பீட்சா, பர்கர் என்று வெளிநாட்டு பாஸ்ட் புட் எல்லாம் வீட்டிற்க்கு கொண்டு வந்தால் எனது அம்மா சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள். சரி வெளியே செல்லும்போது அவர்களை ஒரு முறையாவது இது போன்ற உணவகத்திற்கு கூட்டி சென்று உலகம் இப்படிதான் என்று காட்டலாம் என்றால் அங்கு சென்று நாங்கள் சாப்பிட அவர் மட்டும் என்ன உனவுடா இது, என்ன இருந்தாலும் நம்ம ஊரு சாப்பாடு போல வருமா என்று கேட்க ஆரம்பித்து விடுவார். அப்போது தோன்றியதுதான் இந்த பர்கர் எல்லாம் நம்ம ஊரு சுவையுடன் செய்யும் கடை இருக்கிறதா என்று பார்ப்பது. நண்பர்களிடமும், கூகிளிடமும் பேசியபோது தெரிந்ததுதான் இந்த கடை, வெளியே இருந்து பார்க்கும்போது பாஸ்ட் புட் கடை போல தெரிந்தாலும் இவர்கள் தயாரிக்கும் உணவு எல்லாம் வெளிநாட்டு மருமகள் நம்ம ஊரு கண்டாங்கி சேலை கட்டி வருவது போல !!
உணவகத்தை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்...... செட்டிஸ் கார்னர் !
உள்ளே நுழைந்து என்ன இருக்கிறது என்று பார்வையை ஒட்டும்போதே அங்கே உண்ணும் சிலர் பர்கரை கொஞ்சம் கொஞ்சமாக ருசித்து சாப்பிடுவதை பார்த்து எனது அம்மாவை பரிதாபமாக பார்த்தேன். அங்கு இருந்த மெனு கார்டை எட்டி பார்த்தபோது எதுவோ வித்யாசமாக தெரிந்தது....... பர்கர் என்று எந்த இடத்திலும் எழுதவில்லை. பக்கத்தில் இருந்த ஒருவர் அவருக்கு பன் நிப்பட் மசாலா ஒன்று என்று சொல்லியவுடன் பன்னை எடுத்து சரசரவென்று எதுவோ சேர்த்து அதை கொடுக்கும்போது அது பர்கர் போலவே இருந்தது. என்னடா இது என்று ஆச்சர்யமாக இருந்தாலும்...... ஒரு பக்கம் எனது அம்மா இதை சாப்பிடுவாரா என்று இருந்தது.
மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு எனக்கும் ஒரு பன் நிப்பட் மசாலா என்று ஆர்டர் செய்துவிட்டு என்ன செய்கிறார்கள் என்று ஓரமாக நின்று கவனிக்க ஆரம்பித்தேன். முதலில் ஒரு பன்னை எடுத்து இரண்டாக கத்தியை கொண்டு பிளக்கிறார்கள். அதன் மீது புதினா, கொத்தமல்லி அதில் கொஞ்சம் வரமிளகாயை நன்கு கூழ் செய்து கலந்த சட்னியை நன்கு தடவுகிறார்கள். இதன் மீது ஆந்திராவில் கிடைக்கும் நிப்பட் (வேர்கடலை நிப்பட் செய்முறை) ஒன்றை வைக்கிறார்கள், அதன் மேலே சிறியதாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை கொஞ்சமாக தூவி, அதில் கொஞ்சமே கொஞ்சம் கொத்தமல்லி, காரம் வேண்டும் என்றால் கொஞ்சம் பச்சை மிளகாய், தக்காளி வைத்து அதன் மேலே கொஞ்சம் சாஸ் ஊற்றி ஒரு தாளில் சுற்றி கொடுக்கிறார்கள். எனது கைகளுக்கு வரும்போதே நம்ம ஊரு மசாலா வாசனை தூக்கியது, பயந்துக்கொண்டே எனது அம்மாவிடம் கொடுக்க முதலில் வேண்டாம் என்று மறுத்தவர், நான் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று பிடிவாதம் செய்ய, முதலில் ஒரு கடி கடித்தவர், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு முடித்தார்........ ஏண்டா, இது போல பர்கர் வாங்கிட்டு வந்தாதான் என்ன என்று கேட்க எனக்கு மனது கூத்தாட தொடங்கியது !
எனது அம்மா சாப்பிட்டு நன்றாக இருக்குது என்று சொல்லிவிட எனக்கு அடுத்து என்ன சாப்பிடலாம் என்று வெஜ்ஜி பன் வித் வெட்ஜஸ் என்று ஆர்டர் செய்தேன். முறை அதுவே நடுவில் நிப்பட் வைக்காமல் பொறித்த சிறிய உருளைக்கிழங்கு துண்டுகளை வைக்கின்றனர். உருளைகிழங்கின் மொருமொருப்பும், மசாலாவின் கலவையும் என்று பெருமையாக நம்ம ஊரு பர்கர் என்று ஓ போட்டுக்கொண்டே சாப்பிட்டேன் !
பர்கர் சாப்பிடும்போது நாம் எல்லோரும் கோக், பெப்சி குடிப்போம் இல்லையா, அதையும் இங்கு வித்யாசமாக தருகின்றனர். கோக்கில் மசாலா கலந்து அவர்கள் தரும்போது ஒரு வாய் வைக்கும்போதே சுவை நன்றாக இருக்கிறதே என்று ரசிக்க வைக்கிறது. என்னதான் வெளிநாட்டு மோகம் கொண்டு சில நேரங்களில் எல்லோரும் சாப்பிடுகிறார்களே என்று நாம் சாப்பிட நினைக்கும் பர்கரை இப்படி நம்ம ஊர் ஸ்டைலில் கொடுத்தால் வெளிநாடு வேண்டாம் நம்ம இந்தியாதான் டாப் என்று நினைக்க தோன்றாதா !!
பஞ்ச் லைன் :
சுவை - பர்கர் எல்லாம் வெளிநாட்டு உணவு உடம்புக்கு ஒத்துக்காது என்று நினைப்பவர்களும், நம்ம ஊரு டேஸ்டில் பர்கர் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களும் செல்ல, சாப்பிட வேண்டிய சுவை !
அமைப்பு - சிறிய உணவகம், பார்கிங் வசதி கொஞ்சம் கம்மிதான் ஆனால் எப்படியாவது கிடைத்து விடும் !
பணம் - அவ்வளவு ஒன்றும் ஜாஸ்தி இல்லை என்றுதான் தோன்றுகிறது !
சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள். வேண்டுவதை கேட்டு வாங்கி கொள்ளலாம் !
மெனு கார்டு:
மெனு கார்டு:
அட்ரஸ் :
2, Serpentine Road, Kumara Park West, Bangalore, Karnataka 560020, India
படிக்கும்போதே படத்தைப் பார்க்கும்போதே
ReplyDeleteஉடன் சாப்பிடவேண்டும் எனத் தோன்றுகிறது
அடுத்தமுறை அங்கு வருகையில்
முயற்சிக்கவேண்டும்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அடுத்த முறை பெங்களுரு வரும்போது சொல்லுங்கள் சார், கண்டிப்பாக செல்லலாம் ! நன்றி !
Deletetha.ma 1
ReplyDeleteஅட! நல்லா இருக்கே!!!!!
ReplyDeleteநான் எல்லா வெளிநாட்டு உணவையும், ( எஞ்சிலாடா, சூஷி உட்பட) இண்டியனைஸ் ருசியாக வீட்டுலேயே செஞ்சுருவேன். மகள் சின்னவளா இருக்கும்போது செஞ்சதையெல்லாம் இப்ப எங்க ரெண்டு பேருக்காகச் செய்வதை விட்டு பலவருசங்களாச்சு.
அடுத்த முறை இந்திய விஜயத்தில் தைரியமாக் களம் இறங்கப்போறேன்:-)))
ஆஹா, உங்களுக்கே நாக்கில் நீர் வரவளைதுவிட்டதா இந்த பதிவு ! சரி இந்தியா வரும்போது அந்த நாட்டு உணவு வாங்கி வாருங்கள் எனக்கு !
Deleteஇனிமேல் பர்கரோடு தான் வீட்டிற்கு வரணும்...!
ReplyDeleteகண்டிப்பாக சார், உங்களோடு இது போல ஒரு உணவு பயணம் செல்ல வேண்டும் என்று எனக்கு ஆசை !
Deleteவணக்கம்
ReplyDeleteதங்களின் அனுபவத்தை மிக அருமையாக பகிர்துள்ளீர்கள்... முகவரியும் தந்து விட்டீர்கள் வந்தால் பார்க்கலாம்.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கண்டிப்பாக பெங்களுரு வாருங்கள் ரூபன், நாம் இருவருமே செல்லுவோம் ! தங்கள் வரவுக்கும், கருத்திற்கும் நன்றி !
Deleteவிட்டுப்புட்டு போயிட்டிகளேப்பு..
ReplyDeleteபாஸ், இது எல்லாம் நாம மீட் பண்ணதுக்கு முன்னாடி போனது, இனிமே மிஸ் ஆகாது !
Deleteவிதம் விதமாய் சமைச்சு போட்டு பார்த்துக்கும் அம்மாக்கு புது உணவுகளை வாங்கிக் கொடுக்க எல்லா பிள்ளைகளுக்கும் பிடிக்கும் போல! என் பொண்ணும் இப்படித்தான் பர்கர், அது இதுன்னு வாங்கிக் கொடுக்கும். டேஸ்ட் பிடிக்காம உங்க அம்மா போலத்தான் நானும் திட்டுவேன். எப்பப்பாரு இட்லி, தோசை, பொங்கல்ன்னே சாப்பிடு. ஒரு சேஞ்சுக்கு இதைச் சாப்பிடும்மா! உயிர் போனா என் உயிர் தரேன்னு சொல்லுவா!
ReplyDeleteஆஹா நல்ல பொண்ணு போங்க, ஆனா இந்த பர்கர் சாப்பிட்டா உயிர் எல்லாம் போகாது உயிர் வரும் !
Deleteபடங்களைப் பார்த்ததுமே நாவில் நீர் ஊறத்தான் செய்கிறது. அடுத்த வாரம் பெங்களூரு வரும் வேலை இருககிறது. அழைக்கிறேன். அழைத்துப் போகவும். ஹி... ஹி... ஹி...
ReplyDeleteபெங்களுரு வந்துட்டு கால் பண்ணுங்க சார்..... உங்களை கண்டிப்பாக மீட் பண்ணனும். நன்றி !
Deleteநாவில் நீர் ஊற வைக்கும் பதிவு... பெங்களூரு வந்தால் போக வேண்டிய இடங்கள் நிறைய இருக்கும் போலயே....
ReplyDeleteநீங்கதான் இந்த பக்கமே தலை வைச்சு படுக்க மாட்டேன்றீங்களே, வாங்க பாஸ் சீக்கிரமா !
Deleteஎச்சிலில் கீபோர்டு நனைந்து விட்டது.. :)
ReplyDeleteஹா ஹா ஹா...... எச்சில் தீர்ந்து போச்சா ! ஆவி டாக்கீஸ் என்ன ஆச்சு பாஸ் !
Deleteகோவை ஆவி - :))))
ReplyDeleteநாவில் நீர் ஊற வைத்து விடுகிறீர்கள் சுரேஷ்.... இங்கேயும் விதம் விதமாய் உணவு பொருட்கள் உண்டு. எல்லாவற்றிலும் ஒரு மசாலா பொடி! :)
நன்றி நாகராஜ் சார் ! டெல்லி வரும்போது சொல்கிறேன், அழைத்து செல்லுங்களேன் !
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
அறிமுகம் செய்தவர்-காவியகவி
பார்வையிடமுகவரி-வலைச்சரம்
அறிமுகம் செய்த திகதி-25.07.2014
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன், உங்களின் செய்தி என்னை மிகவும் சந்தொசபடுதியது !
Deleteவலைச்சரத்தில் அறிமுகம் என்பது புதிய நண்பர்களின் முகவரி என்றால் மிகை ஆகாது...... காவியகவிக்கு எனது நன்றிகள் !