Monday, June 2, 2014

அறுசுவை - பிங்க்பெர்ரி தயிர்கிரீம், பெங்களுரு

தயிரில் சக்கரை போட்டு சாப்பிடுபவர்கள் எல்லாம் கையை தூக்குங்கள் !! தயிர் என்பதில் நம் ஆட்கள் என்ன என்னவெல்லாம் செய்வார்கள் தெரியுமா...... பசும் தயிர் நல்ல கெட்டியாக இருக்கும்போது அதில் வெள்ளரியை அறுத்துப்போட்டு தின்பது, மாங்காய் சிறு சிறு துண்டுகளாக போடுவது, எருமை தயிராக இருந்தால் அதன் மேலே இருக்கும் மஞ்சள் படலத்தை மட்டும் சாப்பிடுவது, அப்பளத்தை தயிரில் தொட்டு சாப்பிடுவது, சக்கரையை போட்டு சாப்பிடுவது, சூடான பொன்னி அரிசி சாதத்தை கொஞ்சமே கொஞ்சம் போட்டு அதிகமாக தயிர் ஊற்றி உறிஞ்சுவது, ஊறுகாயை ஒரு துண்டு மட்டும் போட்டு தயிரை போட்டு சாப்பிடுவது, சூடான பஜ்ஜியை கெட்டி தயிரில் தொட்டு தின்பது, தயிர் வடை மேலே பூந்தி போட்டு சாப்பிடுவது, லஸ்ஸி, ஐஸ் போட்டு தயிர்...... என்று தயிரில் மட்டுமே இந்த அநியாயம் நடக்கும், அதை மோர் அல்லது வெண்ணை ஆக்கி நடப்பது அடுத்த ஆக பெரும் அட்டகாசம். இப்படி நமது வாழ்வில் கலந்து ஓடும் தயிர் என்பதில் ஐஸ் கிரீம் கிடைத்தால் எப்படி இருக்கும் !!
 
பிங்க்பெர்ரி - அவர்களது வெப்சைட் பார்க்க இங்கே சொடுக்கவும்.... தயிர் !


வெளிநாடு போகும்போது தினமும் பிஸ்சா, பர்கர் என்று சாப்பிட்டு கொலைவெறியுடன் இருக்கும்போது எங்கேனும் சாப்பாடு கிடைத்தால் அதில் அங்கு கிடைக்கும் பிலேவர்டு யோகர்ட் (மேம்படுத்தப்பட்ட தயிர் !!) கிடைக்கும். அங்கு எல்லாம் தயிரில் ஸ்டிராபெர்ரி, ஆரஞ்சு என்று தயிரில் கலந்து விற்ப்பனைக்கு வைதிருப்பாகள், அதில் ஒன்றை எடுத்து சாதத்துடன் போட்டு பிரெஞ்சு பிரை உடன் தொட்டு சாப்பிட, ஜன்மம் சாபல்யம் அடையும். என்னை பார்க்கும் அந்த நாட்டவர்கள் எப்படி சாதத்திற்கு தயிரை ஊற்றி சாப்பிடுற என்ற கேள்விக்கு....... ஹி ஹி ஹி என்பதுதான் பதில், அவர்களுக்கு என்ன தெரியும் நாம் தயிரை வைத்து செய்யும் அலப்பரை !! வெளிநாட்டிலும் சில தயிர் பைத்தியங்கள் உண்டு, அவர்கள் தயிரை கிரீம் போட்டு அடித்து உறைய வைத்து அதில் நிறைய கலந்து சாப்பிடுவார்கள், அதன் பெயர் ப்ரோசன் யோகர்ட் !! நம்ம ஊரிலும் இது கிடைக்க ஆரம்பித்து விட்டது !



முதன் முதலில் இது பெங்களுருவில் வந்தபோது எல்லோரும் ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார்கள், இன்று கூட்டம் நிறைய வருகிறது. தயிரை நன்றாக மிக்ஸ் செய்யும்போது அது திக் ஆக பால் போல் ஆகிவிடும், அதை கொஞ்சம் கிரீம் சேர்த்து பிரீசரில் வைக்க அது ஐஸ் கிரீம் போல வரும். இதனுடன் பழங்கள், கேக், சாக்லேட் என்றெல்லாம் போட்டு சாப்பிட திவ்யம்தான் ! இதை தவிர இங்கு வெறும் தயிரில் மேலே சொன்னவைகளை போட்டு சாப்பிடுவது, லஸ்ஸி என்றும் வைத்து இருக்கிறார்கள். தயிர் விரும்பிகள் இங்கு தயங்காமல் வரலாம் !







முதலில் ஒரு வாய் எடுத்து வைக்கும்போது இது ஐஸ் கிரீம் போன்று தெரிந்தாலும் அது கரையும்போது தயிரின் சிறிது புளிப்பு தெரியும். ஒவ்வொரு வாய் வைக்கும்போதும் அந்த தயிரின் புளிப்புடன் பழங்கள், சாக்லேட் என்று சாப்பிட இதை சாப்பிட இப்படி ஒரு வழி இருக்கிறதா என்று ஆச்சர்யம் வரும். என்னதான் வீட்டில் தயிரில் எதை போட்டு சாப்பிட்டாலும் இந்த சுவை வருமா என்பது ஆச்சர்யம்தான். அதை விசாரித்ததற்கு இங்கு தயாராகும் தயிர் நல்ல கறவை மாடுகள் கொண்டு தயாரிக்கபடுகிறது என்று சொன்னதை பார்த்தால் ஆமோதிக்க தோன்றுகிறது. இங்கு சிறியது, மீடியம், பெரியது, மிக பெரியது என்று பல அளவுகள் இருக்கின்றன. நான் ஒரு சிறிய கப் மட்டும் வாங்கி கொண்டு உட்கார்ந்தால் எனது பக்கத்தில் ஒரு ஜோடி ஆளுக்கு ஒன்று என்று ஒரு பெரிய கப் வைத்துக்கொண்டு உட்கார்ந்துள்ளது கண்டு எப்படியெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்று எண்ண தோன்றியது ! தயிர் விரும்பிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டியது !



பஞ்ச் லைன் :

சுவை - தயிர் விரும்பிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம். அதுவும் அந்த ப்ரெஷ் கெட்டி தயிரில் பழங்கள் போட்டு சாப்பிடும் சுவையை மிஸ் செய்ய வேண்டாம் !

அமைப்பு - சிறிய உணவகம், பார்கிங் வசதி கொஞ்சமே கொஞ்சம் இருக்கிறது ! உட்கார இடம் கம்மிதான்  !
பணம் - மிக சிறிய கப் (படத்தில் உள்ளது போன்றது) ஒன்றே சுமார் 100 ரூபாய், கொஞ்சம் அதிகம்தான் !

சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள். கூட்டம் அதிகம் என்றாலும் அவர்கள் பாஸ்ட் ஆக சர்வீஸ் செய்கிறார்கள் !

மெனு கார்டு  - அவர்களது விலைபட்டியல் பார்க்க இங்கே சொடுக்கவும்.... தயிர் !

அட்ரஸ் :

100 Feet Rd, Doopanahalli, Indira Nagar, Bangalore, Karnataka 560008, India
Hours:
 
Labels : Suresh, Kadalpayanangal, Bangalore, Bengaluru, Yogurt, PinkBerry, Arusuvai, Thayir, Flavoured yogurt

9 comments:

  1. எங்க வீட்டில் கெட்டி தயிரில் காராசேவு போட்டு கொஞ்சமே கொஞ்சம் உப்பு போட்டு அதிக நேரம் ஊற விடாமல் சாப்பிடுவோம்.

    ReplyDelete
  2. தயிர் ஐஸ் க்ரீம் புதிய தகவல்! நன்றி!

    ReplyDelete
  3. விலையை பாத்த உடனே நினைச்சேன் 'அனேகமா இந்திரா நகர் இல்லைனா CMH ரோடு பக்கம் இருக்கும்னு :)

    ReplyDelete
  4. அடடா...! சூப்பர்...!

    தயிர் இணைப்பில் பார்க்கிறேன்...

    ReplyDelete
  5. அருமை நண்பரே அருமை
    படிக்கப் படிக்க ஒரே ஜில்

    ReplyDelete
  6. தோசைக்கு புளிக்காத கட்டித்தயிர்.....இது என்னோட பேஃவரைட்....

    ReplyDelete
  7. வாவ்.... இந்த ஊரில் கிடைக்கும் கெட்டித் தயிர் பயன்படுத்தி செய்தால் நன்றாகவே இருக்கும். இங்கே இருப்பதாய் தெரியவில்லை.... இதுக்குன்னு பெங்களூரு வரணும் போல!

    ReplyDelete