீங்கான், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாறுவது இவர்களுக்கு வருத்தத்தை தருவதை அறிந்துக்கொள்ள முடிகிறது ! என்ன..... மண்பானைதானே என்று யோசித்ததில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று தோன்றுகிறதா ?! அடுத்த முறை மானாமதுரை சென்றால் மண்பானை வாங்கி வர மறக்காதீர்கள் !
 |
மண்ணில்.... இட்லி சட்டி ! |
 |
தோசை சட்டி வேண்டுமா..... பணியார சட்டியா ? |
 |
இதுவும் மண்ணில் செய்ததுதான்...... கலை வண்ணம் !! |
 |
சாப்பிடும் தட்டு கூட மண்ணில் தயார் !! |
 |
ஆப்ப சட்டியும், குடுவையும் ! |
 |
முன்னால் தெரிவதுதான் மண்பானை பிரிட்ஜ் ! |
இதை எல்லாம் படித்துவிட்டு யாரும் அந்த பகுதியில் செங்கலும் நன்றாக இருக்குமே போனீர்களா என்று கேட்பவர்களுக்கு மட்டும் இந்த படம் ! இதை பற்றியும் விரிவாக எழுதினால் இன்னும் ரெண்டு பாகம் போகும்..... ஆகவே அங்கு சுடப்படும் செங்கலை பார்த்துக்கொள்ளுங்கள் !
Labels : Suresh, Kadalpayanangal, Oor special Manamadurai, Clay pot, clay, amazing, part 3, District special
உழைப்பும், கலையும் பிரம்மிக்க வைக்கிறது !
ReplyDeleteஎவ்வளவு (அழகான) உழைப்பு... அற்புதமான கலை வண்ணம்...
ReplyDeleteமிக அருமையான கைவினைக் கலைத் தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்.
ReplyDeleteமபானையில் தண்ணி சில்லென்று மாறும் விதத்தை தெரிந்துக் கொண்டேன். எங்க வீட்டில் மண்ணால் ஆன வாணலியும், சின்னதா ஒரு கிண்ணமும் தினமும் புழக்கத்தில் உண்டு.
ReplyDeleteசூப்பர் சார்.. இது போன்ற இடங்களுக்கு செல்லுங்கள் சார்.. பார்த்தே ஆக வேண்டும்.. :-)))
ReplyDeleteநன்றி சுரேஷ், இந்த மன் பானை குளிரிந்த நீர் டேக்னிக் விளக்கியதர்க்கு. இந்த விஷயம் என்னை ஆச்சிரியம் ஊட்டியது. (டபார்-ன்னு கையை தூக்கி ஒத்துகொண்டீர்களே ), ஆனாலும் மன் பானை முலம் வெளி வரும் பொருட்களின் தரமும், குணமும் சிறிது எழுதி இருக்கலாமே !
ReplyDeleteசாப்பிடும் தட்டு விரிசல் விட்டிருக்கு போல!
ReplyDeleteஎன்ன ஒரு கலை... தோசைத் தட்டில் தோசை வார்த்தால் திருப்பும்போது மண் பேர்ந்து ஒட்டாதோ!
சுவாரஸ்யமான பதிவு.
Thanks for the wonderful post, learning a lot from your blog. Here is the link of that friend https://kgjawarlal.wordpress.com/2012/04/09/
ReplyDeleteThank you sir, I really felt guilty for not giving his blog address. Now I'm happy !
Delete:)
Delete- Kumar Kannan
@suresh kumar
Deletekgjawarlal he is relative for engal blog sriram sir...
engalblog.blogspot.com
வணக்கம்
ReplyDeleteயாருக்கும் அடிபணியாத சுயதொழில் அவர்கள் மேலும் வளரட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மண்ணால் செய்யப்படும் ஃப்ரிட்ஜ் பற்றி என்னுடைய ஒரு ஃப்ரூட் சாலட் பகுதியில் வெளியிட்டு இருந்தேன். மிட்டிகூல் என அதை அழைக்கிறார்கள். [http://venkatnagaraj.blogspot.com/2013/11/68.html]
ReplyDeleteமண் பானை தொழிலாளர்களின் வாழ்வு முன்னேற எனது பிரார்த்தனைகளும்.....
Interesting article. Thanks for sharing.
ReplyDeleteEXCELLENT! உங்களது தேடிகேஷனுக்கு பாராட்டுக்கள்....
ReplyDeleteசிறந்த கடம் தயாரிப்பு - மீனாட்சி அம்மாள்,மானாமதுரை - ஜனாதிபதி விருது பெற்றிருக்கிறார்.
ReplyDeletehttp://tamil.oneindia.in/news/tamilnadu/president-honor-meenaksi-ammal-from-manamadurai-best-ghatam-199806.html#slidemore-slideshow-1
Dear Admin,
ReplyDeleteYou Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...
To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.
நன்றிகள் பல...
நம் குரல்
அருமையான மண் பாண்டம் பற்றிய பதிவு! இன்று இத்தொழில் அழிவின் விளிம்புக்கு வந்துவிட்டதே!
ReplyDeleteஇதே மானாமதுரை நல்ல கடம் செய்யப்படுவதாகவும், நீயா நானாவில் கூறினார்கள்.
அற்புதமான படைப்பு. மண்பானை பிரிட்ஜ் பற்றி மேலும் தகவல் மற்றும் உள் அமைப்பு போட்டோ கிடைக்குமா? மானாமதுரையி்ல் எங்கு கிடைக்கும்? போன் நம்பர் தந்தால் வாங்க உதவியாய் இருக்கும். வடக்கத்திய 50l mitticool fridge rs.5500/- ! சென்னையில் கிடைக்கிறது. தங்கள் தகவல் நம் தமிழகத்தில் இவ்வகை மானாமதுரை பிரிட்ஜ் விற்பனையை அதிகரிக்கலாம். நன்றி.
ReplyDeleteI dont have the phone number, but in manamadurai this is the only place and anyone can guide you. and the fridge is less than 600 rupees.
Deleteமிக்க நன்றி.
DeleteFinally got the Chennai address for all latest mud vessels including the cheapest manamadurai fridge. It may be useful for viewers. மண் கலைக்கூடம், கரையாஞ்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னை-56. அறிஞர் அண்ணா பள்ளி அருகில். தொடர்புக்கு திரு. சதீஷ், 9962331301
DeleteWhere can I buy these idly paanai..
ReplyDeleteWhen you visit Manamadurai, ask for the place where they are making the mud items, anyone can guide you !
Delete