Tuesday, June 17, 2014

ஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் ! ( நிறைவு பகுதி - 4)

கடந்த வாரங்களில் மாம்பழம் பற்றி நான் எழுதி வந்ததை படித்து நிறைய பேர் இதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என்று வியந்தது நடந்தது. முக்கியமாக திரு. வெங்கடகிருஷ்ணன் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது, அவர் எனது மாம்பழ பதிவுகளை முகபுத்தகத்தில் ஷேர் செய்து இருந்தார், அத்துடன் அவர் ஒரு உணவு பிரியர், இவர் ஷேர் செய்யும் உணவுகள் எல்லாம் நாவில் நீர் வரவைக்கும் ஒன்று. அவர் என்னுடைய இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியை விரும்பி படிப்பது கண்டு மகிழ்ந்தேன் ! சரி, இந்த வாரம் நிறைவு பகுதியாக மாம்பழத்தை என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போமா ! மாம்பழம் என்பது ஒரு குறிப்பிட்ட சீசன் மட்டுமே காய்க்கும், அதுவும் வெகு விரைவில் அழுகிவிடும், இதனால் இதன் சுவை விரும்பிகள் ஆண்டு முழுவதும் சுவைக்க கண்டுபிடிக்கப்பட்ட முறைதான் மாம்பழ கூழ் !! அது சரி, இப்படி எவ்வளவு மாம்பழ கூழ் செய்ய முடியும் என்று கேட்பவர்கள் கீழே இருக்கும் படத்தை பாருங்கள்...... எனக்கு பின்னால் இருப்பது ஏற்றுமதிக்கு தயாராக இருக்கும் ஒரு சிறிய பகுதியின் மாம்பழ கூழ் டின் மட்டுமே !
 
  
மாம்பழ   கூழ் எப்படி செய்யபடுகிறது என்பதை பார்ப்பதற்கு முன், அது ஏன் உணவு தொழிற்சாலைகளில் அலுமினியம் என்பது அதிகமாக பயன்படுத்த படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா ? கோக் பாட்டில், கேக், பதப்படுத்தப்பட்ட எந்த உணவு பொருளும் அலுமினியத்தில் மட்டுமே பேக் செய்யபடுகிறது...... ஆனால் ஊறுகாய், புளிப்பு நிறைந்த உணவுகள், அமில தன்மை வாய்ந்த உணவுகள் பிளாஸ்டிக் அல்லது  கண்ணாடியில்  மட்டுமே பேக் செய்யப்படுகிறது, இது எதனால் என்று யோசித்து இருக்கிறீர்களா ? (ஊறுகாய் எப்போதுமே பாட்டிலில் தான் வரும் !!)அலுமினியம் ஒரு வெண்மையான உலோகம். இதன் அடர்த்தி 2698 கிகி/கமீ. உருகு நிலை 933 K கொதி நிலை 2740 K, அணு எண் 13, அணு நிறை 26.98. வெள்ளியைப் போன்று உறுதியான அலுமினியத்தை அடித்து தகடாகவும், மெல்லிய கம்பியாக நீட்டவும் முடியும். அலுமினியம் நல்ல கடத்தியாக விளங்குவதால் வெப்பத்தையும், மின்சாரத்தையும் எளிதாகக் கடத்துகிறது. சுயவெப்பம் ஒரு பொருளின் வெப்ப ஏற்புத் திறனை மதிப்பிடுகின்றது. ஒரு கிகி நிறையுள்ள பொருளின் வெப்ப நிலையை 1 டிகிரி C உயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலே அப்பொருளின் சுய வெப்பம் என்பதால் உயரளவு சுயவெப்பம் கொண்ட அலுமினியம் குறைந்த வெப்ப நிலை மாற்றத்தோடு உயரளவு வெப்பத்தைச் சேமித்து வைத்துக் கொள்கிறது.[17] அலுமினியத்தின் வெப்ப ஏற்புத் திறன் செம்பை விட 2.35 மடங்கும், வெள்ளியை விட 3.86 மடங்கும், தங்கத்தை விட 6.85 மடங்கும் அதிகமானது. இதனால் வெளிச்சம் மற்றும் வெப்பம் என்பதை அதிகமாக இது கடத்தாது என்பதால் இதை எல்லா உணவு பதப்படுத்தப்படும் இடங்களிலும் உபயோகிக்கின்றனர் !
 
           
 
 
நல்ல பழுத்த மாம்பழத்தை முந்தைய பகுதிகளில் சொன்னது போல காம்பு நீக்கி கன்வேயரில் போடுகின்றனர். அதை அப்படியே தண்ணீரில் கழுவி செல்ல இன்னொரு இடத்தில அதை தோலும், கோட்டையும் நீக்குகின்றனர். சில தொழிற்சாலையில் மெசினும் உண்டு. இப்படி உரித்த மாம்பழத்தை நீராவி கொண்டு நன்கு கழுவுகின்றனர். பின்னர் அது ஒரு மெசினில் நன்கு கூழ் போன்று அறைக்கபடுகிறது, இப்படி அறைக்கப்படும்போதே அது கெட்டு போகாமல் இருக்க சில வகை கெமிகலும் சேர்க்கப்படுகிறது. சில நேரங்களில் இப்படி அரைக்கப்படும் மாம்பலத்தில் இனிப்பு தன்மை என்பது கூட குறைய இருக்கும், இதனால் சமமான இனிப்பு வருவதற்கு அதை சர்க்கரை அல்லது சாக்கரின் கலப்பார்கள். இதன் பின்பு பால் திரிந்து தயிர் ஆவது போல், இந்த மாம்பழ கூழில் யீஸ்ட் கலப்பார்கள், அதை நன்கு நீராவியில் கொதிக்க வைத்த பின்பு குளிர வைத்தால் மாம்பழ கூழ் ரெடி !!
 
 
 
 
 
 
இதுவரை நான் சொன்னதை கேட்க்கும்போதே உங்களுக்கு நாக்கு ஊறினால், பார்த்த எனக்கு எப்படி இருக்கும். சரி மாம்பழ கூழ் ரெடி, அதை அடைக்க அலுமினிய டின் வேண்டுமே, அதை எப்படி செய்கிறார்கள் என்று சுருக்கமாக பார்ப்போமே. இந்த அலுமினிய டின்கள் சிறியதாக வெளியூரில் இருந்து பெட்டி பெட்டியாக வந்து விடுகிறது. அதை எடுத்து பார்த்தால் ஒரு பேப்பர் போலவே இருக்கிறது, அதை ஒரு மெசினில் வைத்து அழுத்த, அது ஒரு டின் போன்ற வடிவத்தில் வருகிறது. தினம் தினம் ஆயிரம் ஆயிரம் டின்கள் இப்படி செய்யப்படுகிறது !! பொதுவாக இது ஐந்து அல்லது மூன்று கிலோ அளவில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
 
 
    
 
                                              
 
 
 சரி எல்லாம் ரெடி, வாங்க மாம்பழ கூழ் பார்க்கலாம் என்று அழைத்துப்போக, அங்கு பொன்னிறத்தில் மாம்பழம் பால் போல கொட்ட அதை ஒருவர் சர சரவென்று அந்த அலுமினிய டின்னில் பிடித்துக்கொண்டு இருந்தார். அதை பார்க்க பார்க்க ஆனந்தமாக இருந்தது. அது முடிந்தவுடன், இன்னொருவர் ஒரு மெசினில் மூடி கொண்டு இறுக்கமாக மூட, அதை ஒருவர் அடுக்கி கொண்டு இருந்தார். மாம்பழ கூழை ஒரு ஸ்பூன் வாங்கி வாயில் ஊற்ற..... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இந்த பொறப்புதான் என்று பாடல் மனதில் ஓடியது.
 
 
 
 
 இந்த சுவையில் மயங்கி வெளியே வர, எனது முன்னே ஒரு மலையே இருந்தது. இவ்வளவு மாம்பழ கூழ் எங்கே போகிறது, என்ன ஆகிறது என்று எனது மனதில் எழுந்த கேள்விகளை தவிர்க்க முடியவில்லை. வருடம் முழுவதும் இங்கே விளைந்த மாம்பழங்கள் ஸ்வீட் ஆகவும், ஜூஸ் ஆகவும் இன்னும் இன்னும் பல பல வடிவங்களை எடுக்கிறது என்றனர். இந்த மாம்பழ கூழ் எல்லாம் வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றனர். அது ஒரு லாரியில் மெதுவாக ஏற்றப்படும்போது பார்த்த நான் பெருமையாக "இது சேலம் மாம்பழம்........" என்று சொல்லிக்கொண்டேன்.
 


 
 மாம்பழ கூழ் வைத்து சமையல் செய்ய விரும்புபவர்கள் இந்த ரெசிபி பார்த்து செய்யலாமே....... 30 வகை மாம்பழ ரெசிபி. அப்படியே எனக்கும் ஒரு வாய் அனுப்பி வைத்தால் சந்தோசம் ! அடுத்த முறை மாம்பழத்தை பார்க்கும்போது இந்த ஊர் ஸ்பெஷல் பகுதி நினைவுக்கு வந்தால் அதை விட எனக்கு வேற என்ன சந்தோசம் வேண்டும் !!


 
Labels : Suresh, Kadalpayanangal, Salem, Mango, Mango district, Mango Pulb, Pulp, how to make mango pulb, mango pulb factory, ripen mango

12 comments:

 1. அலுமினியத்தை பற்றிய தகவலுடன்........ ஸ்ஸ்... பிரமாண்டம்...!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு ஒரு மாம்பழ கூடை பரிசு !! வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் !

   Delete
 2. Hi, pls give me facebook id for Mr.Venkatakrishnan...............

  ReplyDelete
  Replies
  1. varugaikku nandri nanbare !

   http://www.photoblog.com/venkat


   0413 291 8149

   Delete
 3. ருசிக்க வைத்த பதிவு! பல தகவல்களை திரட்டி தந்தமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ் ! மாம்பழ ருசியை விட உங்களது கருத்து ருசித்தது !

   Delete
 4. மாம்பழம் மட்டுமில்ல. எந்த ஹோட்டலுக்கு போனாலும் உங்க நினைவுதான் சகோ! சாப்பாடு நல்லா இருந்தா சுரேஷ் குமார்கிட்ட சொல்லனும்ன்னு தோணும். நல்லா இல்லன்ன்னா சுரேஷ் குமார்கிட்ட ஒரு வார்த்தை நல்ல ஹோஒட்டல் பத்தி கேட்டிருக்கலாம்ன்னு தோணும்.

  ReplyDelete
  Replies
  1. உங்களது கருத்து எனக்கு சந்தோசம் தந்தது, என்னுடைய சாப்பாட்டு பதிவு உங்களை அந்த அளவு ரசிக்க வைத்தது கண்டு மகிழ்ச்சி !

   Delete
 5. ரெங்கராஜன்June 18, 2014 at 7:13 PM

  அருமையான பதிவு. வாழ்த்துக்கள். உங்கள் ஆர்வம் பிரமிப்பாயுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரெங்கராஜன், உங்களது கருத்துதான் எனக்கு இது போல செல்ல தோன்றுகிறது !

   Delete
 6. மாம்பழம் பார்க்கும் போதெல்லாம் இந்தப் பதிவும் நீங்களும் நிச்சயம் நினைவுக்கு வருவீர்கள்....

  மாம்பழக் கூழ் பார்க்கும்போதே எடுத்துச் சாப்பிடத் தோன்றுகிறது!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நாகராஜ் சார் ! டெல்லி மாம்பழத்தில் அவ்வளவு சுவை இல்லை என்று சொல்கிறார்களே, நிஜமா ?!

   உங்களது ஒவ்வொரு கருத்தும் எனக்கு ஒரு கூடை மாம்பழம் சார் !

   Delete