Friday, July 11, 2014

சோலை டாக்கீஸ் - ஏக்தரா நாதம் !

மிக பழைய படங்களில் எல்லாம் வீதி வீதியாக பக்தி பாடல்களை பாடியபடி வரும் காட்சி இருந்தால், அதில் ஒருவர் ஒரு புது விதமான இசை கருவியை வலது கைகளில் வைத்து இருப்பார், இடது கையில் சப்லாங்கட்டை போன்று ஒன்று இருக்கும். அதை வைத்து இசைத்தபடி வருவார். சிறு வயதில் தெருவில் இப்படி வருபவர்கள் சாமியார்கள் போல இருப்பார்கள், குழந்தைக்கு மந்திரிக்க வேண்டும் எனும்போது இவர்கள் தங்களது பையில் இருந்து விபூதி எடுத்து  பூசுவார்கள், அப்போது நான் அவர்களது கைகளில் இருக்கும் இசை கருவியை நெருக்கத்தில் பார்த்திருக்கிறேன். இன்று அந்த கருவி அழிந்து விட்டது எனலாம்...... அதன் பெயர் ஏக்தரா  !!


சுரை குடுவையை எடுத்து அதில் இரண்டு பக்கமும் மூங்கில் குச்சியை கட்டி, நடுவில் நரம்பை எடுத்து அதை மீட்டும்போது வரும் நாதம் இனிமையோ இனிமை. இறைவனின் மீது பக்தியோடு அவர்கள் பாடி, இந்த இசை சேரும்போது அவ்வளவு நன்றாக இருக்கும். மிக எளிமையான கருவி இது, ஆனால், இன்றைய எலெக்ட்ரானிக் யுகத்தில் இது அழிந்து விட்டது !!



அது எப்படி இசைக்கபடுகிறது என்றும் அதை பற்றி மேல் விவரம் தெரிந்து கொள்ள இந்த வீடியோ பார்க்கவும்.


குறிப்பு : இந்த சோலை டாக்கீஸ் பகுதியின் நோக்கமே இந்த உலகத்தில் சினிமா இசை, தமிழ் சினிமா பாடல்களை தவிர்த்து பல இசை வடிவங்களும், மேதைகளும் இருக்கிறார்கள் என்பதை பகிர்வதர்க்கே. இசையின் இன்னொரு வடிவத்தை இங்கே பார்க்கலாம் !

Labels : Suresh, Kadalpayanangal, Solai Talkies, Takkies, Ektara, music instrument, unique, amazing, music

7 comments:

  1. நல்ல முயற்சி,புது வித இசைஎங்கள் காதுகளில் பொங்கி வழியட்டும் !
    த ம 1

    ReplyDelete
  2. வணக்கம்
    ஒரு வித்தியாசமான பதிவு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    த.ம 2வது வாக்கு
    என்பக்கம் கவிதையாக
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை???:  

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. இந்த இசைக்கருவியை சினிமாவில் பார்த்ததோடு சரி! இதுக்கு , ”புல்புல் தாரா”ன்னு பேருதானே!!??

    ReplyDelete
  4. உண்மைதான்! இந்த வகை இசைக்கருவிகளை நானும் பார்த்து இருக்கிறேன்!

    ReplyDelete
  5. இன்றைய நவநாகரீக உலக வளர்ச்சியில் அழிந்து போன இசைக்கருவி.... புதுமையான பதிவு...

    ReplyDelete
  6. இன்னும் எத்தனை புதையல்கள் உண்டு உங்கள் எண்ணங்களில்...!!!!!

    ReplyDelete
  7. ஒரு வித்தியாசமான பதிவு
    அருமை
    தம 5

    ReplyDelete