Friday, June 20, 2014

சோலை டாக்கீஸ் - ஜலதரங்கம் !

சில இசையை கேட்க்கும்போது மெய் மறக்கும், அது எந்த வாத்தியத்தில் இருந்து வருகிறது என்று பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும், அப்படி ஒன்றுதான் ஜலதரங்கம். சிறு வயதில் தூர்தர்ஷன் தொலைகாட்சியில் இதை காண்பிக்கும்போது சுலபமாக இருக்கும் போல இருக்கிறது என்று வீட்டில் நானும் தட்டு முட்டு சாமான்கள் எல்லாம் எடுத்து நடு வீட்டில் வைத்து தண்ணீர் நிரப்பி இசைகொலை செய்வேன் !! ஆனால், கண்களை மூடி இந்த இசையை கேட்டால் செவிகளுக்கு விருந்துதான். இந்தியாவில் இன்று வெகு சிலரே இந்த இசையை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இந்த சோலை டாக்கீஸ் பகுதிகளில் உங்களுக்கு திரை இசையை தாண்டியும் அருமையான சங்கீதம் இருக்கிறது என்று காட்டுவதில் இந்த வாரம்..... ஜலதரங்கம்.
 

 
 

 ஜலதரங்கம் என்பது ஒரு இந்திய தாள இசைக்கருவி ஆகும். நீரால் நிரப்பப்பட்ட பீங்கான் கிண்ணங்கள் இசைக்கலைஞரை சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இக்கிண்ணங்களின் விளிம்புகளை தனது கைகளிலுள்ள குச்சிகளால் தட்டி அக்கலைஞர் ஒலி எழுப்புவார். நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை என இந்த இசைக்கருவி தமிழில் அழைக்கப்படுகிறது. நமது நாட்டில் பீங்கான் கிண்ணத்தில் தண்ணீர் வைத்து இசை அமைக்கிறார்கள், இதையே வெளிநாட்டில் பாட்டிலில் தண்ணீர் கொண்டு நிரப்பி செய்கிறார்கள். கீழே இருக்கும் வீடியோவை சொடுக்கி வெளிநாட்டு இசையை கேட்டுவிட்டு, நமது இசை எவ்வளவு ஜீவனோடு இருக்கிறது என்று பாருங்களேன் !! 
 
 
Labels : Suresh, Kadalpayanangal, Solai Talkies, Takkies, Jalatharangam, best music, amazing music, unique music instrument
 

8 comments:

  1. அன்றைய நாட்களில் பரவலாக இருந்த இந்த இசை வடிவம் இப்போ அருகிவிட்டது. நான் இசைத்தட்டுகளிலேயே இவ்விசையைக் கேட்டுள்ளேன்.ஆனயம்பட்டி கணேசன் என்பவரது ஒலிநாடா என்னிடம் உள்ளது.
    வயலின், மென்டலின், சக்ஸ்சபோன், கிட்டார் என நமது இசையுள் மேற்கத்தையக் கருவிகள் புகுந்து பெயரெடுத்தபோதும், நம் கருவிகள் ஓரத்தில் தள்ளப்படுவது வேதனையே.
    இன்று தொலைக்காட்சியில் இட்டு நிரப்புமிடங்கூட இக்கருவிக்கில்லை என்பது மிகவருத்தமே!

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் நண்பரே, இன்று ஏலேக்ட்ரோனிக் இசை உலகம் ஆகி விட்டது வருத்தமே, இந்த பதிவு உங்களது நினைவை தூண்டியது கண்டு மகிழ்கிறேன் !

      Delete
  2. Replies
    1. கலாரசிகர் சார் நீங்க ! நன்றி !

      Delete
  3. அருமையானதோர் இசை.... கேட்கும்போது மனதில் மகிழ்ச்சி..

    பாட்டில் மூலம் கொண்டு வந்த இசையும் நன்றாகவே இருந்தது.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி நாகராஜ் சார் ! இசை மேல் உங்களது ஆர்வமும், அதன் ரசிப்புத்தன்மையும் அருமை !

      Delete
  4. ரசித்தேன் ஐயா, இனிமையாகத்தான் இருக்கிறது. பதிவும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ் ! பதிவை ரசிததர்க்கும், இசையை ரசிததர்க்கும் !!

      Delete