Thursday, June 12, 2014

சாகச பயணம் - ஸ்பீட் போட் பயணம் !!

வர வர வேலை ஜாஸ்தியா இருப்பதால, உட்கார்ந்து எழுத நேரம் கிடைக்க மாட்டேங்குது ! சரி விடுங்க...... சீக்கிரம் முடிச்சிட்டு நிறைய எழுதறேன். சினிமாவில் பார்க்கும்போது, அதுவும் அஜீத் படம் பார்க்கும்போது சல்லுன்னு போட்டுல தண்ணியை கிழிச்சிட்டு ஒரு படகு வரும், அதுல ஹீரோ சும்மா கண்ணாடி போட்டுக்கிட்டு ஸ்டெடியா நிப்பார், அதையெல்லாம் பார்க்கும்போது இது மாதிரி நாமளும் ஒரு நாள் இப்படி போகணும் அப்படின்னு நினைப்பேன். சமீபத்தில் கேரளா சென்று இருந்தபோது ஒரு வாய்ப்பு கிடைச்சது...... விடுவேனா, கிளம்பிட்டேனுளா !!



"அதிவேக மோட்டார் படகு"..... ஸ்பீட் போட் என்பதை தமிழில் இப்படிதான் சொல்கின்றனர். இந்த படகுகள் பைபர் இழைகளால் தயாரிக்கபடுகிறது. இதனால் எடை குறைவாக இருக்கிறது. இதை இயக்க சிறிய வகை மோட்டார் தேவைபடுகிறது. அந்த மோடோரில் இருந்து வரும் விசையை வைத்து ஒரு காற்றாடி போன்ற அமைப்பை சுற்ற வைக்கும்போது படகு முன்னால் போகிறது. கேட்பதற்கு சுலபமாய் இருப்பது போல தெரிந்தாலும், படகு ஓட்டுவது, அதுவும் காற்றை எதிர்த்து ஓட்டுவது என்பது ஒரு கலை எனலாம். பொதுவாக படகின் அமைப்பு மட்டும் வெளிநாடுகளில் இருந்து வர, அதனில் சொகுசு சேர்ப்பது மட்டும் இங்கு நடக்கிறது. இங்கு சென்றபோது நாங்கள் சென்ற படகு என்பது சிறிய, அதிகம் சொகுசு இல்லாதது. ஆனால், அங்கு படகிலேயே நாடுகளை சுற்றும் ஒரு வெளிநாட்டவரின் படகில் எல்லாமே இருந்தது.... சொகுசோ சொகுசு !!




படகு ஓட்டுபவரிடம் பேசி கொண்டு இருந்தபோது, வெளிநாடுகளில் இருந்து வரும் விதவிதமான படகுகளை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். வெளிநாட்டவர்கள் சிலர் படகிலேயே உலகை சுற்றி வருவதாகவும், அவர்களின் அதிவேக மோட்டார் படகுகள் எல்லாம் நினைத்து கூட பார்க்க முடிவதில்லை என்று சொன்னார். சிலர் நாட்கணக்கில், வாரக்கணக்கில் நடு கடலில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அப்படி இருக்கும் சொகுசு அதிவேக படகுகளை கீழே பாருங்களேன்..... பெருமூச்சு வருகிறதா ?!


நல்லா பாருங்க, இதுவும் படகுதான் !


படகு ஓட்டும் நுணுக்கம் பற்றி பேச்சு வந்தபோது அவர் ஓட்டும் இந்த படகு விபத்துக்குள்ளாவது மிகவும் குறைவு என்றார், இந்த வகை படகுகளில் அதிகபட்ச வேகம் எல்லாம் செல்வதில்லை என்பதால். நாங்கள் சென்ற வேகமே எனக்கு கிலி ஏற்படுத்தியது வேறு கதை. இந்த வகை படகுகளில் இருக்கும் அபாயம் என்பது முன்புறம் காற்று வேகத்தில் அப்படியே தூக்கி அடிப்பது எனும்போது முன்னால் நின்று கொண்டு இருந்த நான் இரண்டு அடி பின்னால் சென்றேன். படகுகளின் மோட்டார் பற்றி பேசியபோது இங்கே கேரளாவில் யமஹா மற்றும் ஹோண்டா வகைகள் நன்கு விற்பனை ஆவதாகவும், அந்த வகை மோட்டார்களை கழட்டி வீட்டிற்க்குள் வைத்து பத்திரபடுதும் முறை இருப்பதாகவும் குறிப்பிட்டார் ! மொடோரின் பக்கத்தில் சென்று அது இயங்கும் விதத்தை பார்த்து ரசித்தேன், ஒரு சிறிய சாதனம் எப்படி இந்த படகை இயக்குகிறது பாருங்கள் !








ஆனந்தமாக சுற்றி வந்தாலும், சிறிது தூரம் சென்றவுடன் அவர் வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க நான் இங்கே பரதநாட்டியம் ஆட ஆரம்பித்தேன். வேகத்தில் காற்று என்னை ஒரு புறம் தள்ள, படகு தண்ணீரில் மோதி மோதி மேலே எழும்ப, தண்ணீரை கிழித்து செல்லும்போது தண்ணீர் மேலே தெளிக்க என்று என்னை அலைகளித்தது !! நம்ம விஜய், அஜீத் எல்லாம் இப்படி வேகமா போற படகுல எல்லாம் கல்லு மாதிரி இருப்பாங்களே என்று தோன்றியது.... மக்களே அது எல்லாம் கிராபிக்ஸ் வேலையா இருக்கும், இல்லை படகு தூரத்தில் போகும்போது கீழே உட்கார்ந்து ஒருத்தன் காலை புடிசிகிட்டு இருப்பான் போல...... நம்மால முடியலை சாமி. ஆனாலும் பாருங்க கண்ணாடி எல்லாம் போட்டு போஸ் கொடுத்து இருக்கோம் !! :-)





என்னதான் காமெடி செய்தாலும், படகில் காற்றை எதிர்த்து செல்லும்போது  சிலு சிலுவென்று காற்றில் முடி கலைய, தண்ணீர் முகத்தில் சிதற செல்வது  என்பது ஒரு சுகம்தான் !  முடிவில் படகில் இருந்து இறங்கும்போது இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாமே என்று மனதில் எழுவதில் தவறில்லை. நீங்களும் சென்று வந்து சொல்லுங்களேன் !!

Labels : Suresh, Kadalpayanangal, Saagasa payanam, Adventure, Speed boat, kerala

10 comments:

  1. வணக்கம்
    பயண அனுபவம்பற்றிமிக அழகாக எடுத்துச்சொல்லியுள்ளீர்கள் பயணம் பயணித்தது போல ஒரு நினைவு வருகிறது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. எவ்வளவு ஆச்சு என்று சொல்லப்படாதா? இடம் மற்றவைகளையும் குறிப்பிட்டிருக்கலாமே!

    ReplyDelete
  3. சினிமாவில் காட்டப்படுவது மிதமான வேகத்தில் எடுக்கப்பட்டு வேகமாக ஓட்டிக்காட்டுறதா இருக்கும். இதுப்போல ரிஸ்க்லாம் இனி எடுக்காதீங்க!

    ReplyDelete
  4. கொச்சின் மெரைன் ட்ரைவில் ஒரு முறை ஸ்பீட் போட்டில் போயிருக்கிறோம். நிஜமாவே செம ஸ்பீடா துள்ளி துள்ளி போச்சு..

    ReplyDelete
  5. பயணித்த படங்களைப் பார்ப்பதற்கே, மகிழ்வாகஇருக்கிறது
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  6. அசத்துறீங்க நண்பா..!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. ஆற்றுல போனதுக்கே இப்படின்னா.... கடல் அலைல போனா எப்படி இருக்கும்....???

    ReplyDelete
  8. மாலத்தீவில் அதிக அனுபவம் உள்ளது... இதைப்பற்றி :-)

    ReplyDelete
  9. தனியா போனா என்ன சீனியர் கிக் இருக்கு??? ஹீரோஸ் எல்லாம் அப்டியா போறாங்க??? அட்லீஸ்ட் ரெண்டு பேர் (ஐ மீன் பெண்கள்) சைட்'ல நிக்க வேணாம்??? என்னமோ போங்க... ;) ;) ;)

    ReplyDelete
  10. இந்த ஸ்பீட் போட் பயணம் மிகவும் த்ரில்லானது தான்.... ஒரு முறை சென்றதுண்டு......

    ReplyDelete