Monday, April 28, 2014

புதிய பகுதி - ஊரும் ருசியும் !!

எவ்வளவு பதிவுகள் எழுதினாலும், பல தலைப்புகளில் எழுதினாலும் இந்த உணவு பற்றி எழுதினால் மட்டும் நிறைய பேர் விரும்பி படிக்கிறார்கள் ! என்னை சந்திக்கும் நபர்கள், கடல்பயனங்கள் தளம் பற்றி பேசிவிட்டு "ஆமாம்…. நீங்க அந்த தோசை பற்றி எழுதி இருந்தீங்களே, அங்க கண்டிப்பா போகணும்"என்று ரசித்து சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கும். இன்று அறுசுவை, அறுசுவை (சமஸ்) என்ற தலைப்புகளிலும், சில சமயங்களில் ஊர் ஸ்பெஷல் பகுதிகளிலும் ஒரு சுவையான உணவகத்தை அல்லது உணவை பற்றி எழுதினாலும், சில சமயங்களில் சில சிறிய உணவுகளை பற்றி விரிவாக எழுதவும், அந்த சிறப்பை சொல்லவும் ஒரு தனி தலைப்பு தேவை என்று பட்டது !!

 

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், திருநெல்வேலி என்றால் அல்வா, கோவில்பட்டி என்றால் கடலை மிட்டாய், மதுரை என்றால் மல்லி……. ஆனால் தூங்கா நகரமான மதுரையில் எவ்வளவு சுவையான வித்யாசமான பதார்த்தங்கள் கிடைக்கிறது தெரியுமா ? கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்று விளையாட்டாய் சொன்னாலும் கிருஷ்ணகிரியின் புட்டு பணியாரம் பற்றி தெரியுமா ? சேலத்து ஸ்பெஷல் மாம்பழம் என்றாலும் அங்கு பிரபலமாக கிடைக்கும் தட்டுவடை செட் பற்றி தெரியுமா ? கடம்பூர் என்ற ஒரு ஊர் இருக்கிறது என்றும் அங்கு போளி பேமஸ் என்றும் தெரியுமா ? ராமசேரி என்னும் ஊரில் சுடும் இட்லியில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று தெரியுமா ? இது ஒவ்வொன்றும் அந்த ஊரில் இருக்கும் எல்லோரும் சப்பு கொட்டி சாப்பிடும் உணவுகள் !! அதை அறுசுவையில் எழுத முடியாது என்பதால் அந்த ஊரின் சிறப்பை சொல்லியும், அதன் சிறப்பான உணவு பற்றி சொல்லவும் இந்த புதிய பகுதி. இதனால், அந்த ஊருக்கு நீங்கள் சென்றால் அந்த அயிட்டம் தவறாமல் உங்களால் சாப்பிட முடியுமே !!


 

தினகரன் நாளிதழில் சப்புகொட்டுங்க என்ற பகுதியில் திரு வெ.நீலகண்டன் அவர்கள் எழுதி இன்று புத்தகமாக வந்து இருக்கும் "எந்த ஊரில் என்ன ருசிக்கலாம் ?"என்ற புத்தகம் சிறிது வழி காட்டினாலும் , நண்பர்கள் உதவியுடனும் ஒரு சிறிய குறிப்புகளை தயார் செய்து உள்ளேன். அதில் இதுவரை சென்ற ஊரை பற்றியும், அதன் சிறப்பான உணவை பற்றியும் இனி பார்க்கலாமே !! நீங்களும் உங்க ஊரில் என்ன ருசியுடன் இருக்கும் என்று தெரிவியுங்களேன், ஒரு சுவையான பயணமாக இருக்கும் !!


 
Labels : Suresh, Kadalpayanangal, Oorum Rusiyum, District foods, What to eat, New
 

10 comments:

  1. வணக்கம்
    அண்ணா.

    பார்த்தவுடன் பசி தீர்ந்து விட்டது போல உணர்வு.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. எங்க ஊரில்........................................., அப்படி ஒண்ணும் ஃபேமசான உணவுன்னு எதுமில்ல சகோ!. ஆரணில சொல்லிக் கொள்ளும்படியான ஹோட்டல்களே இல்லைன்னுதான் சொல்லனும்:-(

    ReplyDelete
  3. சாப்பிடும் ஐட்டங்கள் பற்றிய பதிவுகளுக்கு எங்களுக்கும் வாசகர்கள் அதிகம்தான் வருகிறார்கள். சுவையான பதிவுகளுக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. ஊரும் ருசியும் - நல்ல ஐடியா....

    தில்லியின் ஸ்பெஷல் பற்றி விரைவில் எழுதுகிறேன்....

    ReplyDelete
  5. நல்ல முயற்சி சுரேஷ்குமார். உங்களது 'சுவையான' பதிவுகளை தொகுத்து ஒரு புத்தகம் வெளியிடலாமே?

    ReplyDelete
  6. உங்கள் பதிவுகள் அனைத்துமே சுவைதான்

    ReplyDelete
  7. வாய்க்கு மட்டும் எங்க ஊரில் பூட்டு போட முடியாது - பிரியாணியின் தலைநகர்...!

    ReplyDelete
  8. In dindigul my grandmother handmade acchumurukku still in my hearts though it had been 28 years back

    ReplyDelete
  9. இனியெல்லாம் நினைச்ச மாதிரியெல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு வயசு தடை போட்டாலும் மனசுக்கு அதெல்லாம் தெரியறதில்லைங்க... நான் பிறந்த மாவட்டம் தான் கிருஷ்ணகிரி ஆனாலும் இந்த புட்டுப் பனியாரம் பற்றி எனக்குத் தெரியாதுங்க....இதோ இப்ப வாழும் கோவையில் எல்லாச் சாப்பாடும் சுவைதான் ... இதில் எதைத் தனியாய்ச் சொல்ல...ஆனாலும் என் பாட்டி அம்மா செய்த உணவுகள் என் பிள்ளைக்கு இல்லை எனும் ஆதங்கம் மட்டும் உண்டு...

    ReplyDelete
  10. One more info for you guys, have a look at www.nativespecial.com

    ReplyDelete