Friday, July 4, 2014

மறக்க முடியா பயணம் - யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி - 2)

சென்ற முறை நான் யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி - 1) போட்டு இருந்தேன், நிறைய பேர் அதை படித்துவிட்டு இப்படி ஒரு தீம் பார்க் நமது நாட்டில் இல்லையே என்று குறைபட்டதை கேட்க முடிந்தது ! பொதுவாக வெளிநாடுகளில் சர்வீஸ் நன்றாக இருந்தால் பணத்தை பார்க்க மாட்டார்கள் என்பதை நான் பார்த்து இருக்கிறேன், அதுவே நமது நாட்டில் இதுக்கு இவ்வளவு குடுக்கணுமா என்று யோசிப்பவர்கள் அதிகம் !! வெளிநாடுகளில் தீம் பார்க் சென்றால் ஒரு நாளில் அதை சுற்றி பார்க்க முடியாது என்பதுதான் நிஜம், சிலர் அந்த தீம் பார்க்குகளில் இருக்கும் விடுதிகளில் தங்கி அடுத்த நாள் சென்று வருவார்கள்..... அப்படி ஒன்றுதான் சிங்கப்பூரில் இருக்கும் யுனிவெர்சல் ஸ்டுடியோ  ! சென்ற பகுதியில் இந்த தீம் பார்க்கில் இருக்கும் ஒவ்வொரு விளையாட்டும் என்ன என்று சொல்லி வந்தேன், அது போலவே இந்த வாரமும்.....எகிப்து - புதையல் வேட்டை :

இங்கு இரண்டு விளையாட்டுக்கள் இருக்கின்றன..... ஒன்று குழந்தைகளுக்கு மட்டும், இன்னொன்று பெரியவர்களுக்கு மட்டும். முதலில் இந்த விளையாட்டுக்களை பற்றி புரிந்துக்கொண்டு உள்ளே செல்லுங்கள் இல்லையென்றால் எங்களுக்கு நடந்ததுதான் உங்களுக்கும். ஒரு புதையலை தேடி நீங்கள் எகிப்து பாலைவனங்களிலும், நகரத்திலும் அலைந்தால் என்ன உணர்வு கிடைக்குமோ அதை இங்கே கொண்டு வருகின்றனர் ! ஒரு சிறிய தானாக செல்லும் ஜீப், அதில் நீங்களும் உங்களது குடும்பமும் அமர்ந்துக்கொண்டால் வழியெங்கும் மிருகங்கள், பாழடைந்த நகரம், புதையல் என்று உங்களது கண் முன்னே கொண்டு வருகிறார்கள் !!எகிப்து - ரோலர் கோஸ்டர் :

முதலில் புதையல் வேட்டை செல்பவர்கள், குழந்தைகளுடன் இந்த ரோலர் கோஸ்டர் என்பதை என்னவென்று தெரியாமல் உள்ளே செல்ல, நிறைய குழந்தைகள் பயந்தபடிதான் வெளியே வருகின்றனர்..... அவர்களை விடுங்கள் நானே பயந்து போனேன். ரோலர் கோஸ்டர் என்பதை நாம் வெளியில் தெரியும்படியாகவே பார்த்து பார்த்து இந்த குகை போன்ற ரோலர் கோஸ்டர் என்பதை எதிர் பார்க்கத்தான் முடியாதது ! உள்ளே சென்றவுடன் ஒரு பதினைந்து பேரை ஒரு சிறிய வண்டியில் அமர வைத்து கம்பி கொண்டு பாதுகாப்பு செய்கின்றனர். பின்னர் அது மெல்ல கிளம்பி எகிப்து அதிசயங்களை காண்பிக்க போகிறது என்று எதிர்ப்பார்க்க, அதுவோ வெகு வேகத்தில் வளைந்து வளைந்து சென்று ஒவ்வொரு இடத்திலும் சிறிது நின்று பயம் காட்டுகிறது. இந்த வீடியோ பார்த்தால் உங்களுக்கே புரியும் !சயின்ஸ் பிக்ஷன் சிட்டி :

எகிப்து முடித்துவிட்டு ஒரு பழைய நாகரிகத்தை விட்டு வெளியே வரும்போது உங்களை வரவேற்ப்பது எதிர்கால நகரம். இங்கு எங்கு திரும்பினாலும் நாம் ஸ்டார் வார்ஸ் படத்தில் பார்ப்பது போல இருக்கிறது ! நாங்கள் சென்று இருந்தபோது அங்கு சில பிரச்சனை என்று ஒரு ரைட் இருந்ததை நிறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் இங்கு சில்லென்ற காற்று வீசும்படியும், ரோபோட் என்று அசத்தலாக இருந்தது. கண் முன்னே அப்படியே எதிர் கால நகரத்தின் தோற்றம்.....


நியூயார்க் வீதி :

இதுவரை அமெரிக்கா செல்ல முடியாதவர்கள் சற்றே பழைய நியூயார்க் நகர வீதியும், டாக்ஸி, கட்டிடங்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று அனுபவிக்க இங்கே வரலாம். ஒவ்வொன்றையும் அவ்வளவு தத்ரூபமாக கண் முன்நால் கொண்டு வருகிறார்கள் ! தெரு நாடகங்கள் என்பது நியூயார்க் நகரங்களில் மிகவும் பிரபலம், இங்கு நீங்கள் நடக்கும்போது பல கலைஞர்கள் பாட்டு, நடனம், இசை என்று உங்களை மகிழ்விப்பதை நீங்கள் பார்க்கலாம் !


லைட், கேமரா, ஆக்க்ஷன் ஷோ :

ஹாலிவுட் படங்களில் ஒரு வித பிரமாண்டம் இருக்கும் அதை உங்கள் கண் முன்னே கொண்டுவந்தால் எப்படி இருக்கும். உதாரணமாக ஒரு கடற்கரையில் புயல் அடிக்கிறது, ஒரு மிக பெரிய கப்பல் வந்து ஒரு கட்டிடத்தில் மோதுகிறது, புயலின் காரணமாக எல்லாமும் பறக்கிறது...... நீங்கள் அங்கு நின்றுகொண்டு இதை காண்கிறீர்கள் ஆனால் உங்களுக்கு ஒரு சிறு சாரல் கூட மேலே படவில்லை ! இங்கு நடக்கும் இந்த ஷோ என்பது மிகவும் தொழில்நுட்பம் சார்ந்தது என்று சொல்லலாம், நான் அசந்தது உண்மை !


இன்னும் இப்படி நிறைய சொல்லி கொண்டே போகலாம்.... நீங்களும் சென்று கண்டு களிக்க வேண்டும் என்று இத்தோடு இதை முடித்து கொள்கிறேன், ஆனால் இன்னும் நிறைய நிறைய இருக்கிறது. டிக்கெட் விலை நாலாயிரம் வரை வரும், இவ்வளவா என்று யோசிக்கவே வேண்டாம்..... இந்த அனுபவம் மிகவும் புதியது. சென்று வாருங்கள்....... விரைவில் !Labels : Universal studio, Singapore, Suresh, Kadalpayanangal, ride, adventure, theme park

5 comments:

 1. லைட், கேமரா, ஆக்க்ஷன் ஷோ வியக்க வைத்தது...!

  படங்கள் அனைத்தும் அட்டகாசம்...! என் நண்பர் மீது யார் கை வைத்தது...! ஹா... ஹா... ஹ....

  ReplyDelete
 2. வணக்கம்
  புதிய அனுபவம் எங்களையும் வியக்கவைத்தது... பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. படங்கள் அனைத்தும் அருமை நண்பரே

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி நண்பரே.... மேலும் பல இடங்களைச் சுற்றி உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.....

  ReplyDelete