Thursday, July 10, 2014

சிறுபிள்ளையாவோம் - சாரட் வண்டி பயணம் !

குதிரை வண்டி..... சும்மா இல்லை பழைய MGR படத்தில் எல்லாம் வாத்தியார் "ராஜாவின் பார்வை...." என்று பாடிக்கொண்டே செல்லும் சாரட் வண்டி ! இந்த சாரட் வண்டிகள் எல்லாம் இப்போது கல்யாண ஊர்வலத்திற்கு மட்டுமே பயன்படுத்தபடுகிறது, என்னுடைய கல்யாணத்தில் இதெல்லாம் இல்லை என்பதால் சிறு வயதில் இருந்தே இதில் எப்படியாவது செல்ல வேண்டும் என்று ஆர்வம் ! ஒரு முறை மெல்போர்ன் நகரில் இது போல சாரட் வண்டியை பார்த்தேன், அதுவும் அந்த குதிரை நல்லா எட்டு அடி உயரம், புசுபுசுன்னு பெரிசா வேற இருந்தது, சாரட் வண்டி அப்படி ஒரு கம்பீரம், சரி ஒரு முறை போவோமே என்று அந்த வண்டிக்காரனிடம் கேட்டால், சொத்து பத்திரம் எதுவும் இருக்கான்னு கேட்கறான்..... அவ்வளவு காசு அங்கே ! இதுவெல்லாம் சேர்த்து இந்த சாரட் வண்டி மேல ஒரு கண்ணாகவே இருக்க வைச்சது. போன முறை மும்பை போனபோது அதுவும் இரவு சுமார் பத்து மணிக்கு இந்தியா கேட் பகுதி சென்றபோது ஏதோ என் கனவில நடக்கிற மாதிரி லைட் எல்லாம் வைச்சு சாரட் வண்டி என்னைய கடந்து போக, என்னோட இந்த சாரட் வண்டி ஆசை குதிரையை விட வேகமா போச்சு !!மேல இருக்கிற படத்தை முன்னாடியே நல்லா பார்த்துக்குங்க, அதுவும் முக்கியமா குதிரையை..... அப்புறம் இந்த பகுதி முடியும்போது இந்த குதிரை நான் போனதாலேதான் இளைச்சி போச்சி அப்படின்னு நாக்கு மேல பல்ல போட்டு பேச கூடாது ! :- )  ஒரு சிறிய ட்ரிப் அடிக்க நானூறு ரூபாய், மும்பையை ரவுண்டு அடிக்க ஆயிரம் ரூபாய் என்று இருந்தது, நமக்கு சின்ன ட்ரிப் போதுமே ! முதலில் குதிரை வண்டியை கவனிக்க ஆரம்பித்தேன், ஒவ்வொரு குதிரை வண்டியும் நல்லா அலங்காரம் பண்ணி வைச்சிருந்தாங்க. அதுவும் அந்த LED விளக்குகள் ஒவ்வொரு வண்டியிலும் வித்யாசமாக இருந்தது. அதை சுற்றி பூக்கள் (செயற்கைதான் !) உட்காரும் இடத்தின் மேலே ஒரு சிறிய குடை என்று அந்த சாரட் வண்டிக்கு ஒரு ராஜ களை இருந்தது, அதை நினைத்தபடியே ஏறி உட்கார்ந்தேன் !

ஏறி உட்கார்ந்து குதிரையை பார்த்தா, அது என்னைய திரும்பி பார்த்து முறைச்ச மாதிரி இருந்தது.... அதெல்லாம் பிரம்மை என்று உதறி தள்ளிட்டு, அந்த மும்பை கடற்க்கரை காற்றை மெல்ல ரசிக்க ஆரம்பித்தேன். அந்த டிரைவர் (குதிரை வண்டி ஓட்டுபவரை தமிழில் என்ன சொல்றது !) குதிரைக்கு கொள்ளு வைச்சிருந்தார், அதை சடெக்கென்று புடுங்கி தாஜா செய்து ஏறி உட்கார்ந்து என்னிடம் ஹிந்தியில் இந்த மும்பை கதையையும், கேட் வே ஆப் இந்தியா உருவான கதை, குதிரை பராமரிப்பு என்று பேசிக்கொண்டே வந்தார்.... என்னுடன் இருந்த மும்பை நண்பர் அதை ஆமொதிதுக்கொண்டே வந்து கொண்டு இருந்தார். குதிரை, மும்பையின் கடற்க்கரை காற்று, எனக்கு பிடித்த சாரட் வண்டி..... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த குதிரை டக் டக் டக் என்று ஜதி சொல்லியபடி போக இங்கே நான் பாட ஆரம்பித்தேன் "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்....."என்னதான் நாம கார், விமானம், கப்பல், பைக் என்று சென்றாலும் இந்த குதிரை வண்டியில் செல்லும்போது வரும் சந்தோசமே தனிதான் இல்லை. சிறு வயதில் எல்லாம் இந்த சாரட் வண்டியை பார்க்கும்போது அதில் செல்பவர்கள் எல்லாம் ராஜாக்கள் என்று நினைத்துக்கொள்வோம், அதை இப்போது நினைத்துப்பார்த்தேன், இன்னைக்கு நாமளும் ராஜாதான் ! மெது மெதுவாக செல்லும்போது அங்கு வந்து இருந்த டூரிஸ்ட் எல்லாம் இந்த வண்டியை பார்க்க எனக்கு பெருமை தாளவில்லை, ராஜாக்கள் எல்லாம் கை அசைப்பது போல அசைத்து காண்பித்தேன். மெல்ல அந்த கடற்க்கரை காற்றை அனுபவித்து கண்களை மூட, அந்த வண்டி இந்த பயணத்தை முடித்து இருந்தது ! முடிவில் அந்த வண்டியில் இருந்து இறங்கும் போது, சிறு வயதில் இருந்து இருந்துவந்த அந்த ஆசை நிறைவேறியது கண்டு மகிழ்ந்தேன். நீங்களும் இதை ஒரு முறையாவது நினைத்து இருப்பீர்கள்தானே, அதை அனுபவிக்க மும்பை சென்றால் மறக்காமல் செல்லுங்களேன்........ பால்யம் திரும்பியது போல உணர்வீர்கள் ! ஆங்...... சொல்ல மறந்திட்டேனே, என்னை பார்த்து பார்த்து ரொம்ப நேரத்திற்கு ஹிந்தியில் பேசிகிட்டே வந்த அந்த குதிரை வண்டிகாரரிடம், இறங்கும்போது "மேரேசே ஹிந்தி நஹி ஆயா.... ஒன்லி தமிழ்" என்று சொல்லி இறங்க அவர் ஒரு பார்வை பார்த்தார் பாருங்கள்....... !!


Labels : Suresh, Kadalpayanangal, Sirupillaiyaavom, Childhood, Memories, Saarat vandi, Raja vandi, kuthirai vandi, goda ride, goda, horse ride

17 comments:

 1. Replies
  1. நன்றி தனபாலன் சார் ! ராசா ராசாதான்...... நீங்க பதிவுலகின் ராசா !

   Delete
 2. ராஜாவின் பக்கத்தில் ராணியைக் காணவில்லையே ...தாஜ் மகால் பார்க்கப் போனா,அங்கே ஒட்டகம் பூட்டிய வண்டியில் போய் பார்த்து அனுபவத்தை எழுதுங்க சுரேஷ் குமார் ஜி !
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. ராணி இல்லாத வருத்தம் முகத்தில் தெரிகிறதே !! நல்ல ஐடியா ஜி..... நீங்களும் வாங்களேன் !

   Delete
 3. நல்வேளை அந்த குதிரைக்கு பேசத் தெரியவில்லை என்று சந்தோசபடுங்கள் :-)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா, தெரிஞ்சு இருந்தா ஒரே கெட்ட கெட்ட வார்த்தையா சொல்லி இருக்கும் !

   Delete
 4. வணக்கம்
  நல்ல பூந்தேரில் ஊர்வலம் போகின்றீர்கள்.... அருமையாக உள்ளது.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரூபன்...... பூந்தேர் என்பது நல்ல பதம் ! உங்களது கவிதையை போலவே !

   Delete
 5. Replies
  1. நன்றி ஜி..... தங்களது வருகைக்கும், கருத்திற்கும் !

   Delete
 6. Bangalore MGR....... :-) Super...

  ReplyDelete
 7. நாங்களும் அனுபவித்தோம்
  இயல்பாக சுவாரயஸ்யமாக
  சொல்லிச் செல்லும் விதம்
  மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. அருமையான பதிவு சுரேஷ் ஜி ! இந்த சாரட் பயணத்தை இரவில் சென்றது தான் இங்கே ஹை லைட். கடலோர நகரங்கள் எல்லாமே இரவில் தான் அழகு !

  ReplyDelete
 9. ரசிகன் சார் நீங்க... கலக்கறீங்க...

  ReplyDelete
 10. கல்க்கலான அனுபவம்.

  தில்லி வந்த புதிதில், சில பகுதிகளில் டாங்கா என்று அழைக்கப்படும் குதிரை வண்டிகள் இருந்தன - புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து சதர் பஜார், சாந்த்னி சௌக், லால் கிலா [Red Fort] என்று வெவ்வேறு மார்க்கங்கள்..... அதில் பயணித்ததுண்டு - ஆனால் இந்த வண்டி போல அவற்றில் அலங்காரங்கள் ஏதும் கிடையாது..... :)

  இப்போது தில்லியில் இந்த டாங்காக்களே இல்லை! :(((((

  ReplyDelete
 11. ஆகா! நல்ல பயணம்.

  ReplyDelete